தற்கொலைக்கு தள்ளிய ஆன்லைன் சூதாட்டம் – கண்ணன் கதையைப் போன்ற ஒரு நிஜமான கதை

 இங்கே ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஆன்லைன் சூதாட்டத்தில் விழுந்து பாதிக்கப்பட்ட ஒருவரைப் பற்றிய சுவாரஸ்யமான கதை உங்களுக்காக



அதிகம் வேண்டும் என ஆசைப்பட்டவன்… எல்லாம் இழந்தான்!

சென்னை புறநகரான பல்லாவரத்தில் வசித்தது கண்ணன் என்பவன் வசித்து வந்தான்(பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). 34 வயதான கண்ணன், ஒரு தனியார் நிறுவனத்தில் கணினி தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றி வந்தார். தற்காலிக work from home  வேலைவாய்ப்பால் அவர் வீட்டிலேயே இருந்தார். வேலை முடிந்த பின் நேரத்தை கழிப்பதற்காக தொடங்கியது தான் இந்த ஆன்லைன் ரம்மி.

விடாமல் விளம்பரத்தை போட்டு அவன் மனதில் சூதாட்டம் மூலமாக பணத்தை வென்று விட வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டி இருக்கிறார்கள். அவனும் மனது மாறி சூதாட்டத்தை விளையாடத் தொடங்கினான்.

முதல் சில நாட்களில் சிறிய தொகைகளை வைத்து விளையாடினார். அதில் சில வெற்றிகள் கிடைத்தன. வெற்றியின் ரசனை கண்ணனின் உள்ளத்தை மாற்றியது. வெற்றிகள் தொடர்ந்து வரும் என நம்பிய அவர், மிகப் பெரிய தொகைகளை தயங்காமல் போட்டார். சிறிது நாட்களில் அவர் சம்பள பணத்தையும்  குடும்பத்திற்காக சேர்த்து வைத்திருந்த பணத்தையும் சூதாட்டத்தில் போட்டான். ஆனால் அவன் எந்த வெற்றியும் பெற முடியவில்லை.

"இந்த முறைதான் வெற்றி நிச்சயம்" என்று நம்பிய கண்ணன், நண்பர்களிடமும் குடும்பத்தினரிடமும் கடனாக பணம் கேட்டு வாங்கினான்.

அந்தப் பணத்தில் ஒரு பகுதியை சூதாட்டத்துக்கு செலவிட்டார். ஆனால் அவ்வப்போது கிடைத்த வெற்றிகள், ஒரு மாயைதான் என்பதைப் போல், நிதானமாக இழப்புகளாகவே மாறின. 4 மாதங்களில் அவருடைய மொத்த கடன் ₹15 லட்சத்தைத் தாண்டியது. வட்டி வாங்கும் நபர்கள் வீட்டிற்கு வந்து அழுத்தம் கொடுக்கத் தொடங்கினர். அலுவலகத்தில் இவன் வேலையை சரியாக செய்யாமல் சூதாடியதால் வேலையை விட்டு எடுத்து விட்டார்கள். இதனால் அவனுக்க மன அழுத்தம் ஏற்பட்டது. குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை உண்டானது.கண்ணனின்  வாழ்வை சூதாட்டம் நரகமாக மாற்றியது.

ஒருநாள் இரவு, பெரும் மன உளைச்சலுக்கு ஆளான கண்ணன்  தற்கொலைக்காக முயன்றார். ஆனால் அதிர்ஷ்டவசமாக, அவரது மனைவி சந்தேகித்து அவரைக் காப்பாற்றி உடனே மருத்துவமனையில் சேர்த்ததால் உயிர் காக்கப்பட்டது.

மருத்துவ மனநல நிபுணர்கள், அவரை சிகிச்சைக்காக அட்மிட் செய்து மன அழுத்த சிகிச்சை அளித்தனர். அதனுடன், அரசு அனுமதி பெற்ற வட்டி சுமைகள் குறித்து சட்ட உதவியும் வழங்கப்பட்டது. குடும்பமும் நண்பர்களும் பின்னர் ஆதரித்து, அவரை மறுவாழ்வுக்கு அழைத்தனர்.

இப்போது கண்ணன், அந்த அனுபவத்தை மற்றவர்களுக்கு எச்சரிக்கையாக கூறும் சமூக ஊடக வல்லுநராக வளர்ந்திருக்கிறார்.

"நான் விழுந்த அந்த குழியில் இன்னொருவர் விழக்கூடாது" என்பதே அவரது நோக்கம்.


இந்த கதை உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இது போன்ற சூதாட்டங்கள் எத்தனை குடும்பங்களை அழிக்கின்றன என்பதை நினைவூட்டும் வகையில் இந்தக் கதையை பிறருக்கு பகிர வேண்டுகின்றேன்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலக பிரபலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ இஸ்லாத்திற்கு மாறிவிட்டாரா?

யூசுப் நபியின் வரலாற்றை பற்றி ஒரு நெருக்கமான பார்வை

இஸ்லாமியர்கள் கூறக்கூடிய 25 நபிமார்களும் அவர்களைப் பற்றிய குறிப்புகளும்