ஓரினச்சேர்க்கை எதிர்த்த லூத் நபி இந்து மதத்தில் இருக்க கூடிய புதன் கிரக கடவுளா?
அனைவருக்கும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக
இன்று நாம் இஸ்லாமியர்கள் மறறும் கிறிஸ்துவர்கள் போற்றும் லுத்து நபியயை பற்றி தான் பார்க்க போகிறோம்.அதே நேரத்தில்
இவரை இந்து மதத்தில் இலா என்றும் சொல்வதையும் அலசி ஆராய்ந்து பார்க்க போகிறோம்.
அதற்கு முன்பு இந்த lgptq என்பது என்ன என்று தெரிந்து கொள்ளலாம்.
இன்று சென்னை மட்டும் இன்றி உலக நாடுகள் பல்வேறு இடத்தில் இந்த lgptqi என்ற அமைப்பு ஒரு மாதம் முழுவதும் pride month என்ற பெயரில் நடந்து கொண்டிருக்கிறது.
அதாவது ஆண் ஆணுடனும் பெண் பெண்ணிடமும் உடல் உறவு கொள்வதையும் இதர பல சொல்ல முடியாது உடல் உறவுகளையும் நியாய படுத்தும் வகையில் இந்த அட்டூழியங்கள் நடை பெற்று வருகிறது.இவர்கள் யாவரும் தங்களை ஒரு மூன்றாவது பாலினமாக எண்ணி கொள்கின்றனர்.
உண்மையில் இவர்கள் மூன்றாவது பாலினம்மா? அல்லது அது இவர்களின் குறை பாடுகளா?
என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆணும் பெண்ணும் இணைந்தால் மட்டுமே குழந்தை உருவாகும்.ஆனால் இவர்களின் இந்த கலாச்சாரம் அவர்களோடு முடிந்து விடும் என்பதை அவர்கள் அறியவில்லை.
அப்படி ஒன்றும் இல்லை இப்போது இது போன்றவர்கள் குழந்தை பெற்று கொள்ள முடியும் என்று கேரளாவில் நடந்த ஒரு சம்பவதை முன் வைக்கின்றனர்.அதன் உண்மை நிலவரத்தை ஆராயும் போது ஒரு ஆண் பெண்ணாக மாறி உள்ளார்.ஒரு பெண் ஆணாக மாறி உள்ளார்.இந்த இருவருக்கும் நடந்த திருமணத்தில் தான் அந்த குழந்தை பிறந்து உள்ளது.அதாவது இங்கு ஒரு பெண் தான் குழந்தை பெற்று உள்ளார்.தங்களின் பெயர்களை மாற்றி கொண்டால் மட்டும் ஒரு பெண் ஆணாக அல்லது ஆண் பெண்ணாக மாறி விட முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.மேல் கூறியவர்கள் நிலை இதுவே.இன்னும் ஒரு எடுத்து காட்டு
ஆணாக இருந்து பெண்ணாக மாறிய ஒரு திருடியை இல்லை திருடனை அவளை அவனை பெண்ணாக நினைத்து பெண்கள் இருக்கும் சிறையில் அடைத்தனர்.ஒரு சில மாதங்களுக்கு பிறகு அங்கிருக்கும் இரண்டு பெண்கள் கர்ப்பம் ஆகிவிட்டனர்.அதற்கு அந்த பய புள்ள தான் காரணம் என்று report வந்துள்ளது கண்டு பொலிஸார் ஆச்சர்யம் அடைந்துள்ளார்கள்.
ஆக இதில் இருந்து நாம் நன்கு தெரிந்து கொள்ளலாம்.ஆணாக பிறந்த யாவரும் ஆண்கள் தான்.அவர்கள் Harmon மாற்றதின் காரணமாக அவர் பெண்ணாக மாறினாலும் அவரால் குழந்தை பெற்று கொள்ள முடியும். அதே போன்றுதான் பெண்ணாக இருந்து ஆணாக மாரின்னாலும்
அவர்கள் குழந்தையை வயிரில் சுமக்க முடியும்.
