சிவா கார்த்திகேயன் நடித்த மதராசி படம் திரைப்படம் விமர்சனம்

 வணக்கம் நண்பர்களே!



 இன்று நம்ம பாக்கப் போறது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வந்த சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான “மதராசி” படம்.

இந்த படத்துல கதை என்னன்னா — ஒரு சாதாரண மனிதனான ரகு ராம் (சிவகார்த்திகேயன்), மன உளைச்சலுடன் இருக்கும் அவனை NIA அதிகாரி பிரேம்நாத் (பிஜு மேனன்) பயன்படுத்திக்கிட்டு, தமிழ்நாட்டுக்குள்ள பரவுகிற துப்பாக்கி கலாச்சாரத்தை கட்டுப்படுத்த ஒரு ஆபரேஷனுக்குள் இழுத்து விடுறாங்க. இதுல மாலதி (ருக்மிணி வாசந்த்) ரகு ராமின் காதலியாக வர்றாங்க.

முக்கிய வில்லனா வந்திருப்பது விராட் (வித்யுத் ஜம்ம்வால்). அவர் நடிப்பு செம வலிமையா இருக்கு. இவரோட பக்கத்துல சிராஜ் (ஷபீர் கொள்ளரக்கல்), விக்ராந்த், இன்னும் சப்பொட்டிங் கேரக்டர்களும் வந்து கதையை நிறைவு பண்ணுறாங்க.

சிவகார்த்திகேயன் ஒரு சாதாரண மனிதன். ஆனா கதைக்குள் police use பண்ணுறாங்க. அவரோட நடிப்பு பாத்தா, சில இடங்களில் weight கொடுத்திருக்காரு, ஆனா அந்த அளவுக்கு பெரிய தாக்கம் படுத்தலைன்னு தான் சொல்லணும். மாறாக, பிஜு மேனனின் act தான் solid-ஆ இருக்கு.கதைக்கு ஹீரோ பிஜு மேனன் என்றே சொல்லலாம்.

கதை முக்கியமாக சொல்ல வர்றது — துப்பாக்கி எப்படி தமிழ்நாட்டுக்குள்ள smuggle ஆகுது, அதன் பின் அதை நிறுத்த ரகு ராமை எப்படி பயன்படுத்துறாங்க. ஆரம்பத்துலவே container-ல loads of guns வர்ற scene இருக்கு. அதுக்கப்புறம் accident காட்சிகள் நடக்குது. ஆனா real-ஆ அப்படி நடந்தா newspaper-ல headline ஆகிடும். இங்க மாத்திரம் அது casual-ஆ போயிடுது. இதுபோல படத்துல நிறைய லாஜிக் மிஸ்டேக் இருக்கு.

அதே மாதிரி duplicate ID, உடனே வேலைக்கு சேர்ந்து விடுறது, police procedure-க்கு ஒத்துப்போகாத மாதிரி காட்சிகள் நிறைய. காதல் காட்சிகள் வந்து “ஏழாம் அறிவு” படத்தோட tone-ல மாத்தி வச்ச மாதிரி இருக்கு. புல்லட் சத்தங்கள் அதிகம், ஆனா purpose இல்லாம repeat ஆச்சு போல தோணுது.

Positive-ஆன பக்கம் — வில்லன்கள் எல்லாரும் நல்லா perform பண்ணிருக்காங்க. வித்யுத் ஜம்ம்வாலின் screen presence நல்லதா work ஆகுது. அனிருத் BGM படத்துக்கு energy கொடுக்குது. ஆனால் பாடல்கள் அந்த அளவுக்கு எடுபடவில்லை. கேமரா & editing ok-ஆன level-ல இருக்கு.

ஆனா Negative-ஆன பக்கம் — கதை சொல்ல வந்தது என்னன்னு clarity இல்ல. Madharasiன்னு பெயர் வச்சிருக்காங்க ஆனா அந்த பெயருக்கு பொருத்தமான justification படத்துல தெரியல. Technology use பண்ணுறது கூட 1960கள்ல வந்த மாதிரி outdated feel கொடுக்குது.

முடிவாக சொல்லணும்னா, “Madharasi” படம் பெரிய expectations-க்கு meet ஆகல. Mass entertainer-ஆ try பண்ணிருக்காங்க. சில இடங்களில் excite பண்ணும், ஆனா பல இடங்களில் logic mistakes, weak writing visible-ஆ இருக்கு.

என் மதிப்பெண் — பத்துக்கு மூன்

றரை தான்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலக பிரபலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ இஸ்லாத்திற்கு மாறிவிட்டாரா?

யூசுப் நபியின் வரலாற்றை பற்றி ஒரு நெருக்கமான பார்வை

இஸ்லாமியர்கள் கூறக்கூடிய 25 நபிமார்களும் அவர்களைப் பற்றிய குறிப்புகளும்