கர்மாவின் கணக்கு மிக துல்லியமாக நிறைவேறியது
இது ஒரு லாரி டிரைவர் பத்தின கதை
விதியின் சக்கரம் சுழலும் சத்தம் அந்த லாரி இன்ஜின் சத்தத்தை விட பயங்கரமானது என்பதை அவர்கள் இருவரும் உணர்ந்திருக்கவில்லை.
இது வெறும் காமத்தின் கதை கிடையாது. நம்பிக்கை துரோகத்தின் நிழலில் வளர்ந்து அதன் இறுதியில் கர்மாவின் கைகளில் சிக்கி சீரழிந்த ஒரு குடும்பத்தின் கண்ணீரும் ரத்தமும் கலந்த பெரும் காவியம்.
எளிய மனிதனின் ஏழை உலகம்
முத்து ஒரு பாவமும் அறியாத ஒரு நல்ல மனிதன் நேஷனல் ஹைவே என்று சொல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலைகளில் இரவும் பகலும் ஓடும் கே கே ஆர் ட்ரான்ஸ்போர்ட் லாரியின் கிளீனர். லாரியின் சக்கரங்கள் எப்படி தேய்கின்றது அவனுடைய வாழ்நாளும் அப்படித்தான் தேய்ந்து கொண்டிருந்தது. அவனுக்கு எந்த ஒரு பெரிய ஆசைகளும் கிடையாது. சொந்தமாக ஒரு டீக்கடை வைக்க வேண்டும். இரண்டு குழந்தைகளையும் நல்ல பள்ளிக்கூடத்தில் படிக்க வைக்க வேண்டும். இவ்வளவுதான் அவனுடைய லட்சியமாகவே இருந்தது. அவனுடைய உலகம் அவனது மனைவி ரேகா மற்றும் ஐந்து வயதில் ஒரு மகனும் மூன்று வயதில் ஒரு மகளும் இந்த மூன்று பேரைச் சுற்றியே சொல்கின்றது. முத்து மாதிரி ஒரு தங்கமான மனுஷனை இந்த உலகத்தில் பார்க்க முடியாதுப்பா.. அவன் ஒரு வாயில்லா பூச்சி.. ஆனா என்ன பண்றது விதி அவனுக்கு ஒரு சொந்தமா மொபைல் போன் கூட கிடைக்க முடியாமல் பண்ணிடுச்சு. அவன பாத்து மத்த கிளீனர்களும் டிரைவர்களும் கேலி பண்றதும் உண்டு. முத்துவிட ம் சொந்தமா டச் போனோ? ஏன் ஒரு சாதாரண பட்டன் போன் கூட கிடையாது. வறுமை அவனுக்கு அந்த வசதியும் கொடுக்கல. ஆனா அவனுடைய மனைவி ரேகாவுக்கு வீட்ல சும்மா இருக்கும்போது கணவனுடன் பேச வேண்டும் என்ற ஏக்கம் ரொம்பவே அதிகமா இருந்துச்சு. அங்கு தான் நுழைந்தான் கொடூரன் பிரகாஷ். பிரகாஷ் என்பவன் அந்த லாரி உடைய மெயின் டிரைவர் முரட்டு உடம்பாகவும், மீசையும், கண்களில் ஒருவித தந்திரமும் கையில எப்போதும் காசு பணம் கூடிய திமிரும் அவன்கிட்ட விலை உயர்ந்த ஸ்மார்ட் போனும் இப்படி அடுக்கி கிட்டே போலாம்.
முத்து உன் பொண்டாட்டி கூப்பிடுறா டா என்று பிரகாஷ் போனை நீட்டும் போதெல்லாம் முத்து உடைய முகம் மலர்ந்து போகும்.
ரேகா நல்லா இருக்கியா..? நம்ம பிள்ளைங்க எல்லாம் சாப்பிட்டாங்களா.? என்று முத்து ஆசையோடு பேசுவான். ஆனால் லாரி கிளீனர் வேலை என்பது சாதாரணமானது கிடையாது. பகலெல்லாம் மூட்டையை தூக்கி டயர மாற்றி நல்லிரவுல தூக்கம் இல்லாமல் லாரியின் கிளீனர் சீட்ல அமர்ந்து வழி நெடுகிலும் தூங்காம தான் வரணும்.
