ரீல்ஸ் கலாச்சாரம்: பெண்களின் மனநலத்தை சிதைக்கும் மறைமுக ஆயுதம்

 இப்போ சமூக ஊடகங்களை திறந்தா என்ன தெரிகிறது?

நம் பெண்களுடைய அந்தரங்கங்களும் அநாகரிகங்களும் தான் முந்திக் கொண்டு வருகிறது.

பெண்… பெண்ணாக இல்ல.

அவள் ஒரு சோசியல் மீடியாவுக்கு தேவையான கண்டென்ட்.

ஒரு ப்ரொடக்ட்.

கேவலம் லைக் காக, வியூ காக, பணத்துக்காக காட்சிப்படுத்தப்படும் ஒரு பொருளாக பெண் என்பவர்கள் மாறிப் போய்விட்டனர்.

சோசியல் மீடியாவிற்கு அடிமையான பெண்கள்
இமேஜ் கிரியேட்டட் ஜெமினி ஏஐ 

“உடம்பை காட்டு – பணத்தை அள்ளு”

இதுதான் இன்றைய ட்ரெண்டிங் வார்த்தை.

இதுக்கு பேர் என்னன்னு சொல்றாங்க தெரியுமா?

பெண்ணின் சுதந்திரம்…

நவீனம்…

தன்னம்பிக்கை…

ஆனா வாங்க… இதெல்லாம் உண்மையா சொல்லுங்க.

இதெல்லாம் சுதந்திரமா?

இல்ல… இது ஒரு மெதுவான அடிமைத்தனம்.

ஒரு காலத்துல பெண்களின் அழகு எங்க இருந்தது?

வீட்டுக்குள்ள இருந்துச்சு.

உறவுக்குள்ள இருந்துச்சு.

கணவன்–மனைவிக்குள்ள இருந்துச்சு.

இப்போ எங்க இருக்கு?

பேஸ்புக்.

இன்ஸ்டாகிராம்.

ரீல்ஸ்.

ஷார்ட்ஸ் ல தான் அதிகமா இருக்கு.

“இந்த டிரஸ் போட்டா லைக் வருமா?”

“இந்த ஆங்கிள்ல எடுத்தா வைரலா போகுமா?”

“இன்னும் கொஞ்சம் காட்டினா பணம் வருமா?”

இதுதான் இன்றைய சிந்தனையாக மாறிப்போனது.

இதுக்கு பேர் தன்னம்பிக்கை கிடையாது.

இதுக்கு பேர் பார்வை அடிமை.

இதுல இன்னொரு கொடுமை என்ன தெரியுமா?

👉 தொட்டு தாலி கட்டிய கணவன்மார்களே தங்கள் மனைவிகளை கண்டென்ட் ஆக்குறாங்க.

“நீ அழகா இருக்க”

“ரீல் போடு”

“எல்லாரும் போடுறாங்க”

“பணம் வருது”

இந்த வார்த்தைகள் அன்பா கேட்கும்.

ஆனா உள்ளுக்குள்ள என்ன இருக்கு?

சுரண்டல்.

ஒரு ஆண் தன் மனைவியை பாதுகாக்கணும்.

மனைவியிடம் reels போட வலியுறுத்துகின்றான்
ஜெமினி ai உருவாக்கப்பட்ட படம்

ஆனா இப்போ அவனே அவளை உலக சந்தைக்கு திறந்து விடுற நிலை.

அதே நேரத்தில் பெண்களும் தங்கள் கணவனிடத்தில் காண்பிக்க வேண்டியவை எல்லாம் சோசியல் மீடியா வழியாக அனைத்து ஆண்களுக்கும் தீனி போட்டு விடுகிறாள்.

இதெல்லாம் கதையா நினைக்காதீங்க.

சமூக ஊடகங்களில் வைரலான பல பெண்களின் படங்கள்

அவங்க அனுமதி இல்லாம

டெலிகிராம் சேனல்களில்,

ஆபாச தளங்களில்,

பேடு வெப்சைட்டுகளில் பணத்திற்காக

விற்கப்படுது.

ஒரு போட்டோ போட்டா போதும்.

அது டவுன்லோடு செய்து

எடிட் செய்து

மார்பிங் செய்து

டீப் ஃபேக் செய்து மாற்றப்படுகிறது.

