இடுகைகள்

செப்டம்பர், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காட்டுமிராண்டித்தனமான அரசியலை செய்து கொண்டிருக்கும் அரசாங்கம்

படம்
  தமிழக வெற்றி கழகம் இப்பொழுது பல பிரச்சனைகளை சந்தித்து கொண்டிருக்கிறது. குறிப்பாக கரூரில் நடந்த கூட்டத்திலே 40 பேர் பலியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு காரணம் யார் என்று சோசியல் மீடியாக்கள் அலசி ஆராய்ந்து விட்டிருக்கின்றன. பெரும்பாலான கருத்துக்கள் இப்பொழுது நடந்து கொண்டிருக்க கூடிய ஆட்சியை குற்றம் சாட்டுகின்றன. ஆனால் ஆட்சியில் இருப்பவர்களோ இந்த கூட்டத்தை நடத்திய விஜய் அவர்களை குறித்தே குற்றம் சாட்டி, அவர்களை கைது செய்யக்கூடிய அனைத்து முயற்சிகளையும் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் அனைவரும் தங்களுடைய கருத்துக்களை சோசியல் மீடியா வாயிலாக உண்மையைப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். திமுக சார்பில் வரக்கூடிய ஒவ்வொரு காணொளிகளுக்கும் மக்களுடைய கருத்துக்களை பார்க்கும்போது அவர்கள் குற்றவாளிகள் என்பது நிரூபணம் ஆகிறது. மேலும் விஜய் பற்றி சொல்லக்கூடிய அனைத்து பதிவுகளிலும் வரக்கூடிய கமெண்ட்களில் விஜய்க்கு ஆதரவாகவே அனைத்து மக்களும் இருந்து கொண்டிருக்கிறார்கள். இங்கே தவறு என்பது முழுக்க முழுக்க அரசாங்கத்துடைய பொறுப்பாகவே இருக்கிறது. அவர்கள் தான் சரியான இடத்தை தேர்வு செய்திருக்க வேண்ட...

கரூர் மாநாட்டின் பேரழிவு – அரசியல் நாடகமா? மக்கள் பலிகடாவா?

படம்
  கரூர் மாநாட்டில் நடிகர் விஜய் கலந்து கொண்ட பிரச்சார கூட்டத்தின் போது நிகழ்ந்த விபத்தில் 40 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் ஒரு சாதாரண விபத்தா? அல்லது அரசியல் களத்தில் திட்டமிட்டு நடத்தப்பட்ட சதியா? என்பதை இன்றைய தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் கேட்க வேண்டிய நேரம் இது. ஒரு பிரபல நடிகர், அரசியலில் புதிய பாதையை எடுத்து வைக்க முயற்சிக்கும் நிலையில், திடீரென இத்தகைய அசம்பாவிதம் நிகழ்வது சாத்தியக்கூறு குறைந்த விஷயம் அல்ல. ஏனெனில், இதற்கு முன்பு நடந்து முடிந்த எந்தப் பிரச்சாரக் கூட்டத்திலும் இத்தகைய விபத்துக்கள் நிகழவில்லை. ஆயிரக்கணக்கான மக்கள் வந்து சென்று சீராகவே முடிந்து விட்டன. ஆனால் கரூரில் மட்டும் சூழ்நிலை வேறுபட்டது.அது செந்தில் பாலாஜியின் கோட்டை என்பது ஸ்டாலினின் வாக்கு முதலாவது கேள்வி: ஏன் இத்தகைய நெருக்கடியான இடத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது? பெரிய அளவில் மக்கள் திரளக் கூடிய நிகழ்ச்சிக்கு, திறந்த வெளி தேவை. பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகுந்த கவனத்துடன் செய்யப்பட வேண்டும். ஆனால் கரூரில் நடந்த பிரச்சார கூட்டத்தில் குறுகிய இடத்தைத் தேர்வு செய்தது, சாதாரண தவறல்ல. இது “மக்...

