அப்படி மெக்காவில் உள்ள காபத்துல்லாவில் உள்ளே என்னதான் இருக்கிறது?

அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக 


முஸ்லிம்கள் புனித இடமாக கருதக்கூடிய மெக்கா நகரில் அமைந்திருக்கும் காபத்துல்லா கட்டிடத்தில் என்ன இருக்கிறது என்பது பற்றி இங்கே தெரிந்து கொள்ளப் போகிறோம். 



தமிழ்நாட்டில் பெரும்பாலும் முஸ்லிம்களை திசை வணங்கிகள் என்று சொல்வதுண்டு. 


அதாவது இஸ்லாமியர்கள் தொழுகும்போது மேற்கு திசையை நோக்கி தொழுவதால் அவர்களை திசை வணங்கிகள் என்று அழைக்கிறார்கள். 


ஆனால் உண்மையில் அவர்கள் எந்த திசையையும் வணங்கவில்லை அவர்கள் வணங்குவது எல்லாம் மேலே கூறிய காபத்துல்லாவை மையமாக வைத்து அல்லாஹ்வை மட்டும் தான். அந்தக் காபத்துல்லாவானது எந்த திசையில் அமைந்திருக்கிறது அந்த திசையை நோக்கி மட்டுமே இஸ்லாமியர்கள் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருக்கிறார்கள். 

நாம் உலக வரைபடத்தை உற்று நோக்கும்போது அந்த சவுதி அரேபியா என்று சொல்லக்கூடிய மெக்கா நகரமானது நடு பகுதியில் அமைந்திருப்பது போல் நமக்குத் தெரியும். அங்கு காபத்துல்லாவிற்கு மேல் பகுதியில் இருக்கக்கூடிய நாட்டு முஸ்லிம்கள் கிழக்குப் பகுதியை நோக்கி தொழுவார்கள். அதில் வடக்கு பகுதியில் இருக்கக்கூடியவர்கள் தெற்கு பகுதியை நோக்கி தொழுவார்கள். அதேபோல் தெற்கு பகுதியில் இருக்கக்கூடியவர்கள் வடக்கு நோக்கி தொழுவார்கள். ஆனால் அவர்களின் ஒட்டுமொத்த பார்வையானது அந்த மக்காவை நோக்கி தான் அமைந்திருக்கிறது. 

இவ்வாறாக தொழுவதை நாம் ஒரு வட்டமாக போட்டுக் கொண்டால் அனைத்தும் ஒரு புள்ளியில் அமையக்கூடிய வண்ணமாக காட்சியளிக்கும். 

சரி அப்படி அங்கு என்னதான் உள்ளே இருக்கிறது? ஏன் அதை இஸ்லாமியர்கள் கும்பிடுகிறார்கள்? என்ற கேள்வி அனைவருக்கும் இருக்கும். நீங்கள் நினைப்பது போல் அங்கு சிலையோ! உருவப்படங்களோ! வேறு ஏதாவது சொல்லக்கூடிய பொருட்களோ கிடையவே கிடையாது. முற்றிலுமே வெற்றிடமாக தான் அங்கே இருக்கும். உள்ளே மூன்று தூண்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. சில தகடுகளில் குரான் வசனமானது பதிக்கப்பட்டிருக்கிறது. அதன் மேற்கூரை இரண்டு அடுக்குகளை கொண்டதாக இருக்கிறது. மேலும் பச்சை நிறத்தில் சுற்றிலுமாக அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. இவைகள் தான் உள்ளே இருக்கக்கூடிய விஷயங்களாகும். மேலும் கட்டிடத்தின் வெளிப்புறத்தில் பச்சை கலர் துணியோ அல்லது கருப்பு கலர் துணியோ போடப்பட்டிருக்கும்.


>>>>உள்ளே என்ன இருக்கிறது? <<<<


அதற்கு உள்ளே செல்லக்கூடிய வாசல் ஆனது தங்கத்தினால் உண்டாக்கப்பட்டிருக்கிறது. அதை சுத்தம் செய்வதற்காக அவ்வப்போது திறக்கிறார்கள். இவைகள் தான் காபத்துல்லாவில் அமைந்திருக்கக் கூடிய அம்சங்கள். 

மேலும் காபத்துல்லாவை சுற்றி என்ன இருக்கிறது என்று பார்ப்போம். 


