காட்டுமிராண்டித்தனமான அரசியலை செய்து கொண்டிருக்கும் அரசாங்கம்

 


தமிழக வெற்றி கழகம் இப்பொழுது பல பிரச்சனைகளை சந்தித்து கொண்டிருக்கிறது. குறிப்பாக கரூரில் நடந்த கூட்டத்திலே 40 பேர் பலியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு காரணம் யார் என்று சோசியல் மீடியாக்கள் அலசி ஆராய்ந்து விட்டிருக்கின்றன. பெரும்பாலான கருத்துக்கள் இப்பொழுது நடந்து கொண்டிருக்க கூடிய ஆட்சியை குற்றம் சாட்டுகின்றன. ஆனால் ஆட்சியில் இருப்பவர்களோ இந்த கூட்டத்தை நடத்திய விஜய் அவர்களை குறித்தே குற்றம் சாட்டி, அவர்களை கைது செய்யக்கூடிய அனைத்து முயற்சிகளையும் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மக்கள் அனைவரும் தங்களுடைய கருத்துக்களை சோசியல் மீடியா வாயிலாக உண்மையைப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். திமுக சார்பில் வரக்கூடிய ஒவ்வொரு காணொளிகளுக்கும் மக்களுடைய கருத்துக்களை பார்க்கும்போது அவர்கள் குற்றவாளிகள் என்பது நிரூபணம் ஆகிறது. மேலும் விஜய் பற்றி சொல்லக்கூடிய அனைத்து பதிவுகளிலும் வரக்கூடிய கமெண்ட்களில் விஜய்க்கு ஆதரவாகவே அனைத்து மக்களும் இருந்து கொண்டிருக்கிறார்கள். இங்கே தவறு என்பது முழுக்க முழுக்க அரசாங்கத்துடைய பொறுப்பாகவே இருக்கிறது. அவர்கள் தான் சரியான இடத்தை தேர்வு செய்திருக்க வேண்டும். ஒரு பிரபலமான நடிகராக இருக்கக்கூடிய விஜய் அவர்கள் அவரை பார்ப்பதற்கான மக்கள் 10,000 பேர் தான் இருப்பார்கள் என்று எண்ணியிருக்கக் கூடாது.

அங்கே ஒரு பெண் அவர்கள் கூறுகிறார்கள், “இங்கு இருக்கும் கரூர் போலீஸ்காரர்கள் ஒருவர் கூட தெரியவில்லையா? இந்த இடமானது போதுமானது கிடையாது என்பதையே முதலில் யாரும் கவனிக்கவில்லை” என்று. மேலும் அன்றைக்கு காவலுக்கு அமர்த்தப்பட்ட காவலர்களை விட சம்பவம் நடந்து முடிந்த பிறகு அங்கே இருக்கும் குடியலுக்கும் செருப்புகளுக்கும் அதிகமான காவலர்கள் வந்திருந்ததாக சொல்கிறார்கள்.

விஜய் பார்ப்பதற்கு வரக்கூடிய கூட்டங்களை விட ஸ்டாலின் அவர்களுக்கு வரக்கூடிய கூட்டங்கள் குறைவாக தான் இருக்கிறது. ஆனால் விஜய்க்கு பாதுகாப்பு தரக்கூடிய காவலர்கள் ஸ்டாலினுக்கு பல மடங்கு அதிகமான காவலர்களை வைத்து பாதுகாப்பு கொடுத்திருக்கிறார்கள். திமுக ஆளும் கட்சியாக இருக்கும் காரணத்தினால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மக்கள் பெரும்பான்மையாக இது முழுக்க முழுக்க திட்டமிட்ட சதி என்றே தங்களுடைய சோசியல் மீடியா வாயிலாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த அரசியல் களத்தில் நடக்கின்ற தீவிரமான கேடுகெட்ட சதிகளைப் பார்த்து மக்கள் மேலும் விரக்தி அடைகிறார்கள். உண்மையில் ஜனநாயக முறையில் நடந்துகொள்ள வேண்டிய அரசாங்கமே, மக்கள் உயிரைப் பறிக்கும் தவறுகளை செய்து, அதன் பொறுப்பை மற்றொருவர்மீது தள்ளிக் கொண்டிருக்கிறது என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாகிறது. மக்கள் எங்கும் இன்று ஒரே சத்தமே எழுகிறது — “விஜய்க்கு நடந்தது சாதாரணம் அல்ல, திட்டமிட்ட சதி தான்” என்று.

மேலும், இதுபோன்ற தீவிரமான கேடுகெட்ட அரசியலை செய்வதை காட்டிலும் கயிற்றில் தூக்கு போட்டு தொங்கலாம் என்று மன்சூர் அலிகான் அவர்கள் ஒரு பக்கமாக தெரிவித்துள்ளார். அதுவே இன்றைய தமிழகத்தின் நிலைமை என்பதை நம்மளுடைய பதிவுகளின் மூலமாக சொல்லிக் கொள்கின்றேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலக பிரபலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ இஸ்லாத்திற்கு மாறிவிட்டாரா?

யூசுப் நபியின் வரலாற்றை பற்றி ஒரு நெருக்கமான பார்வை

இஸ்லாமியர்கள் கூறக்கூடிய 25 நபிமார்களும் அவர்களைப் பற்றிய குறிப்புகளும்