ஜோதிடத்தின் ஏமாற்று உத்திகள் மற்றும் உண்மையான பித்தலாட்டங்கள்

 

ஜோதிடம் ஒரு அறிவியல் அல்ல. இது மக்களை ஏமாற்ற சில உத்திகளை பயன்படுத்தும் ஒரு கலை. பெரும்பாலான ஜோதிடர்கள், "உன் எதிர்காலத்தை கூறுவோம்" என்று சொன்னாலும், உண்மையில் அவர்கள் பயன்படுத்தும் சில முக்கிய பித்தலாட்டங்கள் இருக்கவே செய்கிறது.

அது எவை என்று பார்ப்போம்


1. பொதுவான விஷயங்களை சொல்லி ஏமாற்றுவது

  • ஜோதிடர்கள் பொதுவாக யாருக்கும் பொருந்தும் விஷயங்களைச் சொல்லி, அதை நீங்களே சம்பந்தப்படுத்தி கொள்ளும் வகையில் பேசுவார்கள்.


  • எடுத்துக்காட்டு:

    • "நீங்கள் ஒரு முக்கியமான முடிவை எடுக்க நினைக்கிறீர்கள்."

    • "உங்களுக்கு சில சிக்கல்கள் இருக்கலாம், ஆனால் நீங்கள் அவற்றைக் கடந்து சென்று விடுவீர்கள்."

  • இது போன்ற விஷயம் யாருடைய வாழ்க்கையிலும் ஏற்படும் பொதுவான நிகழ்வுகள் மட்டுமே.


2. உங்களைப் பற்றி உங்களிடமிருந்தே தகவல் பெறுவது (Cold Reading)

  • ஜோதிடர் உங்கள் உடை, பேச்சு, உடல்மொழி போன்றவற்றைப் பார்த்து உங்களைப் பற்றிய தகவல்களை உங்களுக்கே தெரியாமல் எடுத்து கொள்வார்.

  • எடுத்துக்காட்டு:

    • நீங்கள் முகத்தில் கவலையுடன் தென்பட்டால் "உங்க வாழ்க்கையில் இப்போது பெரிய பிரச்சனை ஒன்று நடக்கிறது" என்று சொல்லுவார்.

    • ஒரு பெண்மணியின் கையில் திருமண மோதிரம் இருந்து அல்லது புது மஞ்சள் கயிறு கழுத்தில் காணப்பட்டால் "உங்கள்  குடும்ப வாழ்க்கையில் சில சிக்கல்கள் இருக்கலாம்" என்று கூறுவார்.

  • நம்முடைய உடல் மொழியும், தோற்றமும் அவர்களுக்கு பெரிதும் உதவக் கூடியதாக இருக்கிறது.


3. நம்மிடம் எதிர்மறை பயத்தை ஏற்படுத்தி அவர்கள் சொல்லும் பரிகாரங்களை விற்பது

  • "உங்க நட்சத்திரம் பலவீனமாக இருக்கிறது", "உன் குடும்பத்தில் நோய் வரப்போகிறது", "உன் தொழில் நஷ்டமாகும்" என்று கூறி, பயமுறுத்துவார்கள்.

  • பிறகு, அதற்கு தீர்வாக, "பிரச்சினையை சரி செய்ய ஒரு பரிகாரம் செய்யவேண்டும்" என்று சொல்லி நம் உழைத்த பணத்தை அவர்கள் உழைக்காமலேயே வாங்குவார்கள்.

  • சிலர் கருப்பு, மாயம், மந்திரம், தோஷ நிவாரணம் செய்வினை வச்சிருக்காங்க போன்றவற்றைப் பற்றிச் சொல்லி, கூடுதல் பணம் பறிக்க முயல்வார்கள்.


4. எதிர்காலத்தை சொல்லாமல் உங்களிடம் கேள்விகள் கேட்டு உங்களை பேச வைப்பது

  • பல ஜோதிடர்கள் எதிர்காலத்தை தாங்களே சொல்ல மாட்டார்கள்.

  • மாறாக, "உன் வேலை எப்படி நடக்கிறது?", "உன் குடும்பத்தில் யாரேனும் உடல்நலப் பிரச்சினை உள்ளதா?" என்று கேட்பார்கள்.

