Dream 11 அப்ளிகேஷனில் தங்கள் பணத்தை இழந்து வாடும் இலைங்சர்கள்

 இப்போ இந்தியாவில் குறிப்பா தமிழகத்தில் அதிகமான இளைஞர்களை கவர்ந்து இழுத்து கொண்டிருக்கும் விஷயங்களில் ஒன்று தான் fantasy gaming. அதுல முக்கியமா பேசப்படுறது ட்ரீம் லெவல் மாதிரி கிரிக்கெட் டீம் 11 பேர் செலக்ட் பண்ணுற கேம்கள். ஆரம்பத்துல இது ஒரு சின்ன பொழுதுபோக்கு மாதிரி இருந்துச்சு. “கிரிக்கெட் தெரியுமா? அப்போ உங்க knowledge use பண்ணி காசு பணம் ஜெயிக்கலாம்”ன்னு சொல்லி பல பேரை உள்ளே இழுத்தாங்க. ஆனா இப்போ நிலைமை என்னன்னா, மக்கள் கிரிக்கெட்டைப் பார்க்குறத விட இந்த fantasy app-ல டீம் போடுறதுக்காகவே match பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க.

ஒரு சாதாரண கூலி தொழிலாளி முதல் கல்லூரி மாணவன் வரை, எல்லாருமே “இந்த தடவை நிச்சயம் ஜெயிப்பேன்”ன்னு நம்பி பணத்தை போட்டுட்டு இருக்காங்க. ஆனா மேட்ச் நடந்து கொண்டு இருக்கும்போது பத்து லட்சத்து 50 ஆயிரம் இருவது லட்சத்து 30 ஆயிரம் என்ற இடத்துல தான் இருப்பாங்க.ஆனால் உண்மையிலேயே யார் ஜெயிக்கிறாங்க? தினமும் லட்சக்கணக்கில் மக்கள் டீம் போடுறாங்க. ஆனா top rank எடுப்பவர்கள் ஒரே மாதிரி சில accounts வச்சுக்கிட்டு யார் 11 பேர் நல்லா விளையாடுறாங்கன்னு பார்த்து அவங்கள செலக்ட் பண்ணி கடைசியா அந்த பணத்தை வாங்கிட்டு போயிடுறாங்க. இதை பார்த்து பலருக்கும் ஒரு சந்தேகம் வரும். “நாம இவ்வளவு நாள் கிரிக்கெட் பார்த்து புரிஞ்சவங்க. ஆனா எதுக்கு நம்ம டீம் எப்பவும் தோற்குது?”ன்னு.

அதுக்குள்ள தான் இந்த fantasy gaming உலகத்தோட பெரிய சூட்சுமம் இருக்கு.

ஒரு கிரிக்கெட் match-ல சரியான 11 players predict பண்ணுவது எவ்வளவு கடினம் தெரியுமா? உலகத்திலேயே பெரிய analysts கூட சில நேரம் fail ஆகுறாங்க. ஒரு வீரர் form-ல இருப்பார். எல்லாரும் அவரை captain வைப்பாங்க. ஆனா அந்த நாள் duck out ஆகிடுவார். யாரும் எதிர்பார்க்காத ஒரு புதிய player 100 run அடிப்பார். சில நேரம் bowler ஒருத்தர் 4 wicket எடுப்பார். இன்னொரு நாள் zero wicket. இதை 100% இல்ல 200 %predict பண்ண முடியுமா? நிச்சயமா முடியாது.

ஆனா fantasy app advertisement எப்படி இருக்கும்? “நேத்து ஒரு auto driver 2 கோடி ஜெயிச்சார்”, “ஒரு college student 1 கோடி வென்றார்”, “இப்பவே join பண்ணுங்க”ன்னு காட்டுவாங்க. இதைப் பார்த்து மக்கள் என்ன நினைப்பாங்க? “நாமலும் ஒரு கோடி இரண்டு கோடி ஜெயிக்கலாம்”ன்னு. அதுதான் psychological trap.

உண்மையிலேயே top rank எடுப்பவர்கள் எல்லாரும் சாதாரண users தானா? இதுல தான் மக்கள் சந்தேகம் பேச ஆரம்பிச்சிருக்காங்க. ஏன்னா, சில accounts தொடர்ந்து வெல்லுது. சில accounts-க்கு hundreds of teams இருக்கும். ஒரு சாதாரண மனிதன் ஒரு team போடுறான். maximum 2 அல்லது 3 team. ஆனா பெரிய users நூறு, இருநூறு teams போடுறாங்க. ஒவ்வொரு combination-மும் cover பண்ணிடுறாங்க. அப்போ naturally அவர்களுக்கு winning chance அதிகம் ஆகிடும்.