மெல்ல படர்ந்த விஷம்
நாட்கள் கடந்து போக முத்துவின் கடுமையான உழைப்பு அவனை களைப்படையச் செய்தது. லாரி ஓடிக்கிட்டு இருக்கும் போது கிளீனர் சீட்டில் அமர்ந்து முத்து இப்ப எல்லாம் அசந்து தூங்கி விடுகின்றான். அந்த நைட் நேரங்கள்ல ரேகாவிடம் இருந்து பிரகாசுக்கு அழைப்பு வரும்.
“அண்ணே அவர் என்ன பண்றாரு..?சாப்பிட்டாரா..?
என்று மெல்லிய குரலில் கேட்பாள் முத்துவின் மனைவி ரேகா. பிரகாஷ் தூங்கிக் கொண்டிருக்கும் முத்துவை ஒரு பார்வை பார்த்தான். அவனுடைய மனசுல வக்கிர புத்தி தலை தூக்க ஆரம்பிச்சுச்சு.
உன் புருஷன் நல்லா குறட்டை விட்டு தூங்குறா ரேகா. அவனுக்கு உன் மேல என்ன அக்கறை இருக்கு? விடிய விடிய நான் வண்டி ஓட்டுறேன் என் கூட கூட பேச ஆள் இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கேன். நீ ஏன் அவனுக்காக காத்துகிட்டு இருக்க? என் கூட பேச வேண்டியதுதானே? அப்படின்னு பிரகாஷ் தன் வசிய பேச்ச ரேகா கிட்ட பேசினான். ஆரம்பத்துல ரேகாவும் பயந்தா
“இல்லண்ணே அவர் பாவம் அப்படின்னு சொன்னா.
என்ன பாவம் ரேகா? ஒரு பொம்பளைய எப்படி வச்சுக்கணும்னு கூட இவனுக்கு தெரியல. ஒரு நல்ல புடவை வாங்கி கொடுத்து இருக்கான உனக்கு? ஒரு போன் வாங்கி கொடுத்து இருக்கானா உனக்கு? நீ எவ்வளவு அழகா இருக்க தெரியுமா? உன்னை இந்த முத்து ரொம்ப அசிங்கமாக்குறான். இப்படி பிரகாஷின் வார்த்தைகள் ரேகாவின் காதுகளில் தேனிலும் தேனாக பாய்ந்தது. வறுமையிலும் கணவனின் கவனக்குறைவிலும் ஏங்கிக் கிடந்த ரேகாவின் பலவீனத்தை பிரகாஷ் அவனுக்கு சாதகம் ஆக்கிக் கொண்டான். கணவன் அருகில் தூங்கிக் கொண்டிருக்கின்றான் என்ற பயம் கூட இல்லாமல் பிரகாஷின் வசிய பேச்சில் ரேகா மெல்ல மெல்ல தன்னை இழந்து கொண்டே வந்தாள். அவர்களுடைய தொலைபேசி அழைப்புகள் நீண்டன. அவருடைய பேச்சுக்களும் மாறியது. காமம் இருவர் மனதிலும் விஷமாக படர தொடங்கியது.
கள்ளக்காதலின் இருள் பாதை
நெடுஞ்சாலை பயணங்கள் முடிந்து லாரி செட்டுக்கு வரும் போதெல்லாம் முத்துவை ஏதாவது ஒரு வேலைக்காக பிரகாஷ் வெளியே அனுப்பி விற்றுவான்.
முத்து போய் அந்த முதலாளி அம்மா வீட்ல இந்த கவர குடுத்துட்டு வாடா.. என்று அனுப்பிவிட்டு முத்து உடைய வீட்டுக்கே நேரா சென்று விடுவான் இந்த பிரகாஷ் கொடூரன்.
