ஆதாம் நபியின் பிள்ளைகளும் ஆதி சிவனின் பிள்ளைகளும் அதில் உள்ள மர்மங்கள் உண்மைகள்

 ஆதாம் நபியின் மகன்களும் ஆதி சிவனின் மகன்களும் 

உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக 

சிவனுக்கும் பார்வதிக்கும் இரண்டு பிள்ளைகள் இருப்பது போல ஆதாம் நபிக்கும் ஏவாளுக்கும் இரண்டு பிள்ளைகள் இருக்கிறது. 

ஆதாம் மற்றும் ஆதி சிவனின் பிள்ளைகள்

இங்கே இரு மதங்களிலும் கூறப்படுபவர்கள் ஒரே நபரை தான் குறிக்கிறது என்பதை மீண்டும் உங்களுக்கு சொல்லிவிட்டு இந்த பதிவை தொடர்கிறேன். 

ஆதாம் அவர்களின் பிள்ளைகளை இஸ்லாமிய மார்க்கத்தில் காபில் ஹாபில் என்று சொல்கிறார்கள். 

அதேபோல் கிறிஸ்துவத்தில் ஆதாம் அவர்களின் பிள்ளைகளை காயின் ஆபேல் என்று சொல்கிறார்கள். 

ஆதாம் ஏவாள் தன் பிள்ளைகளுடன் மாதிரி படம்

அதேபோல் இந்து மதத்தில் ஆதி சிவனின் பிள்ளைகளை   கார்த்திகேயன்(காயின்) பிள்ளையார்(ஆபெள்) என்பவர்களை ஆதாம் நபியின் பிள்ளைகளாக சொல்கிறேன்.


இங்கே அவர்களின் பெயர் எவ்வாறு பொருந்தி இருக்கிறது என்பதை சற்று உற்று நோக்குங்கள். 

கார்த்திகேயன் என்ற பெயரில் கார்த்தி என்பதற்குப் பிறகு கேயன் என்று வருகிறது. இந்தக் கேயன் என்பது காயின் என்பதோடு ஒற்று போகிறது.

கார்த்தி(கேயன்)=காயின்

அதேபோல் பிள்ளையார் என்ற பெயரில் இருக்கும் பிள் என்பது ஆபேல் என்பதோடு ஒற்றுப் போகிறது 

(பிள்)ளையார் = ஆ(பெல்)

இங்கே பெயரளவில் மட்டும் அவர்களை ஒப்பிடப் போவதில்லை. 

இரண்டு மதங்களிலும் அவர்களைப் பற்றிய புராணங்கள் கதைகள் வரலாறுகள் என்ன சொல்லி இருக்கிறது என்பதை பார்க்கலாம். 

முதலில் இந்து மதத்தில் விநாயகர் முருகன் கதையை பற்றி தெரிந்து கொள்வோம்.

ஞானப்பழம் மாம்பழம் 

இந்தக் கதை அனைவரும் அறிந்ததே. 

நாரத முனிவர் ஞானப்பழம் என சொல்ல கூடிய மாம்பழத்தை சிவபெருமானிடம் எடுத்து வருகிறார். அதை சிவபெருமான் நாரதரிடமிருந்து வாங்கிக் கொண்டு தன்னுடைய பிள்ளைகளுக்கு பகிர்ந்து அளிக்க முடிவு செய்தார். ஆனால் நாரதரோ இந்த பழத்தை முழுவதுமாக ஒருவர் தான் சாப்பிட வேண்டும் எனச் சொல்கிறார். உடனே ஒரு போட்டி வைக்கிறார்கள். யார் முதன்முதலாக உலகைச் சுற்றி வருகிறார்களோ அவருக்கு இந்த ஞானப்பழம் கிடைக்கும் என்று முடிவு செய்கிறார்கள். உடனே முருகன் தன்னுடைய மயில் வாகனத்தில் ஏறிக்கொண்டு உலகத்தைச் சுற்றிவர புறப்பட்டு விடுகிறார்.