H1-B விசா விலையை உயர்த்தும் அமெரிக்கா டொனால்ட் டரும்ப் நடவடிக்கை

படம்
  அமெரிக்கா என்ற நாடு பல இந்தியர்களின் வாழ்க்கைக்கான பெரிய கனவுகளின் மையமாக மாறியுள்ளது. குறிப்பாக தகவல் தொழில்நுட்பம், மருத்துவம், ஆராய்ச்சி போன்ற துறைகளில் வேலை பெற வேண்டும் என்று நினைக்கும் இளைஞர்கள் பெரும்பாலும் அமெரிக்காவை நோக்கி கண்ணோட்டம் செலுத்துகிறார்கள். அதற்கான முக்கியமான வாயிலாக H-1B விசா இருக்கிறது. இந்த விசா தான் ஒரு இந்தியருக்கு அமெரிக்காவில் சட்டபூர்வமாக வேலை செய்ய அனுமதிக்கிறது. வருடா வருடம் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் இந்த விசாவுக்காக விண்ணப்பிக்கின்றனர். பலருக்கு இது வாழ்க்கையை மாற்றும் ஒரு வாய்ப்பு. ஆனால், சமீபத்தில் அமெரிக்க அரசு இந்த விசாவின் கட்டணங்களை பெரிதும் உயர்த்தியுள்ளதாக அறிவித்தது. இதனால் இந்தியாவில் வேலை கனவு காணும் இளைஞர்களும், ஏற்கனவே அமெரிக்காவில் உள்ளவர்களும் பெரிய அதிர்ச்சியில் உள்ளனர். H-1B விசா கட்டணம் உயர்வு என்பது ஒரு எளிய விஷயம் போலத் தோன்றினாலும், அதன் பின்னால் அரசியல், பொருளாதாரம், சமூக மற்றும் தொழில்நுட்ப காரணங்கள் அடங்கியுள்ளன. முன்பு இந்த விசாவின் filing fee $460 (சுமார் ₹38,600) இருந்தது. தற்போது அது $780 (சுமார் ₹65,500) ஆக உயர்த்தப்ப...

தண்ணீரில் எரியும் அடுப்பு ராமலிங்கம் கார்த்திக் என்பவரின் அறிய கண்டுபிடிப்பு

படம்
 தண்ணீரில் எரியும் அடுப்பு: தமிழரின் புதிய கண்டுபிடிப்பு சாதிக்குமா? அன்றாட வாழ்வில் சமையல் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. விறகு அடுப்பில் தொடங்கி, மண்ணெண்ணெய், எரிவாயு சிலிண்டர் (LPG) எனத் தொழில்நுட்ப வளர்ச்சிகளால் சமையல் எரிபொருட்கள் பல மாற்றங்களைக் கண்டுள்ளன. இருப்பினும், இவற்றின் விலை உயர்வு, பாதுகாப்பு அபாயங்கள் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு போன்றவை சாமானிய மக்களுக்குப் பெரும் சவாலாகவே உள்ளன. இந்தச் சிக்கல்களுக்குத் தீர்வாக, "தண்ணீரைக் கொண்டு எரிக்கும் அடுப்பை" சேலத்தைச் சேர்ந்த தமிழரான ராமலிங்கம் கார்த்திக் கண்டுபிடித்துள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. HONC கேஸ்: ஒரு புரட்சிகரமான கண்டுபிடிப்பு "ஹைட்ரஜன் ஆக்ஸிஜன் நோ கார்பன்" என்பதன் சுருக்கமே HONC கேஸ். இது, தண்ணீரிலிருந்து ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் மூலக்கூறுகளைப் பிரித்தெடுத்து, ஹைட்ரஜனை எரிபொருளாகப் பயன்படுத்தும் ஒரு புதிய தொழில்நுட்பம். 18 ஆண்டுகால நீண்ட ஆசையின் பயனாக, திரு. ராமலிங்கம் கார்த்திக் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்தக் கண்டுபிடிப்பு, இந்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக...

சமூக நீதி – உண்மையில் யாருக்காக? தமிழ்நாட்டின் reservation கொள்கையின் சாதக–பாதகங்கள்

படம்
  தமிழக அரசியலில் “சமூக நீதி” என்ற வார்த்தைக்கு மிகப் பெரிய இடம் உண்டு. பொதுவாக அரசியல் கட்சிகள் வாக்காளர்களை கவர்வதற்காக பல வார்த்தைகளை பயன்படுத்தினாலும், “சமூக நீதி” என்ற கோட்பாடு தமிழ்நாட்டில் சற்று வேறுபட்டதாகும். இது வெறும் அரசியல் வாக்குறுதி அல்ல, மக்களின் வாழ்க்கையை நேரடியாக பாதித்த ஒரு கொள்கை. சாதி அடிப்படையில் பாகுபாடு, ஒடுக்குமுறை, சம உரிமை மறுப்பு போன்றவற்றுக்கு எதிராகவே  இந்தக் கருத்து பிறந்தது. சமூக நீதி என்ற கருத்தின் தோற்றம் சமூக நீதி பற்றி பேசும்போது முதலில் நினைவுக்கு வருபவர் பெரியார் ஈ.வெ.ராமசாமி. அவர் இந்திய சமுதாயத்தின் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு காரணம் சாதி முறையே என்று கண்டறிந்தார். சாதி காரணமாக கல்வி, நிலம், செல்வம், அரசியல் அதிகாரம் போன்றவை சில குறிப்பிட்ட சமூகங்களுக்கு மட்டுமே சென்றது. மற்றவர்கள் நூற்றாண்டுகள் முழுவதும் பின்தங்கியவர்களாகவே இருந்து விட்டனர். இதைச் சரிசெய்யாமல் "அனைவரும் சமம்" என்று சொல்வது வெறும் வார்த்தையாகவே இருக்கும் என்று அவர் வலியுறுத்தினார். அவரது சிந்தனைகளை தொடர்ந்து, திராவிட இயக்கம் சமூக நீதி என்ற கோட்பாட்டை அரசியலின் மையமா...