ஆனால் இவர்கள் அதை செய்வது இல்லை.மாறாக ஆண் அனோடு சேர்ந்து பெண் பெண்நோடு சேர்ந்து தங்கள் தலைமுறைகளை அளித்து கொள்கின்றனர்.
இது போன்று நடக்கும் சம்பவங்கள் பலங்காலம் தொட்டு இன்றுவரை தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது.அப்படியான ஒரு கால கட்டத்தில் ஆண்கள் ஆண்களோடு ஓரின சேர்க்கை செய்து கொண்டிருந்த அந்த சமயத்தில் அனுப்பப்பட்ட இறைவனின் தூதுவர் தான் லோத்து நபி அவர்கள்.
இப்போது மீண்டும் விசயதிர்க்குள் வருவோம்.
இஸ்லாமியர்கள் அந்த நபியை லூத் என்று சொல்கின்றனர்.கிறிஸ்துவர்கள் அவரை லோத் என்று சொல்கிறார்கள்.
அதே வேளையில் இந்து மதம் அவரை இலா என்று அழைக்கிறது.இங்கு இந்து மதத்தை தவிர மற்ற மதங்களில் அவர் எந்த வித வேறுபாடும் இல்லாமல் இருக்கிறார்.இந்து மதத்தில் அவரின் பெயர் ஒற்றுமையை மட்டும் வைத்து கொண்டும் வேறுசில ஒற்றுமைகளோடு தங்கள் கற்பனை கதைகளை எழுதி இருக்கிறார்கள் அன்றைய இந்து மத பிராமண அறிஙஎர்கள்.
அவர்களின் அந்த எழுத்தில் எள்ளளவும் லாஜிக் இல்லாமல் எழுதப்பட்டுள்ளது.உதாரணத்திற்கு பெண் ஆணாக மாறியது.அதே ஆண் மீண்டும் பெண்ணாக மாறியது.இவளுக்கு பிறந்த குழந்தைக்கு தாயும் தந்தையும் ஆக இருப்பது போன்ற கட்டு கதைகள் உள்ளன.இப்படியாக ஓரின சேர்க்கை பற்றி இந்து மத அடிப்படையில் தேடினால் இலா என்ற நபரை பற்றி தான் சொல்கிறது.அதே போல் கிறிஸ்துவ இஸ்லாமிய மதங்களில் ளுத் நபியை பற்றியே சொல்கிறது.இதன் அடிப்படையில் ஆராய்ந்து தான் இவர்கள் யாவரும் ஒருவரைத்தான் குறிக்கிறது என்று இந்த காணொளியை தருகிறேன் .
இப்போது இந்து மதத்தில் இலா பற்றிய கதையை பார்ப்போம்.
இலாவைப் பற்றி பல கதைகள் உள்ளன. இலா பொதுவாக வைவஸ்வத மனுவின் மகள் அல்லது மகன் என்று விவரிக்கப்படுகிறார், இதனால் சூரிய வம்சத்தின் நிறுவனர் இக்ஷ்வாகுவின் உடன்பிறப்பு ஆவார். பெண்ணாகப் பிறந்த இலா, அவள் பிறந்த உடனேயே தெய்வீக அருளால் ஆண் வடிவமாக மாறுகிறாள். பருவ வயதில் ஒரு புனித கானகத்தில் தவறாக நுழைந்த காரணத்தால், ஒவ்வொரு மாதமும் அவர் தனது பாலினத்தை மாற்றும்படி சபிக்கப்படுகிறார் அல்லது ஒரு பெண்ணாக மாற சபிக்கப்படுகிறாள். ஒரு பெண்ணாக இருக்கும்பொழுது சந்திரனின் மகனான புதனைத் திருமணம் செய்துகொள்கிறார். புதனுக்கு சந்திர வம்சத்தின் முதல்வனான புரூரவன் என்ற மகனைப் பெற்றுத் தருகிறார். பிறகு இலா மீண்டும் ஒரு ஆணாக மாற்றப்பட்டு மூன்று மகன்களுக்குத் தந்தையாகிறார்.
