மனித உயிர்களைப் பறிப்பது இஸ்லாமியர்கள் கூறும் மலக்குல் மௌத்தா? எமதர்மனா?

அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக 


இன்று நாம் உயிரைப் பறிக்கக் கூடிய எமதர்மராஜாவை பற்றியும் அதே நேரத்தில் உயிரை பறிக்கக் கூடிய மலக்குல் மௌத் என்பவரை பற்றியே பார்க்க போகிறோம்.

இந்து மத கடவுள் எமதர்மன் மாதிரி படம்


மேல் கூறிய இருவருமே மனித உயிர்களை பறிப்பவர்களாகவே அறிய முடிகிறது. ஆகவே இவர்கள் இருவரும் ஒருவர்தான் என்பதை மீண்டும் இந்த பதிவு உங்களுக்கு விளக்குகிறது. 

இவர்களைப் பற்றி இந்து மதமும் இஸ்லாமிய மார்க்கமும் என்ன சொல்லி இருக்கிறது என்பதை தனித்தனியாக இப்போது பார்ப்போம். 

இஸ்லாமிய மார்க்கத்தில் மலக்குல் மௌத் என சொல்லப்படக்கூடிய மனிதர்களின் உயிரை பறிக்கக் கூடிய அவரை இஸ்ராயில் என்ற பெயரைக் கொண்டு அழைக்கிறார்கள். இவர் இறைவனின் கட்டளைக்கு ஏற்ப ஒரு மனிதனது உயிரை பறித்து விடுகிறார். அந்த மனிதன் நன்மை செய்யக் கூடியவராக காணப்பட்டால் அவருக்கு மலக்குல் மவுத் என்பவர் அழகிய தோற்றத்தில் காட்சியளிப்பார் என்பதாகவும், தீமைகள் அதிகமாக செய்து இருக்கும் போது மலக்குல் மௌத் விகாரமான தோற்றத்தில் காட்சியளிப்பார் என்பதாகவும் நம்பப்படுகிறது. 

மலக்குல் மௌத் மாதிரி படம் 

மரணம் என்பது இஸ்லாமில் ஒரு உண்மை. இது மனித வாழ்க்கையின் முடிவாகவும், இறைவனின் அன்றாட செயல்பாடுகளில் ஒன்றாகவும் காணப்படுகிறது. மரணம் நிகழும்போது மலக்குல் மௌத் மனிதனின் ஆன்மாவை பிரித்து, அந்த ஆன்மாவை இறைவனின் அருகில் அழைத்து செல்கிறார் என்று நம்பப்படுகிறது.


மலக்குல் மௌத் (மரண தூதர்) குறித்து குர்ஆனில் பல வசனங்கள் உள்ளன. இஸ்லாமியக் கொள்கைகளின் படி, மலக்குல் மௌத் இறைவனின் கட்டளைக்கு பணிந்து, மனிதர்களின் மரணத்தை நிறைவேற்றும் தூதராக இருக்கிறார். அவரின் பணியாக, இறைவன் ஒவ்வொரு மனிதனுக்கும் நிர்ணயித்த காலத்தில் அவர்களின் ஆன்மாவை எடுத்துச் செல்வது என குறிப்பிடப்படுகிறது. சில முக்கியமான திருக்குர்ஆன் வசனங்கள்:


அவன் தன் அடியார்களை அடக்கியாளுபவனாக இருக்கிறான்; அன்றியும், உங்கள் மீது பாதுகாப்பாளர்களையும் அனுப்புகிறான்; உங்களில் ஒருவருக்கு மரணம் வந்துவிடுமானால், நம் அமரர்கள் அவர் ஆத்மாவை எடுத்துக் கொள்கிறார்கள் - அவர்கள் (தம் கடமையில்) தவறுவதில்லை.

