குடியில் மூழ்கி பின் மீண்டு எழுந்து வந்த வேலுவின் வாழ்க்கை
கதை: குடியில் மூழ்கியவனின் மீள்பிறப்பு
வேலூர் மாவட்டத்தில் ஒரு சிறிய ஊர். அந்த ஊரில் வேலு என்ற ஒருவர் வாழ்ந்தார். அவருக்கு நல்ல வேலை, அன்பான மனைவி உதயா, இரண்டு பிள்ளைகள் – தனு (10 வயது), இனியா (7 வயது) இருந்தார்கள். வாழ்க்கை அமைதியாகச் சென்று கொண்டிருந்தது. ஆனால் அந்த ஒரு பழக்கம் அவனுக்கு வந்ததற்குப் பிறகு அவன் வாழ்க்கை தள்ளாடத் தொடங்கியது. அதுவே அந்த குடிப்பழக்கம்.
ஆரம்பத்தில் அவர் நண்பர்களோடு சேர்ந்து “சும்மா ஜாலிக்கு” குடிக்க ஆரம்பித்தார். ஒரு வாரத்திற்கு ஒருமுறை என்றும். பிறகு மூன்று நாளுக்கு ஒருமுறை என்றும். சில மாதங்களுக்குப் பிறகு தினமும் குடிக்க ஆரம்பித்துவிட்டார்.
உதயா எவ்வளவு சொல்லினாலும் வேலு கேட்கவில்லை. “அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை… குடிப்பது எல்லாரும் குடிக்கிறார்கள்… நானும் வேலைக்கும் போகிறேன்… வீட்டு செலவுகளும் பார்த்துக் கொண்டே தானே இருக்கிறேன்…” என்று தான் தன்னை சமாதானம் செய்து கொண்டார். ஆனால் அந்த குடி நாளடைவில் அவரின் வருமானத்தை விழுங்கத் தொடங்கியது.
குடும்பத்தில் வீழ்ச்சி
வேலுவின் சம்பளம் ஆரம்பத்தில் 20,000 ரூபாய். அதில் 8–10 ஆயிரம் மதுக் கடையில் போய் விட்டது. மனைவிக்கு வீட்டு செலவுக்கு எதுவும் கொடுக்க முடியாமல் போனது. குழந்தைகளுக்கு புத்தகங்கள் வாங்க முடியாமல் போனது. அவர்களின் கல்வித் தொகையையும் கட்ட முடியவில்லை. ஒரு பக்கம் பாக்கி கடன்,லோன் பிரச்சனை மறுபக்கம் குடி.
குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தால் வேலு அடிக்கடி சண்டை ஓடுவது வழக்கமாகிவிட்டது. உதயா இதை நினைத்து அவமானப்பட்டு அழுவார். குழந்தைகள் அஞ்சித் தங்கள் அறையில் சென்று கதவை மூடி இவர்களுக்குள் நடக்கும் சண்டையில் அவர்கள் தூங்க இரவு ஒரு மணி ஆகிவிடும். வேலுவின் அம்மா கூட மகன் குடியால் அழிவதை பார்த்து சோகத்தில் ஆழ்ந்து விட்டார்.
ஒருநாள், குடித்துவிட்டு வந்த வேலு, சின்ன சண்டைக்காக உதயாவிடம் விவாகரத்து கேட்டு கையெழுத்தை கேட்டார். அது உதயாவிற்கு மகிழ்ந்த வேதனை அளித்தது. உடனே கோபம் கொண்டு அவள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்றுவிட்டாள்.
தனிமையின் துவக்கம்
வேலு ஒரு நாள் வேலைக்குச் சென்றார். அங்கேயும் குடி காரணமாக அடிக்கடி தவறுகள், சண்டைகள். மேலாளர் எச்சரித்தார்:
“இப்படி தொடர்ந்து குடித்துக் கொண்டே வேலை பார்த்தால் உன் வேலை போய்விடும்.” என்று.