குடியில் மூழ்கி பின் மீண்டு எழுந்து வந்த வேலுவின் வாழ்க்கை

படம்
 கதை: குடியில் மூழ்கியவனின் மீள்பிறப்பு வேலூர் மாவட்டத்தில் ஒரு சிறிய ஊர். அந்த ஊரில் வேலு என்ற ஒருவர் வாழ்ந்தார். அவருக்கு நல்ல வேலை, அன்பான மனைவி உதயா, இரண்டு பிள்ளைகள் – தனு (10 வயது), இனியா (7 வயது) இருந்தார்கள். வாழ்க்கை அமைதியாகச் சென்று கொண்டிருந்தது. ஆனால் அந்த ஒரு பழக்கம் அவனுக்கு வந்ததற்குப் பிறகு அவன் வாழ்க்கை தள்ளாடத் தொடங்கியது. அதுவே அந்த குடிப்பழக்கம். ஆரம்பத்தில் அவர் நண்பர்களோடு சேர்ந்து “சும்மா ஜாலிக்கு” குடிக்க ஆரம்பித்தார். ஒரு வாரத்திற்கு ஒருமுறை என்றும். பிறகு மூன்று நாளுக்கு ஒருமுறை என்றும். சில மாதங்களுக்குப் பிறகு தினமும் குடிக்க ஆரம்பித்துவிட்டார். உதயா எவ்வளவு சொல்லினாலும் வேலு கேட்கவில்லை. “அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை… குடிப்பது எல்லாரும் குடிக்கிறார்கள்… நானும் வேலைக்கும் போகிறேன்… வீட்டு செலவுகளும் பார்த்துக் கொண்டே தானே இருக்கிறேன்…” என்று தான் தன்னை சமாதானம் செய்து கொண்டார். ஆனால் அந்த குடி நாளடைவில் அவரின் வருமானத்தை விழுங்கத் தொடங்கியது. குடும்பத்தில் வீழ்ச்சி வேலுவின் சம்பளம் ஆரம்பத்தில் 20,000 ரூபாய். அதில் 8–10 ஆயிரம் மதுக் கடையில் போய் விட்...

சிவா கார்த்திகேயன் நடித்த மதராசி படம் திரைப்படம் விமர்சனம்

படம்
 வணக்கம் நண்பர்களே!  இன்று நம்ம பாக்கப் போறது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வந்த சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான “மதராசி” படம். இந்த படத்துல கதை என்னன்னா — ஒரு சாதாரண மனிதனான ரகு ராம் (சிவகார்த்திகேயன்), மன உளைச்சலுடன் இருக்கும் அவனை NIA அதிகாரி பிரேம்நாத் (பிஜு மேனன்) பயன்படுத்திக்கிட்டு, தமிழ்நாட்டுக்குள்ள பரவுகிற துப்பாக்கி கலாச்சாரத்தை கட்டுப்படுத்த ஒரு ஆபரேஷனுக்குள் இழுத்து விடுறாங்க. இதுல மாலதி (ருக்மிணி வாசந்த்) ரகு ராமின் காதலியாக வர்றாங்க. முக்கிய வில்லனா வந்திருப்பது விராட் (வித்யுத் ஜம்ம்வால்). அவர் நடிப்பு செம வலிமையா இருக்கு. இவரோட பக்கத்துல சிராஜ் (ஷபீர் கொள்ளரக்கல்), விக்ராந்த், இன்னும் சப்பொட்டிங் கேரக்டர்களும் வந்து கதையை நிறைவு பண்ணுறாங்க. சிவகார்த்திகேயன் ஒரு சாதாரண மனிதன். ஆனா கதைக்குள் police use பண்ணுறாங்க. அவரோட நடிப்பு பாத்தா, சில இடங்களில் weight கொடுத்திருக்காரு, ஆனா அந்த அளவுக்கு பெரிய தாக்கம் படுத்தலைன்னு தான் சொல்லணும். மாறாக, பிஜு மேனனின் act தான் solid-ஆ இருக்கு.கதைக்கு ஹீரோ பிஜு மேனன் என்றே சொல்லலாம். கதை முக்கியமாக சொல்ல வர்றது — துப்பாக்கி எ...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலக பிரபலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ இஸ்லாத்திற்கு மாறிவிட்டாரா?

யூசுப் நபியின் வரலாற்றை பற்றி ஒரு நெருக்கமான பார்வை

இஸ்லாமியர்கள் கூறக்கூடிய 25 நபிமார்களும் அவர்களைப் பற்றிய குறிப்புகளும்