பஞ்சாபில் இருக்கக்கூடிய அமிர்தசர அரசின் உள்ள பொற்கோவிலை பார்க்கச் சென்றோம்
அடுத்து நாங்க போன இடம் பஞ்சாப்ல இருக்க கூடிய அம்ரிஸ்டர் அதாவது அமிர்தசரஸ் என்று சொல்லக்கூடிய ஊருக்குத்தான் போனோம். இங்கே மிக முக்கியமான மூன்று இடங்கள பார்க்க வேண்டியதா இருந்துச்சு. அதுல ஒன்னு 1919 இல் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த அந்த இடத்தை நாங்கள் பார்க்க போனோம். அந்த இடத்தை பார்க்கும் போது எங்கள் மனது வேதனையானது. எந்தவித அறிவிப்பும் இன்றி மக்களை ஓட விட்டு சுட்டு தள்ளினார் வெளிநாட்டுக்காரன் ஜெனரல் o Tyre. மக்கள் தப்பிப்பதற்காக அங்கு மிஞ்சும் மூடினார்கள் அதில் பல பேர் சுட்டு வீழ்த்தப்பட்டார்கள். அதன் குண்டு பதிந்த செங்கல் சுவற்றை நம்மால் நன்றாகவே பார்க்க முடிந்தது. இவர்களை நினைவூட்டும் வகையில் ஒரு நினைவுச் சின்னமும் அங்கே அமைக்கப்பட்டிருந்தது. அந்த இடத்தில் நான் இன்னொரு நபரை பற்றி மருந்து கொண்டேன் இந்த ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு காரணமாக இருந்த ஜெனரல் ஓ டயர் என்பவரை அவரின் இடத்திற்கு சென்று பஞ்சாப்பை சேர்ந்த யுத்தம் சிம் என்பவர் புத்தகம் ஒன்றில் கை துப்பாக்கி மறைத்து வைத்துக்கொண்டு ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு காரணமாக இருந்த அந்த ஜெனரல் ஓ டயர் என்பவனை சுட்டு வீழ்த்தினார். சுட்டுவிட்டு அவர் எங்கும் ஓடவில்லை அங்கேயே நின்று இருந்தார் அவருக்கு அடுத்த 20 மணி நேரத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை அவரை சாஹித் உத்தம் சிங் என்றுதான் அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் அங்கு ஒரு கிணறும் இருந்தது துப்பாக்கி சூட்டில் இருந்து தப்பிப்பதற்காக அந்த கிணற்றில் விழுந்தவர்களும் அதிகப்பேர் இருந்தார்கள் என்று சொன்னார்கள். மேலும் அந்த இடங்களை பார்த்துவிட்டு அருகிலேயே இருக்கக்கூடிய பொற்கோவில் என்று சொல்லக்கூடிய சாகிப் மந்திர் கோவிலுக்கு சென்று பார்வையிட்டோம். நமது ஊர் மீனாட்சி அம்மன் கோவில் போல நான்கு புறங்களிலும் வாசல்கள் அமைக்கப்பட்டு இருந்தது. முதலாவது சென்ற வாசலுக்கு இடது புறமாக லங்கர் என்று சொல்லக்கூடிய அன்னதானம் எங்களுக்கு வழங்கப்பட்டது. அதற்கு முன்பாக உள்ளே செல்பவர்களின் காலணிகளை பத்திரமாக வாங்கி வைத்துக் கொண்டார்கள் இதற்கு அவர்கள் எந்த பணமும் வசூல் செய்யவில்லை. கோவிலுக்கு உள்ளே செல்வதற்கு முன்பாக கால்களை கழுவும் வகையில் தண்ணீர் அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே ஆயுதம் ஏந்திய பஞ்சாப் வீரர்கள் நின்று கொண்டு இருந்தார்கள். யாரும் காத்திருக்கத் தேவையில்லாத அளவிற்கு ஒரே நேரத்தில் 3000 பேருக்கு உணவுகள் வழங்கப்பட்டு கொண்டே இருந்தது. ஒரு வகையான பருப்பு கடையல் மேலும் ஒரு கஞ்சி மேலும் ஜீரா ரைஸ் உருளைக்கிழங்கு சப்ஜி இரண்டு