கேரளாவில் இருக்கும் உண்மையான சபரிமலை ஐயப்பன் யார் என்று பார்க்கலாம்
அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் உண்டாவதாக
இன்னைக்கு நாம உண்மையான சபரி மலை ஐயப்பன் யார் என்று தான். பார்க்க போகிறோம்.
கேரளாவை சேர்ந்த பந்தள மகாராஜா ஐயப்பன் சாமியை காட்டுல இருந்து குழந்தையாய் எடுத்துட்டு வந்து வளர்த்தாரு.புலி பால் கொண்டு வர சொல்லி காட்டுக்கு அனுப்பி அவர கொள்ள திட்டம் போட்டது பந்தள மகாராணி என்றும் அவரு புலியை அடக்கி அது மேல எரி வந்ததை பாத்து அந்த மக்கள் அனைவரும் ஐயப்பன கடவுளாக எண்ணி வழிபாடு செய்றதும் அனைவரும் அறிந்ததே.அது மட்டும் இல்லாம ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் அதாவது கார்த்திகை மாதம் மாலை அணிந்து நேர்த்தியாக விரதம் இருந்து அவரை தரிசனம் பண்ண பாதயாத்திரை ஆக தமிழ்நாடு கர்நாடகா போன்ற இடங்களில் இருந்து பக்தர்கள் போவதும் அனைவரும் அறிந்ததே.
அதே நேரத்துல புராண கதை என்ன சொலுதுன்ன பார்த்தா சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்த குழந்தை தான் ஐயப்பன் என்று சொல்லுது.
அதாவது அரக்கன அழிக்க மோகினி அவதாரம் எடுத்த விஷ்ணுவின் அழகால் சிவன் மயங்கி அதன் காரணத்தால வந்தவர் தான் ஐயப்பன் என்றும் சொல்கிறார்கள்.
இந்த விஷயங்கள் அனைத்தையும் சொல்கிறவர்கள் பிராமணர்கள்.இவ்வாறு ஐயப்பன் பிறக்க காரணம் மகிஷி என்ற அரக்கியை அழிப்பதற்கு தான் என்றும் கூறுகிறார்கள்.
சரி இப்போது விடயதிர்க்குள் வருவோம்.
ஐயப்பன் பற்றி இஸ்லாமிய மதம் என்ன கூறுகிறது என்று பார்க்கலாம். ஆதம் நபியின் மூன்றாவது மகன்தான் சீது. மேலே கூறிய ஐயப்பன் என்பவர் ஆதம் நபியின் மூன்றாவது மகன் என்று தான் இந்த வீடியோ பதிவு பேச போகிறது. ஆதாம் மற்றும் ஏவாளுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தன. காபில் மற்றும் ஹாஃபிழ் என்பது அவருடைய பெயர்களாக இருந்தது. அதே நேரத்தில் சிவன் பார்வதியின் இரண்டு மகன்கள் விநாயகர் மற்றும் முருகன் ஆவார். காபிலால் ஆப்பில் கொலை உண்ட பிறகு ஆதாம் நபிக்கு மீண்டும் ஒரு குழந்தை வேண்டி மூன்றாவது மகனாக சீட் நபி பிறக்கிறார். இங்கேயும் விநாயகர் தலை வெட்டப்படுவது உங்களுக்கு தெரியும்.அதன் பிறகு மூன்றாவது மகனாக ஐயப்பன் பிறக்கிறார்.இவர் தன் தந்தையான ஆதாம் நபியின் பேச்சைக் கேட்டு நல்ல முறையில் வாழ்ந்து வரக்கூடியவர். அந்த சமயங்களில் மக்கள் அனைவரும் விபச்சாரத்தில் அதிக நாட்டம் கொண்டிருந்தனர்.இசையின் மீது மயக்கம் கொண்டிருந்தனர்.
இவிரண்டையும் உண்டகியபவன் சைத்தாநாக இருந்தான். அவ்வாறு இருத்தல் கூடாது இறைவனின் நல்வழியை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று மக்களுக்கு எடுத்துரைத்தார்கள். இவருக்கு பல விஷயங்கள் கற்றுத் தரப்பட்டு இருந்தது. இதன் மூலமாக மக்களுக்கு பல்வேறு நல்ல விஷயங்களையும் கற்றுத் தந்தார். மேலும் சீது நபி இந்தியாவில் ஒரு பகுதியில் இறக்கப்பட்டதாக தான் கூறுகிறார்கள். ஐயப்பன் சாமியும் இந்தியாவில் உள்ள ஒரு பகுதியில் தான் இருந்ததாக அதாவது கேரளாவில் சபரிமலை என்ற இடத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் மூலமாக சேது நபி ஐயப்பன் சாமி தான் என்று கூறி விட முடியாது.
