தெரு நாய்கள் மக்களுக்கு ஒரு வர பிரசாதம்
என்னடா இவன் நாய் போயி மக்களுக்கு வரப்பிரசாதம் என்று சொல்கிறானே அப்படித்தானே நினைக்கிறீங்க? ஆமா தாங்க இந்த உலகத்தில் முதல் நண்பன் யார்? என்று கேட்டால் அது நாய்கள் தான்.
ஆதி காலத்தில் இருந்து இன்று வரை மனிதனுக்கு ஒரு உற்ற நண்பனாகவும் பாதுகாவலனாகவும் செயல்படக்கூடியது இந்த நாய்கள் இனம். மனிதன் ஆதிகாலம் தொட்டு அன்றிலிருந்து இன்று வரை அவனுக்கு உறுதுணையாக செயல்பட்டு கொண்டிருப்பது இந்த நாய்கள் தான். இறைவன் மனிதர்களுக்கு கொடுத்த மிகப்பெரிய அருட்பெரும் கொடை தான் இந்த நாய்கள். காட்டில் வாழ்ந்த மனிதனுக்கு அவனுடைய பாதுகாப்பிற்காகவே அவனுடன் அழைத்துச் சென்று அந்த நாயை பழக்கினான். ஆனால் உண்மை என்னவென்றால் நாம் நாயை பழக்கவில்லை நம்மை தான் நாய்கள் பழகிக் கொள்கின்றன. நாய்களின் மூலையில் மனிதர்களுக்கு நீ உறுதுணையாக பாதுகாப்பாக எப்போதும் செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்து தான் அந்த நாயை உருவாக்கி இருக்கின்றார். அப்படிப்பட்ட அந்த நாயை பற்றி சொல்ல வேண்டுமேயானால் நாய்கள் எந்த விளக்குகளுக்கும் எந்த உயிரினங்களுக்கும் பயப்படாத ஒன்று. தன் எஜமானருக்கு ஒரு பிரச்சனை வந்து வட்டால் களத்தில் இறங்கி சண்டை செய்வதில் மிகவும் கைதேர்ந்த ஒன்று இந்த நாய்கள். ஒருமுறை ஒரு நாய்க்கு நீங்கள் உணவு வைத்து விட்டால் அந்த நாய் உங்களிடம் நன்றியோடு எப்போதும் இருக்கும் என்பதே அந்த நாய்களுக்கு இருக்கக்கூடிய தனித்துவமான தன்மைகள்.
மேலும் நாயின் சிறப்புகளை இங்கே பார்க்கலாம்
1. நாய்களின் மோப்ப சக்தி மனிதர்களை விட பத்தாயிரம் மடங்கு மற்றும் ஒரு லட்சம் மடங்கு வடை உயர்ந்திருக்கிறது. எதிரிகளின் வாடையையோ அல்லது உணவின் வாடையையோ இலகுவாக முகர்ந்து விடுகின்றன. வெடிகுண்டு இருக்கும் இடத்தையும் போதைப்பொருள் இருக்கும் இடத்தையும் சரியான முறையில் மோப்பம் பிடித்து செயல்படுவதாலேயே நாய்களும் இன்று காவல்துறையில் இடம் பெற்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
2. மனிதர்களால் கேட்க முடியாத சத்தத்தை விட இது அதிகமான அதிர்வெண் கொண்ட காதுகளை கொண்டதால் அது சிறு சத்தத்தையும் எளிதில் கேட்க முடிகிறது.
3. ஒரு மனிதனின் மனநிலை எப்படி இருக்கின்றதோ அதற்கேற்றவாறு அந்த நாய் அந்த மனிதனிடம் நடந்து கொள்கிறது குறிப்பாக அந்த மனிதன் கோபமாக இருக்கும் அந்த முகத்தை பார்த்தால் அது அருகில் வருவதை நிறுத்தி விடும் மேலும் சந்தோஷமான முகத்தில் மனிதன் இருப்பதை உணர்ந்து கொண்டு அப்போதுதான் அந்த நாய் அவனுடைய அருகில் வருகின்றன. இப்படி மனிதர்களுடைய முக பாவணங்களை எளிதாக கற்றுக் கொள்கின்றன.
4. தன் முதலாளியவோ அல்லது அவருடைய குடும்பத்தையோ பாதுகாப்பதற்காக தன் உயிரை கூட விடுவதில் அந்த நாய்களுக்கு அந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
5. இருட்டிலும் கூட அதனுடைய கண்கள் மிகத் தெளிவாகத் தெரியும் தன்மை கொண்டன.
சில நாய் வகைகளின் பெயர்கள்
1. ராஜபாளையம் நாய்
பொதுவாக ராஜபாளையம் நாய்கள் மிகவும் உயரமாக வளரக்கூடியது.
2. சிப்பிப்பாறை
இந்த நாய்கள் மிகவும் வேகமாக ஓடக்கூடியது மற்றும் வேட்டைகளில் சிறந்தது.
3.கன்னி நாய்
மிக உயரம் தாவுவதில் கன்னி நாய்க்கி நிகர் வேறு வேறு எந்த நாயும் கிடையாது அதுவும் வேட்டையாடும் விலங்குகளில் ஒன்று.
