நெருப்பினால் ஆன சைத்தானை கண்டு இஸ்லாமியர்கள் பயப்பட காரணம் என்ன?

 மனிதர்களை வழி கெடுக்கும் சைத்தானை பற்றித் தெரிந்து கொள்வோம் வாருங்கள்

அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக 


மனிதன் செய்யக்கூடிய பெரும்பாலான பாவங்களுக்கு மற்றும் தவறுகளுக்கு அவன் மட்டும் காரணம் இல்லை. மாறாக அவனை வழிகெடுக்கக்கூடிய சைத்தானும் ஒரு வகையில் காரணமாகவே இருக்கின்றான்.

சைத்தானின் மாதிரி படம்

சைத்தான் மனிதர்களை வழிகெடுப்பதெல்லாம் அவர்களைக் கொழுந்து விட்டு எரியும் நரக நெருப்பில் சேர்ப்பதற்காகத்தான் என்று இறைவன் குர்ஆன் வாயிலாக நமக்குத் தெரிவிக்கின்றான்.


அப்படிப்பட்ட அந்த சைத்தானை பற்றி இந்தப் பதிவில் நாம் தெரிந்து கொள்வோம். 

சைத்தான்களின் தலைவனான இப்லீஸ் என்பவன் இறைவனால் நெருப்பின் மூலம் படைக்கப்பட்ட ஒரு படைப்பாகும். மனிதர்கள் இந்தப் பூமியில் எப்படி பெருகிப் போய் இருக்கிறார்கள் அதைப் போல் சைத்தான்களும் இந்த உலகில் பெருகிப் போய் இருக்கிறார்கள். இறைவன் ஒளியினால் படைத்த மலக்குமார்கள் நம் கண்ணில் எப்படி படாமல் நமக்கு நன்மைகளைச் செய்கிறார்களோ அதைப் போல் தீய சக்திகளான சைத்தான்கள் நம் கண்ணில் படாமல் நம் மனதில் தீய எண்ணங்களைப் போட்டு நம்மை இறைவனின் பாதையை விட்டும் வழி தவற செய்கின்றான். உலகில் உள்ள ஒவ்வொரு சைத்தானுக்கும் இப்லீஸ் எனச் சொல்லக்கூடிய சைத்தானை தலைவனாக இருக்கிறான். ஆரம்ப காலகட்டத்தில் மலக்குமார்களுடன் இவன் இருந்ததாக இஸ்லாம் சொல்கிறது. அதன் பிறகு இறைவன் மனிதனை படைக்க எண்ணி களிமண்ணால் ஆதாம் அவர்களைப் படைக்கின்றான். அந்த ஆகாமிற்கு அனைத்து மலக்குமார்களையும் ஜின் இனத்தவர்களையும் தலை வணங்க இறைவன் கட்டளையிடுகின்றான். ஆனால் இட்லிஸை தவிர அனைவருமே ஆதாமிற்கு தலை வணங்குகிறார்கள். அதன் காரணம் என்ன என்று இப்லீஸிடம் கேட்கும்போது நீ மனிதனை மண்ணினால் படைத்தாய் ஆனால் நான் அதைவிட பெரிய அக்கினியான் படைக்கப்பட்டுள்ளேன். எனவே நான் ஆதாமுக்கு தலை வணங்க முடியாது என்று இறைவனின் கட்டளைக்கு மாறு செய்கின்றான். எனவே இறைவன் தன் கட்டளைக்கு மறுத்த அந்த இப்லீஸை அந்த இடத்தை  விட்டு வெளியேற்றுகிறான். அதே நேரத்தில் நான் ஆதாமின் மக்களை ஒவ்வொருவரையும் வழி கெடுப்பேன் என்று இறைவனிடம் கூறுகின்றான். அந்த நோக்கில் இறைவன் அந்த மரத்தின் பழத்தைச் சுவைக்க கூடாது என்று சொல்லி இருந்ததை, ஆதாமிற்கும் அவரது மனைவிக்கும் இடையில் குழப்பத்தை ஏற்படுத்தி அந்த பழத்தைச் சாப்பிட வைக்கின்றான். 