ஐயப்பன் தான் சீது நபி என்று சொல்வதற்கு இன்னும் பல ஆதாரங்கள் தேவைப்படுகிறது. சேது நபியைப் போன்று ஆதம் நபி அவர்களும் இந்தியாவில் ஒரு பகுதியில் தான் இறக்கப்பட்டதாக கூறுகிறார்கள். இதனை மெய்ப்பிக்கும் வகையில் ஆதம் பீக் என்று சொல்லக்கூடிய சிவனொளி பாதமலை என்ற இடமானது இலங்கையின் ஒரு பகுதியில் அமைந்துள்ளது. அந்த மழையில் முதல் மனிதனான ஆதம் நபியின் பாதச்சுவடு இருப்பதாக நம்பப்படுகிறது. அதே நேரத்தில் அதை சிவனொளி பாதமலை என்று கூறுகிறார்கள். ஏனென்றால் அது சிவனின் காலடித்தடம் என நம்புகிறார்கள். மேலும் இது பௌத்தர்களின் ஆட்சிக்கு கீழ் இருப்பதால் அந்த காலடித்தடத்தை புத்தரின் காலடித்தடம் என்றும் நம்பி வருகிறார்கள். இந்த விஷயத்தை நாம் கூகுள் மேப்பில் தேடும் போது ஒரே இடத்திற்கு இரண்டு பெயர்கள் அதாவது ஆதம் பீக் என்றும் சிவனுலி பாதமலை என்றும் வருவதை காண முடியும்.
ஆதம் நபி இந்தியாவில் இறக்கப்பட்டதால் அவரின் மகனான ஐயப்பனும் இந்தியாவில் தான் வாழ்ந்திருக்கிறார் என்பதில் ஐயமில்லை. ஐயப்பனுக்கு சாஸ்தா என்ற பெயரும் உண்டு. சீது அல்லது சேத்து என்ற பெயரில் மழுவி வரக்கூடிய சாஸ்தா என்ற பெயரும் அடங்குகிறது. அதாவது மொழிகளுக்கு ஏற்ப உச்சரிப்பு மாறுகின்றது
சாஸ்தா=சேத்து சேது என்று.
இந்து மதத்தின் அடிப்படையில் ஐயப்பன் சாமிக்கு இரு வேறு கதைகள் உள்ளன. ஆரியங்காவு ஐயப்பன் என்று சொல்லக்கூடிய தர்மசாஸ்தாவிற்கு மனைவி மற்றும் மகன் இருப்பதாக கூறப்படுகிறது. இன்னொரு விஷயமாக சபரிமலை ஐயப்பன் பிரம்ம சரியத்தை மேற்கொண்டவராக வீற்றிருக்கிறார். இப்படியான இரு வேறு கதைகளும் நபி சீட் அவர்களுடைய கதைக்கு ஏற்றவாறு தான் ஒத்துப் போகிறது. அதைப்பற்றி தொடர்ந்து பேசுகின்றேன். இந்து பாடங்கள் படி மஹிசி என்ற அரக்கனை அழிப்பதற்காகத்தான் ஐயப்பன் அவதரிக்கிறார் என்று பார்த்தோம்.
அதன்படி காட்டுக்குள் புலிப்பால் எடுத்து வர சென்ற ஐயப்பன் மகிஷி என்ற அரக்கனை வதம் செய்கிறார். பிறகு அந்த அரக்கன் ஒரு பெண்ணாக மாறி ஐயப்பனை மணக்க வேண்டுகிறார். ஆனால் ஐயப்பன் எனது தந்தை இதற்காக என்னை அனுப்பவில்லை என்று சொல்லி அவரை மனம் முடிக்க விரும்ப வில்லை. பிறகு அந்த லீலா என்ற பெண் மஞ்சள் மாதாவாக இன்னும் சபரிமலையில் காத்துக் கொண்டிருக்கிறார். பக்தர்கள் அனைவரும் இந்த மஞ்சள் மாதாவையும் வணங்கி விட்ட தான் செல்கிறார்கள்.அதே போன்று இஸ்லாமிய வேத காமங்களில் கூறுவது என்ன என்று பார்க்கலாம்.
சேது நபி விபசாரத்தில் அந்த மக்கள் ஈடுபடாமல் இருக்க காம இட்சைகளை கட்டுப்படுத்தும் நல் வழிகளை கற்று தருகிறார்.
ஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் போக முடியாது என்பதற்கு சேது நபி கூறிய அல்லது கற்று தந்த வார்த்தைகளே காரணம் ஆக பொருந்துகிறது.மேலும் இந்த கதையை பற்றி விலகம்மாக பார்க்கலாம்.
