யாதவர் சமுதாயம் ஆது சமுதாயம் என்ற இரண்டு சமுதாயமும் எங்கிருந்து வந்தது
அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக இன்று நாம் பார்க்கப்போவது இந்து மதத்தில் கூறக்கூடிய யது என்பவரை பற்றியும் அதே நேரத்தில் இஸ்லாமியர்கள் கூறக்கூடிய ஹூது நபி அவரைப் பற்றியும் பார்க்க போகிறோம். மேலும் ஆது சமுதாயம் அழிந்ததும் யது வம்சம் அழிந்தது பற்றியும் பார்க்க போகிறோம்.
முதலில் யது என்பவர் யார் என்று பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் யாதவர் எனும் சொல்லக்கூடியவர்களுக்கு முன்னோடியாக இருந்தவர்தான் இந்த யது. இன்றைய யாதவ சமுதாயத்தில் பெரும்பாலானோர் ஆடு மாடுகள் மேய்ப்பதை நாம் பார்க்க முடிகிறது அதே போல் தான் அந்த எது வம்சத்தினர் ஆடு மாடு போன்றவற்றைகளை வைத்து தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள்.
இது பற்றி இன்னும் சற்று விரிவாக பார்க்கலாம்.
யது, யயாதி - தேவயானி இணையரின் மூத்த மகன் ஆவார்.
தன் மகள் தேவயானிக்கு, யயாதி துரோகம் செய்த காரணத்தினால் சுக்கிராச்சாரியால் சபிக்கப்பட்டு கிழத்தன்மை அடைந்தான். யயாதியின் கிழத்தன்மையை ஏற்க மறுத்த காரணத்தினால், யதுவும், அவனது வழித்தோன்றல்களும் இனி நாட்டை அரசாளும் உரிமையில்லாது போகக்கடவது என யயாதி அளித்த சாபத்தால், யதுவின் வழித்தோன்றல்கள் நாட்டை ஆள இயலாது ஆடு, மாடுகள் மேய்த்து பால், தயிர், வெண்ணெய் போன்ற பால் பொருட்களை உற்பத்தி செய்யும் இடைத் தொழில் செய்து வாழ்ந்தனர். அவர்களை யாதவர்கள் என்பர். கம்சன், கண்ணன், ருக்மணி, சத்தியபாமா, பலராமர், குந்தி, தேவகி, வசுதேவர், நந்தகோபன், யசோதை ஆகியோர் யது குலத்தில் பிறந்தவர்களில் சிலர்.யது குலத்தின் மொத்த அழிவுக்கு கிருஷ்ணரின் மகன்களில் ஒருவரான சாம்பனும் ஒரு வகையில் காரணமானார்.யாதவர்கள் அனைவரும் இன்று வரை ஸ்ரீகிருஷ்ணரை தங்கள் குல தெய்வமாக வழிபடுகின்றனர். பின்னாட்களில் யாதவர்கள் மேற்கு, மத்திய, கிழக்கு மற்றும் தெற்கு இந்தியாவிலும் சிறிதும் பெரிதுமான பகுதிகளை ஆண்டனர். பண்டைய இந்தியாவிலும், மத்தியகால இந்தியாவிலும், தற்கால இந்தியாவிலும், ஆடு, மாடுகளை வளர்க்கும் பல்வேறு மொழி பேசும் மக்கள் தங்களை, கிருஷ்ணரின் யாதவ குலத்தின் வழி வந்தவர்கள் என கருதுகின்றனர்.குருச்சேத்திரப் போருக்குப் பின்னர் 35 ஆண்டுகள் கழித்து, சாம்பன் காரணமாக யாதவ குலத்திரனர்களுக்குள் கலவரம் மூண்டு ஒருவரை ஒருவர் தாக்கி அழித்துக் கொண்டார்கள். துவாரகை கடலில் மூழ்கியது.
இப்படியாக எது வம்சம் பற்றி இணைய தேடல்கள் விளக்குகிறது.மேலும் மயன் என சொல்ல கூடிய ஒருவரை பற்றியும் இந்திறப்ரஸ்தம் பற்றியும் தெரிந்து கொள்வது அவசியம்.மயாசுரன் அல்லது மயன் என்பவன் இந்து தொன்மவியலில் புவியில் அசுர, தைத்ய மற்றும் இராக்கத இனங்களின் மாபெரும் அரசனாவான்.பாதாள உலகின் மாபெரும் அசுர கட்டிடக் கலைஞன்.
மயன் பாண்டவர்களுக்கு, " மாய சபை"யை அமைத்துக்கொடுத்தார். அந்த சபை மிகவும் சிறப்பு வாய்ந்தது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கட்டளையை ஏற்று " இந்திர பிரஸ்தா " நகரை நிர்மானித்தார்.