>>>ஆதம் நபி பற்றி முழுமையான வரலாறு<<<


அதை குர்ஆன் இவ்வாறு கூறுகிறது 


எனினும் (இப்லீஸாகிய) ஷைத்தான் அவ்விருவரையும் (தடுக்கப்பட்டிருந்த மரத்தை அணுகித்) தவறிழைக்கும்படிச் செய்து அச்சோலையை விட்டும், அவ்விருவரும் இருந்த (மேலான) நிலைமையிலிருந்தும் அவர்களை வெளியேறும்படி செய்து  விட்டான். ஆகவே (அவர்களை நோக்கி) "உங்களில் சிலர் சிலருக்கு எதிரியாவர். (இச்சோலையிலிருந்து) நீங்கள் இறங்கிவிடுங்கள். உங்களுக்கு பூமியில்தான் வசிக்க இடமுண்டு. அதில் சிறிது காலம் வரையில் சுகமும் அனுபவிக்கலாம்" என நாம் கூறினோம்.

(அல்குர்ஆன் : 2:36)


இதனால் இறைவன் கோபம் கொண்டு ஆதாமையும் அவரது மனைவியையும் சொர்க்கத்தை விட்டு இறக்கி விடுகின்றான். கூடவே சைத்தானையும் இறக்கி விடுகின்றான். உலகம் அழியும் வரை ஆதாமின் மக்களை வழிகெடுப்பேன் என்று சபதம் எடுத்து இன்றும் பல கோடி மக்களை வழிகெடுத்த வண்ணமே இருக்கின்றான். ஆனால் எவன் ஒருவன் இறைவனை நம்பிக்கை கொள்கிறானோ, அவனால் அந்த சைத்தானின் சூழ்ச்சிகளை வென்று விட முடியும் என்பது நிதர்சனமான உண்மையாகவும் ஷைத்தானே சொல்லக்கூடிய ஒன்றாகவும் இருக்கிறது. படைத்த இறைவனை நம்பக்கூடிய எவரையும் சைத்தான் வழி கெடுப்பதில்லை. 


சாத்தானின் செயல்பாடு


சாத்தான் மனிதர்களை வழி கெடுக்க தன் பல்வேறு தந்திரங்களையும் சூழ்ச்சிகளையும் பயன்படுத்துகிறான். அவன் வஸ்வஸா (தவறான எண்ணங்களைத் தூண்டுதல்) மூலம் மனிதர்களின் மனதில் குழப்பத்தை உருவாக்குகிறான். இதன் மூலம், மனிதர்களைப் பாவங்களில் மற்றும் தவறான செயல்களில் ஈடுபட வைக்கும் முயற்சியில் செயல்பட்டு கொண்டிருக்கிறான்.

சைத்தான் மனிதனை வழி கெடுக்கும் மாதிரி படம்


இறைவன் குர்ஆன் வாயிலாக நமக்குக் கூறுவது


நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்குப் பகைவனாக இருக்கின்றான்; ஆகவே நீங்களும் அவனைப் பகைவனாகவே எடுத்துக் கொள்ளுங்கள்; அவன் (தன்னைப் பின்பற்றும்) தன் கூட்டத்தாரை அழைப்பதெல்லாம் அவர்கள் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்புக்கு உரியவர்களாய் இருப்பதற்காகவே தான்.

(அல்குர்ஆன் : 35:6)


சாத்தான் பாவங்களை அழகாகச் சொல்லி, அவற்றைச் சீரிய செயல்களாகக் காட்டுவதிலும் நிபுணராக இருக்கிறான். அவன் மனிதர்களின் நேர்மையான வழியில் தடங்கல்களை உருவாக்கி, அவர்களைத் தவறான பாதையில் ஈர்க்க முயற்சிக்கிறான்.