ஆனால் பிள்ளையாரின் வாகனமான மூஞ்சூர் என்று சொல்லக்கூடிய எலியானது மயிலை விட மெதுவாகச் செல்லும் என்பதை உணர்ந்து கொண்டு நாரதரிடம் ஒரு ஆலோசனை கேட்கிறார். நாரதரே அம்மையப்பன் என்றால் உலகம் . உலகம் என்றால் அம்மையப்பன் ஆகவே எனது தாய் தந்தையரை சுற்றி வந்தால் உலகத்தை சுற்றி வந்தது மாதிரி தானே அர்த்தம். அதற்கு நாரதரும் ஆம் என்று சொல்லிவிடுகிறார். உடனே விநாயகர் தன் தாய் தந்தையான சிவபெருமானையும் பார்வதியும் சுற்றி வந்துவிட்டு உலகத்தை சுற்றி வந்ததாக சொல்லி அந்த ஞானப் பழத்தை பெற்றுக் கொள்கிறார். மயிலில் உலகத்தைச் சுற்றி வந்த முருகன் தம் தாய் தந்தையிடம் வரும்போது மாம்பழத்தை ஏற்கனவே பிள்ளையாரிடம் வழங்கியதை பார்க்கிறார். உடனே முருகன் தன் தாய் தந்தையின் மீது கோபம் கொண்டு அங்கிருந்து கிளம்பி விடுகிறான். அப்படி கிளம்பிச் சென்ற இடம்தான் இன்று பழனி என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த புராணக்கதை அனைவரும் அறிந்தது. 

இந்தக் கதையிலிருந்து நாம் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். 

சிவன் தன் மகனான பிள்ளையார் இடமிருந்து அன்பை  பெற்றுக் கொள்பவராகவும், முருகனிடமிருந்து கோபத்தை பெற்றுக் கொள்பவராகவும் சித்தரிக்கப்படுகிறது.

இதே போல திருமணம் அடிப்படையிலான புராண கதைகளும் உள்ளது. 

ஒரு நாள் நந்தி பகவானும் மற்ற தெய்வங்களும் சிவபெருமானைச் சந்தித்து, அவர்களின் இரண்டு மகன்களுக்கும் திருமணம் செய்தல் முக்கியம் எனக் கூறினர். இதனையடுத்து, சிவபெருமான் விநாயகருக்கும் முருகனுக்கும் திருமணத்தை நடத்த முடிவு செய்தார். அதற்காக, சிவபெருமான் அவர்கள் இருவருக்கும் ஒரு சவாலாக, "உலகத்தைச் சுற்றி வந்து முதலில் வருபவருக்கு முதலில் திருமணம் நடத்தப்படும்" என்று அறிவித்தார்.

அதன் பிறகு மேலே உள்ள மாம்பழ கதையின் படி முருகன் மயில் ஏறி உலகத்தை சுற்றி வர கிளம்புகிறார். விநாயகர் தன் தாய் தந்தையரை சுற்றி வந்து திருமணத்தை முதலில் செய்து கொள்கிறார். 

இவ்வாறாக வடநாட்டில் அவருக்கு சித்தி புத்தி என்ற இரு மனைவிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. 

ஆனால் முருகனுக்கும் இரண்டு மனைவிகள் இருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது. முருகனுக்கு வள்ளி தெய்வானை என்ற இரு மனைவிகள் இருப்பதை அனைவரும் தெரிந்திருப்போம். 

பிறப்பின் அடிப்படையில் சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு கார்த்திகை தீபங்களாக முருகன் பிறந்ததாகவும் அதை பார்வதி ஒரு முகமாக ஆக்கி ஆறுமுகம் என்று அழைக்க தொடங்கினார்கள். 

அதேபோல் பார்வதி தேவியின் அழுக்கில் இருந்து விநாயகர் தோன்றியதாக புராணக் கதைகள் சொல்கிறது. 

