தேனி வைகை அணையில் நடந்த சம்பவம்

 அன்னைக்கு எங்களுக்கு காலேஜ் இருந்துச்சு. நான் இன்ஜினியரிங் ece படிச்சுக்கிட்டு இருந்தேன். என்னோட மத்த ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் சி எஸ் சி. நாங்க எல்லாரும் ஆண்டிபட்டியில் ரூம் எடுத்து தங்கி இருந்தோம்.

எப்பா வேலு என்னப்பா உட்கார்ந்து எழுதிக்கிட்டு இருக்க. 

இன்னும் ரெக்கார்ட சப்மிட் பண்ணல அய்யனார் அதான் உக்காந்து எழுதிக்கிட்டு இருக்கேன். 

அதுக்காண்டி லீவு போட்டு உட்கார்ந்து எழுதுறதா 

வேற என்ன பண்ண சொல்ற ஆமா நீ எதுக்கு லீவு போட்டு இருக்க. 

நான் மட்டுமா லீவு போட்டு இருக்கேன் நம்ம பயலுக்கு அத்தனை பேரும்தான் லீவு போட்டு இருக்காங்க. 

என்னப்பா சொல்றாரு எதுக்குய்யா 

எக்ஸாம் பீஸ் கட்டல பூரத்தி வெளியேத்தி விட்டாங்க அதான் லீவு போட வேண்டியது ஆயிடுச்சு. 

அப்ப காலேஜுக்கு போயிட்டு தான் வந்தீங்களா? 

ஆமப்பா அப்படியே பசங்க எல்லாம் பிளான் போட்டிருக்காங்க வைகை டம் போயிட்டு வரலாம்னு நீயும் வாப்பா. 

எப்பா நீ வேற நானே ரெக்கார்டு எழுதலந்து இருக்கேன். என்னை போய் கூப்பிடு இருக்க. 

அதெல்லாம் எழுதிக்கலாம் வாப்பா பசங்களோட போய் என்ஜாய் பண்ணிட்டு வருவோம்.

அப்போது குறி சொல்பவர்கள் வாசலில் வந்து எங்களை நோக்கி சொன்னார்கள்

எப்ப கண்டம் வரப்போகுது கருப்பு சட்டை அணியாதீங்க எந்த காரியத்தையும் பொறுமையாகவும் நிதானமாகவும் செய்யணும். 

வாசு இந்தாங்க பத்து ரூபா இத வாங்கிட்டு அடுத்த வீட்டுக்கு போங்க. 

என்னப்பா வேலு வா கிளம்பு போவோம். 

இந்த பொறுப்பா சட்டையை காய போட்டு இருக்கேன் எடுத்து போட்டு வாரேன். மாடியில் தானே பொரு நான் போய் எடுத்துட்டு வரேன் எந்த சட்ட?

 அந்த கருப்பு சட்ட ஒன்னு காயும் அதைத்தான்.

12:30 மணி டவுன் பஸ் இருக்கும்யா அதுல எல்லாரும் கிளம்பிடுவோம்.

காலேஜ் சேர்ந்த நண்பர்கள் பஸ்ஸில் பயணம்


கண்டக்டர் அண்ணே 9 வைகை டம் கொடுங்க.

மொத்தம் 90 பா 

இந்தாங்க நூறு ரூபா

இந்தாப்பா பத்து ரூபாய் சில்லறைய பிடி.

ஏன்டா ஜோசு உங்க லவ் பயங்கரமா பாப்புலர் ஆயிப்போச்சு போல. ஊரா பயலே உங்கள பத்தி தானே பேசுறாங்க. படிச்சுக்கிட்டு இருக்கும்போதே கல்யாணத்தை பண்ணிப்புட்டு ஓடிறாத.

நான் எதுக்கு பங்காளி ஓட போறேன். அதெல்லாம் எங்க வீட்டிலேயே பேசிட்டேன் அவங்களும் ஒத்துக்கிட்டாங்க. 

என்ன நான் கிறிஸ்டினு அந்த பிள்ளை இந்து இது அவங்க வீட்ல தான் பிரச்சனை. போக போக எல்லாம் சரியா போகும்.

ஏ மச்சி அன்னைக்கு உன் லவ்வரை கூப்பிட்டுகிட்டு கேரளா போய் இருந்தியாம்ல?

ஆமா மச்சி என் லவ்வர் எங்கேயாவது வெளியில கூட்டிட்டு போக சொன்னா அதான் பைக் எடுத்துக்கிட்டு கேரளா வரைக்கும் போயிருந்தோம். 

ஏண்டா நாங்களும் கலரா தான் டா இருக்கா எங்கள எந்த பொண்ணு லவ் பண்ண மாட்டேங்குது. 

எப்பா வேலு பொண்ணு தேடி நம்ம போகக்கூடாதுப்பா பொண்ணுங்க நம்மள தேடி வரணும். 

ஆமா வந்துட்டாலும். 

ஆமா என்னரு நீ யாரை லவ் பண்ணிட்டு இருக்க. 

