தமிழ்நாட்டில் இருக்கும்கோயில் யாருக்குச் சொந்தம்? நம்பிக்கைக்கா… அதிகாரத்துக்கா?

 ஒரு அடிப்படை கேள்வியிலிருந்து ஆரம்பிக்கிறேன்.

இந்த தமிழ்நாட்டில்

இந்து மக்கள் மட்டும்தான் கோயில்களுக்கு போய் கடவுளுடைய அருளைப் பெற நினைக்கிறார்களா?

மற்ற மதத்தினர் போகவே மாட்டாங்களா?

முஸ்லிம்கள் பள்ளிவாசலுக்கு போகலையா?

கிறிஸ்தவர்கள் சர்ச்சுக்கு போகலையா?

அவர்களும் போகிறார்கள்.

அவர்களும் நம்பிக்கையோடு தான் போகிறார்கள்.

அவர்களும் காணிக்கை செலுத்துகிறார்கள்.

அங்கும் உண்டியல் இருக்கு.

அங்கும் சொத்துகள் இருக்கு.

அப்போ ஒரு நேரடி கேள்வி வருதே?

ஏன் இந்து அறநிலைத்துறை மட்டும்?

இந்துக்களின் மீது அடக்குமுறை காட்டும் அறநிலை துறை
Ai ஆல் உருவாக்க பட்ட படம்
இந்து கோவில்களில் அடக்கு முறை

ஏன் ஒரு முஸ்லிம் அறநிலைத்துறை இல்லை?

ஏன் ஒரு கிறிஸ்துவ அறநிலைத்துறை இல்லை?

ஏன் தமிழ்நாட்டில் அவையும் அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படவில்லை?

இந்த கேள்வியை நேரா கேட்டா

அதற்கு பதில் கிடைக்கல.

கேள்வியே பதிலா மிச்சமாகுது.

ஏன் அப்படின்னா,

இந்து மக்களை அடிப்படையிலேயே

“எதையும் கேட்க மாட்டாங்க”

“எல்லாத்தையும் சகிப்பாங்க”

“அதிகாரம் இருந்தா அமைதியா இருப்பாங்க”

ன்னு ஒரு மனநிலை உருவாக்கப்பட்டிருக்கிறது.

அதாவது

மற்ற மதத்தினர் அறிவாளிகள்,

இந்து மக்கள் முட்டாள்கள்

என்ற ஒரு மறைமுக எண்ணம்.

இது தான் மிகப் பெரிய அவமதிப்பு.

இன்னொரு விஷயம் இன்னும் வேதனைக்குரியது.

இன்று கோயில்களில் என்ன நடக்குது?

பெரிய அதிகாரிகள், அரசு பணியில் இருப்பவர்கள், அமைச்சர்களின் சொந்தக்காரர்கள் என்றாலே

கருவறை கதவுகள் ஈசியாக திறக்கப்படுது.

யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள்.

வழி சுத்தம்.

பாதுகாப்பு வளையம் தளர்வு.

ஆனா அதே கோயிலில்,

காலையிலிருந்து வெயிலில் நின்று,

வேலை விட்டு வந்து,

ஒரு முறை சாமியைப் பார்க்கணும் என்ற ஆசையோட நிற்கிற சாதாரண பக்தர்களிடம் மட்டும்

குரல் உயருது.

முகம் கடுக்குது.

மிரட்டும் விதமான பேச்சு.

நேற்றைக்கு நடந்த சம்பவம் தான் உதாரணம்.

ஒரு பக்தரிடம்

“நீ சோற்றை தின்கிறாயா, இல்ல வேற ஏதாவது தின்கிறாயா”

என்ற வார்த்தை

ஒரு அமைச்சர் வாயிலிருந்து வந்தது.

இது நகைச்சுவையா?

இல்ல ஒரு நம்பிக்கையை கேவலப்படுத்துற அதிகாரப் பேச்சா?

இன்னும் தெளிவா கேட்கிறேன்.

முதலமைச்சரின் மனைவி,

அல்லது உயர்ந்த அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர்கள்,

ஏதாவது ஒரு கோயிலுக்கு தரிசனம் செய்ய விரும்பினால் —

உடனே ஏற்பாடு.

உடனே பாதுகாப்பு.

உடனே வழி காலி.

பக்தர்கள் பிரிவிலே நிறுத்தப்படுவார்கள்.

“காத்திருங்கள்”ன்னு சொல்லப்படுவார்கள்.

அவர்கள் மட்டும் நிதானமா உள்ளே சென்று, பொறுமையா தரிசனம் செய்து வெளியே வருவார்கள்.

இதுல பிரச்சனை என்ன?

அவர்கள் சாமி பார்க்கக் கூடாதுன்னு யாரும் சொல்லல.

அவர்கள் மட்டும் உரிமை பெற்றவர்கள் போல நடத்தப்படுவது தான் பிரச்சனை.

இதெல்லாம் என்ன சொல்லுது?

“இந்த கோயில் எங்களிடம் இருக்கு”

“அதிகாரம் இருந்தா கடவுளுக்கும் நெருக்கம் கிடைக்கும்”

ன்னு அரசாங்கம் மறைமுகமா சாட்டிக்காட்டுதா?

கடவுளின் முன்பு

அமைச்சர் இல்லை.

அதிகாரி இல்லை.

ஏழை இல்லை.

பணக்காரன் இல்லை.

அனைவரும் சமம்.

இந்த ஒரு உண்மையை உடைக்குற மாதிரி

கையில் அதிகாரம் இருக்கிறதுனால

கருவறைக்குள்ளேயே செல்ல முடியும்

என்ற சூழல் உருவாக்கப்படுவது

நிர்வாகம் இல்லை.

அதிகார திமிர்.

கோயில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கலாம்.

ஆனா அது

பக்தர்களை அவமானப்படுத்தும் இடமா மாறக் கூடாது.

நம்பிக்கையை மிதிக்கும் மேடையா மாறக் கூடாது.

இந்த கோபம்

ஒரு அமைச்சருக்கெதிரானது இல்லை.

ஒரு கட்சிக்கெதிரானது இல்லை.

இந்த பாகுபாட்டுக்கெதிரானது.

இந்த அவமதிப்புக்கெதிரானது.

“இந்து மக்கள் எல்லாத்தையும் சகிப்பார்கள்” என்ற எண்ணத்துக்கெதிரானது.

கடவுள் யாருக்கும் சொந்தம் இல்லை.

கோயில்களும் யாருக்கும் சொந்தம் இல்லை.

அவை நம்பிக்கைக்குச் சொந்தம்.

அந்த நம்பிக்கையை

அதிகாரத்தின் கீழ் அடக்க நினைத்தால்,

இந்த கேள்விகள்

மௌனமா இருக்காது.

ஒருநாள்

மக்கள் குரலா மாறும்.

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இஸ்லாமியர்கள் கூறக்கூடிய 25 நபிமார்களும் அவர்களைப் பற்றிய குறிப்புகளும்

கனவு என்பது மனதின் பிரதிபலிப்பு / கனவு காண்போம்

யூசுப் நபியின் வரலாற்றை பற்றி ஒரு நெருக்கமான பார்வை