சைத்தானின் இயல்பைப் பற்றிய நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாவது


சாத்தான் மனிதனின் உடலில் இரத்தம் ஓடுவதுபோல ஓடுகிறான்.

(அல்-புகாரி, முஸ்லிம்).


மனிதனை போதை பழக்கத்திற்கு ஆளாக்குவது சூதாட்டத்திற்கு அடிமையாக்குவது விபச்சாரத்திற்கு அடிமையாக்குவது என்று பல்வேறு தீய செயல்களை மனிதனுக்கு செய்கின்றான். 

இப்லீஸ் மாதிரி படம்


இறைவன் குர்ஆன் வாயிலாக 


மது மற்றும் சூதாட்டத்தின் வாயிலாக உங்களுக்கிடையில் பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தி அல்லாஹ்வை நினைவுகூர்வதிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்துவிடவே ஷைத்தான் விரும்புகிறான். இதற்குப் பிறகாவது நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்வீர்களா?

(அல்குர்ஆன் : 5:91)


குடும்பங்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி பிரிவை உண்டாக்குவதில் சைத்தான் மிகுந்த சந்தோஷத்தை அடைகின்றான். அப்படி செய்யக்கூடிய சைத்தான்களை சைத்தான்களின் தலைவனான இப்லீஸ் தன் அறியாசனத்தின் அருகே அமர வைத்துக் கொள்கின்றான்.


சைத்தான் இடமிருந்து நாம் தற்காத்துக் கொள்ள சில வழிமுறைகள்


“அவுது பில்லாஹி மினஷ் சைத்தானிர் ரஜீம்”


அதாவது சைத்தானின் தூண்டுதலை விட்டும் நான் படைத்த அல்லாஹ்விடத்தில் வேண்டுகின்றேன் என்பதுவே இதன் அர்த்தம்.


இது சைத்தானிடமிருந்து நம்மைப் பாதுகாக்க கூடிய வார்த்தையாகும்.


மேலே கூறியது போல இறை நம்பிக்கை என்பது சைத்தானின் சூழ்ச்சிகளிலிருந்து தற்காத்துக் கொள்ளும் ஒரு மிகப்பெரிய அம்சமாகும்.


ஒரு மனிதன் தனிமையில் இருக்கும் போதே அவனிடம் சைத்தானின் ஊசலாட்டங்கள் அதிகமாகத் தென்படுகிறது. எனவே ஒரு மனிதன் பெரும்பாலும் தனிமையில் இருப்பதை தவிர்த்து விட வேண்டும்.


நீங்கள் ஒரு நன்மையை நாடி அந்தச் செயலைச் செய்வதற்கு முடிவெடுக்கும்போது சைத்தான் உங்கள் செயலைத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்லக் கூடியவனாக இருப்பதனால் நீங்கள் நாடிய அந்த நன்மையான செயலை உடனே செய்து முடித்து விடுங்கள். 


மேலும் நீங்கள் எந்த ஒரு செயலைச் செய்யும்போதும் இறைவனின் பெயரால் செய்து கொள்ளுங்கள். இறைவனின் பெயரைச் சொல்லும்போது அங்கே சைத்தானுக்கு வேலை இல்லாமல் போய்விடும்.


இதைப் பற்றி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்கிறார்கள் 

ஒரு மனிதன் தன் வீட்டிற்குள் அல்லது அலுவலகம் செல்லும் போதும் பிஸ்மில்லாஹ் என்று சொல்லிவிட்டு செல்ல வேண்டும். அதே நேரத்தில் நாம் சாப்பிடும்போது பிஸ்மில்லா என்று சொல்ல வேண்டும். அப்போது இங்கே நமக்குச் சாப்பாடு இல்லை இடமும் இல்லை என்று சைத்தான் வெளியேறி விடுவதாகச் சொல்கிறார். 