ஆனா இதை விட மக்கள் பேசுற இன்னொரு விஷயம் இன்னும் பெரியது. “App-க்குள்ளே சில hidden accounts இருக்கும். அவங்களே perfect team select பண்ணி prize வாங்குறாங்க”ன்னு பலர் சந்தேகம் சொல்லுறாங்க. இதை prove பண்ணுறது கடினம். ஆனா ordinary users-க்கு ஏற்படுற frustration இந்த சந்தேகத்தை அதிகப்படுத்துது. ஏன்னா ஒரு நாள் இல்ல, இரண்டு நாள் இல்ல, மாதக்கணக்கா மக்கள் பணம் போட்டு தோற்றுட்டு இருக்காங்க.

ஒரு மனிதன் ஆரம்பத்துல ₹49 போடுவான். அடுத்த நாள் ₹99. “நேத்து கொஞ்சம் miss ஆயிடுச்சு. இன்னைக்கு கண்டிப்பா வரும்”ன்னு நம்புவான். அப்புறம் ₹500. அப்புறம் ₹5000. இது gambling psychology மாதிரி வேலை செய்ய ஆரம்பிக்கும். அவன் தோற்கிறான். ஆனா “அடுத்த match-ல recover பண்ணிடலாம்”ன்னு நினைப்பான். அதுதான் மிகப்பெரிய ஆபத்து.

பல குடும்பங்களில் இப்போ fantasy game silent problem ஆக மாறியிருக்குது. வெளியில யாருக்கும் தெரியாது. ஆனா உள்ளுக்குள்ள loan, stress, மன அழுத்தம், குடும்ப சண்டை எல்லாம் நடக்குது. சில இளைஞர்கள் salary வந்த உடனே app-ல போட்டு காலி பண்ணிடுறாங்க. சிலர் நண்பர்களிடம் கடன் வாங்குறாங்க. சிலர் வீட்டுல பொய் சொல்லுறாங்க.

இது ஒரு பெரிய business model. மக்கள் தோற்றால்தான் இந்த apps survive ஆகும். எல்லாரும் ஜெயிச்சுட்டா company எப்படி லாபம் பார்க்கும்? ஒவ்வொரு contest-லயும் platform fee இருக்கும். அதுதான் அவர்களோட income. லட்சக்கணக்கான மக்கள் தினமும் join ஆகுறாங்க. அதுல majority தோற்குறாங்க. few பேர் மட்டும் ஜெயிக்குறாங்க. அந்த few winners-ஐ advertisement-ஆ காட்டி இன்னும் புதிய users-ஐ உள்ளே கொண்டு வர்றாங்க.

ஒரு village-ல ஒருத்தன் ₹10,000 ஜெயிச்சா, அந்த area முழுக்க அது viral ஆகிடும். “அவனுக்கு வந்துச்சு. நமக்கும் வரும்”ன்னு இன்னும் பத்து பேர் join ஆகுறாங்க. ஆனா அந்த பத்து பேர்ல யாராவது profit-ல இருக்காங்களா? பெரும்பாலும் இல்லை. இது தான் reality.

Fantasy gaming companies “இது skill game”ன்னு சொல்லும். சரி, skill இருக்கு. கிரிக்கெட் knowledge use ஆகுது. ஆனா luck இல்லாம ஜெயிக்க முடியுமா? முடியாது. Toss itself game-ஐ மாற்றிடும். Rain வந்தா மாற்றிடும். Pitch behaviour மாற்றிடும். ஒரு player injured ஆனா மாற்றிடும். அதனால் இது முழுக்க முழுக்க skill gameன்னு சொல்ல முடியாது.

மக்கள் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் என்னன்னா, social media influencers. YouTube, Telegram, Instagram எல்லாத்துலயும் “grand league winning team”, “100% safe team”, “confirmed captain”ன்னு சொல்லி videos போடுறாங்க. சிலர் paid promotion பண்ணுறாங்க. சிலர் fake screenshots காட்டுறாங்க. மக்கள் அதை நம்பி பணம் போடுறாங்க. ஆனா அந்த influencer உண்மையிலேயே அந்த amount ஜெயிச்சாரா? யாருக்கும் தெரியாது.

சில Telegram groups-ல “fixed team”ன்னு கூட சொல்லுவாங்க. கிரிக்கெட் match itself unpredictable. அப்படியிருக்க exact winning team யாரால சொல்ல முடியும்? ஆனா desperate ஆன மக்கள் நம்பிடுறாங்க. ஏன்னா எல்லாருக்கும் easy money வேணும்.

இது ஒரு dangerous mindset-ஐ உருவாக்குது. “உழைச்சு சம்பாதிக்குறத விட shortcut-ல பணம் சம்பாதிக்கலாம்”ன்னு பல இளைஞர்கள் நினைக்க ஆரம்பிச்சுட்டாங்க. அதுதான் மிகப்பெரிய பாதிப்பு. ஒருவன் தினமும் fantasy app-ல time spend பண்ணுறான். Player stats, prediction, combinations, captain choices. அந்த same time-ஐ ஒரு skill கத்துக்க use பண்ணினா வாழ்க்கையே மாறிடும்.