பார்வதி தேவிக்கு சம்பந்தம் இல்லாமல் சிவனின் நெற்றியில் இருந்து முருகன் பிறந்திருந்தாலும் சிவனுக்கு தெரியாமல் பார்வதி தேவியின் அழுக்கில் இருந்து பிள்ளையார் பிறந்திருந்தாலும் இந்த இரண்டு மகன்களும் சிவன் பார்வதி மகன்களாகவே இந்து மதம் சொல்கிறது.

இவ்வாறாக முருகன் விநாயகரை பற்றி இந்து மதம் சொல்கிறது. 

முருகனின் திருமணம் வள்ளி தெய்வானை
இப்போது இஸ்லாமிய மார்க்கத்தில் அவர்களைப் பற்றி காயின் என்று சொல்லக்கூடிய முருகனைப் பற்றியும் ஆபேல் என்று சொல்லக்கூடிய பிள்ளையாரை பற்றியும் என்ன சொல்லி இருக்காங்க என்பதை பார்க்கலாம். 

காயினும் ஆபேலும் தங்கள் பெற்றோரிடமிருந்து பக்தி, இறைவன் மீது அன்பு ஆகியவற்றைப் பெற்றார்கள். காயின் விவசாயம்(முருகன் ஒரு விவசாய கடவுள் என்பது அனைவரும் அறிந்ததே) செய்து தன் வாழ்வை நடத்தி வந்தான், ஆனால் ஆபேல் மேய்ச்சல் தொழில் செய்து வெள்ளாடு போன்ற ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான்.

ஒரு நாள் தங்களைப் படைத்த இறைவனுக்கு காணிக்கை செலுத்த எண்ணினார்கள். 

இருவரும் அவரவர் தொழிலுக்கு ஏற்ப கிடைக்கும் பொருட்களைக் கொண்டு இறைவனுக்கு காணிக்கை செலுத்தினார்கள். 


காயின் விவசாய பொருட்களை இறைவனுக்கு அர்ப்பணித்தான். 

ஆபேல் ஒரு வெள்ளை ஆட்டு குட்டியை இறைவனுக்கு அர்ப்பணித்தான். 

இறைவன் ஆபேலிடமிருந்து மட்டும் அந்த காணிக்கையை ஏற்றுக் கொண்டார். முருகனின் மன்னிக்கவும் காயினின் காணிக்கையை இறைவன் ஏற்றுக்கொள்ளவில்லை. மேலே முருகன் விநாயகர் கதையில் மாம்பழம் எப்படி பிள்ளையாருக்கு கிடைத்ததோ அதேபோல் இந்த கதையிலும் அவரிடமிருந்து மட்டுமே அதாவது ஆபேலிடம் இருந்து மட்டுமே இறைவன் பெற்றுக் கொள்வதாக தெரிகிறது.

இதனால் காயின் ஆபேளை பார்த்து பொறாமைப்பட்டு அவனை கொலை செய்வதற்கு எண்ணி கொலையும் செய்து விடுகிறார்.இது உலகின் முதலாவது கொலையாகும், மேலும் இதன் மூலம் மனித குலத்தில் வன்முறையின் ஆரம்பத்தைச் சுட்டிக்காட்டுகிறது. ஆபேலைக் கொன்றபின், காயினுக்கு தனது செயல் பெரிய குற்றமாக உணரப்பட்டது. இறைவன் காயினை எதிர்கொண்டு, அவனை தண்டிக்கிறார். காயின் தனது செயலுக்காக மனம் வருந்தி, இறைவனை மன்னிப்புக்காக வேண்டுகிறான். இறைவன் காயினுக்கு ஒரு அறிகுறியாக ஒரு குறியீட்டை அளித்து, மற்றவர்களால் அவனை பாதிக்கப்படாமல் பாதுகாக்கிறார்.மனம் வருந்திய காயின் இறைவன் அனுப்பிய காகத்தை பார்த்து தன்னுடைய சகோதரனை புதைத்து விடுகிறார் என்று திருக்குர்ஆன் வாயிலாகவும் நம்மால் காயின் ஆபெல் வரலாற்றை அறிந்து கொள்ள முடிகிறது. 

