இஸ்லாத்தில் உள்ள 10 வானவர்களின் பட்டியல்
இஸ்லாத்தில் இருக்கும் பத்து வானவர்களை பற்றி தெரிந்து கொள்ள போகிறோம்.
உங்கள் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக
இறைவன் மூன்று பெரும் படைப்புகளாக மனித இனத்தையும், ஜின்கள் இனத்தையும் மற்றும் மலக்குகளையும் படைத்திருக்கிறான்.
அதில் மலக்குகள் என்று சொல்லப்படக்கூடிய வானவர்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.
இஸ்லாத்தின் அடிப்படையில் பத்து வானவர்கள் காணப்படுகிறார்கள்.
ஜிப்ரீல்
மீகாயீல்
இஸ்ராஃபீல்
அஸ்ராயீல்
முன்கர்
நகிர்
ரித்வான்
மாலிக்
கிராமன்
காதிபின்
ஜிப்ரீல் (கேப்ரியல்)
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இறைவனிடத்திலிருந்து வஹி மூலமாக குரானை வழங்கியவர் என்று சொல்லப்படுகிறது.
குர்ஆனின் அத்தியாயங்கள் அனைத்தும் அவரால் நபியவர்களிடம் அழைத்து வரப்பட்டன.ஜிப்ரீல் (அலை) ஏனைய வானவர்களை விட விசேஷ மிக்கவர், ஏனெனில் எல்லா நபிகளுக்கும் வஹீயை கொண்டு செல்லும் பொறுப்பை வைத்திருந்தவர்.முழு குர்ஆனையும் 23 ஆண்டுகளாக அருளி நபி அவர்களிடம் கொண்டு வந்தார். இதனால், அவர் இஸ்லாமிய வரலாற்றில் முக்கிய இடத்தை வகிக்கிறார்.
![]() |
| ஜிப்ரில் மாதிரி படம் |
மீகாயீல்
இறைவன் அருள் மூலமாக வானத்திலிருந்து மழை நீரை கொண்டு வரும் மலக்காக இவர் அறியப்படுகிறார். பூமியில் உள்ள பசுமைகள், வளங்கள் நீர் வளம் போன்றவை இவரால் தான் கட்டுப்படுத்தப்படுகிறது. ஜிப்ரீல் அலைகி சலாம் அவருக்கு அடுத்தபடியாக மீக்காயில் அலைஹிஸ்ஸலாம் அறியப்படுகிறார்.
![]() |
| இஸ்ராஃபில் வானவர் மாதிரி படம் |
இஸ்ராஃபீல்
எக்காளம் ஊதுபவர் என்று அறியப்படும் இஸ்ராஃபீல் (அலை) கியாமத் நாளில் இறைவன் உத்தரவின் படி எக்காளத்தை (சூர்) ஊதுவார். இதனால், உலகம் அழிந்து விடும். கியாமத்தின் அறிகுறி என சொல்லப்படும் எக்காளம் இரண்டு முறை ஊதப்படும் என்று கூறப்படுகிறது.
முதல் ஊதலின் போது அனைத்து உயிர்களும் அழியும். இது உலகத்தின் முடிவை அறிவிக்கும்.
இரண்டாவது ஊதலின் போது அனைவரும் மறுபிறவி எடுத்து எழுப்பப்படுவர். இதுவே மறுமை நாளுக்கான ஏற்பாடாகும்.
தெய்வீக உத்தரவுக்கு காத்திருப்பவர் ஆக
இஸ்ராஃபீல் (அலை) எப்போதும் எக்காளத்தைத் தன்னிடத்தில் வைத்துக் கொண்டு, இறைவனின் உத்தரவுக்காக காத்திருக்கின்றார்.
அஸ்ராயீல்
இந்த வானவரை இஸ்லாமியர்கள் மலக்குல் மௌத் என்ற பெயரைக் கொண்டு அழைக்கிறார்கள்.
இறைவனின் கட்டளைக்கு ஏற்ப மனித உயிரை பறிக்கக் கூடியவராக இவர் அறியப்படுகிறார்.