ஒரு முக்கியமான உண்மை என்னன்னா, fantasy apps ஒருபோதும் loss stories-ஐ advertise பண்ணாது. 10 லட்சம் பேர் தோற்ற கதையை யாரும் சொல்ல மாட்டாங்க. ஒருத்தன் 1 கோடி ஜெயிச்ச story மட்டும் highlight ஆகும். அது ஒரு marketing strategy. மக்கள் மனசுல hope-ஐ உயிரோட வைத்திருக்குற strategy.

சினிமால hero ஒரு தடவை lottery ஜெயிப்பதை காட்டுவாங்க. ஆனால் real life-ல majority மக்கள் lottery வாங்கி தோற்குறாங்க. அதே மாதிரி தான் இந்த fantasy apps. சில rare winners இருக்கும். ஆனா overall-ஆ பாத்தா அதிகமான மக்கள் பணம் இழக்குறாங்க.

இன்னைக்கு பல parents கவலையில இருக்காங்க. “என் பையன் எப்பவும் phone-ஐ மட்டும் பார்த்துட்டு இருக்கான்”ன்னு. காரணம் இந்த fantasy contests. சிலர் office வேலை நேரத்துல கூட team edit பண்ணுறாங்க. concentration போயிடுது. மனநிலை பாதிக்குது.

ஒரு காலத்துல சூதாட்டம் என்றால் மக்கள் பயந்தாங்க. இப்போ அது modern வடிவத்துல mobile app-ஆ வந்துருக்கு. colourful interface, bonus cash, free entry, cashback, mega contestன்னு சொல்லி attractive-ஆ காட்டுறாங்க. ஆனா உள்ளே போன பிறகு தான் பலருக்கும் reality புரியும்.

இதுல இன்னொரு psychological trick என்னன்னா “near miss effect”. ஒருத்தன் 1 lakh participants-ல 120 rank வாங்குவான். உடனே என்ன நினைப்பான்? “அட இன்னும் கொஞ்சம் இருந்தா ஜெயிச்சிருப்பேன். அடுத்த தடவை கண்டிப்பா வரும்”ன்னு. இதுதான் மீண்டும் பணம் போட வைக்கும். இதையே பல gaming industries use பண்ணுறாங்க.

மக்கள் புரிஞ்சிக்க வேண்டிய முக்கியமான விஷயம் — எந்த app-யும் charityக்காக உருவாக்கப்படல. அது business. அவர்களுக்கு profit வேண்டும். மக்கள் தொடர்ந்து contest join பண்ணணும். அதுக்காக psychology, marketing, advertisement எல்லாத்தையும் use பண்ணுவாங்க.

இன்னைக்கு சில இளைஞர்கள் cricket match enjoy பண்ணவே முடியல. “என் captain run அடிக்கணும்”, “அவன் wicket எடுக்கணும்”ன்னு tension-ஆ பார்க்குறாங்க. Game enjoyment itself போயிடுச்சு. Friendship கூட பாதிக்குது. சிலர் betting மாதிரி argue பண்ணுறாங்க.

இந்த fantasy gaming உலகத்துல சிலர் profit பண்ணலாம். ஆனால் majority மக்கள் steady profit பண்ணுறது ரொம்ப கடினம். அதனால இதை income source-ஆ நினைக்கக் கூடாது. இது ஒரு risky entertainment என்ற புரிதல் இருக்கணும். இல்லனா வாழ்க்கை itself damage ஆகும்.

இப்போ social media-ல பலர் open-ஆ சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. “நான் லட்சக்கணக்கில் இழந்தேன்”, “என் savings போச்சு”, “loan வாங்கி போட்டேன்”ன்னு. இது ஒரு warning bell. Easy moneyன்னு ஆரம்பித்தது, addiction-ஆ மாறிடுது.

அதனால் மக்கள் especially இளைஞர்கள் ஒரு விஷயம் புரிஞ்சிக்கணும். உழைப்பால் வரும் பணத்துக்கு value இருக்கும். shortcut money மீது blind hope வைச்சா disappointment தான் அதிகம் வரும். Fantasy game-ஐ life-changing income மாதிரி பார்க்காமல், அதன் பின்னாடி இருக்கும் business model, psychology, manipulation எல்லாத்தையும் தெரிஞ்சுக்கணும். இல்லனா “இந்த தடவை மட்டும் ஜெயிப்பேன்”ன்னு சொல்லிக்கிட்டே பலர் தங்களோட பணத்தையும், நேரத்தையும், மன அமைதியையும் இழந்து கொண்டே தான் இருப்பார்கள்









கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கனவு என்பது மனதின் பிரதிபலிப்பு / கனவு காண்போம்

Protection of Civil Rights Act (PCR Act), 1955 அதாவது தாழ்த்தப்பட்ட சாதியினரின் குடிமக்கள் உரிமைகளை பாதுகாக்கும் சட்டம்.

இந்துக்களுக்கு மட்டும் அல்ல இஸ்லாமியர்களுக்கும் ராமாயணம் உள்ளது