ஹஜரல் அஸ்வத் 

சொர்க்கத்திலிருந்து வரவழைக்கப்பட்டதாக கூறும் ஹஜ்ரல் அஸ்வத் என்ற ஒரு கல் காபத்துல்லாவின் மூலையில் அமைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக அந்த கருப்பு கல்லை ஹஜ்ரல் அஸ்வத் என்று யாரும் சொல்வதில்லை. அதில் பதிக்கப்பட்டு இருக்கும் உடைந்து போன ஏழு துண்டுகளை தான் சொர்க்கத்திலிருந்து வரவழைக்கப்பட்ட ஹஜரல் அஸ்வத் என்று சொல்கிறார்கள். அதை நபிகள் நாயகம் முத்தமிட மற்றவர்களும் முத்தமிட்டதாக சொல்கிறார்கள். இன்றளவும் அதில் இஸ்லாமியர்கள் தொட்டு முத்தமிட்டு செல்வது வழக்கமாக உள்ளது. 


மகாமு இப்ராகிம் 

25 நபிமார்களின் ஒருவராக கருதப்படும் இறைவனின் நண்பன் என்று அழைக்கப்படும் இப்ராஹிம் நபி அவர்கள் காபத்துல்லாவை இரண்டாவது முறையாக கட்டிய போது அவர் நின்று இருந்த இடத்தை அவரின் காலடித்தடத்தை போற்றுகிறார்கள். இது மகாமு இப்ராஹிம் என்று சொல்லப்படுகிறது. 


ஜம்ஜம் 

பல ஆராய்ச்சியாளர்களுக்கும் இன்றளவும் புரியாத இந்த நீரின் சுத்தத்தன்மையானது அந்த அளவுக்கு பேசக்கூடிய ஒன்றாக இருக்கிறது. காலை வணக்கம் அள்ள அள்ள குறையாத நீராக இந்த ஜம்ஜம் நீர் காணப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் தினந்தோறும் தங்கள் வீடுகளுக்கு எடுத்த வண்ணமாகவே இருக்கிறார்கள். இருந்தாலும் அந்த நீரின் அளவானது குறையாமல் இருக்கின்றது. ஹாஜிரா அம்மையார் தன் மகன் இஸ்மாயிலுக்காக இறைவனிடம் பிரார்த்தித்த போது இந்த ஜம்ஜம் நீர் உண்டானதாக சொல்லப்படுகிறது. அந்த நீரானது அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப மீண்டும் தந்து கொண்டிருந்தபோது அதை மறித்து போதும் போதும் என்று ஹாஜிரா அம்மையார் சொன்ன வார்த்தை அரபு மொழியில் ஜம்ஜம் என்று  பெயரானது.


சஃபா மற்றும் மர்வா மலைகள் 

இவை காபாவிலிருந்து சில தூரத்தில் உள்ள இரண்டு சிறிய மலைகள். இங்கு ஹாஜரின் ஓடுதலின் நினைவாக முஸ்லிம்கள் ஓடுவது சாயீ எனப்படும் ஒரு புனித நிகழ்வாக நடைபெறுகிறது. கானல் நீரைப் பார்த்து தன் மகனின் தாகத்தை போக்குவதற்காக இந்த இரண்டு மலைகளுக்கு இடையில் ஹாஜிரா அம்மையார் ஓடுவதை நினைவு கூறும் வகையில் இன்றளவும் இது நிகழ்த்தப்படுகிறது. 


மஸ்ஜித் அல்ஹராம் என்று சொல்லக்கூடிய உலகின் மிகப்பெரிய பள்ளிவாசல் இங்கே தான் அமைந்துள்ளது. 


சாத்தான் மீது கல் எறிதல் என்ற ஒரு நிகழ்வு நடத்தும் ஒரு இடம் உள்ளது. 

இரண்டாம் நாள் யாத்திரையில் இந்த கருப்பு கல்லின் மீது இஸ்லாமியர்கள் கற்களை கொண்டு சாத்தான் எனச் சொல்லக்கூடிய கருப்புக்கல்லில் எரிபவர்களாக இருக்கிறார்கள்.


மேலும் சற்று தூரத்தில் ஹீரா குகை அமைந்துள்ளது. அந்த இடத்தில் தான் இஸ்லாமியர்கள் பெரிதும் போற்றப்படும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஜிப்ரில் வானவர் வழியாக இறைவனின் வார்த்தைகளான திருக்குர்ஆன் தந்தருளப்பட்டது. 

>>நபிகளாரின் 40 பொன்மொழிகள்


மேல் கூறியவற்றை இஸ்லாமியர்கள் ஆட்சி யாத்திரை மேற்கொண்டு இறைவனின் அருளை பெற்று வருகிறார்கள். 


இன்ஷா அல்லா நம்மையும் அங்கே போவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தருவானாக.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலக பிரபலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ இஸ்லாத்திற்கு மாறிவிட்டாரா?

யூசுப் நபியின் வரலாற்றை பற்றி ஒரு நெருக்கமான பார்வை

இஸ்லாமியர்கள் கூறக்கூடிய 25 நபிமார்களும் அவர்களைப் பற்றிய குறிப்புகளும்