அக்பர் கோட்டையும் மூன்று மதத்தைச் சேர்ந்த மனைவிகளும்

 தாஜ்மஹாலை முடித்துவிட்டு நாங்கள் அடுத்த சென்ற இடம்தான் ஆக்ரா கோட்டை அதாவது அக்பர் கோட்டை என்று அதைச் சொல்லலாம். ஹிமாயூனின் மகனான அக்பர் அந்த கோட்டையை கட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜலாலுதீன் அதாவது முகமது ஜலாலுதீன் என்று சொல்லக்கூடிய அக்பர் 3 மனைவிகளை கட்டியதாக சொல்லப்படுகிறது அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் சொல்லப்படுகிறது. முஸ்லிம் கிறிஸ்டின் இந்து என்று மூன்று மதத்தில் உள்ள பெண்களையும் கல்யாணம் செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக ஜோதா என்ற இந்து பெண்ணை கல்யாணம் முடித்து அவருக்கான கோட்டைகளையும் அமைத்து தந்ததையும் இங்கே பார்க்க முடிகிறது. பாலிவுடில் ரித்திக் ரோஷன் மற்றும் ஐஸ்வர்யா இணைந்து நடித்துள்ள ஜோதா அக்பர் படம் இந்த இடத்தில் எடுக்கப்பட்டது தான் மேலும் அதே சம்பவம்தான் இங்கே நடந்து இருக்கிறது. அங்கே எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்களுக்காக மேலும் அக்பர் கோட்டை பற்றிய சிறப்புகளை கீழே எழுதுகின்றேன்.












































இந்த புகைப்படங்கள் அனைத்தையும் நீங்கள் இலவசமாகவே பயன்படுத்திக் கொள்ளலாம். 
அக்பர் காலத்தில் தான் முகலாயப் பேரரசு இந்தியாவில் அதிகமான இடங்களில் விரிவடைந்து காணப்பட்டது. சுற்றியுள்ள சிற்றரசர்களை மற்றும் ராஜ்யங்களை அக்பர் ஜலாலுதீன் அவர்கள் தன்னுடைய போர் திறனால்
 தன் வசம் ஆககிக் கொண்டார்கள். தன்னுடைய 14 வயதிலேயே அரியணை ஏறிய முதல் முகலாய அரசர் இவர்தான். தந்தை ஹியூமானின் மறைவுக்கு பின்பு அதாவது அவர் ஒரு நேரம் தொழுகைக்காக செல்லும்போது கால் இடறி கீழே விழுந்து மரணித்து விட்டதாக சொல்லப்படுகிறது. அதனால் அவருடைய மகனான ஜலாலுதீன் அவர்களுக்கு 14 வயதில் அரியணை ஏற்றப்பட்டது. ஆரம்பத்தில் ஹிமாயூனின் தளபதியான பைராம் கான் ஜலாலுதீன் அக்பர் அவர்களுக்கு பாதுகாவலராக திகழ்ந்தார் மேலும் பல ராஜ்யங்களை கைப்பற்ற உதவியும் புரிந்தான். பின்னாடி ல அக்பர் அவர்கள் பைராம் காணை ஆட்சி செய்வதற்கு அனுப்பி விட்டார். அப்பருக்கு சொந்தத்தாய் இருந்தாலும் அவருடைய வளர்ப்பு தாயினாலேயே அவர் வளர்க்கப்பட்டார். ஜோதாவை மணம் முடித்தது அவருக்கு பிடிக்காத காரணத்தினால் பெரும் சூழ்ச்சிகளை செய்து அவர்களை பிரிக்க நினைத்தார். இப்படி எல்லாம் அவர்களின் கதைகளை பற்றி சொல்லப்படுகிறது இருந்தாலும் இந்து மனைவியான ஜோதாவின் மீது அவர் பேர அக்கறை கொண்டிருந்தார் என்பதை நாம் இங்கே குறிப்பிட முடிகிறது. ஜோதா பாய் ஜெய்ப்பூர் அரண்மனையில் இருந்து வரவழைக்கப்பட்டவர். ஆமீர் மகாராஜா உடைய மகள்தான் இந்த ஜோதா பாய். இரு நாடுகளுக்கு இடயே போர் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக இவருடைய திருமணம் நிச்சயக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இவருடைய தன் ஆட்சி காலத்தில் இந்தியாவை விரிவாக்கிக் கொண்டார். 

நாங்கள் அக்பர் கோட்டையை காணுவதற்காக உள்ளே செல்லும்போது வழிநெடுக ஒரே அளவுள்ள அறைகள் இருந்தது இந்த அறைகள் அனைத்திலும் காவலாளிகள் நிற்க வைப்பார்கள் என்று சொல்லப்பட்டது. 
மேலும் அனைத்து இடங்களும் காப்பி கலரில் தான் இருந்தது. தாஜ்மஹால் உடைய பிரதிபலிப்பு எங்கிருந்து வந்தது என்பதை அக்பர் கோட்டையை பார்த்து நம்மால் சொல்ல முடியும். குறிப்பாக ஜோதா பாய்க்காக இந்து கடவுளை கும்பிடுவதற்காக ஏற்படுத்தப்பட்ட கட்டிட அமைப்புகளும் இங்கே காணப்படுகிறது. 
மேலும் இங்கே ஒரு பள்ளிவாசலும் அமைந்துள்ளது. அதன் அருகிலேயே தர்கா வழிபாடும் நடத்தப்படுகிறது என்பதை இங்கே பார்க்கலாம். பொதுவாக அனைத்து மதத்தினரும் மனிதர்களே அவர்கள் அனைவரும் சமமே என்ற கொள்கையின் அடிப்படையில் தான் அக்பரின் காலம் இருந்தது என்று சொல்லலாம். வெவ்வேறு மதத் தலைவர்கள் வந்து சந்திப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள ஒரு மண்டபம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. அவர்கள் அன்றைய காலகட்டத்தில் எப்படி எல்லாம் வாழ்ந்து கொண்டிருப்பார்கள் என்பதை இந்த அக்பர் கோட்டையின் வாயிலாகவே நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. இறுதியாக ஒரு கச்சேரி நடத்தப்பட்டது அந்த கச்சேரி ஜோதா அக்பர் படத்தில் வரக்கூடிய ஒரு பாடலைப் போலவே எனக்கும் இருந்தது.அதன் பிறகு ஆக்ரா கோட்டையின் அழகை ரசித்து விட்டு நாங்கள்அனைவரும் வெளியேறினோம். மேலும் வெவ்வேறு விதமான அழகான பூக்களும் அங்கே அமைக்கப்பட்டு இருந்தது.

இந்த தகவல் பிடித்திருந்தால் நமது சேனலோடு இணைந்திருங்கள். நம்முடைய பதிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள். மேலும் அடுத்த சுற்றுலா பகுதியில் நாம் சந்திப்போம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கனவு என்பது மனதின் பிரதிபலிப்பு / கனவு காண்போம்

Protection of Civil Rights Act (PCR Act), 1955 அதாவது தாழ்த்தப்பட்ட சாதியினரின் குடிமக்கள் உரிமைகளை பாதுகாக்கும் சட்டம்.

இந்துக்களுக்கு மட்டும் அல்ல இஸ்லாமியர்களுக்கும் ராமாயணம் உள்ளது