முத்து இல்லாத தனிமையில் ரேகாவும் பிரகாசம் தங்களுடைய எல்லையை கடந்தார்கள். அது ஒரு கேவலமான கள்ளத் தொடர்பாக மாறியது. ரேகாவுக்கு இப்போது முத்துவின் எளிய முகம் ரொம்பவும் கசப்பாக தெரிந்தது. பிரகாஷின் பணமும் உன்னுடைய உடல் பலமும் அவன் தரும் வக்கிர போலி பாசமும் அவளை பித்தாக அவனைப் பிடித்தவனாக மாற்றியது.
நாம ஏன் இப்படி திருட்டுத்தனமா வாழனும் அவன் நம்ம வழியில் இருந்து நீக்கிட்டோம்னா நம்ம ரெண்டு பேரும் சந்தோஷமா வாழலாம் அப்படின்னு ஒரு நாள் இரவு ரேகா பிரகாஷின் மார்பில் சாய்ந்து கொண்டே சொன்னா. பிரகாஷுடைய கண்கள்ல அந்த சமயத்துல கொலைவெறி தாண்டவம் ஆடியது. அவன் உயிரோடு இருந்தால்தானே நமக்கு தொல்ல அடுத்த வாரம் கேரளாவுக்கு ஒரு ஆர்டர் இருக்கு அங்க வச்சு அவனுக்கு சோலியை முடித்துவிடலாம் அப்படின்னு கொடூரமா சொன்னான்.
நள்ளிரவு கொலை
அந்த சாபக்கேடான இரவு வந்தது. கேரளா மலைப்பகுதியில் அதன் எல்லையில் உள்ள ஒரு காட்டுப் பகுதியில் கே கே ஆர் டிரான்ஸ்போர்ட் சென்று கொண்டிருந்தது. மழை ஒரு பக்கம் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது. அப்போது திடீரென லாரி நின்றது. முத்து அப்போது லாரியின் பின்னால் டயரை பரிசோதித்துக் கொண்டிருந்தான். பிரகாஷ் வண்டியில் இருந்து கீழ் இறங்கி சுற்றிலும் பார்த்தான். ஆள் இல்லாத இருட்டுச் சாலை அது. பிரகாஷ் அருகில் இருக்கும் லாரியின் டூல்ஸ் பாக்சில் இருந்த கனமான இரும்பு ராடை எடுத்து மெதுவாக முத்துவின் பின்னால் சென்றான். கொஞ்சமும் இரக்கம் இல்லாமல் காமத்தின் பிடியில் சிக்கி இருந்த அந்த பிரகாஷ் முத்துவின் தலையின் பின்புறத்தில் ஓங்கி அடித்தான்.
முத்துவோ அம்மா.. என்று அலறலோடு ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தான். விழுந்த முத்துவின் நெஞ்சில் காலை வைத்து மிதித்து இனிமே உன் பொண்டாட்டி எனக்கு தான்டா அப்படின்னு ரொம்ப கத்தினான். முத்துவின் கண்கள் அந்த நள்ளிரவு மலையில் அப்படியே நிலை குத்தி நின்றன. தன்னுடைய மனைவியும் தன் உயிராக நினைத்துக் கொண்டிருந்த டிரைவரும் சேர்ந்து தன்னை ஏமாற்றியதை வஞ்சித்ததை உணர்ந்த அந்த வினாடியே அவனது உயிரும் பிரிந்தது. அவன் உடலை அந்த பள்ளத்தாக்கில் வீசிவிட்டு விபத்து நடந்தது போல நாடகமாடினான் அந்த கொடூரன் பிரகாஷ்
கர்மாவின் கணக்கு தொடர்ந்து கொண்டே இருக்கும்
முத்துவின் மரணச் செய்தி கேட்டு ரேகா வெளியில் கண்ணீர் விட்டு அழுதால் ஆனால் உள்ளுக்குள் அவளுக்கு மகிழ்ச்சியே இருந்தது.
