நீங்கள் அடிக்கடி ஹோட்டலுக்கு சென்று சாப்பிடுவீர்களா?

 அனைத்து நண்பர்களின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.

இன்னைக்கு நான் ஹோட்டல் சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தை பேச போறேன். அதே நேரத்துல உணவு, அதில் இருக்கக்கூடிய சுத்தம் எல்லாத்தையுமே பேச போறேன்.

ஹோட்டல் உணவுகளின் தரம் பற்றி சொல்லப்படும்
ஹோட்டல் உணவுகளைச் சொல்லும் ஏஐயால் உருவாக்கப்பட்ட படம்

இன்னைக்கு வீட்ல சமைக்கலாட்டி நம்ம ஹோட்டல்ல போயி சாப்பிடுறோம். அப்படி ஹோட்டல்ல கிடைக்கக்கூடிய உணவுகள் எந்த அளவுக்கு நமக்கு தரமானது என்பதை நாம் நினைவு கூற வேண்டும்.

நம்ம ஒரு ஹோட்டலுக்கு போய் சாப்டோம்னா சில நேரங்களில் பழைய உணவுகளை நமக்கு புது உணவாக மாற்றி பரிமாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. குறிப்பாக அசைவ உணவு என்று சொன்னால், அந்த அசைவ உணவை  பார்த்தீர்கள் என்றால் நேற்று அல்லது அதற்கு முன்பு அந்தக் கடையில் விற்காத ஒரு மாமிசத்தை புதிதாக மீண்டும் உருவாக்கி நம்மிடம் தரக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.

இந்தச் சம்பவம் என் வாழ்க்கையிலே நடந்திருக்கிறது. நான் வேலை பார்த்த ஒரு த்ரீ ஸ்டார் ஹோட்டலில் ஒரு மாதமாக இறால் என்ற உணவை வைத்திருந்தார்கள். மேலும் சமைக்கப்பட்ட கறியை மீண்டும் பயன்படுத்தும் பழக்கத்தையும் வைத்திருந்தார்கள்.

எனவே நாம் ஹோட்டலில் சென்று அல்லது உணவு கிடைக்கும் இடத்தில் சென்று சாப்பிடுவதற்கு முன்பாக அந்த இடத்தை பற்றியோ அல்லது அந்த உணவுகளை பற்றியோ நாம் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் சமைப்பதற்கு பயன்படுத்தக்கூடிய எண்ணெய்யை எத்தனை முறை பயன்படுத்துகிறார்கள். இதெல்லாம் நாம் தெரிந்திருப்பதில்லை.

எனவே அங்கு கிடைக்கும் உணவை கண்ணால் பார்த்தும், காதால் கேட்டும், வேறு சிலர் வாயால் சுவைத்தும் உண்ட அந்த விஷயத்தை நாம் கேட்டதன் பிறகே அந்த ஹோட்டலுக்கு சென்று நாம் உணவருந்த வேண்டும்.

தாய்ப்பாலில் கலந்த நஞ்சு இந்த பதிவையும் படிக்க

அப்படி இல்லை என்றால் நீங்களே உங்களுடைய இல்லத்தில் உணவுகளை சமைத்து சாப்பிட்டுக் கொள்ளலாம். இல்லையென்றால் உடல் ரீதியான பற்பல நோய்களை நீங்கள் சந்திக்க நேரிடும்.

வியாபார நோக்கத்திற்காக பெரும்பாலானோர் மிச்சம் மீதம் இருக்கும் உணவுகளையும் நாளை விற்று விடலாம் என்ற நோக்கில் மக்களின் மீது அக்கறை இல்லாமல் செயல்பட்டு வருகிறார்கள். அவர்கள் குடிக்கக்கூடிய தண்ணீரில் கூட கூத்தாடி புழுக்கள் இருப்பதை பார்த்து சிலர் என்னிடமே சொல்லி இருக்கிறார்கள்.

ஏனென்றால் நானும் ஒரு ஹோட்டல் தொழில் வைத்திருக்கிறேன். அவர் வேறு ஒரு ஹோட்டலுக்கு சென்றபோது இது போன்ற அனுபவத்தை நான் சந்தித்தேன் என்றும், உங்களுடைய உணவகத்தில் நான் சிறந்த உணவை பெறுவேன் என்ற நம்பிக்கையை மற்றவர்களின் வாயிலாக கேட்டிருக்கிறேன் என்றும் அவர் என்னிடம் சொன்னார்.

எனவே ஒரு மனிதன் நம்முடைய உணவகத்திற்கு உணவு அருந்த வரும்போது, அவருக்கு தேவையான அனைத்து சுகாதாரமான விஷயங்களையும் செய்து அவரை உபசரிக்க வேண்டும்.

சுத்தம் சோறு போடும் என்று சொல்வார்கள். அந்த வார்த்தைக்கு ஏற்ப நாம் சுத்தமான முறையில் உணவை சமைத்து, அன்றாடம் புதுப்புது வகையிலான உணவுகளை சமைத்தே நாம் மக்களுக்கு தரவேண்டும்.

இதை படிக்கும் உணவகம் வைத்திருப்பவரும் அல்லது உணவகத்திற்கு சென்று சாப்பிடுகிறவரும் தெரிந்து கொண்டு அதை பின்பற்றுமாறு நான் உங்களிடத்திலே கேட்டுக் கொள்கின்றேன்.

ஏனென்றால் உணவே மருந்து என்று சொல்லப்படுகிறது. நம்முடைய உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு உணவுதான் பல நேரங்களில் மருந்தாக மாறுகின்றது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

எனவே சுத்தமான உணவுகளை உண்ணுங்கள். சுகாதாரமான உணவுகளை உண்ணுங்கள். ஆரோக்கியமான உணவுகளை உண்ணுங்கள்.

என்று சொல்லி உங்களிடமிருந்து நான் விடை பெற்றுக் கொள்கின்றேன். நன்றி.

இது போன்ற பதிவுகளை நீங்கள் தொடர்ந்து பார்ப்பதற்கு நம்முடைய பிளாக்கரில் இணைந்திருங்கள். நன்றி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலக பிரபலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ இஸ்லாத்திற்கு மாறிவிட்டாரா?

யூசுப் நபியின் வரலாற்றை பற்றி ஒரு நெருக்கமான பார்வை

இஸ்லாமியர்கள் கூறக்கூடிய 25 நபிமார்களும் அவர்களைப் பற்றிய குறிப்புகளும்