ஒருமுறை ஷீஃத் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடத்தில் இப்லீஸ் ஒரு பெண்ணின் தோற்றத்தில் வந்து தன்னை திருமணம் செய்யும்படி கேட்டுக்கொண்டான். அதற்கு ஷீஃத் அலைஹிஸ்ஸலாம் எனது தகப்பனார் திருமணம் முடிப்பதற்கு என்னை ஏவவில்லை என்றும் நான் உன்னை இப்லீஸ் என கருதுகிறேன் எனவும் கூறினார்கள்.(அதாவது அரக்கன் மகிஷி என்று எண்ணி கொள்ளுங்கள்.) அதற்கு இப்லீஸ் "ஸுப்ஹானல்லாஹி அழீம்" நான் இப்லீஸல்ல.. சுவனத்து ஹூருல்ஈன் பெண் எனக் கூறினான். அதற்கு மலக்குமார்கள்(அதாவது தேவர்கள் புலிகளாக மாறி ஐயப்பனுக்கு நன்றி தெரிவிப்பார்கள் அல்லவா அது தான் இது.) இவன் அல்லாஹ்வின் எதிரி. உங்கள் தந்தையை சுவனத்தை விட்டும் துரத்தியவன் எனக் கூறி சேது நபிக்கு உதவி செய்கிறார்கள்.. உடனே ஷீஃத் அலைஹிஸ்ஸலாம் அவனைக் கொல்ல நாடிய போது என்னைக் கொல்ல உமக்கு சக்தியில்லை. அல்லாஹ் கியாமத்து வரையிலும் என்னை ஹயாத்தாக்கி வைப்பதாக கூறியுள்ளான். (இதை இங்கு மகிஷி பின்னாளில் மஞ்சள் மாதவக காத்து கொண்டு இருப்பதாக ஓத்து போகிறது.)ஆனால் நான் உமக்கு ஒரு வாக்கு தருகிறேன். இனிமேல் நான் உம்மை கலைக்க மாட்டேன்” என்று கூறினான்.(அதாவது ஐயப்பன் இட்ட கட்டலை படி மகிஷி காத்து கொண்டிருப்பது பற்றி அதாவது மஞ்சள் மாதா வாக. உடனே ஷீஃத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இப்லீஸை விட்டு விட்டார்கள்.
மேலே கூறியதை சற்று ஐயப்பன் சாமி உடன் ஒப்பிட்டு வரும் கதையை பார்க்கலாம்.
தேவர்களின் கோரிக்கையை ஏற்று, 12 வயது பாலகனான ஐயப்பன் தேவலோகம் சென்று அரக்கி மகிஷியுடன் போரிட்டு வென்று அவளை பூலோகத்தில் தூக்கி எறிந்தார். அவள் வந்து விழுந்த இடமே அழுதா நதிக்கரையாகும். அரக்கி மகிஷி வதம் செய்யப்பட்ட உடனேயே, அவளது அரக்கி உருவம் மறைந்து லீலா என்ற அழகான பெண்ணொருத்தி தோன்றினாள்.(சேது நபியின் கதையில் இப்லீஸ் பெண்ணாக மாறுவது பற்றி கூறுகிறது) பின்னர் அந்த பெண் ஐயப்பனை வணங்கி நின்று, நான் உங்களால் தான் சாபவிமோசனம் பெற்றேன். என்னுடைய சாபம் நீங்கப்பெற காரணமாக இருந்த நீங்கள் தான் என் கணவராக வரவேண்டும். (அங்கேயும் திருமணம் செய்து கொள்ளும்படி கேட்கிறாள்.)என்னை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று வேண்டினாள்.
ஐயப்பனோ, நான் இந்த ஜென்மம் முழுவதும் பிரம்மச்சாரியாக இருப்பதாகவே சத்தியம் செய்துள்ளேன். அந்த சத்தியத்தை மீற முடியாது என்று கூறினார்.(அங்கேயும் இதற்காக என் தந்தை எவவில்லை என்று கூறி தான் ஒரு பென்விரதன் என்றும் பிரம்மச்சாரி என்றும் என சேது நபி கூறுகிறார்.)(பின்னாளில் தான் அவர் ஸ்வர்கத்து பெண்ணை மணம் முடித்து குழந்தை பெறுகிறார்கள்).
மேலே கூறிய இரண்டு கதைகளும் ஒட்து போவது இப்போது உங்களுக்கு நன்றாக புரியும்.
அதாவது சைத்தான் என்ற இடத்தில் அந்த அரக்கியை வைத்து பாருங்கள்.சேது நபி இருந்த இடத்தில் ஐயப்பனை வைத்து பாருங்கள்.
