எங்க ஊர் கோவில் திருவிழா எப்படி இருக்கும் தெரியுமா?

 ஊரு ஒன்னு கூடி ஆலமரத்துக்கு அடியில உட்கார்ந்து பேசுவாங்க. 

என்னப்பா சித்திரை மாசம் வந்துருச்சு இந்த தடவை கோயில நல்லபடியா கும்பிடணும் எல்லாரும் என்ன சொல்றீங்க?

கோவில் திருவிழாவிற்கு கூட்டம் போட்ட மக்கள்

அதுக்கு என்னப்பா கோவில்ல ஜாம் ஜாம்னு கொண்டாடி புடுவோம்.

சரி ரொம்ப சந்தோசம் எவ்வளவு வரி போட்டுக்கலாம் அத சொல்லுங்க முதல்ல 

எப்பா ஏய் போன தடவை ஐயாயிரம் போட்டா இந்த தடவ 2000 சேர்த்து 7000 போடுவோமே இங்க இருக்குற தலைக்கட்டுக்கு அப்பத்தான சிறப்பா கொண்டாட முடியும்.

யோவ் எங்கய்யா சிறப்பா கொண்டாடுறீங்க பூரா தண்ணிய போட்டு அங்கங்க விழுந்து கிடக்குறாங்க லந்த குடுதுட்டு இருக்காங்க நம்ம ஊரு இளந்தாரி பயலுக.

ஏங்க நாங்க எங்கங்க லந்த கொடத்தோம்? வெளியூர்க்காரங்க தண்ணிய போட்டு வந்தா சும்மாவா இருக்க சொல்றீங்க? 

எப்பா அதுக்கு தான் பா போலீஸ் காவல்துறையில் இருக்கு. நீங்க சாமி கும்பிடுற வேலைய மட்டும் பாருங்க போதும். 

சரி சரிங்க நீங்க மத்தத பேசுங்க

மத்தது என்னப்பா எப்பயும் போல மே மாசம் ரெண்டு மூணு நாலு அஞ்சு கோவில் திருவிழா.

ரேடியா சட்டு கொட்டுகாரன் பந்தலு கரகாட்டம் மயிலாட்டா ஒயிலாட்டம் அதுக்கப்புறம் மதுரை அபிநயாவோட ஆடலும் பாடலும்.

ஏங்க போன தடவை வந்து ஆடலும் பாடல்காரன் நல்லாவே ஆடல இந்த தடவையாது நல்ல ஆளுகளா பார்த்து கூப்பிடலாம் இல்ல. 

ஆமாண்ணே போன தடவ வந்தவங்க நல்ல ஆடலைன் தானே அபிநயாவ பேச சொல்றோம்.

யோவ் அவிங்க கொல்ல காசு கேப்பாங்கய்யா? 

ஏங்க 7000 வரி போடுறீங்க அதை கொடுக்க முடியாதா நம்ம ஊர்ல 2000 தழைக்கட்டு இருக்கு. 

சரிப்பா சரிப்பா அவங்களவே கூப்பிடுவோம் ஆனா நம்ம ஜாதிக்காரவங்க பாட்டை போடும்போது அந்த மேடையில் ஏறி மாலை கீழ போடுறேன்னு போயிடக் கடாது.

அப்புறம் நம்ம ஊரு பையன் யாராவது சாராயம் குடிச்சிட்டு சேட்டை பண்ணிட்டு இருந்தா போலீஸ்கிட்ட ஒப்படைச்சுப்புடுவோம். அவங்க அப்பா அம்மா எங்ககிட்ட சண்டைக்கு வந்துட கூடாது. 

எப்பா சடையைத் தேவரே சாற்றதுக்கு உரிமி கொட்டு கோயிலுக்கு கொட்டுகாரங்களையும் பேசுறியா. உன் கூட சுரேஷ கூப்டுக்க. 

ஏப்பா அந்த பந்தகார பையன் வந்திருக்கானப்பா. 

இந்தா தாங்க இருக்கேன் சொல்லுங்க. 

ஆமப்பா இந்த தடவை நல்லபடியா பந்தலை போட்டு கொடுத்தார்னும்.அஞ்சு ரோடு பக்கமும் சாமி ஆர்ச் வைக்கநும்.

அதெல்லாம் நல்லபடியா பண்ணி கொடுத்துடறேன் ஆனா சம்பளம் கொஞ்சம் ஜாஸ்தியா கொடுக்கணும்.

இதுக்கு மேல என்னப்பா ஜாஸ்தி சரி சரி நீ பந்தல போடு பல்லையும் பிரிக்கும் போது பேசிக்குவோம். 

எப்பா நம்ம தங்க ரேடியோஸ் அந்த பையன் வந்து இரக்கானா?

ஊர் முழுக்க சீரியல் செட்டு ரேடியா லைட் வச்சு எல்லாம் நல்லபடியா பண்ணி கொடுத்துடறேன். ஆனா நம்ம பயலுக்கு தண்ணிய போட்டு லைட்டா பூரா உடைச்சு போடுறாங்க. அதை மட்டும் கொஞ்சம் சொல்லிருங்க. 

ஆமாப்பா உங்க பிரச்சனை இல்ல பொது சொத்து மேல கை வச்சா கண்டிப்பா அவங்க அபராதம் கட்டி ஆகணும்.