அவன் மனத்தில் சிறிதளவு பயம் தோன்றினாலும், பழக்கத்தால் மீண்டும் குடிக்காமல் இருக்க முடியவில்லை. இதன் காரணமாக அவன் பார்த்துக் கொண்டிருந்த வேலையும் பறி போனது.
இப்போது வேலு தனியாகவே வாழ்ந்தார். வீட்டில் மனைவியும் இல்லை, குழந்தைகளும் இல்லை. அவ்வப்போது அம்மா வந்து பேசுவார். ஆனால் மகன் கையிலேயே குடி பாட்டிலே எப்போதும் இருக்கும்.
ஒரு இரவு, மிக மோசமாக குடித்துவிட்டு சாலையில் விழுந்து கிடந்தார்.. நண்பர்கள் யாருமில்லை. அருகே சென்ற ஒரு முகம் தெரியாத நபர் தான் ஆட்டோவில் ஏற்றி வீட்டுக்குக் கொண்டு வந்தார். அந்த இரவு தான் முருகனின் வாழ்க்கை திருப்புமுனை ஆனது.
சுயஅறிவு
அடுத்த நாள் கண்ணாடியில் தனது முகத்தை பார்த்தார். கருமையான முகம், வீங்கிய கண்கள்,இரத்த நரம்புகள், பற்களும் அழிந்து போனது. “இது தான் நான் தானா?” என்று தன்னிடம் தானே கேட்டுக்கொண்டார்.
அதே சமயம் அவரது பிள்ளைகளின் படம் கண் முன் தோன்றியது.
“அப்பா நீ நல்லவங்க… குடிக்காதே…” என்று தனு சொன்னது நினைவுக்கு வந்தது.
“அப்பா, குடிச்சா நீ மோசமா இருப்பே உன் பக்கத்திலேயே வர முடியாத அளவுக்கு நாரும்…” என்று இணியாவின் குரலும் மனதில் ஒலித்தது.
அவர் முடிவு செய்தார்:
“இனி பாலாய் போன குடி பழக்கம் வேண்டாம். என் குடும்பத்தை மீண்டும் சேர்த்து, வாழ்க்கையை சரி செய்ய வேண்டும்.” என்று எண்ணினான்.
மீள்வழி
ஆனால் குடியை விட்டு விடுவது எளிதல்ல. ஆரம்பத்தில் மூன்று நாட்கள் குடிக்காமல் இருக்க முயன்றார். தலை வலி, உடல் நடுக்கம், கோபம், பொறாமை எல்லாம் அவனைச் சுற்றி வந்தது. ஆனாலும் அவர் மனதில் உறுதி கொண்டார். நிச்சயமாக நாம் குடித்து விடக்கூடாது நம் குடும்பத்தை இழந்த விடக்கூடாது. என்று நினைத்து கொண்டு அருகில் உள்ள De-Addiction Centre சென்றார். அங்கு கவுன்சிலர் அவரிடம் பேசினார்:
“குடியை விட்டு விடும் போது சிரமம் வரும். ஆனால் பொறுமையா இருந்தால் உங்களாலும் குடிக்காமல் இருக்க முடியும். உங்களுக்கு குடும்பமே உந்துசக்தி.” குடிக்கும் எண்ணம் வரும் போதெல்லாம் உங்கள் அழகிய குடும்பத்தை நினைத்துப் பாருங்கள். என்று அவனிடம் சொன்னார்
பிறகு வேலு தினமும் அந்த ஆலோசனையில் கலந்து கொண்டார். அவரைப் போலவே அங்கு நிறைய குடியை மறக்க நினைக்கும் நபர்கள் பின்பு படிப்படியாக காலை ஜாகிங் போக ஆரம்பித்தார். புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தார். முதலில் 10 நாட்கள், பிறகு 20 நாட்கள்… இப்படி 100 நாட்கள் கடந்து போனது. தான் நூறு நாட்கள் குடிக்காமல் இருந்ததை தன் நண்பர்களுக்கும் அம்மாவிடமும் கூறி பெருமைப்பட்டுக் கொண்டான்.