மேலும் திருமண அடிப்படையிலான வரலாற்றில்

காயின் மற்றும் ஆபேலின் திருமண கதை (புராணக் கதைகள் அடிப்படையில்)

ஆதாம் மற்றும் ஹவா, காயினையும் ஆபேலையும் பெற்று, மனித குலத்தின் வளர்ச்சிக்கான பாதையை அமைத்தனர். இறைவன் உலகில் அடுத்த அடுத்த தலைமுறையை உருவாக்கும் நோக்கத்தில் ஒவ்வொரு இரட்டைப் பிறவியிலும் ஒரு மகன் மற்றும் ஒரு மகளைக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

திருமணத்தின் விதி

இறைவன் விதித்த ஒழுங்கின் அடிப்படையில், ஒரே இரட்டைப் பிறவியில் பிறந்த ஒரே தம்பி சகோதரிகள் (உறவுமுறையைப் பொருட்படுத்தி) திருமணம் செய்யக் கூடாது. அதன்படி, காயினின் இரட்டைப் பிறவியான சகோதரி, ஆபேலுக்கு விதிக்கப்பட்டார், அதேபோல் ஆபேலின் இரட்டைப் பிறவியான சகோதரி காயினுக்கு விதிக்கப்பட்டார். அதாவது அண்ணன் தங்கச்சி ஒரு இரட்டையர்கள் ஆகவும், மற்றொரு அண்ணன் தங்கச்சி மற்றும் ஒரு இரட்டையர்கள் ஆகவும் இறைவன் ஆதாம் ஏவாளுக்கு பிள்ளைகளை கொடுத்திருக்கின்றான்.

காயினின் பொறாமை

இறைவனின் இந்த கட்டளையை ஆதாம் நபி விளக்கினார். ஆனால் காயினுக்கு தனது இரட்டைப் பிறவியான உடன் பிறந்த சகோதரியைக் காதலிக்கும் உணர்வு ஏற்பட்டதால், அவளே தனது மனைவியாக இருக்க வேண்டும் எனக் கூறினான். அதாவது ஆபேல், தன் உடன் பிறந்த தங்கச்சியை திருமணம் செய்து கொள்ள கூடாது என காயின் எண்ணினார்.இந்த நிலையில், காயினுக்குச் சினம் மற்றும் பொறாமை ஏற்பட்டது.

இறைவன் ஒவ்வொருவரும் தங்களின் தகுதியானதை தியாகமாகச் செலுத்த வேண்டும் என அறிவித்தார். இதனால், தங்களுக்கு இறைவனின் ஆசீர்வாதத்தைப் பெறும் வகையில் தங்கள் படைத்தல் மூலம் தியாகம் செலுத்தினர். ஆபேல் தனது சிறந்த ஆடுகளைக் கொண்டு தியாகம் செலுத்த, காயின் தனது வயலில் இருந்து தானியங்களைச் செலுத்தினான். இறைவன் ஆபேலின் தியாகத்தை ஏற்றுக் கொண்டு, காயினின் தியாகத்தை நிராகரித்தார்.

இதனால் மிகவும் சினமுற்ற காயின், தனது சகோதரனை ஏமாற்றி ஒரு காட்டு பகுதியில் அழைத்துச் சென்று, அவனைப் படுகொலை செய்தான். இதுதான் உலகின் முதலாவது கொலை எனக் கூறப்படுகிறது.

மேலே கூறியபடி முருகன் விநாயகருக்கு எப்படி இரு வேறு கதைகள் உள்ளனவோ அதேபோல் காயின் மற்றும் ஆபேளுக்கு இருவேறு கதைகள் இருக்கிறது.

காயின் ஆபேளை கொன்ற பிறகு அந்த இரு சகோதரிகளையும் மணந்து கொள்கிறார் என்பதை நாம் யூகிக்க முடிகிறது. 