இறைவனின் வேதமான குர்ஆனை படிப்பதும் சைத்தானிடமிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. 


ஐந்து கடமைகளில் மிக முக்கியமான கடமைகளான தொழுகையை நிறைவேற்றுவதும் சைத்தான் இடம் இருந்து நம்மைப் பாதுகாக்கும் ஒரு வழியாகும். 


நம் கண்ணுக்குத் தெரிந்த தீயவர்களை விட்டு விலகி நல்ல மனிதர்களுடன் நட்புக்கொள்வதும் சைத்தானிடமிருந்து நாம் பாதுகாக்கும் ஒரு நல்வழியாகும்.


மேலும் முற்றிலுமாக அவனின் சூழ்ச்சியிலிருந்து நாம் தற்காத்துக் கொள்ள ஆயத்துல் குர்ஸி என்ற சூராவினை ஓதும்போது நமக்கு இறைவனின் பாதுகாப்பு கிடைக்கிறது.



ஆயத்துல் குர்ஸி தமிழில் இவ்வாறு உள்ளது 


அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்குச் சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ உண்டாகாது. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார் தான் பரிந்து பேச முடியும்? அவர்களுக்கு முன்னேயும் பின்னேயும் உள்ளதை அவன் அறிகிறான். அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறிய முடியாது, அவன் நாடியதைத் தவிர. அவனது ஆசனம் வானங்களையும், பூமியையும் உள்ளடக்கும். அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமமானதன்று அவன் உயர்ந்தவன், மகத்துவமிக்கவன்.


இந்தச் சூராவினை படிக்கும்போது நாம் சைத்தானை விட்டுத் தூரம் ஆகின்றோம் இறைவனுக்கு நெருக்கமாகின்றோம். 

சைத்தான் உங்களை மட்டும் அல்லாமல் உங்கள் குழந்தைகளையும் வழிகெடுப்பவனாகவே இருக்கின்றான். எனவே உங்கள் குழந்தைகளுக்கும் சிறுவயதில் இருந்தே சைத்தானை பற்றிய அனைத்து விஷயங்களையும் சொல்லித் தாருங்கள். உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் சைத்தானை விட்டும் தூரம் ஆக்கி விடுங்கள். அல்லாஹ்வின் படைத்தவனின் அருளை பெற்றுக் கொள்ளுங்கள்.


சாத்தான் மனிதர்களுக்கு ஒரு சோதனையாக உருவாக்கப்பட்டவன். அவனை எதிர்க்க மனிதர்களுக்கு விருப்பமான வழிகளை இறைவன் கற்றுக்கொடுத்துள்ளான். சாத்தானின் வலிமையை எளிதில் தகர்க்க முடியாது. ஆனால், இறைவனின் வழியில் நேர்மையாக நடக்கும்போது, மனிதன் சாத்தானின் தாக்கத்திலிருந்து தன்னை முழுவதுமாகப் பாதுகாக்க முடியும்.


இதை குர்ஆன் வாயிலாக இவ்வாறு சொல்கின்றான் 


எவர்கள் ஈமான் கொண்டு தன் இறைவனை முற்றிலும் சார்ந்திருக்கிறார்களோ அவர்கள் மீது நிச்சயமாக (ஷைத்தானுக்கு) எவ்வித அதிகாரமுமில்லை.

(அல்குர்ஆன் : 16:99)


சாத்தானின் தாக்கத்திலிருந்து விடுபட்டு, அல்லாஹ்வின் நற்சாலையில் நடந்துகொள்வதன் மூலம் இறைவனின் அருட்கொடைகளை பெற முடியும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலக பிரபலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ இஸ்லாத்திற்கு மாறிவிட்டாரா?

யூசுப் நபியின் வரலாற்றை பற்றி ஒரு நெருக்கமான பார்வை

இஸ்லாமியர்கள் கூறக்கூடிய 25 நபிமார்களும் அவர்களைப் பற்றிய குறிப்புகளும்