அல்சரை குணமாக்கும் அற்புத மூலிகையான மிளகு தக்காளி கீரை பற்றி தெரியுமா
குடல் புண்களை ஆற்றும் ஆற்றல் மிகுந்த மிளகு தக்காளி கீரை
இன்றைய காலகட்டத்தில் வயிற்று வலியால் பலர் அவதிப்படுவதுண்டு. தீராத வயிற்று வலியின் காரணத்தினால் சிலர் தற்கொலை செய்து கொள்வதும் கூட நாளிதழ்களில் பார்க்க முடிகிறது. அப்படிப்பட்ட வயிற்று வலி வருவதற்கு காரணம் இன்றைய நடைமுறையில் இருக்கக்கூடிய உணவுகளும் பழக்க வழக்கங்களும் தான். இதன் காரணத்தின் மூலம் வரக்கூடிய வயிற்று வலியை சரி செய்வது சற்று கடினம் தான். இருந்தாலும் நாம் அந்த வயிற்றில் உள்ள புண்ணை சரி செய்வதற்கு சில உணவு முறைகளை சேர்த்துக் கொள்ளலாம். அப்படிப்பட்ட அந்த அரிய வகை கீரை தான் மிளகு தக்காளி கீரை. ஆங்காங்கே வயல்வெளிகளிலும் தோட்டங்களிலும் காணப்படும் இந்த வகை கீரை மிகவும் சக்தி வாய்ந்தது. இதில் உள்ள பலமானது பழுத்தவுடன் கருப்பு நிறத்தில் மாறி விடுகிறது.
சிறுவயதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதை விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் நம் முன்னோர்கள் அவற்றை உணவின் முறைகளிலும் சேர்த்துக் கொண்டார்கள். அப்படிப்பட்ட இந்தக் கீரையை நாம் சமைத்து சாப்பிடும் போது நம் வயிற்றில் உள்ள குடல்களில் ஏற்பட்டிருக்கும் புன்னை சரி செய்து விடுகிறது. ஆனால் இன்று இது போன்ற கீரைகளை சாப்பிடுபவர்கள் பெரும்பாலானோர் இல்லை. அதன் காரணத்தினால் இதனுடைய மதிப்பு தெரியாமலேயே போனது. இனி வரும் காலங்களில் இந்தக் கீரையை சந்தை பகுதிகளில் பார்த்தால் உடனே வாங்கி வீட்டிற்கு சென்று சமைத்து சாப்பிடுங்கள். உங்கள் வயிற்றுப் புண்ணை குணமாக்குங்கள்.


கருத்துகள்