நான் சுற்றுலா சென்று இருந்த தாஜ்மஹாலின் பிரத்யேக போட்டோக்களை தகவல்களும்

 வணக்கம் என் அன்பார்ந்த வாசகர்களே 

நான் இந்தியா முழுவதும் சுற்றுலா சென்றிருந்தேன். முதலாக ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை பார்க்கச் சென்றோம். ஏழு அதிசயங்களில் ஒன்றான உலக அதிசயம் தாஜ்மஹாலை பார்த்ததில் நான் மிகவும் சந்தோசம் அடைந்தேன். தாஜ்மஹாலை அதிக போட்டோக்கள் எடுத்துள்ளேன். அதை உங்கள் பார்வைக்காக காட்டிவிட்டு மேலும் தாஜ்மஹால் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை கீழே எழுதுகின்றேன். 





































தைமூர் செங்கிஸ்கான் இவங்களோட வழியில வந்த பாபர் இந்த பாபருடைய மகன்தான் ஹுமாயூன் அவருக்கு பிறந்த மகன்தான் அக்பர் அக்பருக்கு பிறந்த மகன் தான் ஜஹாங்கீர் அவருக்கு பிறந்த மகன்தான் ஷாஜகான் ஷாஜகானுக்கு பிறந்த மகன் தான் அவுரங்கசீப் இப்படி முகலாய வரலாறுகள் அனைத்தும் இங்கே வந்ததன் மூலம் தெரிந்து கொண்டேன். முகலாய கட்டிடக்கலையில் தாஜ்மஹாலை வடிவமைத்ததில் ஷாஜகான் அவர்கள் மிகப்பெரிய பங்கினை வகுத்து விட்டார் என்றே சொல்லலாம். ஆக்ராவில் மிகப் பிரமாண்டமாய் அமைந்திருக்கும் இந்த தாஜ்மஹால் கட்டிடம் அவருடைய மனைவியான மும்தாஜ் பேகத்திற்காக கட்டப்பட்டது.

