அகத்தியர் மற்றும் இத்ரீஸ் நபி ஆன்மீகத்தின் ஆழமான தொடர்பு
இஸ்லாமில் குறிப்பிடப்பட்டுள்ள 25 நபிமார்களின் இரண்டாவது முக்கியமான நபிமாராக இருக்கக்கூடியவர் இத்ரீஸ் நபி. அவர் உயரமானவராகவும் தாடி வைத்திருப்பவராகவும் பழுப்பு நிறம் கொண்டவராகவும் இருக்கிறார் என இஸ்லாமிய பக்கங்கள் கூறுகின்றன. அவர் பேசினால் தெளிவாக இருக்கும் படி காணப்படும். இத்ரீஸ் நபி ஆதம் நபியை போல் பல நூறு ஆண்டுகள் வாழ்ந்தவராகவே காணப்படுகிரார்.
அதே நேரத்தில் அவரை இந்து மக்கள் அகஸ்தியர் என்றே சொல்கிறார்கள். இந்த இருவருக்கும் உள்ள பொருத்தமானது ஒரே போன்றதொரு வரலாற்றையே கூறுகிறது. அங்கே அவர் உயரமானவர் என்று சொல்லப்படுகிறது ஆனால் இங்கே அவர் குள்ளமானவராக இருக்கிறார். மற்ற விவரங்கள் உண்மையாகவே காணப்படுகின்றன. முதன் முதலில் பேனாவைக் கொண்டு எழுதியவர் என்ற பெருமையைக் கொண்டவர் அகத்தியர் என சொல்லப்படுகிறது. அவரை நன்கு கற்று அறிந்தவர் எனவும் சொல்லப்படுகிறது. இவைகள் எல்லாம் வைத்து பார்க்கும் போது அகஸ்தியர் என்று சொல்லக்கூடிய சித்தர் பெருமானார் இத்ரீஸ் நபி என்று விளங்குகின்றது. ஆதம் நபியுடன் சமகாலத்தில் வாழ்ந்துவராக இத்திரிஸ் நபி பார்க்கப்படுகிறார். அதேபோல் ஆதாம் என்று சொல்லக்கூடிய ஆதி சிவன் காலத்தில் வாழ்ந்தவராகவே அகஸ்தியர் பெருமானும் பார்க்கப்படுகிறார். ஆதம் நபி இந்தியாவில் இறக்கப்பட்டதை போல் அகத்தியர் பெருமானும் இந்தியாவில் பிறந்த அநேக அத்தாட்சிகள் உள்ளன. அதைப் பற்றிய விளக்க காணொளி தான் இங்கே உங்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அகஸ்தியர் பற்றி சில விஷயங்கள் தெரிந்து கொள்வோம்:
அகஸ்தியர் என்பவர் தமிழ்ச் சான்றோர்களில் ஒருவராக மதிக்கப்படுபவர். இவர் ஒரு மகா முனிவராகவும் சித்தராகவும் அறியப்படுகிறார். அகஸ்தியர் தமிழ் இலக்கியத்திற்கும், சித்த மருத்துவத்திற்கும் முக்கிய பங்களிப்பு அளித்தார். அவர் தமிழில் முதன்முதலாக இலக்கணம் விதித்தவர் என்றும் கூறப்படுகிறது. அகஸ்தியர் பற்றி பல புராணக் கதைகளும், சித்தர் பாடல்களும் காணப்படுகின்றன.
அவரைப் பற்றிய மிக முக்கியமான விஷயங்களில் ஒன்றானது, தன்னுடைய தாபமும் பக்தியால் தென்னிந்தியாவிற்கு வந்தது, அதன் மூலம் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரம் மிக்க செழிப்பு அடைந்தது என்பதாகும்.
இத்ரீஸ் நபி பற்றி சில விஷயங்கள்:
இத்ரிஷ் நபி(இன்ரீஸ், எணாக் அல்லது இத்ரீஸ்) இஸ்லாமிய நபிகளில் ஒருவராக புனிதக் குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளார். இவர் குர்ஆனில் (சூரா 19:56–57) கூறபட்டுள்ளார், உயர்ந்த ஒழுக்கம் கொண்டவர் என்றும் புகழப்பட்டுள்ளார். இஸ்லாமிய மரபுகளில், இத்ரிஷ் நபி அறிவு மற்றும் ஞானத்தில் சிறந்தவராகவும், தைத்தொழில் மற்றும் எழுத்துக்களில் முன்னோடியாகவும் மதிக்கப்படுகிறார்.
இவரை இரண்டாம் நபி ஆதம் மற்றும் நுஹ் (நோவா) நபிக்கு இடையில் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இத்ரிஷ் நபி, குர்ஆனில் இஸ்லாமியர் உயர் அறிவு பெற வேண்டும் என்பதற்கான சின்னமாகவும் விளக்கப்படுகிறார்.
இறைவன் அவரை உயர்த்தியதாகவும் சொல்லப்படுகிறது.
முடிவு
மேலே கூறப்பட்டுள்ள அகஸ்தியர் சித்தருக்கும் இத்திரிஸ் நபிக்கும் பெரும்பான்மையான ஒற்றுமைகள் காணப்படுகிறது அதை தெளிவான முறையில் விளங்கிக் கொள்வதற்கு மேலே உள்ள காணொளியை முழுவதுமாக பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.
கருத்துகள்