நியூஸ் பேப்பர்ல சாப்பாடு வச்சு சாப்டுறீங்களா? கொஞ்சம் இத படிங்க பாஸ்!
இன்னைக்கு இருக்குற அவசர உலகத்துல நம்ம ஊர்ல இருக்குற பெரிய ஹோட்டல்ல இருந்து சின்ன தள்ளுவண்டி கடை வரைக்கும் ஒரு விஷயம் ரொம்ப சாதாரணமாக நடக்குது. அது என்னன்னா... சூடான பஜ்ஜி, போண்டா, வடை, இல்லனா புரோட்டா, பிரியாணினு எல்லாத்தையும் நியூஸ் பேப்பர்ல (செய்தித்தாள்) வச்சு மடிச்சு தர்றதுதான். நாமும் அதை வாங்கி ரொம்ப அசால்ட்டா சாப்டுட்டு போயிட்டே இருக்கோம். ஆனா, இது நம்ம உடம்புக்குள்ள மெல்ல மெல்ல செலுத்துற விஷம்னு எத்தனை பேருக்கு தெரியும்?
இதுமட்டும் இல்லாம, நம்ம சொசைட்டில எல்லாரும் பண்ற, ஆனா ரொம்பவே தப்பான சில கெட்ட பழக்கங்களை பத்திதான் இன்னைக்கு நாம கொஞ்சம் டீடைலா பாக்க போறோம்.
1. நியூஸ் பேப்பர் சாப்பாடு – ஏன் இவ்வளவு ஆபத்து?
பேப்பர்ல சாப்பாடு வைக்கிறதுல என்னங்க தப்பு இருக்குனு நீங்க நினைக்கலாம். விஷயம் பேப்பர்ல இல்ல, அதுல அச்சடிச்சு இருக்குற 'மை' (Printing Ink) ல தான் இருக்கு.
- கல்லீரல், கிட்னி காலி: சூடான இல்லனா எண்ணெய் பசையுள்ள உணவை அந்த பேப்பர்ல வைக்கும்போது, அச்சு மை உருகி சாப்பாட்டோட ஒட்டிக்கும். அதை நாம சாப்பிடும்போது, அந்த கெமிக்கல் நேரா வயித்துக்குள்ள போய் அல்சர், செரிமான பிரச்சனைய உண்டாக்கும். நாளாக நாளாக இது கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை (Kidneys) ரொம்ப மோசமா பாதிக்கும்.
- வறுத்த உணவுகளில் டபுள் டேஞ்சர்: குறிப்பா இன்னைக்கு இருக்குற எங்ஸ்டர்ஸ் பல பேருக்கு ஈவினிங் டைம்ல பொரித்த சிக்கன் மற்றும் மீன் அதை நியூஸ் பேப்பரில் வைத்து சாப்பிடுவதால் வர்ற ஆபத்து ரொம்பவே அதிகம். ஏன்னா, இந்த பொரிச்ச மீன், சிக்கன்ல இருக்குற அதிகப்படியான எண்ணெய், அந்த நியூஸ் பேப்பர் மையை ரொம்ப வேகமா உறிஞ்சிடும். அதை அப்படியே நாம சாப்பிடும்போது நச்சுத்தன்மை பல மடங்கு அதிகமாகுது.
- புற்றுநோய் அபாயம்: இந்த அச்சு மையில காரீயம் (Lead), நெப்திலமைன் போன்ற ஆபத்தான மெட்டல்ஸ் இருக்கு. இதனால கேன்சர் வர்றதுக்கான சான்ஸ் ரொம்பவே அதிகம்னு டாக்டர்ஸ் எச்சரிக்கிறாங்க.
- குழந்தைகளுக்கு ஆபத்து: சின்ன பசங்களுக்கு இந்த மாதிரி சாப்பாடு குடுக்குறப்போ அவங்களோட மூளை வளர்ச்சி மற்றும் ஹார்மோன் லெவல் பாதிக்கப்படுது.
நம்ம என்ன பண்ணலாம்?: காசு குடுத்து நோயை வாங்குறத விட, வீட்ல இருந்து போகும்போதே ஒரு சின்ன டிபன் பாக்ஸ் எடுத்துட்டு போலாம். இல்லனா பழங்காலத்து வாழை இலை, இல்லனா நல்ல சாப்பாட்டு தரம் கொண்ட பேப்பர் ரோல்ஸ் (Food-grade paper) யூஸ் பண்ணலாம்.
2. நம்ம ஊர்ல சத்தமில்லாம நடக்குற மத்த சில கொடுமைகள்!