மேலும் ஒரு கதையில்
இளாவின் பெற்றோருக்கு நீண்ட காலமாக குழந்தை இல்லை, அதற்கு தீர்வு காண அகஸ்திய முனிவரை அணுகினார் . முனிவர் அகத்தியர் மித்ரா மற்றும் வருணனை வேண்டி ஒரு மகனைப் பெற (அக்கினி யாகம்) செய்தார். சம்பிரதாயத்தில் ஏற்பட்ட பிழை அல்லது சரியான யாகம் செய்யத் தவறியதால், மித்ராவும் வருணாவும் அந்த தம்பதியருக்கு ஒரு மகளை அனுப்பினர். இருப்பினும், மனுவுக்கு ஒரு மகன் வேண்டும் என்று ஆசைப்பட்டதால், வசிஷ்டர் தனது மகளின் பாலினத்தை மாற்றுமாறு விஷ்ணுவிடம் முறையிட்டார். மீண்டும் அவர் ஆணாக மாற்றப்பட்டு இலா சுத்யும்னா என்று பெயர் மாற்றப்பட்டது. இலாவை மனுவின் மூத்த குழந்தை அல்லது இளைய குழந்தை என்று கணக்குகள் விவரிக்கின்றன. வாயு புராணம் மற்றும் பிரம்மாண்ட புராணத்தில் காணப்படும் மற்றொரு கணக்கின்படி , இலா பெண்ணாக பிறந்து பெண்ணாகவே இருந்தாள்.
இப்படி இலா பற்றிய எண்ணற்ற கதைகள் உள்ளன.இந்த கதையின் மூலம் நமக்கு என்ன அறிவு படிப்பினை ஊட்ட பட்டது என்று பார்த்தால் அதில் ஒன்றுமே கிடையாது. சரி ஓரின சேர்க்கை பற்றி ஏதாவது விலிபுணர்வ்வு உள்ளதா என்று பார்த்தால் அதுவும் கிடையாது.
இப்போது இஸ்லாமில் உள்ள ளுத்து நபியின் வரலாற்றை பார்ப்போம்.
அவர் சேதோம் நகருக்கு அனுப்பப்பட்டார். அங்கு வாழ்ந்துவந்த மக்கள் விவரிப்பிற்கும் அப்பாற்பட்ட ஒழுக்கங் கெட்டவர்கள். மகா கொடியவர்கள். விலங்குகளை விடக் கீழானவர்களாக இருந்தனர். பிரயாணிகளை வழிமறித்து கொள்ளையடிப்பது' அவர்களின் அடிப்படைத் தொழில்.
அதற்கு முன் மனித சமூகத்தில் யாருமே செய்யாத புதியதொரு பாவச் செயலை அவர்கள் செய்தனர். அதுதான் ஆணோடு ஆண் உறவு கொள்ளும் ஓரினச் சேர்க்கை ஆகும். அதையும் கேளிக்கை விடுதிகளில், மக்கள் கூடும் பொது இடங்களில் என்று பலர் பார்க்குமளவில், எத்தகைய வெட்கமுமின்றி செய்தனர். தொடர்ந்து செய்து அது அவர்களுக்கு மிக பழகிப் போய்விட்டது. இயல்பாகிவிட்டது. அவமானம் என்றொரு வார்த்தையே அவர்களது மொழியில் இல்லை என்றானது.