சில மாதங்கள் கடந்து போயின ஊர் பேசக்கூடிய பேச்சுக்களை புறம் தள்ளிவிட்டு அந்த கொடூரன் பிரகாசும் ரேகாவும் முத்து வாழ்ந்த அதே வீட்டில் சேர்ந்து வாழத் தொடங்கினார்கள். முத்துவின் இரண்டு குழந்தைகளும் அனாதைகளைப் போல அந்த வீட்டில் வளரத் தொடங்கியது ஆனால் இயற்கையின் நீதி என்றுமே உறங்குவதில்லை. கள்ளக்காதலின் மோகம் சில வருடங்களிலேயே இருவருக்கும் குறைய தொடங்கியது. பிரகாஷ் குடிப்பழக்கத்திற்கு அடிமையானான். ரேகாவை சித்திரை வதை செய்யத் தொடங்கினான். சிகரட்டால் சூடு போட்டான். அவர்கள் பிள்ளைகளையும் கவனிக்காமல் விட்டு விட்டான். எப்போதும் ரேகாவிடம் சண்டையிட்டுக் கொண்டே இருந்தான் உன் புருஷனையே கொல்வதற்கு எப்படி திட்டம் போட்டாய்? அதே என்னை கொள்வதற்கு உனக்கு எவ்வளவு நேரம் ஆகிவிடும் என்றும் உன்னை எப்படி நம்புவதும் என்றும் கூறி அவளை உதைத்தான். அவளோ கதறி அழுதால்.முத்துவின் ஆன்மா அவளைப் பார்த்து சிரிப்பது போல் அவளுக்கு தோன்றியது. ஒரு நாள் பிரகாஷ் குடிபோதையில் லாரி ஓட்டி சென்ற போது எதிர்பாராத விதமாக ஒரு பெரும் விபத்து ஏற்பட்டது. எதிரே வந்த காரின் மீது இவன் ஒட்டி வந்த லாரி மோதி அந்த காரில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போகிறார்கள். உடனே போலீசார் பிரகாஷை கைது செய்து அவனுடைய பழைய குற்றங்களையும் முத்துவின் மரணத்திலிருந்து சந்தேகத்தையும் மறுவிசாரணைக்கு கொண்டு வந்தார்கள். குற்றத்தை கண்டுபிடித்த நீதிமன்றம் அவனுக்கு 30 ஆண்டுகள் கடும் காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
தெருவில் நின்ற பாவி பிரகாஷ் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டான். அவன் சேர்த்த பணம் முழுவதும் வக்கீலுக்கும் கோர்ட்டுக்குமே சரியாகப் போனது. வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் ரேகா தன் இரண்டு குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியே அனுப்பப்பட்டால். அவனின் காம கள்ள காதலனுக்காக தன் தாலி அறுத்தவளுக்கு உதவ எந்த ஊரும் உறவும் முன் வரவில்லை. ஊரே அவளைக் பார்த்து காரி துப்பியது.
இப்போது அந்த பழைய நெடுஞ்சாலையின் ஓரத்தில் இருக்கும் ஒரு சிதலமடைந்த பேருந்து நிறுத்தத்தில் ரேகா கந்தல் துணிகளுடன் அமர்ந்திருக்கிறாள். அவளது கைகளில் ஒரு காலியான மெலிந்து போன பாத்திரம். பசியால் அழும் ஐந்து வயது மகளும் மூன்று வயது மகனும் அவளது சேலையை பிடித்து இழுத்துக் கொண்டிருக்கிறார்கள் எங்களுக்கு உணவு வாங்கி தாருங்கள் என்று. யாராவது அந்த ரோட்டு வழியாக செல்லும் ஒரு லாரி டிரைவர் வண்டியை நிறுத்தி காசு கொடுத்தால் தான் அன்று இரவு அவர்களுக்கு உணவே கிடைக்கும். அவள் வானத்தைப் பார்த்து அழுதால் அவளுக்கு தெளிவாகத் தெரிந்தது அன்று தன் கணவன் முத்து போன் இல்லாததால் யாரிடமும் கையேந்தி நின்றானே இன்று அவள் ஒருவேளை சோற்றுக்காக ரோட்டில் கையேந்தி நிற்கிறாள்.
கர்மா தன் கணக்கை மிகத் துல்லியமாக முடித்திருந்தது.
- முற்றும்-

கருத்துகள்