(அல்குர்ஆன் : 6:61)


இந்த வசனம், இறைவனின் தூதர்கள் ஆன்மாவை எடுத்துச் செல்கிறார்கள் என்பதை வலியுறுத்துகிறது. இங்கு மலக்குல் மௌத்திற்கும் அவரது உதவியாளர்களாக உள்ள மற்ற தூதர்களுக்கும் குறிப்பு உள்ளது.


“உங்கள் மீது நியமிக்கப்பட்டிருக்கும், “மலக்குல் மவ்து” தாம் உங்கள் உயிரைக் கைப்பற்றுவார் - பின்னர் நீங்கள் உங்கள் இறைவனிடம் மீள்விக்கப்படுவீர்கள்” என்று (நபியே!) நீர் கூறும்.  

(அல்குர்ஆன் : 32:11)


இந்த வசனம், மலக்குல் மௌத் மனிதர்களின் ஆன்மாவை எடுத்துச் செல்வதை தெளிவுபடுத்துகிறது.


அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்: “என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!” என்று கூறுவான்.

(அல்குர்ஆன் : 23:99)


“நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! (போருக்குச் சென்ற முனாஃபிக்களுக்கு) ஏதேனும் ஒரு நன்மை ஏற்பட்டால் “இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது” என்று கூறுகிறார்கள்; ஆனால், அவர்களுக்கு ஏதாவது தீங்கு ஏற்பட்டாலோ, “இது உம்மிடம் இருந்துதான் ஏற்பட்டது” என்று கூறுகிறார்கள், (நபியே! அவர்களிடம்) கூறும்: “எல்லாம் அல்லாஹ்விடமிருந்தே வந்திருக்கின்றன; இந்த மக்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? எந்த ஒரு விஷயத்தையும் அவர்களுக்கு விளங்கிக் கொள்ள முடியவில்லையே!”

(அல்குர்ஆன் : 4:78)


இது மனிதர்கள் எந்த இடத்தில் இருந்தாலும், இறைவன் தீர்மானித்த நேரத்தில் அவர்களது மரணம் நிகழும் என்பதை உணர்த்தும் வசனமாகும்.


இங்கு குர்ஆன் வசனத்தில் தன் அடியார்களை கண்காணிக்க தூதர்களை அனுப்புகிறேன் என்று இறைவன் கூறுகிறான்.


அவன் மலக்குல் மௌத்தை தவிர கிராமன் காத்திபன் பற்றியும் சொல்கிறான்.

இவர்களைப் பற்றி சொல்லும் போது மனிதனின் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் தோள்களில் அமர்ந்து கொண்டு அவர்கள் செய்யக்கூடிய செயல்களை எழுதி வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது. 

இடப்புறமாக அமர்ந்து கிராமன் என்பவர் மனிதன் செய்யக்கூடிய நல்ல விஷயங்களை எழுதுகிறார்.

வளப்புறமாக அமர்ந்து காத்திபன் என்பவர் மனிதன் செய்யக்கூடிய தீய விஷயங்களை எழுதுகிறார்.

இந்த இரண்டு மலக்குகளும் மலக்குல் மௌத்திற்கு உதவியாளர்களாக இருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது. 


இப்போது இந்து மதத்தில் எமதர்மனை பற்றி என்ன சொல்லி இருக்கிறார்கள் என்பதை பார்ப்போம்.


எருமை மாட்டில் பாசக்கயிற்றுடன் உயிரை கைப்பற்ற கூடியவராக எமதர்மனை பார்க்கின்றார்கள்.


எமதர்மன் என்பவர் ஹிந்து மதத்தில் மரணத்தின் தெய்வமாக கருதப்படுகிறார். அவரைப் பெரும்பாலும் கருப்பாகவும், கையில் கதாயுதம், மற்றும் பாசகயிற்றை கொண்டவனாகவும் வணங்குகின்றனர். யமன் அல்லது எமன் என்றும் அழைக்கப்படும் எமதர்மன், மரணத்திற்குப் பிறகு ஆத்மாக்களின் தர்மங்களை பார்த்து அவர்களின் பாவ, புண்ணியங்களை மதிப்பீடு செய்து, அவர்களுக்கு உரிய தண்டனைகள் அளிப்பவராக உள்ளார்.


