ராஜஸ்தானின் பாரம்பரிய உடையில் தான் ராஜாவைப் போல் உணர்ந்தேன்
வணக்கம் அன்பார்ந்த நண்பர்களே அப்படியே ஆக்ரா கோட்டையை பார்த்துபுட்டு அங்க இருந்து பஸ் ஏறி போன இடம் தான் ஜெய்ப்பூர். அதுக்கு இடையில நாங்க எல்லாரும் பிரியாணி சாப்பிட்டோம் அந்த நாங்க எல்லாரும் அப்படின்றது யாருன்னா தேனி மாவட்டத்தில் உள்ள பரம்
என்ற ஊரில் அமைந்திருக்கக் கூடிய கேட் அக்ரி காலேஜ் அந்த ஸ்டூடண்ட் தான் கிட்டத்தட்ட ஒரு 120 பேரு ஆல் இந்தியா டூருக்கு வந்திருந்தாங்க. அதுல என்னுடைய அக்கா பையன் விவின் பிரியதர்சன் இருந்தான் அவனுடைய கால்ல அடிபட்டிருக்க காரணத்தினால் அவனுக்கு உதவிக்காக ஃபேமிலில இருந்து யாராவது ஒருத்தர் வரணும்னு சொல்லி அப்படித்தான் நானும் போனேன்.
நாங்க எல்லாரும் ஒரு தாபா கடையில உட்கார்ந்து பிரியாணி சாப்பிட்டுட்டு மீண்டும் பஸ்ல ட்ரவல் பண்ணா
அந்த பஸ் ஜெய்ப்பூர்ல இருக்க ஒரு ஹோட்டல் கிட்ட போயி நின்னுச்சு அங்க எல்லாரும் அன்னைக்கு தூங்கிட்டு மறுநாள் காலையில எந்திரிச்சு போன இடம் தான் இப்ப நீங்க படத்துல பாத்துகிட்டு இருக்கிறது.

ராஜஸ்தானில் அமைந்திருக்கக் கடிய ஜெய்ப்பூரில் இருக்கக்கூடிய ஜால் மஹால் தான் இந்த இடம். வாட்டர் பேலஸ் என்று அழைக்கக்கூடிய இந்த இடம் 18 ஆம நூற்றாண்டில் கட்டப்பட்டது. கிட்டத்தட்ட ஐந்து மாடி அளவு கொண்டது ஆனால் ஒரு மாடி மட்டுமே தண்ணீருக்கு மேல் தெரிவது போல கட்டப்பட்டிருக்கிறது. அன்றைய காலத்து ராஜாக்கள் இதை வேட்டையாடி விட்டு தங்கும் இடமாக பயன்படுத்தி இருக்கிறார்கள். அதன் வாசலிலே அதாவது அந்தக் கோட்டை இருக்கும் தண்ணீருக்கு கரையினிலே பார்த்தோமேயானால் நிறைய மீன்கள் காணப்படுகிறது அதற்கு உணவுகள் வெளியே விற்பனைக்கு உள்ளது அதை நாம் வாங்கிக் கொண்டு அந்த மீன்களுக்கு உணவளித்துக் கொள்ளலாம் இதேபோன்று தமிழ்நாட்டில் இருந்தால் அந்த மீனின் நிலை என்னவாயிருக்கும் என்று உங்களுக்கு தெரிந்திருக்கும் ஆனால் அங்கு மீன்களை அழகு காட்சிகளாக மட்டுமே பார்க்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை மேலும் அங்கே புறாக்களுக்கும் தனியாக உணவுகள் விற்கப்படுகின்றன அந்த உணவை வாங்கி ஊட்டமாக இருக்கும் புறாவிற்கு உணவை அளிக்கும் அந்த உன்னத செயலை செய்யக்கூடிய இடமாக இந்த ஜால் மஹால் இருக்கின்றது. மேலும் அங்கே வரக்கூடியவர்களுக்கு ராஜஸ்தானிய பாரம்பரிய உடையான அந்த உடையை வெளியில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்கிறார்கள் ஒரு டிரஸ்ஸை நீங்கள் அணிந்து கொண்டால் 50 ரூபாய் உங்களிடம் வசூலிக்கப்படுகிறது அதனை போட்டுக்கொண்டு நீங்கள் ஃபோட்டோ எடுத்தால் 100 ரூபாய் வசூலிக்கப்படுகிறது ஒரு போட்டோவிற்கு 50 ரூபாய் வாங்கப்படுகிறது நீங்கள் கையில் வாழுடன் அல்லது பாத்திரத்தின் மேல் கால் வைத்தும் உங்களுடைய போட்டோக்களை மேலே காட்டியவாறு எடுக்கலாம். அதேபோன்று பெண்களுக்கும் தனியான ராஜஸ்தானிய பாரம்பரிய உடை கொடுக்கப்படுகின்றது தலையில் முக்காடு போட்டுக்கொண்டு அவர்கள் நடனமாடி வீடியோக்களை எடுத்தும் அந்த இடத்தில் நடந்து கொள்கிறார்கள். இறுதியாக உடனுக்குடன் ஆன போட்டோக்கள் உங்கள் கையில் கொடுக்கப்படுகிறது. அது நடந்து கொண்டிருக்கும்போதே சாலைகளில் யானையின் மீது இருக்கை வைத்து செல்லப்படும் யானைகளும் பார்த்தேன். அதில் அமர்ந்து கொண்டும் சுற்றுலாப் பயணிகள் கௌரவிக்கப்படுகிறார்கள் என்பதும் நான் அறிந்து கொண்டேன். ராஜஸ்தானிய உடையில் என்னை பார்க்கும் போது ஒரு உண்மையான ராஜாவாகவே என்னை நினைத்துக் கொண்டேன். பிறகு அங்கு ஒரு பேல் பூரியை வாங்கி தின்று கொண்டே பஸ்ஸில் ஏறி வட்டோம். பிறகு லெமன் சோடா ஒன்றை வாங்கி குடித்தேன் அது நம்மூர் சோடா போல இல்லை அதில் பிளாக் சால்ட் கலந்து வித்தியாசமான சுவையை தந்தது இருந்தாலும் அது எனக்கு பிடித்திருந்தது. அதையும் குடித்துவிட்டு பஸ்லே அமர்ந்து அடுத்த இடத்திற்கு சென்றோம்.
.png)













கருத்துகள்