வேலுவின் முகத்தில் ஒளி திரும்பியது. உடல் ஆரோக்கியம் மேம்பட்டது. வேலைக்காக மீண்டும் முயற்சித்தார். ஒரு சிறிய ஹோட்டலில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு கடினமாக உழைத்தார். சில மாதங்களில் நல்ல பெயர் பெற்றார். அவரின் உழைப்பை பார்த்து அவருக்கு ஊதியமும் அதிகமாய் வழங்கப்பட்டது.
குடும்பத்தை மீண்டும் சேர்த்தல்
மாதங்கள் கழித்து, அவர் தன் மனைவியைச் சந்திக்கப் போனார். கதவு திறந்தது.இரண்டு குழந்தைகளும் “அப்பா!” என்று ஓடிவந்தார்கள். அவர்கள் சாப்பிடுவதற்கு நிறைய தின்பண்டங்களை கொடுத்தார்.
ஆனால் உதயா இன்னும் சந்தேகத்தோடு பார்த்தாள். உண்மையிலேயே இவர் குடியை நிறுத்தி விட்டாரா அல்லது குடிப்பதற்கு பணம் கட்ட எதுவும் நாடகம் ஆடுகிறாரா என்று கேள்வியோடு இருந்தாள்.
வேலு அமைதியாகக் கூறினார்:
“லட்சுமி, நான் தவறு செய்தேன். உன்னை, பிள்ளைகளை ரொம்ப கொடுமை செய்து விட்டேன்.. இப்பொழுது 6 மாதமாக நான் குடிக்கவில்லை. ஒரு ஹோட்டலில் வேலைக்கு சேர்ந்துவிட்டேன். 25,000 சம்பளம் கொடுக்குறாங்க. இன்னும் என்னை நிரூபித்து காட்டுவேன். வாழ்க்கையில கண்டிப்பா ஜெயிப்பேன். ஆனால் நீ என் பக்கத்தில் இருந்தால் தான் இதெல்லாம் முழுமையாக நடக்கும். அதனால் நீ நம் குழந்தைகள் என்னுடன் வந்து விடுங்கள் என்று சொன்னான்.
உதயா முதலில் யோசித்தார். ஆனால் குழந்தைகள் அப்பாவைச் சுற்றி கொண்டதை பார்த்து கண்களில் நீர் வந்தது.
“நம்பிக்கை இழந்துவிட்டேன்… ஆனாலும் உன் முகத்தில் மாற்றம் தெரிகிறது வேலு. ஒரு வாய்ப்பு தருகிறேன். மீண்டும் தப்பு செஞ்சா எங்களோட முகம் கூட உன்னால காண முடியாது.” என்று சொன்னாள்.
அந்த நாள் முதல் வேலுவின் வாழ்க்கை முற்றிலும் மாறியது.
அவர் புதியதாக ஒரு உணவகத்தை அந்தப் பகுதியில் திறந்தார். அந்த கடை மிகவும் வரவேற்பை பெற்றது.
புதிய வாழ்க்கை
அவர் சமூகத்தில் குடி ஒழிப்பு பேச்சாளர் ஆனார்.
ஊர் இளைஞர்களிடம் சென்று “குடி எப்படி குடும்பத்தை அழிக்கிறது” என்று தன் வாழ்க்கையில் கதையை பகிர்ந்தார்.
தனது கதையையே எடுத்துக்காட்டாகக் கூறினார்.
“நான் விழுந்தேன், ஆனாலும் எழுந்தேன். நீங்க விழவேண்டாம்.” என்றார்.
வேலு, இப்போது தனது மனைவியோடு மகிழ்ச்சியாக வாழ்ந்தார். பிள்ளைகள் பெருமையோடு தங்கள் தந்தையைப் பார்த்தனர்.
கதை முடிவு – “மீள்பிறப்பு”
ஒரு குடி மனிதனை அடிமையாக்கி, குடும்பத்தையும் இழக்கச் செய்யும். ஆனால் மன உறுதி, குடும்பத்தின் அன்பு, சமுதாயத்தின் ஆதரவு இருந்தால் யாரும் மீண்டும் எழுந்து நிற்
க முடியும். வேலுவின் கதை அதற்கே சாட்சி.
.png)
கருத்துகள்