இந்துக்களின் தேவர்களும் இஸ்லாமிய மலக்குமார்களும்

இந்துக்களின் தேவர்கள் என்று சொல்லப்படக்கூடிய வானவர்களைப் பற்றியும்,

இஸ்லாமில் மலக்குமார்கள் என்று சொல்லப்படக்கூடிய வானவர்கள் பற்றியும் இங்கே தெள்ளத் தெளிவாக பார்க்கலாம்.


அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக 


இந்து மதத்தில் தேவர்கள் என்று சொல்லப்படக்கூடியவர்கள் வானத்திலே வசிப்பதன் காரணத்தினால் அவர்களை வானவர்கள் என்றும் சொல்கிறார்கள். 


அதேபோல் இஸ்லாம் மார்க்கத்திலும் மலக்குமார்கள் என்று சொல்லப்படக்கூடியவர்கள் வானத்திலே வசிப்பதன் காரணத்தினால் அவர்களை வானவர்கள் என்றும் சொல்கிறார்கள். 


இங்கே தேவர்கள் என சொல்லப்படக்கூடியவர்களும் மலக்குமார்கள் என்று சொல்லப்படக்கூடியவர்களும் ஒரே ஒருத்தரை தான் குறிக்கிறது என்று நம்முடைய முன்னோன் பிளாக்ஸ்பாட் வழியாக உங்களுக்கு சொல்லுகின்றோம்.


இந்து மதத்தில் கூறப்படக்கூடிய வானவர்களின் அதாவது தேவர்களின் தலைவன் யார் என்று சொன்னால் அவரை இந்திரன் என்று அழைக்கிறார்கள். 


அவரையே இஸ்லாம் மதத்தில் கேப்ரியல் இது கிறிஸ்துவத்தில் கூறக்கூடிய பெயர் ஜிப்ரில் என்று இஸ்லாம் மதத்தில் அவரை அழைத்து வருகிறார் 

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இறைவனுடைய கட்டளையை வகி மூலமாக 40 ஆண்டு காலம் நபிகள் நாயகம் அவர்களுக்கு வழங்கி இருக்கிறார். 

மேலும் ஒட்டுமொத்த வானவர்களுக்கு தலைவராக இந்த ஜீப்ரில் மலக்கு இருக்கின்றார்.

இங்கே இந்து மதத்திலும் இந்திரன் என சொல்ல கூடிய ஜீப்ரில் வானவர்களுக்கு தேவர்களுக்கு தலைவனாக இருக்கிறார்.

இஸ்லாமிய மார்க்கத்தில் ஜிப்ரில் எப்படி வானவர்களுக்கு தலைவர் ஆக இருக்கிறாரோ அதேபோன்று இந்திரன் இந்து மதத்தின் வானவர்களுக்கு தலைவனாக இருக்கின்றான்.


இஸ்லாம் மார்க்கத்தில் ஜிப்ரில் அவர்களுக்கு அடுத்தபடியாக மீக்காயிள் என்று சொல்லக் கூடிய வாணவரை போல் இந்து மதத்தில் இந்திரனுக்கு அடுத்தபடியாக அக்கினி தேவர் என்பவரை சொல்கிறார்கள். 

எனவே ஜீப்ரில் இந்திரன் என்பவராகவும் மீக்காயில் என்பவர் அக்கினி தேவர் என்பவராகவும் நான் ஒப்பிடுகின்றேன்.


இதே போன்று மனிதனுடைய உயிரை எடுக்கக்கூடியவராக எமதர்மன் அவர்களை இந்து தர்மத்தையும் பார்க்கிறோம் அதேபோல் இஸ்லாம் மார்க்கத்திலும் மனிதனின் உயிரை பறித்துக் கொண்டிருப்பவர் மலக்குல் மௌத் என்று சொல்லப்படக்கூடியவராக அஸ்ராயில் என்ற வானவர் இருக்கிறார்.

அவரை பற்றி விளக்கமாக

அரிய

###எமதர்மன் மலக்குல் மௌத்


அதேபோல் எமதர்மராஜாவிடம் கணக்காளராக இருக்கக்கூடிய சித்திரகுப்தன் என சொல்லப்படக்கூடிய வானவர் போல மலக்குல் மௌத் என்ற வானவரின் உதவியாளர்களாக கிராமன் மற்றும் காதிபீன் இருக்கிறார்கள்.


இது பற்றி இங்கே தெளிவாக 

👇👇


###சித்ரகுப்தன் கிராமன் காதீபீன்


மேலும் முன்கர் நகிர் என்று சொல்லக்கூடிய மனிதனின் மன்னரையிலும் மறுமையிலும் கேள்வி கேட்க கூடிய வானவர்களை போல் இந்துமதத்தில் எம தூதர்கள் என்று சொல்லக்கூடிய தேவர்கள் செயல் படுகிறார்கள்.

மேலும் எக்காளம் என சூர் என சொல்லக்கூடிய சங்கை ஊதுபவராக இஸ்ராஃபில் இருப்பது போல

இந்து மதத்தில் விஷ்ணுவின் வாகனமாக இருக்கக்கூடிய அப்படி சொல்லக்கூடிய கருடன் இருக்கிறார். 

சூர் எப்போது ஊதப்படுகிறதோ அப்போது உலகம் அழிந்து விடும் என சொல்லப்படுகிறது.



மேலும் சொர்க்கத்தின் பாது காவலராக ரிதுவான் இருப்பது போல் இந்துமதிலும் எம தூதர்கள் இருக்கிறார்கள்.

அதே போல நரகத்தின் பாதுகாவலராக மாலிக் இருப்பது போல் இந்துமதத்தில் கால பைரவர் இருக்கிறார்.

இந்துமதத்தில் இஸ்லாமில் எப்படி வானவர்கள் இருக்கிறார்களோ அதே போல் கிருஸ்துவ மதத்திலும் இருக்கிறார்கள்.


இவர்களை பற்றி நம் அடுத்த பதிவில் பார்ப்போம்.





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலக பிரபலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ இஸ்லாத்திற்கு மாறிவிட்டாரா?

யூசுப் நபியின் வரலாற்றை பற்றி ஒரு நெருக்கமான பார்வை

இஸ்லாமியர்கள் கூறக்கூடிய 25 நபிமார்களும் அவர்களைப் பற்றிய குறிப்புகளும்