4. கோம்பை நாய்
மிகச் சிறந்த அன்பு கொண்ட நாயாகவும் அன்றைய காலகட்டத்தில் ராஜாக்களின் உதவியாக இருந்த நாயாகவும் இந்த கோம்பை நாய் பார்க்கப்படுகிறது. வீட்டை பாதுகாப்பதில் இந்த நாயை விட பெரிய நாய் வேறொன்றும் கிடையாது.
வெளிநாட்டு நாய்கள்
1. ஜெர்மன் ஷெப்பர்ட்
2. டாபர்மேன்
3.பக்
4. லெப்ராடு ரெட் ட்ரைவர்
5. ஹஸ்கி
6. அல்ஜிசியன்
7. பிட்புல்
இதே போல் இன்னும் பல வகை நாய் இனங்கள் இந்த பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
இன்று அனேக பேர் தெரு நாய்களைப் பார்த்தால் கல்லெடுத்து எரிவதும் விரட்டி அடிப்பதுமாகத்தான் இருக்கிறார்கள் ஆனால் அது மனிதர்களிடத்தில் அதனுடைய வயிற்று நிரப்புவதற்காக கொஞ்சம் உணவு எடுத்துக் கொண்டு இரவு நேரங்களில் அந்த ஊரை திருடர்களிடமிருந்து பாதுகாக்கின்றன. அவர் எனக்கு உணவு வைக்கவில்லை அதனால் அவர் வீட்டில் நீங்கள் தாராளமாக திருடிக் கொண்டு செல்லலாம் என்று எந்த நாய்களும் நினைப்பதில்லை. நாய்களுக்கு கூர்மையான ஞாபகத்திறன் இருக்கும் காரணத்தினால் அவர்கள் யார் உள்ளூர் காரர்கள் யார் வெளியூர்க்காரர்கள் என்பதையும் நிர்ணயம் செய்கின்றன. மேலும் நாய்களுக்கு மத்தியிலே அங்கே தலைவர்கள் இருக்கிறார்கள். ஒரு நாய் மற்றொரு நாய் உடன் நன்றியுடன் நண்பனோடு பழகுகிறது. அதேபோல் வெளி நாய்களிடம் இருந்து இது தன்னுடைய எல்லையை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்காக சண்டையிடுகின்றன. மார்கழி மாதங்களில் நாய்கள் ஒன்று சேர்கின்றன. மூன்று முதல் ஐந்து குட்டிகள் வரை போடுகிறது. அந்த நேரத்தில் குட்டிகளுக்கு பால் கொடுப்பதற்காக சிறிது ஆக்ரோஷமாகவே உணவை தேடும். இது போன்ற சந்தர்ப்பங்களில் மனிதர்களாகிய நாம் அதனுடைய உணர்வை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு நாம் உணவளிக்க வேண்டும். இரவு நேரங்களில் நாம் நிம்மதியாக தூங்குகிறோம் என்றால் அதற்கு காரணம் ஒரு வகையில் நாய்களாகவும் இருக்கின்றன. ஆடுகளை குழுக்களாக மேய்ப்பவர்கள் நாயை வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள் ஏனென்றால் அந்த நாயே அந்த ஆட்டுக் குழுக்களை மேய்த்து கிடையில் அடைக்கும் வரை கூடவே இருக்கிறது. ஆட்டுக்குட்டிகளுக்கு ஏதேனும் ஆபத்து வந்து விட்டால் அதை சீரப்பாய்ந்து தாக்குகின்றன. பெரிய பெரிய இடங்கள் முதல் சிறிய இடங்கள் வரை நாய்கள் அநேக பயனாகவே மனிதர்களுக்கு இன்று வரை இருந்து வருகிறது.
அப்படிப்பட்ட அந்த நாய்களுக்கு தெரு நாய்களுக்கு நீங்கள் ஏதேனும் ஒரு நேரம் உங்கள் கைகளால் உணவளியுங்கள் அது நீங்கள் அந்த நாய்க்கு கொடுக்கக்கூடிய மிகப்பெரிய பரிசு. மேலும் நாயை கால பைரவனின் வாகனமாக சொல்கிறார்கள். நாய்களுக்கு எமனின் கண்கள் எமனின் உருவம் நன்றாகவே தெரிவதால் அது ஊளை இடுகிறது என்று ஊர் மக்கள் சொல்வது ஒரு வழக்கு. பெரும்பாலும் நாய்கள் நரியைப் போல ஊளையிடுகிறது அது ஊளை இடுவதற்கான காரணம் அது தனியாக இருப்பதை உணர்வதால் தான் என்று சிலர் கூறுகின்றனர். மேலும் அதற்கு உணவு ஏதும் இல்லாமல் இந்த பூமியில் வாழ்வதை சிரமமாக எண்ணி அந்த நேரத்தில் ஊளையிடுகிறது இது கெட்ட சகுனமாகவே மக்கள் எண்ணுகிறார்கள்.
இதுவே நான் நாய்களைப் பற்றி உங்களுக்கு சொல்ல வேண்டிய விஷயமாக எண்ணினேன் அதைச் சொல்லி விட்டேன் இந்த பதிவு பிடித்திருந்தால் ஒரு லைக் பண்ணுங்க நம்மளுடைய பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க நன்றி நன்றி
கருத்துகள்