மயாசுரன் தனதாட்சியில் மூன்று பறக்கும் நகரங்களை வடிவமைத்து ஆண்டு வந்தான். அவை திரிபுரம் என அழைக்கப்பட்டது. திரிபுரம் செல்வச் செழிப்பில், அதிகாரத்தில் ஏழுலகிலும் சிறந்து விளங்கியது. இதனால் அவர்கள் பெருமை அடித்து கொண்டனர்.ஆயினும் அவனது அட்டூழியங்களுக்காக அவனுக்கு வரமருளிய சிவபெருமானே அவனுடன் போரிட்டு திரிபுரம் எரித்தார்.
அதே வேளையில் இராமாயணத்தில் வரும் இராவணனின் மனைவி மண்டோதரியின் தந்தையும் ஆவார். இப்படியாக மாட மாளிகை கட்டும் ஒருவராக எது வம்சதிலும் ராமாயண மகாபாரத கதைகளில் மயன் இருந்துள்ளார்.அதே நேரத்தில் அவர் அமைத்த நகரம் அழிந்தது பற்றியும் எது வம்சம் அழிவு பற்றியும் இணைய தேடல்கள் வழியாக நன்கு தெரிந்து கொள்ள முடிகிறது.மேலும் ஒரு குறிப்பாக மெக்சிகோவில் வாழ்ந்த மாயன் இணைவர்களுக்கும் இந்த மயனுக்கும் சம்பந்தம் உண்டு.
இப்போது இஸ்லாமியர்கள் கூறும் ஹுது நபியின் வரலாற்றை பார்த்ததும் அதில் உள்ள ஒற்றுமைகளை தெரிந்து கொள்வோம்.
ஹூத் (அலை) அவர்களும் மற்ற இறைதூதர்கள் போல இறைவன் ஒருவனே அவனையே நீங்கள் வணங்க வேண்டும் என்ற ஓர் இறை கொள்கையை அச்சமுதாய மக்களிடம் எடுத்துரைதப் போது. அவர்கள் அதை ஏற்காததும் அவர்களின் பதிலையும் குர் ஆனில் அல்லாஹ் இப்படியாக கூருகிறான்
அவர்களிடம் அவர்களுடைய சகோதரர் ஹூது'' நீங்கள் (இறைவனை) அஞ்ச மட்டீர்களா? '' என்று கூறிய போது
'நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குறிய (இறை) தூதன் ஆவேன்.
ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள் எனக்கு வழி படுங்கள்.
'மேலும், இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை நிச்சயமாக எனக்கு கூலி அகிலங்களின் இறைவனிடமே இருக்கிறது.
'நீங்கள் ஒவ்வோரு உயரமான இடத்திலும் வீணாக சின்னங்களை நிர்மாணிக்கின்றீர்களா?''
'இன்னும், நீங்கள் நிரந்தரமாக இருப்போம் என்று,(அழகிய வேலைப்பாடுகல் மிக்க) மாளிகைகளை அமைத்துக் கொள்கிறீர்களா?.''
'' இன்னும், நீங்கள்(எவரையும் ஏதங் குற்றங்களுக்காகப்) பிடித்தால் மிகவும் கொடியவர்கள் போல பிடிக்கின்றீர்கள்.
'எனவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள் எனக்கு வழி படுங்கள்.''
மேலும், நீங்கள் அறிந்திருக்கும் (பாக்கியமான பொருள்களையெல்லாம் கொண்டு) உங்களுக்கு உதவியளித்தவனை அஞ்சுங்கள்.
“அவன் உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளையும், பிள்ளைகளையும் கொண்டு உதவியளித்தான்.
“இன்னும் தோட்டங்களையும், நீரூற்றுக்களையும் (கொண்டு உதவியளித்தான்).
ஆனால் 'ஆத்' சமுதாயதினரின் பதிலோ
(இதற்கு) அவர்கள் '' நீர் எங்களுக்கு உபதேசம் செய்தாலும் அல்லது நீர் எங்களுக்கு செய்பவராக இல்லாதிருப்பினும் (இரண்டிமே) எங்களுக்கு சமம்தான்'' எனக் கூறினார்கள்.
'இது முன்னவர்களின் வழக்கமேயன்றி (வேறு) இல்லை.
