நீங்கள் அடிக்கடி ஹோட்டலுக்கு சென்று சாப்பிடுவீர்களா?
அனைத்து நண்பர்களின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக. இன்னைக்கு நான் ஹோட்டல் சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தை பேச போறேன். அதே நேரத்துல உணவு, அதில் இருக்கக்கூடிய சுத்தம் எல்லாத்தையுமே பேச போறேன். ஹோட்டல் உணவுகளைச் சொல்லும் ஏஐயால் உருவாக்கப்பட்ட படம் இன்னைக்கு வீட்ல சமைக்கலாட்டி நம்ம ஹோட்டல்ல போயி சாப்பிடுறோம். அப்படி ஹோட்டல்ல கிடைக்கக்கூடிய உணவுகள் எந்த அளவுக்கு நமக்கு தரமானது என்பதை நாம் நினைவு கூற வேண்டும். நம்ம ஒரு ஹோட்டலுக்கு போய் சாப்டோம்னா சில நேரங்களில் பழைய உணவுகளை நமக்கு புது உணவாக மாற்றி பரிமாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. குறிப்பாக அசைவ உணவு என்று சொன்னால், அந்த அசைவ உணவை பார்த்தீர்கள் என்றால் நேற்று அல்லது அதற்கு முன்பு அந்தக் கடையில் விற்காத ஒரு மாமிசத்தை புதிதாக மீண்டும் உருவாக்கி நம்மிடம் தரக்கூடிய வாய்ப்புகள் அதிகம். இந்தச் சம்பவம் என் வாழ்க்கையிலே நடந்திருக்கிறது. நான் வேலை பார்த்த ஒரு த்ரீ ஸ்டார் ஹோட்டலில் ஒரு மாதமாக இறால் என்ற உணவை வைத்திருந்தார்கள். மேலும் சமைக்கப்பட்ட கறியை மீண்டும் பயன்படுத்தும் பழக்கத்தையும் வைத்திருந்தார்கள். எனவே நாம் ஹ...