  • நீங்கள் ஏதாவது பதில் சொன்னாலே, அதை வைத்து "ஆமாம், அதே விஷயம் உங்கள் ஜாதகத்தில் இருக்கிறது" என்று ஏமாற்றுவார்கள்.


5. 50-50 வாய்ப்புகளைக் கணிப்பு என கூறுவது

  • எந்த ஒரு விஷயத்திற்கும் இரண்டு முடிவுகள் தான் இருக்க முடியும் அது நடக்கும் அல்லது நடக்காது என்பதுதான்

  • எடுத்துக்காட்டு:

    • "உன் வியாபாரம் வெற்றி பெறும்" – இயல்பாகவே வியாபாரம் வெற்றி பெற்றால், "நாங்கள் கூறியதுதான் நடந்தது" என்பார்கள்.

    • தோல்வி அடைந்தால், "நீ பரிகாரம் செய்யவில்லை, அதனால் தான்!" என்று மறைத்து விடுவார்கள்

    • இவ்வாறு சொல்வதற்கு ஜோசியக்காரர்கள் தேவையில்லை எந்த ஒரு மனிதனாலும் சொல்ல முடியும்..


6. ஏதாவது ஒன்று தற்செயலாக அல்லது சரியாக வந்தால் அதை பெரிது படுத்துவது

  • 10 கணிப்புகளில் 9 தவறினாலும், 1 சரியாக வந்தால், அதைப் பற்றியே பெரிதாக சொல்லி மக்களை நம்ப வைக்க முயல்வார்கள்.

  • இது "Confirmation Bias" எனப்படும் மன உளவியல் விளையாட்டு.

  • எடுத்துக்காட்டு:

    • "உன் குடும்பத்தில் ஒரு வயதானவர் உடல்நலம் பாதிக்கப்படலாம்" என்று சொல்வார்.

    • இது இயற்கையாகவே நடக்கக்கூடிய ஒன்று என சொன்னால்

    • "நீங்கள் எங்களது கணிப்பை உதாசீனம் செய்துவிட்டீர்கள்!" என்று சொல்வார்கள்.


7. பாரம்பரிய நம்பிக்கைகளை வைத்து மக்களை ஏமாற்றுவது

  • ஜாதக கணிதம், கிரக தோஷம், ராகு-கேது பரிகாரம் போன்றவற்றைப் பயன்படுத்தி, மக்கள் ஏற்கனவே நம்பும் விஷயங்களை ஆழமாக கட்டியெழுப்புவார்கள்.

  • கிரக நிலைகளை வைத்து வாழ்க்கையை தீர்மானிக்க முடியும் என்ற புரளியான நம்பிக்கையை பரப்புவார்கள்.

  • ஆனால் அவர்கள் சொல்லக்கூடிய சூரியன் கிரகம் என்பது ஒரு வகை நட்சத்திரம் மட்டுமே அவை கிரகம் அல்ல என்பதை அறிவியல் சொல்கிறது.


முடிவு

ஜோதிடத்தில் எதுவும் உண்மையில்லை.
இது ஒரு எளிய மனச்சலிப்பை பயன்படுத்தும் உளவியல் தந்திரம் மட்டும்தான்.
படைத்த இறைவன் மட்டுமே எதிர்காலத்தை அறிவான்.

(இன்னும்) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வைத் தவிர்த்து, வானங்களிலும், பூமியிலும் இருப்பவர் எவரும் மறைவாயிருப்பதை அறிய மாட்டார்; இன்னும்: (மரித்தோர் இறுதியில்) எப்போது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள்.”

(அல்குர்ஆன் : 27:65)


மக்கள் நம்ப வேண்டியது ஜோதிடத்தை அல்ல, இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்திருப்பதே உண்மையான தீர்வு!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலக பிரபலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ இஸ்லாத்திற்கு மாறிவிட்டாரா?

யூசுப் நபியின் வரலாற்றை பற்றி ஒரு நெருக்கமான பார்வை

இஸ்லாமியர்கள் கூறக்கூடிய 25 நபிமார்களும் அவர்களைப் பற்றிய குறிப்புகளும்