'' மேலும், நாங்கள் வேதனை செய்யப் படவும் மாட்டோம்.'' (இவ்வாறு கூறி) அவர்கள் அவரை பொய்ப்பித்தார்கள் ஆதலினால் நாம் அவர்களை அழித்தோம். நிச்சயமாக இதிலே ஓர் அத்தாட்சி இருக்கிறது. (26:124-140)
எந்த சமுதாயம் இறைவனை நிராகரித்து இறை தூதரை நம்ப மறுத்ததோ,அவர்களுக்கு எச்சரிக்கபட்டது போல இறைவன் அவர்கள் மீது வேதனையை இறக்கினான்,
ஆனால் அவர்களோ (அவர்களுக்கு அனுப்பப்பட்ட வேதனை) அவர்கள் இருந்த பள்ளத்தாக்குகளை நோக்கி வேகமாக வருவதைக் கண்டதும்,'' இது நமக்கு மழையை பொழியும் மேகமாகும்'' என கூறினார்கள் ''அப்படியல்ல, இது நீங்கள் (எதற்காக) அவசரப்பட்டீர்களோ அது தான்(இது கொடுங்)காற்று
இதில் நோவினை செய்யும் வேதனை இருக்கிறது.(46:24)ஆத் கூட்டத்தார்கள் தங்களுக்கு வேதனை தரும் பேரழிவு கண்முன் கொண்டுவரபடுவது அறியாமல், அதை மழை தர கூடிய மேக கூட்டங்களாக நினைத்தனர் ஏனெனில் பாலை மணல் வெளியில் உருவாகும் சுழல் காற்றானது தொலைவில் இருந்து பார்பவைகளுக்கு அடர்ந்த மழை தரும் கார்மேகங்கள் போலவே கட்சி அளிக்கும்.
மேலும் அல்லாஹ் திருமறையில்
இன்னும்,ஆது கூட்டத்தாரோ பேரொலியோடு வேகமாகச் சுழன்று அடித்த கொடுங்காற்றினால் அழிக்கப்பட்டனர்.
அவர்கள் மீது, அதை ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் தொடர்ந்து வீசச் செய்தான்,எனவே அந்த சமுகத்தினரை, அடியுடன் சாய்ந்துவிட்ட ஈச்சமரங்களைப் போல் (பூமியில்) விழுந்து கிடப்பதை (அக்காலை நீர் இருந்திருந்தால்) பார்ப்பீர்.
ஆகவே, அவர்களின் எஞ்சிய எவரையும் நீர் காண்கிறீரா? (69: 6,7,8)
மீளவே முடியாத பயங்கரமான சுழன்று அடித்த மணல் காற்றினால் அழிக்கபட்டு அச்சமுதாயத்தினர் மண்ணில் உயிருடனே புதையுண்டு போனார்கள்.
இப்படியாக ஹுத் நபி பற்றியும் ஆது சமுதாயம் அழிக்க பட்டது பற்றியும் இறைவன் குரான் வாயிலாக நமக்கு தெளிவு செய்கின்றான்.
இப்போது இந்த இரண்டு வரலாற்றிலும் சில விசயங்கள் ஓத்து போவது பற்றி நாம் விளங்க முடியும்.
அங்கே எது என்பவர்தான் இங்கே ஹூது நபி.
அங்கே அளிக்கப்பட்ட யதுவின் குலம் தான் இங்கு ஆது சமுதாயம்.
அங்கே உள்ள உயரமான சின்னங்கள் கட்டிடங்கள் தான் இங்கே மயன் கட்டிய அமைத்த அழிக்கப்பட்ட திரிபுரம் என்று சொல்லக்கூடிய இடம்.அதாவது இந்த இடத்தை தான் இஸ்லாமியர்கள் இரம்(திரிபுரம்) நகரம் என்று சொல்கின்றேன்.
இது பற்றி குரானில்..
உம்முடைய இறைவன் ஆது கூட்டத்தை என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா? (அவர்கள்) தூண்களையுடைய “இரம்” (நகர) வாசிகள், அவர்கள் போன்ற ஒரு சமுதாயம் எந்த நாடுகளிலும் படைக்கப்படவில்லை. அல்குர்ஆன் 89:6-8
இப்போது சற்று விளங்கும் என எண்ணுகின்றேன்.
சிலை வணக்கம் கூடாது.அல்லாஹ் ஒருவனே வணங்க வேண்டும் என்று சொல்லித்தான் அனைத்து நபிமார்களும் வந்தனர்.
ஆனால் இந்து மதத்தில் மெல்கூறிய அந்த இரண்டு விசயத்தை சொல்லிவிட்டால் அதாவது இறைவன் ஒருவனைத் தவிர வேறு சிலைகளை வணங்க கூடாது என்று சொல்லியிருந்தால் இஸ்லாம் என்ற மார்கமே வந்து இருக்காது.
ஆனால் இங்கு அப்படி இல்லை.
சிலைகள் இல்லை என்றால் இந்து மதமே இல்லை என்ற அளவில் தான் உள்ளது.
இந்த இரண்டு விசயத்தை மட்டும் மாற்றி அமைத்து கொண்டு தான் இந்து புராணங்கள் இஸ்லாமிய நபிமார்களின் வரலாற்றை சிறிது ஒட்து போவதாக சொல்கிறது.
எனவே எனது அன்பார்ந்த நண்பர்களே எது சமுதாயம் தான் ஆது சமுதாயம் என்று இப்போது புரிந்து கொண்டிருப்பீர்கள்.
இது பற்றிய மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் வரவேற்கப்படுகிறது மீண்டும் அடுத்த காணொளியில் சந்திக்கலாம் உங்கள் தமிழ் தேனி.
கருத்துகள்