ஹஸ்ரத் லூத் (அலைஹிஸ்ஸ்லாம்) இதை பார்த்து கொதித்து எழுந்தார்கள். "என்ன கொடுமை இது? படைப்பினங்களிலேயே இதற்கு முன் எவரும் செய்யாத ஒரு பாவத்தை புரிகிறீர்கள். உங்களுக்கு மனைவிகளாக அமைய பெண்களை இறைவன் படைத்திருக்க, ஆண்கள் ஆண்களுடன் காமம் கொள்கிறீர்களே? எல்லை மீறும் பாவம் புரியும் மக்களாய் இருக்கிறீர்கள் நீங்கள்" என்று சொல்லிப் பார்த்தார்கள். விவரித்துப் பார்த்தார்கள். கதறிப் பார்த்தார்கள். இறைவனின் தண்டனையைச் சொல்லி பயமுறுத்தியும் பார்த்தார்கள். ம்ஹும்! எதுவும் அவர்கள் காதில் விழவில்லை.
'இதோ வந்துவிட்டார் ஒழுக்க சீலர்' என்று கேலியும், கிண்டலும் தான் செய்தார்களே தவிர ஒருவரும் கேட்டு திருந்தி நடக்கவில்லை.
"நீர் உண்மையானவர் என்றால் உம் இறைவனின் தண்டனையை எங்கள் மீது கொண்டு வாரும் பார்ப்போம்" என்று அகங்காரத்தோடு கூறினார்கள் அந்த மட மக்கள்.
இறைவன் அங்கு இரண்டு வானவர்களை அந்த நகரத்தை அழிக்க ஆண்கள் வேடத்தில் அனுப்பி வைத்தார்.
அவர்கள் லுது நபியின் மகள்களிடம் இங்கு தங்குவதற்கு ஏதாவது இடம் உண்டா என்று கேட்டார்கள்? அதற்கு அந்த பெண் இங்கேயே இருங்கள். நான் வரும் வரை ஊருக்குள் நுழைய வேண்டாம் என்று கூறி வேகமாக சென்றார். ஆண்களை மோகம் கொள்ளும் தம் ஊர் மக்களை பற்றிய பயத்தினால் அவர் அவ்வாறு செய்தார். வேகமாக தந்தை ஹஸ்ரத் லூத்திடம் சென்று “நாம் ஒரு போதும் பாத்திராத அழகான இளைஞர்களை கண்டேன்” என நடந்த விபரத்தைக் கூறினார்.
வந்திருப்பவர்கள் மலக்குகள் என்று ஹஸ்ரத் லூத் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு தெரியாது. அவர்கள் சந்தித்த நேரம் சூரியன் மறையும் நேரம் என்பதால், இருள் சூழும் நேரமாக இருந்ததால் யாரும் பார்க்காமல் வீட்டிற்கு கொண்டு போய் சேர்த்தார்கள். ஹஸ்ரத் லூத்தின் குடும்பத்தாரை தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஆனால் ஹஸ்ரத் லூத்தின் மனைவியோ வெளியே சென்று தம் ஜனங்களிடம் இந்த விசயத்தை தெரிவித்துவிட்டாள்.
உடனே, அவளுடைய சமூகத்தார் அவளுடைய வீட்டை நோக்கி விரைந்தோடி வந்து முற்றுகையிட்டனர். அவர்களை கண்ட ஹஸ்ரத் லூத் நபி (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் மிகவும் வெட்கப்பட்டார்கள். வேதனை அடைந்தார்கள்.
ஹஸ்ரத் லூத் (அலைஹிஸ்ஸலாம்) வந்தவர்களை நோக்கி, இவர்கள் என் விருந்தினர்கள். ஆகவே அவர்கள் முன் என்னை கேவலப்படுத்தாதீர்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள் என்றார்கள்.
மேலும் ஹஸ்ரத் லூத் (அலைஹிஸ்ஸலாம்) "இதோ என்னுடைய பெண்மக்கள் இருக்கிறார்கள். நீங்கள் ஏதாவது செய்தே தீரவேண்டும் என்று கருதினால் இவர்களை திருமணம் செய்து கொள்ளலாம்” என்று சொன்னார்கள்.