உள்ளே செல்வதற்கு முன்பாக எங்களுக்கு டிக்கெட் காயின் கொடுக்கப்பட்டது. அந்த காயினை வைத்துக்கொண்டுதான் நாம் உள்ளே செல்ல முடியும் மற்றும் வெளியே வர முடியும். டிக்கெட் பொதுவாக 250 ரூபாய் வரையிலும் வசூலிக்கப்பட்டது. உள்ளே செல்வதற்கு முன்பாக எங்களிடம் அங்கே இருக்கும் பாதுகாவலர்கள் எங்களிடம் இருக்கும் தேவையற்ற உபகரணங்களை சோதனை செய்தார்கள். அதாவது கூர்மையாக இருக்கக்கூடிய எந்த ஒரு இரும்பு பொருளோ அல்லது பேனாக்களோ அல்லது போதை பொருட்களோ பான்பராக் போன்றவைகளோ இருக்க கூடாது என்பதில் கவனம் செலுத்தினார்கள். ஏனென்றால் கூர்மையான ஆயுதங்களின் மூலமாக தாஜ்மஹாலில் உள்ள கற்களை சேதப்படுத்துவார்கள் என்பதை கண்டு நடுங்கினார்கள். உள்ளே சென்றதும் அந்த மாபெரும் அழகிய வாசல் இருந்தது. அதற்கு உள்ளாக தாஜ்மஹாலை காண முடிந்தது இந்த வாசல் வந்தால் மட்டுமே தாஜ்மஹால் தெரிகின்றது. மேலும் வாசல் வருவதற்கு முன்பாக தாஜ்மஹாலை கொஞ்சம் கூட கண்களால் பார்க்க முடியவில்லை. பிறகு மெதுவாக உள்ளே நடந்து சென்றோம். தாஜ்மஹாலின் அருகே செல்லச் செல்ல மிகுந்த அழகுடன் காணப்பட்டது. பிறகு எங்கள் செருப்புகளுடன் மற்றும் சூக்கலுடன் ஒரு கவறை தந்தார்கள். அதை காலில் அணிந்து கொண்டு உள்ளே அனுமதித்தார்கள். தாஜ்மஹாலை சுற்றி மூன்று நுழைவு வாயில்கள் இருக்கிறது. அதற்குப் பின்பாக யமுனை நதி ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த மூன்று வாசலும் ஒரே வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ளது. மேலும் தாஜ்மஹால் கட்டுவதற்கு 22 வருடங்கள் ஆனது என்று சொன்னார்கள். அதை நினைவூட்டும் வகையில் தாஜ்மஹாலின் வாசலுக்கு முன்பாக இருக்கும் அந்த வாசலில் 12 12 ஆக கோபுரங்கள் அதாவது தாஜ்மஹாலின் மேல் அமைந்துள்ள அந்த வெங்காயம் போன்ற அமைப்பானது 22 கட்டப்பட்டிருக்கிறது. முழுக்க முழுக்க பளிங்கு கற்களால் ஆன தாஜ்மஹாலின் அழகு என்னை வியக்க வைத்துக் கொண்டுதான் இருந்தது. அதேபோல் தாஜ்மஹாலை சுற்றியுள்ள நான்குமினார்கள் சற்று உயரமான வடிவில் அமைக்கப்பட்டு இருந்தது. அது சற்று சாய்ந்த நிலையிலேயே அதாவது தாஜ்மஹாலுக்கு வெளிப்புறமாக சாய்ந்த நிலையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஏனென்றால் ஒருவேளை நிலநடுக்கம் வந்தால் அந்த மினாரானது தாஜ்மஹாலின் மேல் விழுந்து அதை சேதப்படுத்தக் கூடும் என்பதற்காக அதன் எதிர்முனையில் சாய்த்து வைத்திருக்கிறார்கள். மேலும் உள்ளே சென்று பார்த்த போது பளிங்கு கற்களால் ஆன பல வேலைபாடுகளை பார்க்க முடிந்தது. ஒரே பலிங்கு கல்லில் ஜன்னல் அமைக்கப்பட்டு இருந்த அந்த கதவானது வித்தியாசமாக இருந்தது. உள்ளே நடு முனையில் ஷாஜகான் மற்றும் மும்தாஜ் உடைய கல்லறை அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதிலிருந்து சற்று கீழேதான் அவருடைய உண்மையான சமாதி இருக்கிறது என்பதையும் அவர்கள் கூறினார்கள். நாம் பேசக்கூடிய வார்த்தைகளோ அல்லது எந்த ஒரு சத்தமும் கேட்டாலும் அது மெதுவாக இருந்தால் கூட அங்கே எதிரொலி வருகின்றது. மேலும் ஒளி புக முடியாத அளவிற்கான பலிங்கு கற்களின் வேலைப்பாடுகள் என் கண்ணை கவர்ந்தது. மேலும் பளிங்கு கற்களை தொடும்போது அது குளிர்ச்சியான முறையில் இருந்ததை எங்களால் உணர முடிந்தது. பிறகு வெளியில் உள்ள அந்த தூண்களை பார்த்தேன். அதில் மூன்று கோடுகள் இருந்தது ஆனால் அதை தூரமாக இருந்து பார்த்தால் ஆறு கோடுகள் இருப்பதைப் போல ஜிக்ஜாக் வடிவமைப்பு அதாவது 3d வடிவமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அதன் உச்சியில் அமைந்திருக்கக் கூடிய அந்த கலசமானது 30 கிலோ தங்கத்தினால் ஆனது என்று சொன்னார்கள். மேலும் தாஜ்மஹால் ஒவ்வொரு நேரத்திற்கு ஏற்ப ஒவ்வொரு நிறமாக மாறும் என்பதையும் சொன்னார்கள் அதாவது காலை நேரத்தில் வெளிர் நிறமாகவும் மதிய நேரத்தில் இன்னும் வெளிர் நிறமாகவும் சாயங்கால நேரத்தில் தங்க நிறமாகவும் இரவு நேரத்தில் அதாவது நிலா வெளிச்சத்தில் நீல நிறமாகவும் காணப்படுகிறது என்பதை எங்களுக்குச் சொல்லி வியப்பில் ஆழ்த்தினார்கள். சுற்றி சுற்றுலா பயணிகள் அனைவரும் வெவ்வேறு விதங்களாக தாஜ்மஹாலை போட்டோக்கள் எடுத்துக் கொண்டு சந்தோசத்தில் இருந்தார்கள். அதில் ஒரு சிலர் பேசிக் கொண்டார்கள் இந்த தாஜ்மஹாலை கட்டிய கொத்தனாரின் கையை வெட்டிவிட்டார் என்று ஷாஜகானை பற்றி சொன்னார்கள். ஏனென்றால் இதே போன்றதொரு தாஜ்மஹால் இனி வேறு எந்த இடத்திலும் இருக்கக் கூடாது என்பதை மனதில் வைத்து இந்த காரியத்தை செய்தார்கள் என்று சொல்லினார்கள். பின்பு தாஜ்மஹாலை சுற்றி பசுமையான அழகான இடங்கள் கண்களுக்கு விருந்தாய் அமைந்தது அங்கே ஒரு சில குறிப்பிட்ட இடத்தில் மட்டும் வெவ்வேறு விதமான பூக்கள் வளர்க்கப்பட்டுக் கொண்டிருந்தது. இப்படியாக தாஜ்மஹாலின் அழகை ரசித்து விட்டு பின்னாடி இருந்த அந்த யமுனை நதியையும் பார்த்துவிட்டு நடந்து கொண்டு வரும் பொழுது மீண்டும் ஒரு கருப்பு வடிவிலான தாஜ்மஹாலை உருவாக்கப் போவதாக ஷாஜகான் எண்ணியிருந்தார் என்று சொன்னார்கள். அதற்காக யமுனை நதிக்கு பின்புறமாக இடம் பார்க்கப்பட்டு இருந்ததையும் இனி இவரை விட்டால் கஜானாவின் சொத்துக்களை அழித்து விடுவார் என்று ஷாஜகானின் மகனான அவுரங்கசீப் அவரை தாஜ்மஹாலுக்கு அருகே உள்ள செங்கோட்டையில் சிறை வைத்தார் என்று சொல்லப்படுகிறது. பின்னாளில் அந்த சிறையில் இருந்து ஜன்னலை திறந்து பார்த்தால் தாஜ்மஹாலின் முழு வடிவத்தையும் பார்க்க முடியும் என்பதை வைத்து அதை பார்த்துக் கொண்டே தன் காலத்தை முடித்துக் கொண்டார் என்று ஷாஜகான் வரலாறு சொல்லப்படுகிறது. நிறைய காதலர்கள் அங்கே தங்களுக்கான புகைப்படங்களை எடுத்துக் கொண்டார்கள். மேலும் அங்கே பழமையான போட்டோக்கள் அதிகமாக இருந்தது அதை என்னுடைய அடுத்த பதிவில் உங்களுக்காக பதிவிடுகின்றேன் இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.

அமிர்தசரத்தில் உள்ள பொற்கோவில் படங்கள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இஸ்லாமியர்கள் கூறக்கூடிய 25 நபிமார்களும் அவர்களைப் பற்றிய குறிப்புகளும்

கனவு என்பது மனதின் பிரதிபலிப்பு / கனவு காண்போம்

யூசுப் நபியின் வரலாற்றை பற்றி ஒரு நெருக்கமான பார்வை