ஐயப்பன் வாவர் சுவாமி இருவருக்கும் உள்ள தொடர்பு
கார்த்திகை மாதம் வந்துவிட்டால் தமிழகம் கேரளா ஆந்திரா போன்ற இடங்களில் இருந்து சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து நேர்த்தியாக விரதம் இருந்து பாதயாத்திரையாக அவரை தரிசிக்க செய்வது வழக்கமாக உள்ளது. அப்படி பாதயாத்திரை செல்லும் போது வாபர் என்று சொல்லக்கூடிய ஒருவரை சந்தித்து விட்டு தான் செல்ல வேண்டும். அந்த பாபர் என்பவர் அனைவராலும் முஸ்லிம் என்று அழைக்கப்படுகிறார். எருமேலி என்று சொல்லக்கூடிய அந்த இடத்தில் தான் அந்த வாபர் உடைய பள்ளிவாசல் அமைந்துள்ளது. இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் உள்ள நெருக்கத்தினை காண்பிப்பதற்காக இந்த ஒரு விஷயம் சொல்லப்படுவது காணப்படுகிறது. சபரிமலை ஐயப்பனுக்கு நெருங்கிய தோழனாக அந்த வாபஸ்வாமி அழைக்கப்படுகிறார். முஸ்லிமாகிய அந்த பாபர்சாமி உண்மையில் ஐயப்பனுக்கு தோழனா இல்லை இது ஒரு கட்டுக்கதையா என்பதை பற்றி அலசி ஆராய்வோம் வாருங்கள். இஸ்லாம் எனும் மார்க்கம் கடந்த 800 வருடங்களுக்கு முன்பாக தான் இந்தியாவிற்குள் நுழைந்துள்ளது. ஐயப்பன் பிறந்ததாக சொல்லப்படுவது விஷ்ணு சிவன் எனச் சொல்லும் கடவுள்கள் காலத்தில். அப்படி இருக்கும்போது எப்படி முஸ்லிம் ஆன ஒருவர் ஐயப்பனுக்கு உற்...