எனவே தான் முருகனுக்கு இரு மனைவிகள் உள்ளதாக இங்கே நமக்கு விளங்க முடிகிறது. 

அதே நேரத்தில் காயின் ஆபேலை கொல்வது போல இந்து மதத்தில் ஏதாவது ஒரு வழியில் பிள்ளையாரும் கொல்லப்படுவதாகவே, அதாவது சிவன் விநாயகர் மீது கோபப்பட்டு தனது மகனின் தலையை வெட்டி விடுகிறார் என்ற புராணக்கதையும் சொல்லப்படுகிறது. 

இஸ்லாமில் காயின் பொறாமைப் படுவதைப் போல இந்து மதத்தில் கார்த்திகேயன் பொறாமைப்படுகிறார். 

இஸ்லாமில் ஆபேல் கொல்லப்படுவதைப் போல இந்து மதத்தில் பிள்ளையார் ஒரு கணம் கொள்ளப்படுகிறார். 

கொலைக்குப் பிறகு காயினுக்கு இரண்டு மனைவிகள் கிடைப்பது போல இங்கே ஏதோ ஒரு வழியில் முருகனுக்கு இரண்டு மனைவிகள் கிடைக்கிறார்கள்.

இந்து மதத்தில் அவர்கள் பிறப்பை சொல்வதை போல் இஸ்லாமில் அவர்களின் பிறப்பை சொல்லவில்லை. 

மேலும் பிள்ளையாருக்கு யானை தலையை பொருத்தியது போல் இஸ்லாமில் இவர்களுக்கு எந்த கதையும் சொல்லவில்லை. 

இந்து மதத்தில் இவர்களை கடவுள் என்று சொல்வதைப் போல் இஸ்லாமிய மார்க்கத்தில் இவர்களை இறைவன் என்றோ கடவுள் என்றோ சொல்லவில்லை. 

ஒருவேளை கடவுள் என்று சொல்லிவிட்டால் அவர்களுக்கு பிறக்கப் போகும் அனைத்து குழந்தைகளும் கடவுளாகவே ஆக்கப்படுவார்கள். ஆனால் இந்து மதத்தில் முருகனுக்கு இரு மனைவிகள் இருப்பதோடு அவரின் கடவுள் வாழ்க்கை  முடிகிறது.

இஸ்லாமில் அனைவரும் இறைவன் படைத்த மனிதர்களாகவே இருக்கிறார்கள். காயின் மனிதன் என்பதால் அவருக்கு பிறந்த குழந்தைகளும் இங்கே மனிதர்களாக இன்றளவும் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 

இப்போது நான் என்ன சொல்ல வந்திருக்கிறேன் என்பதை நீங்கள் கொஞ்சமாவது புரிந்திருப்பீர்கள் என்று நம்புகின்றேன். 

புரியவில்லை என்றால் உங்கள் கேள்விகளை கருத்துக்களாக பதிவிடுங்கள்.

மேலும் நம் வலைதளத்தில் இஸ்லாமிய நபிமார்களும் மலக்குமார்களும் இந்து மதத்தில் உள்ள கடவுள்களாகவும் தேவர்களாகவும் ஒப்பிட்டு பல பதிவுகளை சமர்ப்பித்திருக்கிறேன். தயவு செய்து அதையும் பார்க்க..

அடுத்த பதிவில் தர்மசாஸ்தா என்று சொல்லக்கூடிய சிவனின் மூன்றாவது மகனான ஐயப்பன் பற்றியும் ஆதாம் நபியின் மூன்றாவது மகனான சேத் நபி பற்றியும் பார்க்கலாம். 

-இவன் உங்கள் முன்னோன்-

முழு வீடியோ

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலக பிரபலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ இஸ்லாத்திற்கு மாறிவிட்டாரா?

யூசுப் நபியின் வரலாற்றை பற்றி ஒரு நெருக்கமான பார்வை

இஸ்லாமியர்கள் கூறக்கூடிய 25 நபிமார்களும் அவர்களைப் பற்றிய குறிப்புகளும்