நியூஸ் பேப்பர் பழக்கம் மாதிரி, "ஊரோட ஒத்து வாழ்"னு நாம எல்லாரும் பண்ற மத்த சில டேஞ்சரான விஷயங்கள் இதோ:
பிளாஸ்டிக் கவர்ல சாம்பார், டீ வாங்குறது:
இப்பல்லாம் கடைகள்ல சூடா இருக்குற சாம்பார், சட்னி, ரசம், ஏன்... கொதிக்குற டீயை கூட தக்காளி சட்னி கவர் மாதிரி இருக்குற மெலிசான பிளாஸ்டிக் கவர்ல ஊத்தி தர்றாங்க. அந்த சூட்டுல பிளாஸ்டிக்ல இருக்குற 'பிஸ்பெனால்-ஏ' (BPA) கெமிக்கல் அப்படியே சாப்பாட்டுல மிக்ஸ் ஆயிடும். இதை தொடர்ந்து சாப்ட்டா, இன்னைக்கு இருக்குற பெரிய பிரச்சனையான மலட்டுத்தன்மை, சுகர் பிராப்ளம், ஹார்மோன் இம்பேலன்ஸ் எல்லாமே ரொம்ப சீக்கிரமா வந்துடும்.
ஒரே எண்ணெயை மறுபடி மறுபடி காய்ச்சுறது:
கடைங்கள்ல இன்னைக்கு காலைல வடை சுட்ட எண்ணெயை அப்படியே வச்சிருந்து, நைட்டுக்கும் அதே எண்ணெயை கொதிக்க வைப்பாங்க. சில வீடுகள்லயும் இந்த பழக்கம் இருக்கு. ஒரு தடவ சூடாக்குன எண்ணெயை மறுபடி சூடாக்கும்போது அதுல 'டிரான்ஸ் ஃபேட்' மற்றும் கெட்ட கொழுப்புகள் அதிகமாகும். இதனாலதான் இப்போ 25, 30 வயசு பசங்களுக்கு கூட திடீர்னு ஹார்ட் அட்டாக் (Heart Attack) வருது.
'பிரோஸன்' (Frozen) சாப்பாடு கலாச்சாரம்:
டைம் இல்லன்ற காரணத்துக்காக, ஒரு வாரத்துக்கு முன்னாடி செஞ்சு பிரிட்ஜ்ல வச்ச புரோட்டா, சப்பாத்தி, இல்லனா பாக்கெட்ல வர்ற ரெடி-டூ-ஈட் சாப்பாட்டை வாங்கி மைக்ரோவேவ்ல வச்சு சாப்டுற பழக்கம் இப்போ டவுன்ல ரொம்ப அதிகமாயிட்டு வருது. இதுல கெட்டுப்போகாம இருக்க சேர்க்குற பிரசர்வேட்டிவ்ஸ் (Preservatives) நம்ம உடம்பை மொத்தமா டேமேஜ் பண்ணிடும்.
கெமிக்கல் சோப்பு, ஷாம்பூ மோகம்:
டிவில விளம்பரம் வர்றத பாத்துட்டு, வாசனைக்காகவும், கலருக்காகவும் அதிக ரசாயனம் கலந்த சோப்பு, முகத்துல போடுற கிரீம், ஷாம்பூக்களை வாங்கி அள்ளி பூசுறோம். இது தோலின் வழியா உடம்புக்குள்ள போய் அலர்ஜி, முடி கொட்டுறது, ஸ்கின் பிராப்ளம்ஸ் தருது. ஆனா, நம்ம ஊர் பாரம்பரிய எண்ணெய் குளியல், சீயக்காய், கடலைமாவு பழக்கத்தையெல்லாம் நாம மறந்துட்டோம்.
சாப்டுட்டே மொபைல் நோண்டுறது:
சின்ன குழந்தைல இருந்து பெரியவங்க வரைக்கும் இப்போ சாப்டு முறையில தட்டு இருக்கோ இல்லையோ, கையில மொபைல் போன் கண்டிப்பா இருக்கு. ஸ்க்ரீனை பாத்துட்டே சாப்டு தால நாம எவ்வளவு சாப்ட்றோம், என்ன சாப்ட்றோம்னே தெரியாம போயிடுது. இது தூக்கமின்மை, மன அழுத்தம், மற்றும் உடல் பருமனுக்கு (Obesity) முக்கிய காரணம்.
கடைசியா ஒரு வார்த்தை:
நாகரீகம், அவசரம்னு சொல்லிட்டு நம்ம பாரம்பரிய ஆரோக்கிய முறைகளை நாம தொலைச்சிட்டு வர்றோம். "சுவர் இருந்தாதான் சித்திரம் வரைய முடியும்". உடம்பு நல்லா இருந்தாதான் நாம எதையும் சாதிக்க முடியும். அதனால, இப்போவே விழிப்புணர்வோடு சின்ன சின்ன மாற்றங்களை நம்ம லைஃப்ஸ்டைல்ல கொண்டு வருவோம்.
கருத்துகள்