எமதர்மனுக்கும் சித்திரகுப்தருக்கும் ஆன்மீக வரலாற்றில் தனித்துவமான பங்கு உள்ளது. எமதர்மன் மரணத்திற்குப் பிறகு ஆத்மாக்களின் கர்ம வினைகளை நிர்ணயிப்பவர். அவருக்குப் பக்கபலமாக அவரின் கணக்கீட்டாளர் சித்திரகுப்தர் செயல்படுகிறார்.


சித்திரகுப்தரின் பொறுப்பு:


கர்மா பதிவு: சித்திரகுப்தர் மனிதர்கள் பிறந்தது முதல் அவர்கள் செய்த அனைத்தையும், நன்மை தீமை உள்ள கர்மாக்களை தனித்தனியாகப் பதிவு செய்கிறார்.


தர்ம தீர்ப்புக்கான ஆதாரம்: சித்திரகுப்தரின் கணக்குகளை அடிப்படையாக வைத்து, எமதர்மன் அந்த ஆத்மாவின் மீதான தீர்ப்பை வழங்குகிறார். இது தெய்வீக நீதி வழங்கும் ஒரு முறை எனக் கொள்ளப்படுகிறது.


அவரது தோற்றம்: சித்திரகுப்தர் தன்னை எளிய, மனதிற்கு அமைதி அளிக்கும் தோற்றத்தில் சித்தரிக்கின்றனர். அவர் பொதுவாக கணக்குப்பதிவு செய்யும் கருவிகளுடன் காணப்படுகிறார்.


சித்திரகுப்தனும் எமனும் இணைந்து செயல்பட்டு, ஆன்மாக்களின் சரியான புண்ணியம் மற்றும் பாவத்தை மதிப்பீடு செய்வதன் மூலம் அவர்களின் மறுபிறவி அல்லது மோக்ஷம் முடிவுகளை நிர்ணயிக்கின்றனர்.


இவ்வாறாக இஸ்லாத்தில் மலக்குல் மௌத் மற்றும் கிராமன் காத்திபின் பற்றி

எவ்வாறு சொல்லப்பட்டு இருக்கிறதோ அதைப் போல இந்து மதத்தில் எமதர்மன் மற்றும் சித்திரகுப்தன் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. 


இங்கு மௌத் என்று வரக்கூடிய பெயர்தான் எமன் என்று வருகிறது.

இவர்கள் உயிரை பறிப்பவர்களாகவே இருக்கிறார்கள். 

மேலும் எமனின் உதவியாளர் கணக்கீட்டாளர் சித்திரகுப்தன் என்பவர் இஸ்லாத்தில்  மனிதனின் கணக்கை பதிவு செய்யக்கூடிய  கிராமன் காத்திபின் என்று விளங்க முடிகிறது.


எனவே எனது அன்பார்ந்த சகோதரர்களே நாம் மதத்தின் அடிப்படையில் வேறுபட்டு இருந்தாலும் அந்த மதத்தில் இருக்கக்கூடிய தூதுவர்களோ, வானவர்களோ, நபிமார்களோ யாவரும் ஒரே அம்சமாகத்தான் காணப்படுகிறார்கள்.


இது பற்றி நம் தமிழ் தேனி சேனலில் அனேக காணொளி பதிவிடப்பட்டுள்ளது.


இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் சிறு விருப்பத்தை தெரிவியுங்கள்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலக பிரபலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ இஸ்லாத்திற்கு மாறிவிட்டாரா?

யூசுப் நபியின் வரலாற்றை பற்றி ஒரு நெருக்கமான பார்வை

இஸ்லாமியர்கள் கூறக்கூடிய 25 நபிமார்களும் அவர்களைப் பற்றிய குறிப்புகளும்