அதற்கு அக்கொடிய மக்கள் “நாங்கள் விரும்புவது என்ன என்பதை நீர் அறிவீர்” என்று கூறினார்கள்.
அந்த கொடிய அரக்கர்களின் வன்முறைக்கு மத்தியில் ஹஸ்ரத் லூத் நபியவர்கள் செய்வதறியாது நின்றனர். எப்படியாவது தம் விருந்தினர்களை இக்கொடியவர்களின் தீங்கில் இருந்து பாதுக்காக்க வேண்டும் என்று ஆதங்கத்தில் கவலையுடன் இருந்தனர்.
அப்போது விருந்தினராக வந்த வானவர்கள் ஹஸ்ரத் லூத் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடம் “மெய்யாகவே நாம் உம்முடைய இறைவனின் தூதர்களாகவே இருக்கின்றோம்; நிச்சயமாக அவர்கள் உம்மை வந்தடைய முடியாது; எனவே இரவின் ஒரு பகுதி இருக்கும்போதே உம் குடும்பத்துடன் (இவ்வூரை விட்டுச்) சென்றுவிடும்! உம்முடைய மனைவியைத் தவிர. உங்களில் யாரும் திரும்பியும் பார்க்க வேண்டாம். நிச்சயமாக அவர்களுக்கு வரக்கூடிய ஆபத்து அவளையும் பிடித்துக் கொள்ளும். (வேதனை வர) அவர்களுக்கு நிச்சயமாக வாக்களிக்கப்பட்ட நேரம் விடியற் காலையாகும" என்று கூறினார்கள்.ஹஸ்ரத் லூத் (அலைஹிஸ்ஸலாம்) செய்தார்கள்.
மறுநாள் அதிகாலை; இறைவன் அவ்வூரை தோசையை போல் தலைகீழாக திருப்பி போட்டான். சுடப்பட்ட களிமண் கற்கள் வானிலிருந்து அம்மக்கள் மீது மழையாய்ப் பொழிந்தன. ஒவ்வொன்றிலும் ஒவ்வொருவரின் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. ஹஸ்ரத் லூத் நபியின் சமூகத்தார் அழிந்தனர். அவர்களின் மனைவியும் அழிந்தாள்..
இப்படியாக ஓரின சேர்க்கை செய்து கொண்டிருந்த மக்கள் மீது இறைவன் கோபத்தை காட்டினான்.
இது இஸ்லாத்தில் மற்றும் கிருஸ்துவ மதத்தில் உள்ள வரலாறு.
இந்த வரலாற்றை இந்து மத இலா வுடன் ஒப்பிடும் போது இரண்டு வானவர்கள் வந்தது பற்றி அறிய முடிகிறது.அதாவது மித்ரன் வருண்ணன் என்பவர்கள் தான் அந்த வானவர்கள்.மேலும் ஆண் ஆணோடு புணர்ச்சி செய்வதும் ஓத்து போகிறது.
அதாவது இலா என்ற பெண் ஆணாக மாறி மீண்டும் பெண்ணாக மாறி புதன் கிரகத்தை கல்யாணம் செய்து பூரூருவன் என்ற மகன் பிறந்தான் என்றபடி கதை விடபடுகிறது.இதில் ஓரின சேர்க்கை ஒரு பாவ செயல் என்று சொல்லவில்லை.மாறாக லூது மற்றும் லோத் நபி வரலாற்றின் மூலமாக இறைவன் இது ஒரு பாவமான செயல் என்றே கூறுகிறது.எனவே இந்த lgbtq என்று சொல்லி வரும் நபர்களை நாம் ஆதரிக்க கூடாது என்பதை தமிழ் தேனி சேனல் வாயிலாக கேட்டு கொள்கிறேன்.
இந்த கொனோலி பற்றி கருத்துகளை பகிரவும்
நன்றி..
கருத்துகள்