Friends கூட சேர்ந்து ஊட்டிக்கு கிருஸ்துமஸ் கொண்டாட போனோம்.

 டிப்ளமோ முடிச்சு வேலை இல்லாம சுத்திக்கிட்டு இருந்த காலம் அது.

எங்க அப்பா ஏதாவது வேலைய வாங்கி கொடுத்தரலாம்னு ஒரு குறிக்கோளோடு இருந்தாரு.

அப்படி போய் பார்த்தவர் சில்வர்பட்டி ராமதாஸ் டாக்டர்.அவரோட மகன் பெங்களூர் pantaloon company managar. அவரு மூலம் கோயம்புத்தூர் ல உக்கடம் ல இருக்கிற பிக் பஜார் என்னும் பெரிய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்க்கு வேலைக்கு போனோம். 6500 ரூபாய் சம்பளம்.எல்லாத்துக்கும் மஞ்ச கலர் சொக்கா கருப்பு பேண்ட் கொடுத்தாங்க.

மளிகை சாமான்கள் இருந்து செருப்பு டிரஸ் வீட்டு உபயோக பொருட்கள் என அனைத்துமே அங்க இருந்துச்சு.

அதுல லேடீஸ் department என்னோடது.அங்கேயே ரூம் எடுத்து தங்கியிருந்தோம்.அப்படி அங்க கிடைச்ச பிரெண்ட்ஸ் தான் Jeffry மற்றும் சந்தோஷ்.

மச்சி Jeffry தான் ஊட்டி.சந்தோஷ் ஒண்டிபுதுர் ல இருந்து வந்தான்.

நாங்க மூணு பேரும் ஒரே department தான்.லைஃப் நல்லா ஜாலியா போன தருணம் அது.

எங்க மூணு பேரு நட்பை கண்டு அங்க இருக்குற மத்தவங்க எங்களை மூவேந்தர் அப்படின்னு சொல்லி கிண்டல் பணுவங்க.

எங்கள் நட்பை பிடிக்காத டீம் லீடர் எங்களை வேற வெற department இல் போட்டங்க.இருந்தாலும் எங்க சேட்டை அடங்களை.ஒரு முறை என்ன ஒருத்தன் சீண்டிட்டான்.உடனே சந்தோஷ் வந்து அவனை குமுறி எடுதுட்டான்.இந்த சம்பவத்துக்கு பிறகு எங்களை ரவுடி பயலுகளா பார்த்தாங்க.அதுவும் எங்களுக்கு ஜாலியா இருந்துச்சு.

அங்க கிருஷ்ணவேணி அப்படின்னு ஒரு பொண்ணு இருந்துச்சு. அந்த புள்ள சிரிச்சா கன்னத்துல குழி விழுகும். அந்தக் குளியில சந்தோஷ் விலுந்துட்டான்.ஆனா அவன் அந்த குழியில் விழுந்தது வேலுவுக்கு பிடிக்கல. சந்தோஸ்கிட்ட இதெல்லாம் வேணாம் அப்டின்னு சொன்னேன்.ஆனா மச்சான் இதுல நீ தலையிடாது இருடா என்று சொல்லிட்டான்.நானும் சரி சொல்லிட்டேன்.ஒரு நாள் treat வைக்க ஹோட்டலுக்கு குப்டான் சந்தோஷ்.நாங்களும் போனோம். ஆனா அங்க அவன் கிருஷ்ணவேணி கிட்ட பேசிட்டு இருந்தான்.அந்த பிள்ளைய எனக்கு சுத்தமா புடிக்காது.இருந்தாலும் சந்தொசுகாக நானும் ஜெஃப்ரி உம் சாப்டம்.இப்படியே போயிட்டு இருக்கும் போது லேடீஸ் department la ஒரு சம்பவம் நடந்துச்சு.அந்த புல்ல வேனி இன்னொருத்தன் கூட சல்லாபதுல இருந்ததை நான் பாத்துட்டேன்.இந்த விசயத்தை சந்தோஷ் கிட்ட சொன்னதும் வேகமா வந்து அவ கன்னத்துல ஒரு அறை விட்டான்.இனிமேல் உன் முகத்துல முழிக்க மாட்டேன் என்று சொல்லிட்டான்.

இதை தான் நான் அன்னைக்கே சொன்னேன் என்று சொன்னேன்.அந்த பிள்ளைய அடிசதை பார்த்த டீம் லீடர் அவனை வேலைய விட்டு எடுதுதாரு.