முகம் அவங்கது…

உடல் வேற யாரோடது…

இதைக் கண்டு உடைஞ்சு போன பெண்கள் நிறைய பேர் இருக்காங்க.

வீட்டைவிட்டு வெளியே வரவே பயப்படுறாங்க.

சிலர் டிப்ரஷன் குள்ள போயிடுறாங்க.

சிலர் வாழ்க்கையையே வெறுக்குற நிலைக்கு தள்ளப்படுறாங்க.

ஆனா சமூக ஊடகத்துக்கு இதெல்லாம் தெரியாது.

அங்க என்ன தெரியும் சிரிப்பு,ஃபில்டர்.

பொய் தன்னம்பிக்கை தான்.

இது பெண்களை மனசு ரீதியா சிதைப்பதை யாரும் உணரவில்லையா?

லைக் குறைந்தா மன அழுத்தம் உண்டாகிறது.

வியூ குறைந்தா பயம் ஏற்படுகிறது.

வயசு கூடுறதுக்கே அச்சம் உண்டாகிறது.

இதுல வளர்ற பிள்ளைகள் நம்மள சுத்தி இருக்க குழந்தைகள் நம்ம குழந்தைகள் என்ன கத்துக்குறாங்க?

“ஒரு பெண் என்றா இப்படித்தான் இருக்கணும் போல”

“நம்ம அழகுதான் வாழ்க்கை”

“நம்ம காட்டுற காட்சி தான் மதிப்பு என்று புரிந்து கொள்கிறார்கள்.

இது ஒரு தலைமுறை பிரச்சனை இல்ல.

இது வருங்கால சமூக அழிவு.

சுதந்திரம்னு சொல்லிகிட்டு தங்களுடைய

சுயமரியாதையை அடகு வைக்காதீங்க.

உடலை காட்டுறது தைரியம் இல்ல.

பார்வைக்காக வாழுறது தன்னம்பிக்கை இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

சோசியல் மீடியா ஒரு கருவி தான்.

ஆனா அந்த கருவி

இப்போ நம்ம சமூகத்தையே கத்தியால குத்துவது போல் குத்திக்கிட்டு இருக்கு.

அதை இன்னிக்கு கேள்வி கேக்கலன்னா

நாளைக்கு பேசுறதுக்கே நமக்கு

மரியாதை இருக்காது.

👉 இது பெண்களுக்கு மட்டும் இல்ல.

👉 இது ஆண்களுக்கும்.

👉 குடும்பத்துக்கும்.

👉 சமூகத்துக்கும்.

“உடம்பை காட்டு – பணத்தை அள்ளு”

இதுக்கு எதிரா பேசுறதே

இன்னிக்கு உண்மையான தைரியம்.

திருவள்ளுவர் திருக்குறளில் பெண்களின் மதிப்பை பற்றி என்ன சொல்கிறார் 

பெண்களைப் பற்றி கூறும் மிகவும் புகழ்பெற்ற திருக்குறள் இதோ:

“பெண்ணின் பெருந்தக்க யாவுள

கற்பென்னும் திண்மை யுண்டாகப் பெறின்”

— திருக்குறள் 54

பொருள்:

ஒரு பெண்ணிடம் கற்பு என்னும் மனத் திண்மை இருந்தால்,

அதைவிட உயர்ந்த பெருமை அவளுக்கு வேறு எதுவும் தேவையில்லை.

சேலை அணிந்திருக்கும் ஒரு ஒழுக்கமான பெண்
ஒழுக்கம் நிறைந்த பெண்

ஹிஜாப் மற்றும் முக்காடு: பெண்களின் மரியாதை, பாதுகாப்பு பற்றிய ஒரு நடைமுறை பார்வை

எனவே எனது அன்பார்ந்த சகோதரிகளே தங்கள் கற்பை பேணிக் கொள்ளுங்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இஸ்லாமியர்கள் கூறக்கூடிய 25 நபிமார்களும் அவர்களைப் பற்றிய குறிப்புகளும்

உலக பிரபலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ இஸ்லாத்திற்கு மாறிவிட்டாரா?

யூசுப் நபியின் வரலாற்றை பற்றி ஒரு நெருக்கமான பார்வை