ரொட்டிகளும் தந்தார்கள். மிகவும் சுவையான உணவாக இருந்தது. மேலும் அந்த பாத்திரங்களை அங்கே இருப்பவர்களை வாங்கிக் கொள்கிறார்கள். அதை கழுவுவது ஒரு புண்ணியமாக அங்கே இருக்கக்கூடிய வரக்கூடிய மக்கள் செய்கிறார்கள். தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. பாத்திரங்கள் சுத்தம் செய்யப்பட்டு கொண்டே இருக்கின்றன. காலையிலிருந்து சாயங்காலம் வரை இந்த உணவு ஒவ்வொரு தினமும் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இது எனக்கு மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மேலும் பஞ்சாபிகள் அந்த கோயில் தலங்களை மிகவும் மதிப்பவர்களாக மரியாதையுடன் இருப்பவர்களாகவே பார்த்தேன். நாங்கள் எங்களுடைய கேமராவில் படம் எடுக்க முற்பட்டோம். எங்களுடைய பாக்கெட்டில் கைவிட்டபடி ஸ்டைலாக இருக்கும்படி பொற்கோவில் முன்பாக நின்று படம் எடுக்கும் போது அங்கே வந்த ஒரு பஞ்சாபி இது கோவில் ஸ்தலம் இங்கே இதுபோல உங்களுடைய அழகை ரசிப்பதற்காக இருக்கக் கூடாது, அந்த கோவிலுக்கு உண்டான மரியாதையை தர வேண்டும் கோவிலை வணங்கும்படி நின்று போட்டோ எடுத்துக் கொள்ளுங்கள் என்றெல்லாம் சொல்லி எங்களை கண்டித்தார்கள். மேலும் சிலரது கேமராவை அதாவது மொபைல் போனை வாங்கி அதில் இருக்கக்கூடிய ஸ்டைலான போட்டோக்கள் அனைத்தையும் அழித்துவிட்டு மீண்டும் கையில் தந்தார்கள். எங்களால் கோவிலுக்குள் சென்று பார்க்க முடியவில்லை. கூட்டம் அலைமோதியது. ஒரு இடத்தில் அவருடைய கிரந்த் என்று சொல்லக்கூடிய வேத இருந்தது அதை வாசித்துக் கொண்டே இருக்கிறார்கள். அதே நேரத்தில் கோயிலுக்குள் இருக்கும்போது எந்த ஒரு நபரும் தலையில் தலைப்பாகை அணிந்திருப்பது மிக அவசியம். ரூபாய் பத்துக்கு கர்சீப் போன்ற துணிகள் விற்கப்படுகிறது அதை தலையில் கட்டிக் கொண்டே தான் நாம் உள்ளே செல்ல வேண்டும். மேலும் பெண்கள் தங்கள் தலையில் முக்காடு போட்டு இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள். அவர்களின் வேதம் இஸ்லாத்தையும் பாதி எடுத்துரைக்கிறது என்பதை கூறினார்கள். பிறகு ஆங்காங்கே அந்த குளத்தில் இருக்கும் புனித நீரை குடிநீராக மாற்றி வழங்கிக் கொண்டிருந்தார்கள். மேலும் ஒவ்வொரு பஞ்சாபி இடுப்பிலும் ஒரு கத்தி வைத்திருந்தார்கள். எதார்த்தமாக சாட் சிபிடி யில் நான் சோதனை செய்து பார்த்தேன் இந்தியாவிலேயே வீரமான மாநிலத்தவர்கள் யார் என்று அதில் முதலில் வருவது பஞ்சாப் தான். அவர்கள் வீரத்திலே பேர் போனவர்களாக இருந்தாலும் அன்பில் அதற்கு மேல் இருந்தார்கள். அங்கே எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இதோ உங்களுக்காக.
மேலும் இங்கிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் வாகா எல்லை அமைந்திருக்கிறது அதை அடுத்த பதிவில் எழுதுகின்றேன்.
அப்படியே தாஜ்மஹால் புகைப்படங்களையும் பார்த்துட்டு வரலாம் வாங்க










கருத்துகள்