இன்னும் சற்று ஆழமாக விளங்கும்.
இப்போது ஆரியங்காவு ஐயப்பன் பற்றி பார்க்கலாம்.
மனைவி- மகனுடன் வீற்றிருக்கும் ஐயப்பன்.
கோவில் அமைப்பு கேரளக் கட்டுமானத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இக்கோவிலில், தர்மசாஸ்தாவான ஐயப்பன், மனைவி பிரபா மற்றும் மகன் சத்யகனுடன் கோவில் கொண்டிருக்கிறார்.
இதில் கூறப்பட்டுள்ள பிரபா என்ற ஐயப்பன் மனைவியின் பெயர் ஆனது சில இடங்களில் புஸ்களா என்றும் சொல்ல படுகிறது.
அதே நேரத்தில் இப்போது சேது நபி உடைய கல்யாணம் பற்றி பார்ப்போம்.
சுவர்க்கத்து கண்ணழகி 'நஹ்வா மக்கா' எனும் மங்கையை மணந்தார்கள். இவர்களின் முதல் குழந்தையாக “யானூஸ்” பிறந்தார்.யானூஸ் என்றால் உண்மையாளர் என்று பொருள்.
இங்கே சொர்க்கத்து கண்ணழகியாக மதுரையைச் சேர்ந்த சௌராஷ்டிரா பெண்ணை எண்ணிக் கொள்ளவும். அதாவது புஸ்கலா.
அதே போன்று ஐயப்பன் மகன் பெயரை கவனியுங்கள்.
சத்யகன் அதாவது சத்தியம் அல்லது உண்மை பேசுபவர்.
இங்கு சேத்து நபியின் மகன் பெயர் யனோஷ் அதன் பொருள் உண்மையாளர்.
இப்போது சற்று அதிகமாக உங்களுக்கு புரியும் என நம்புகிறேன்.
சைத்தானால் விபச்சாரத்தில் போதை பழக்கத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மக்களை நல்வழிப்படுத்த சீது நபி காம இச்சைகளை விட்டும் வெளியேறுங்கள் போதை வஸ்துக்களை தவிருங்கள் என்று தன் மக்களுக்கு சொன்னார்கள்.
இந்த விஷயமானது இன்றைய காலகட்டத்தில் ஐயப்பன் சாமிக்கு மாலை போட்டு காம இச்சைகளை தவிர்த்து பெண்களை விட்டும் தூரமாக இருப்பதற்கு சமமாகிறது.
ஆனால் ஐயப்பன் எண்ணுவதோ வாழ்நாள் முழுவதும் விபச்சாரத்தை விட்டும் போதை பழக்கங்களை விட்டும் மனோ இச்சைகளை விட்டும் தன் மனைவி உடன் பெற்றோர்களுடன்
நண்பர்களுடன் குழந்தைகளுடன் உறவினர்களுடன் நல்ல முறையில் இறைவன் கூறும் வழியில் வாழ வேண்டும் என்று எப்போதும் எண்ணுகிறார். ஆனால் எனக்குத் தெரிந்து மாலை போட்டு இருக்கும் சமயம் மட்டுமே அவர்கள் நல்லவர்களாக விபச்சாரத்தை விட்டும் விலகியவர்களாக மனோ இச்சைகளை விட்டும் விலகியவர்களாக இருக்கிறார்கள். மாலை போடாத சமயங்களில் எப்போதும் போலவே போதை பழக்கத்திற்கு மனோ இச்சைக்கு விபச்சாரத்தின் மீதும் திரும்பி விடுகிறார்கள்.
சைத்தானின் சூழ்ச்சி எப்போதும் மனிதனை ஆட்கொண்டு தான் இருக்கின்றது. அவன் உங்களை இறைவனை விட்டும் தூரமாக்குவது தான் மிகப்பெரிய வேலையாக பார்த்துக் கொண்டிருக்கிறான். மக்களாகிய நாம் அந்த சூழ்ச்சிகளை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். படைத்த இறைவனின் கட்டளையின்படி வாழ வேண்டும்.
எனவே ஆதம் நபியின் மூன்றாவது மகன் சேது நபியின் வார்த்தைகளாகவும் சிவன் பார்வதியின் மகன் ஐயப்பனின் வார்த்தைகளாகவும் மனிதர்களாகிய நாம் எப்போதும் மேலே கூறியவற்றை போல் இருக்க வேண்டும்.
இதை முழுவதுமாக கேட்ட உங்களின் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.
இந்த பதிவு பிடித்திருந்தால் சப்ஸ்கிரைப் பண்ணுங்க. இதைப் பற்றிய கேள்விகள் வரவேற்கப்படுகின்றன.
கருத்துகள்