மீடியா முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கிறது – உண்மையா அல்லது உருவாக்கப்பட்டதா?
அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.
![]() |
| இஸ்லாமிய மக்கள் |
இன்றைய சமூகத்தில், மீடியாவின் சக்தி அபரிவிதமானது. மக்களிடத்தில் நம்பிக்கைகள், பார்வைகள் மற்றும் கருத்துக்களை வடிவமைக்க முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் சமகாலத்தில், குறிப்பாக முஸ்லிம்களைப் பற்றிய செய்திகளில், மீடியாவின் நடத்தை மீதான கேள்விகள் அதிகரிக்கின்றன. முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுவதில் உண்மை எவ்வளவு உள்ளது, மற்றும் அவர்கள் மீது உருவாக்கப்பட்ட பொய்கள் எவ்வளவு உள்ளது என்பதை ஆராய்ந்து தெரிந்து கொள்வதற்கு அவசியமாகிறது.
உண்மை உள்ளதா?
மனிதர்களில் சிலர் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவது உண்மைதான். உலகளாவிய அளவில் நடந்த சில தாக்குதல்களில், குற்றவாளிகள் முஸ்லிம்கள் என்பதை மறுக்க முடியாது. ஆனால், இங்கே ஒரு உண்மை மறைக்கப்படுகிறது. தீவிரவாதம் என்பது எந்த ஒரு மதத்திற்கும் சொந்தமானது இல்லை. தீவிரவாதத்தை எந்த ஒரு மதமும் அனுமதிப்பதும் இல்லை.
சரித்திரத்தின் சாட்சிகள்
கிறிஸ்தவ அல்லது இந்து தீவிரவாதத்துடன் தொடர்புடைய நிகழ்வுகளும் வரலாற்றில் உள்ளன.
இந்தியாவின் முதல் தீவிரவாதி நாதூரம் அவர் ஒரு இந்து என்று கமல்ஹாசன் சொல்லி இருக்கிறார்.
நியூசிலாந்தில் பள்ளிவாசலில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் ஒரு கிறிஸ்டியன்.
வன்முறை கும்பல்கள் பல்வேறு மதங்களில் தோன்றியுள்ளன. ஆனால் முஸ்லிம்கள் மீது மட்டும் குறி வைப்பது போல் சில மீடியாக்கள் சுட்டிக்காட்டுவது ஏன் என்ற கேள்விக்கு இங்கு பதில் இல்லை
மீடியாவின் சித்திரம்
மீடியாவின் நோக்கம் உண்மையை வெளியிடுவதோடு முடிவடையாது.அதற்குப் பின்னால் பல்வேறு அரசியல், வணிக நோக்கங்கள் இருக்கும்.
பொதுமைப்படுத்தல் என கூறிவிட்டு
சில தீவிரவாதச் செயல்களை வைத்து முழு முஸ்லிம் சமுதாயத்தை குற்றம்சாட்டுவது மிகப்பெரிய தவறு.
உலகின் 1.9 பில்லியன் முஸ்லிம்களில் பெரும்பாலான மக்கள் அமைதியானவர்கள்.
ஆனால் சிலர் செய்த குற்றச்செயல்களை ஒட்டுமொத்த இஸ்லாம் சமுதாயத்தின் மீது பலி சுமத்துவது மிக விசமான பிரச்சாரம்.
மக்களிடையே பயத்தை உருவாக்கல்
மக்கள் மனதில் "முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதம்" என்ற பிம்பத்தை உருவாக்க இன்றைய மீடியாக்கள், அரசாங்கம் மற்றும் சினிமாக்கள் செயல்படுகின்றன.
தாடி வைத்திருப்பவர்கள் எல்லாம் தீவிரவாதிகள் என முஸ்லிம்களை சினிமாக்கள் காட்டுகின்றன.
தொப்பி அணிந்தவர் கையில் வெடிகுண்டு இருக்கும் என சித்தரிக்கப்படுகிறார்கள்.
இதனால் மக்களிடையே மதச்சார்பற்ற ஒற்றுமை இடர்பாடுகளை சந்திக்கிறது.
மாற்று மத சகோதரர்கள் ஒரு நல்ல முஸ்லிமை பார்க்கும்போது அவர்கள் மனதில் மேலே கூறிய காரணங்கள் எண்ணங்கள் ஏற்படுகிறது. இது மிகப்பெரிய தவறாகும்.
இஸ்லாமின் உண்மையான முகம்
இஸ்லாமியக் கொள்கைகள் அமைதியையும் சகிப்புத்தன்மையையும் வலியுறுத்துகின்றன.
குர்ஆனின் தத்துவம் சொல்கிறது
"ஒருவரை கொல்வது முழு மனித குலத்தையே கொல்வதற்கு சமம்"
என்று.
மன்னிப்பு மற்றும் கருணையை வலியுறுத்தும் உன்னத மார்க்கம்.
தீவிரவாதம் என்பது இஸ்லாமின் எதிர்ப்புறமாகவே உள்ளது. ஆனால் இது சரியாக விளக்கப்படாமல் மீடியாக்கள் மற்றும் சினிமாக்கள் முஸ்லிம்களை தவறாக சித்தரிக்கிறார்கள்.
👇👇👇முஸ்லிம்கள்👇👇👇👇
இதற்கான தீர்வு
மக்கள் விழிப்புணர்வு பெறவேண்டும்.
சமுதாயத்தில் யார் உண்மையான தீவிரவாதம் செய்கின்றனர் என்பதை ஆராய்ந்து உணர வேண்டும்.
![]() |
| முஸ்லிம்களை தவறாக சித்தரிக்கும் மீடியாக்கள் |
தனிமனிதர்கள் அல்லது சிறு குழுக்களின் செயல்களை கொண்டு முழு சமுதாயத்தின் மீதும் குற்றம் சுமத்தாமல் இருக்க வேண்டும்.
செய்திகளின் தரத்தை சரிபார்த்து புரிந்துகொள்வது மிக அவசியம் ஆகிறது
வன்முறை சம்பவங்கள் நிகழும்போது அதன் பின்னணியை முழுமையாக ஆராய வேண்டும்.
மீடியாவின் நோக்கங்களையும், அதன் செயற்பாடுகளையும் மக்கள் தயங்காமல் கேள்வி கேட்க வேண்டும்.
முடிவாக இஸ்லாமிய நண்பர்களுடன் சகஜமாக பழக வேண்டும்.
முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுவது மிகுந்த வேதனையை ஏற்படுத்தும் ஒரு தவறான பொதுமைப்படுத்தலாகும். உலகின் அனைத்து மதங்களும் அமைதி மற்றும் மனிதாபிமானத்தையே வலியுறுத்துகின்றன. மீடியா உண்மையை நியாயமாக வெளிப்படுத்த வேண்டும். சமுதாயத்தில் ஒற்றுமையும் சகிப்புத்தன்மையும் நிலைநாட்டப்பட வேண்டிய அவசியம் இன்றைய காலகட்டத்தில் அதிகமாக தேவைப்படுகிறது.
munnon.blogspot.com
நன்றி

.webp)
கருத்துகள்