தற்கொலைக்கு தள்ளிய ஆன்லைன் சூதாட்டம் – கண்ணன் கதையைப் போன்ற ஒரு நிஜமான கதை
இங்கே ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஆன்லைன் சூதாட்டத்தில் விழுந்து பாதிக்கப்பட்ட ஒருவரைப் பற்றிய சுவாரஸ்யமான கதை உங்களுக்காக அதிகம் வேண்டும் என ஆசைப்பட்டவன்… எல்லாம் இழந்தான்! சென்னை புறநகரான பல்லாவரத்தில் வசித்தது கண்ணன் என்பவன் வசித்து வந்தான்(பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). 34 வயதான கண்ணன், ஒரு தனியார் நிறுவனத்தில் கணினி தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றி வந்தார். தற்காலிக work from home வேலைவாய்ப்பால் அவர் வீட்டிலேயே இருந்தார். வேலை முடிந்த பின் நேரத்தை கழிப்பதற்காக தொடங்கியது தான் இந்த ஆன்லைன் ரம்மி. விடாமல் விளம்பரத்தை போட்டு அவன் மனதில் சூதாட்டம் மூலமாக பணத்தை வென்று விட வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டி இருக்கிறார்கள். அவனும் மனது மாறி சூதாட்டத்தை விளையாடத் தொடங்கினான். முதல் சில நாட்களில் சிறிய தொகைகளை வைத்து விளையாடினார். அதில் சில வெற்றிகள் கிடைத்தன. வெற்றியின் ரசனை கண்ணனின் உள்ளத்தை மாற்றியது. வெற்றிகள் தொடர்ந்து வரும் என நம்பிய அவர், மிகப் பெரிய தொகைகளை தயங்காமல் போட்டார். சிறிது நாட்களில் அவர் சம்பள பணத்தையும் குடும்பத்திற்காக சேர்த்து வைத்திருந்...