தோற்றத்தின் அடிப்படையில் நன்மைகள் செய்தவர்களுக்கு மிக அழகிய தோற்றத்துடனும் தீமைகள் செய்தவர்களுக்கு மிக விகாரமான தோற்றத்துடனும் அந்த மனிதனிடம் சென்று அவரின் உயிரைப் பறித்து இறைவனிடம் கொண்டு வருகிறார்.
###அஸ்ராயில் என்பவர் இந்துக்கள் போற்றும் எமதர்மன்
முன்கர் மற்றும் நகீர்
இஸ்லாத்தில் முக்கியமான இரண்டு வானவர்களாகக் கருதப்படுகிறார்கள். அவர்களது முக்கிய பணியாக, மனிதனின் மரணத்திற்குப் பிறகும், மண்ணறையில் இருந்து எழுப்பப்படும் போதும் மனிதரிடம் கேள்விகள் கேட்கும் வானவர்களாக அறியப்படுகிறார்கள்.
அவர்கள் கேட்கும் மூன்று முக்கியமான கேள்விகள் பின்வருமாறு
உமது இறைவன் யார்?
உமது மதம் என்ன?
உமது நபி யார்?
இந்த கேள்விகள் ஒரு மனிதனின் நம்பிக்கை மற்றும் அறத்தின் அடிப்படையில் முடிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
ரித்வான்
சொர்க்கத்தின் காப்பாளர் ஆக அறியப்படும் ரித்வான் (அலை) சொர்க்கத்தின் கதவுகளை பாதுகாப்பதற்கு பொறுப்பானவர் ஆகவும் சொர்க்கத்தின் காவலராகவும் இருக்கிறார்.
நன்மை செய்து இறந்தவர்களுக்கு சொர்க்கத்தைத் திறப்பவர் இவரே.இறைவனின் அனுமதியுடன், விசுவாசம் மற்றும் அறத்தைக் கடை பிடித்தவர்களுக்கு சொர்க்கத்தின் கதவுகளைத் திறந்து வரவேற்பார்.
புனித குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் இதுவரை பற்றி அறியப்படுகிறது.ரித்வான் (அலை) அவரின் பெயர் நேரடியாக குறிப்பிடப்படாமல் சொர்க்க காவலர் என புனித நூல்களில் பரிந்துரைக்கப்படுகிறார்.
அமைதி மற்றும் ஆறுதல் தருபவர் ஆக உள்ள ரித்வான் (அலை) சொர்க்க வாசல்களில் நன்மை செய்தவர்களை வரவேற்று அவர்களுக்கு இன்பம் மற்றும் அமைதி தருகிறார்.
மாலிக்
சொர்க்கத்தின் பாதுகாவலராக ரித்வான் வானவர் இருக்கும்போது இவர் நரகத்தின் பாதுகாவலராக அறியப்படுகிறார்.
தீமை செய்து இறந்தவர்களுக்கு நரகத்தின் வாயிலை திறந்து விடுகிறார். இவரைப் பற்றியும் குர்ஆனில் சிறு குறிப்புகளாக பார்க்க முடிகிறது. அநேக தீமைகளை செய்து நரகத்திற்கு வரும் மனிதர்களை தண்டிக்கவும் துன்புறுத்துவும் செய்கிறார்.
கிராமன் மற்றும் காத்திபீன்
மனிதர்கள் செய்யக்கூடிய நன்மை தீமைகளை அவர்களின் தோல்கள் மீது அமர்ந்து கொண்டு பதிவு செய்யப்படுபவர்களாக அறியப்படுகின்றனர்.
வலப்புறத்தில் மனிதன் செய்யக்கூடிய நன்மைகளை பதிவு செய்பவராக கிராமன் என்பவரும், தீமைகளை பதிவு செய்பவராக காத்திபின் என்பவரும் அறியப்படுகிறார்கள். மனிதன் செய்யக்கூடிய எந்த ஒரு செயலையும் இவர்கள் பதிவு செய்யாமல் இல்லை.
###சித்திரகுப்தன் என்பவரை இஸ்லாமியர்கள் போற்றும் கிராமன் காத்திபீன்
இஸ்லாத்தில் இது போன்ற மறைவானவற்றை நம்புவது ஒரு இறை நம்பிக்கையாகும்.

.webp)
கருத்துகள்