அப்புறம் நானும் ஜெப்ரியும் போய் பேசி திரும்பவும் வேலைல சேர்த்தோம்.அந்த சமயத்துல தான் கிருஸ்துமஸ் வந்துச்சு.நாங்க எல்லாரும் ஊட்டில இருக்குற ஜெஃப்ரி வீட்டுக்கு போக பிளான் பண்ணினோம்.

பிளான் போட்ட படி அன்னைக்கு நைட்டு வேலை முடிச்சு ஊட்டிக்கு கிளம்பினோம்.

மொத்தம் 6 பேரு மூணு பைக்ல கிளம்பினோம். மேட்டு பாளையம் வரைக்கும் ரோடு நேரதாம் இருந்துச்சு.அப்புறம் ரோடு எல்லாம் வலஞ்சு வளஞ்சு தான் போச்சு.

நாங்க போன மூணு பைக் ல ஒன்னு head light problem அய்டுசு. அந்த நேரத்தில் அதை சர்வீஸ் பண்ண முடியல. மற்ற ரெண்டு பைக் வெளிசத்துல தான் அந்த வண்டியையும் ஒட்டிக்கிட்டு போனோம்.

மலையில் ஏற ஏற கொஞ்சம் கொஞ்சமாக குளிரும் ஏற ஆரம்பித்தது. அதுலயும் ஒரே ஒரு ஸ்வெட்டர் தான் இருந்துச்சு.அந்த ஒன்னவே ஒரு ஒரு ஆள்ளா மாத்தி மாத்தி போட்டுக்கிட்டு ஏறினோம்.ஒரு 20 ல இருந்து 25 bend இருந்திருக்கும்.அதை தான் கொண்டை ஊசி வளைவுகள் என்று சொல்கிறார்கள்.கும்மு இருட்டுல வண்டிகள் கொஞ்சம் கொஞ்சமா மேல போயிட்டு இருந்தோம். சைடுல வன விலங்குகள் ஜாக்கிரதை ன்னு காட்டு மாடு சிறுத்தை முள்ளம் பன்றி எல்லாம் போர்ட்ல இருந்துச்சு.

அந்த நேரத்தில் ஒரு முள்ளம் பன்றி எங்க வண்டிக்கு முன்னாடி ஒடிச்சு.பூரா பேருக்கும் அல்லு விட்ருசு. முள்ளம் பன்றி உடம்ப குளுகுச்து ன்னா அதோட முள்ளு பாய்ஞ்சு வரும் சொல்லுவாங்க.ஆனா அது உண்மை இல்லை.அது பயத்துல ஓடி விட்டது.ஆனா அது எங்களுக்கு பயமா இருந்துச்சி.அப்புறம் நண்பர்கள் எல்லாம் சிரித்து கொண்டே போனோம்.குளிர் வேற ஊசி போல குத்தி பின்னாடி வருது.அப்புறம் அந்த ஒத்த ஸ்வெட்டர் வாங்கி நான் போட்டுகிட்டென்.அது ரொம்ப இதமாக இருந்துச்சு.

அப்புறம் ஒரு வழியா குன்னூர் வந்து சேர்ந்தோம். மணி 4 ஆச்சு.அங்க அந்த ஊர் மக்கள் நெருப்பு மூட்டி குளிர் காஞ்சுகிட்டு இருந்தாங்க.ஜெஃப்ரி நீங்களும் போய் குளிர் காயுங்க மச்சி என்று சொன்னான்.நீ சொன்னாலும் சொல்ல வில்லை என்றாலும் அதைத்தான் செய்ய வேண்டும் என்று சொல்லி நாங்களும் போய் உட்கார்ந்தோம்.அந்த சில நிமிடங்களை வாழ்க்கையில் மறக்க முடியாது.அவ்ளோ குளிர்ல அந்த நெருப்பு சொல்ல முடியாத அளவுக்கு இருக்கக்கூடிய வார்த்தைகள் அது.அப்படியே பக்கத்துல ஒரு டீ கடை.சூடா ஒரு டீ ஒரு சிகரெட்.வாங்க மச்சி கிலம்புவோம் என்று சொன்னாலும் கிளம்ப மனசு வரல.இன்னும் கொஞ்சம் நேரம் அங்கேயே இருந்தோம்.

அப்புறம் திரும்ப கிளம்பினோம். அவங்க வீடு ஊர்ல இருந்து கொஞ்சம் தள்ளி இருந்துச்சி. சுற்றி தேயிலை காடுகள்.