அப்புறம் சாமி முன்னாடி ஆட்டம் போட்டு வர்றவங்க எல்லாம் பெரிய மனுஷன் சொன்ன விலகி போகணும். அந்த இடத்துல வந்துகிட்டு அலம்பிள கொடுக்கக் கூடாது. 

சரிப்பா எல்லாத்தையும் மொத்தமா சொல்லிடுவோம் இரண்டாம் தேதி நைட் கரகம் அன்னைக்கு நைட்டே கரகாட்டம் காலைல முளைப்பாரி தூக்கிட்டு வரணும். கூடவே மாவளக்கும் ஏத்திக்கிட்டு வந்தரநும். அதுக்கப்புறம் கெடா வெட்டு பொங்கலை வைக்கனும். மூணாம் தேதி மாலை நாலு மணிக்கு தீஜட்டி ஏந்தி வருதல் நடக்கும். கூடவே தீக்குளி இறங்குதல் நடக்கும்.அன்னைக்கு நைட்டு அபிநயா ஆட்டம் ஆடலும் பாடலும் நடகும்பா. அடுத்து நாலாம் தேதி சிறப்பு அன்னதானம் நடைபெறும். அந்த டயத்திலேயே ஒயிலாட்டம் மயிலாட்டம் தேவராட்டம் எல்லாம் நடக்கும். அடுத்து அஞ்சாம் தேதி காலையில சாமியை கொண்டு போய் கரைச்சு போடுரோம் அதுக்கு பின்னாடி மஞ்சள் நீராட்டு விழா. அப்படியே அன்னைக்கே பல்லையம் பிரிச்சிடலாம். 

என்னப்பா இது எல்லாத்துக்கும் சம்மதம் தான?

சம்மதம் தாங்க 

சரிப்பா வேற எதுவும் கேட்க வேண்டியது எல்லாம் இருக்கா கேளுங்க. 

கொட்டுகாரன் கரகாட்டக்காரன் சாப்பாடு போடுற காண்ட்ராக்டை யாருக்கு கொடுக்கலாம்? 

அதான் நம்ம பரமசிவம் காட்டுமந்திரியும் ஒவ்வொரு தடவ மாத்தி மாத்தி பண்றாங்களே. இந்த தடவை அதே மாதிரி பண்ணிக்கிறட்டும். அது சரிதாங்க போன தடவை காட்டு மந்திரி பண்ணாரு இந்த தடவை பரமசிவம் பண்ணட்டுமா? 

ஏப்பா வேலு நீ கூட எடுத்து நடத்துறியா? 

பெரியவங்க என்ன சொன்னாலும் கேட்டுக்குறேன். 

எப்பா புது ஆளு வந்தா ரெண்டு பேத்துக்குள்ளயும் சடவா போகும். அவங்களே மாத்தி மாத்தி பண்ணட்டும்பா.

அதுவும் சரிதான் எப்பா காளியாத்தா உனக்கு என்னைக்கு உத்தரவு கொடுக்குதோ அன்னைக்கு நீ பண்ணியா வேலு.

சாற்று அன்னிக்கி எல்லாரும் காப்பு கட்டிடனும்பா ஏழு நாளைக்கு சுத்த பத்தமா இருக்கநும். அப்புறம் காப்பு கட்டிட்டு யாரு வெளியூர்ல போய் தங்கக்கூடாது. 

யோவ் ரொம்ப முக்கியமான விஷயத்தை பேசாம போறீங்க. வரி வசூல் யாருன்னு முடிவு பண்ணுங்க. 

எப்பா யாரு எளந்தாரி பயலுக கைய தூக்குங்கய்யா ஒரு ஏழு பேர் போட்டுருவோமயா. 

எப்பா வேலு வட்ட வட்ட நீதானப்பா பண்ற. 

நான் தான் பண்றேன் இந்த தடவை எனக்கு ஹோட்டல் வேலை இருக்கு என்னால வெளியில் சுத்தி அலைய முடியாது. அதனால கவியரசு இதெல்லாம் பாக்கட்டும் நான் அவர் கூட இருந்து உதவி செய்கிறேன். அதுவும் சரிதான் 

ஏப்பா கவியரசு நீ பார்த்துக்கிறியாப்பா. 

சரிங்க. எப்பா அந்த மத்த அஞ்சு பேத்து பேரையும் நோட்ல எழுதி வைங்க.

சரிப்பா வேற எதுவும் பேச்சு இருக்கா? 

கரகம் வர்ற அன்னைக்கு வடக்கம்பட்டியில் போய் வானவேடிக்க வேட்டு பேசிட்டு வரணும் அதுக்கு யாருப்பா போறது அதுக்கு ரெண்டு பேத்த அனுப்பிவிடுங்க.

மத்த தகவல் எல்லாம் போன் மூலமா பேசிகீங்க.

இந்தாப்பா கவியரசு என்னோட வரி காச எழுதிக்க.

7001.

சரிப்பா வரி காசு கொடுக்கறவங்க இப்ப இருந்தே கொடுக்க ஆரம்பிக்கலாம் கூட்டம் இத்தோட முடியுது.

                  - திருவிழா தொடரும்-










கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இஸ்லாமியர்கள் கூறக்கூடிய 25 நபிமார்களும் அவர்களைப் பற்றிய குறிப்புகளும்

கனவு என்பது மனதின் பிரதிபலிப்பு / கனவு காண்போம்

யூசுப் நபியின் வரலாற்றை பற்றி ஒரு நெருக்கமான பார்வை