அப்போ இன்னொரு சம்பவம் நடந்தது.நாங்க போன பாதைல காட்டு மாடுகள் வழி மேல நினுட்டு இருந்தது.

மச்சி யாரும் பயப்பட வேண்டியதில்லை. ஹெட்லைட் அ அது மூஞ்சில அடி.horn அடி இதை விடாம செய்ங்க.அந்த நிமிடம் பயம் என்ற வார்த்தைகு அதிக அர்த்தம் தெரிந்தது.அப்புறம் கொஞ்ச நேரத்தில் அது தேயிலை காட்டுக்குள்ள நடந்து போயிருச்சு.

அப்புறம் ஒரு வழியா என் நண்பனின் அழகான குடிசை வீட்டை வந்து சேர்ந்தோம்.அவன் அம்மா அப்பா எங்களை அன்புடன் வரவேற்றார்கள்.நாங்கள் செருப்பை கழட்டி உள்ளே போக நினைத்தோம்.அவர்கள் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்.பிறகு உள்ளே சென்று அமர்ந்தோம்.மொபைல் போனை கூட தொட முடியாத அளவுக்கு விரல்கள் விறைத்து போனது.பிறகு சூடா டீ போட்டு குடித்தார்கள்.அந்த டீயும் மனதுக்கு இதமாக இருந்தது.மணி 6 ஆனது.அப்படியே வெளியே வந்து பார்த்தால் ஒரே பனிமூட்டம்.வடிவேலு ஒரு படத்தில் சொல்வது போல் என்னடா இது சொர்க்கத்துக்கு வந்து விட்டோமா என்பது போல் இருந்தது.பிறகு அருகில் ஒரு ஆற்றுக்கு சென்று காலை கடனை முடித்தோம். பிறகு அனைவருகும் சுடுதண்ணி காய்ந்து கொண்டு இருந்தது.ஒருவர் பின் ஒருவராக குளித்து விட்டு மாற்று உடை அணிந்து கொண்டோம்.

எனது நண்பன் கிறிஸ்துமஸ் என்ற காரணத்தினால் கோர்ட் அணிந்து கொண்டான். அதுவரை மஞ்சள் சுக்காயில் பார்த்த அவன் போது முற்றிலும் மாறுபட்டு இருந்தான். பிறகு அவர்கள் வழக்கமாக செல்லும் சர்ச்சுக்கு சென்றோம். அங்கே அவர்கள் பிரார்த்தனை புரிந்ததை வெளியில் நின்று பார்த்துக் கொண்டிருந்தோம். ஒரு இரண்டு மணி நேரம் பிரார்த்தனைக்கு பிறகு அனைவரும் வெளியே வந்தார்கள். எனது நண்பனின் அம்மா எங்களுக்கும் நெற்றியில் சிலுவை போட்டு விட்டார்கள். பிறகு குடிப்பதற்கு ஒயின் கொடுத்தார்கள். அதை நானும் எனது நண்பர்களும் ஒன்றுக்கு இரண்டாக குடித்தோம். ஆனால் போதை ஏரவில்லை.

பிறகு அங்கிருக்கும் சில இடங்களை நானும் எனது நண்பர்களும் சுற்றிப் பார்த்தோம். மதியம் கறி குழம்புடன் சாப்பாடு சாப்பிட்டுவிட்டு நண்பனின் பெற்றோரிடம் சொல்லிவிட்டு கிளம்பினோம். பிறகு அனைத்து நண்பர்களும் ஊட்டி வந்தடைந்தோம். எங்கள் டீம் லீடர் தொடர்ந்து எங்களை அழைத்துக் கொண்டே இருந்ததால் அன்றே அங்கிருந்து கிளம்ப வேண்டியது ஆயிற்று. பிறகு நான் மட்டும் பஸ்ஸில் ஏறி ஊருக்கு  சென்றேன். பிறகு நண்பன் ஜெஃப்ரி மட்டும் அங்கேயே இருந்து கொண்டான்.

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் அடுத்த தொடரில் பார்க்கலாம்.











கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இஸ்லாமியர்கள் கூறக்கூடிய 25 நபிமார்களும் அவர்களைப் பற்றிய குறிப்புகளும்

கனவு என்பது மனதின் பிரதிபலிப்பு / கனவு காண்போம்

யூசுப் நபியின் வரலாற்றை பற்றி ஒரு நெருக்கமான பார்வை