நானா எப்பா நான் ஆஞ்சநேய பக்தன் பா நமக்கு இந்த லவ் கிவு எல்லாம் செட் ஆகாது.

எப்பா வை டேம் டிக்கெட் பூரா கீழ இறங்குங்க. 

வந்திருச்சா வைகிடமு. இதை எத்தனை வாட்டி பார்க்கிறது? மக்களே மொத வேலையா அந்தக் கடையில மீனை வறுத்து வச்சிருப்பாங்க போய் திம்போம்.

மச்சி அந்த கண்ணன் கடைக்கு தான்யா போகணும் அங்க தான்யா சாப்பாடு சூப்பரா இருக்கும்.

சரி அங்கேயே போயிருவோம், ஆனா பிள்ள நீதான் கட்டணும்.

யோவ் நீ வேற எதையாவது பிள்ளையை வேணுமா கட்டுரை பிள்ளை எல்லாம் கட்ட முடியாது. என்னையவே எக்ஸாம் பீஸ் கட்டில் இருந்து வெளியே அனுப்பிவிட்டு இருக்காங்க என்னய்யா பிள்ளை கிட்ட சொல்ற? 

வாங்கப்பா வாங்கப்பா எல்லாரும் வந்து உட்காருங்கப்பா. 

என்னண்ணே மீன் எல்லாம் ரெடி ஆயிடுச்சா? எல்லாத்துக்கும் சாப்பாட்டை போடு நே.

எப்பா ஏய் இலையை தூக்கி போடுப்பா தண்ணிய மோந்துவை 

அண்ணே இந்த இலை கிழிஞ்சிருக்கு வேற இலை இருந்தா கொண்டுவானே.

அடேங்கப்பா வருத்த மீனு சும்மா கும்முனு இருக்கு.

அண்ணே அந்த குழம்பு மீனை ஒரு பீஸ் வைனே. 

சாப்பிடுப்பா சாப்பிடுப்பா நல்லா சாப்பிடுப்பா. 

வைகை டேம்ல சாப்பாடுன்னா அது நம்ம கண்ணன் ஹோட்டல் சாப்பாடு தான். 

70 ரூபாய்க்கு மீன் குழம்பு மீன் பீட்ரூட் பொரியல் மோர் ரசம் அப்பா சொர்க்கத்துக்குள்ள வந்த மாதிரி இருக்கு.

அண்ணே எனக்கு ஒரு ஆம்லெட் ஒன்னு போட்டு விடுங்க. அப்படியே வேளுக்கு ஒரு ஆப் ஆயில் ஒன்னு போட்டு விடுங்க. பெப்பர் பொடிய மேல தூவ மறந்துடாதண்ணே. 

அற்புதமான சாப்பாடு யா. 

அண்ணே கை கழுவ தண்ணி இல்ல பாருங்க குடத்துல எடுத்துட்டு வந்து ஊத்துங்க.

இந்தாங்க அண்ணே 700 ரூபாய் பிடிங்க. அண்ணே சப்ளையர் அண்ணே இந்தாங்க நீங்க ஒரு ₹20 ரூபாய் டிப்ஸ் வசுகங்க.

சரி நடக்க நண்பர்களே எல்லாரும் டேமுக்குள்ள போவோம். 

டேய் அருண் டமுகுள்ள டிக்கெட்யாவது நீ எடுடா 

சரி சரி வாடா அஞ்சு ரூபா டிக்கெட் எடுக்க முடியாதா என்னால. 

என்னடா இது வைடேம்க்குள்ள ஒரு பூவையும் காணோம். 

அதெல்லாம் சீசனுக்கு வந்தா தான்டா நல்லா இருக்கும். 

சரி உள்ள யானையோட டிக்கிக்குள்ள போய் வாய் வழி வெளியல வர்ற ஒரு சரக்கு விளையாட்டுக்கு அதுல போய் கண்டிப்பா விளையாடனும். 

ஏம்பா வேலு, இங்கதான் பா நிறைய படம் எல்லாம் எடுத்து வச்சிருக்காங்க. 

ஆமாப்பா எம்ஜிஆர் பாட்டு நிறைய பாட்டுல நம்ம வைகை டமா பார்த்து இருக்கேன்.

ஹாய் குட்டீஸ் எனக்கு அந்த ஐஸ்கிரீமை குடுக்குறீங்களா? 

நோ நோ நாங்க தரமாட்டோம்.

ஓய் பங்காளி என்ன சின்ன பிள்ளைகிட்ட ஐஸ்கிரீமை புடுங்கி திங்க பாக்கற. நான் வேணா ஐஸ்கிரீம் வாங்கி தரியா பாவத்தை சின்ன பிள்ளைகள விடுயா

அப்ப ஐஸ் கிரீம் வாங்கி தரியா இரண்டா வாங்கி கொடுத்துவிடு. 

சரி சரி வாங்கி தாரேன் இந்த தூரில உக்காரென் நீ ஆட்டிவிடு.

நான் ஆட்டி விட்டு அதுக்கப்புறம் நீயும் நான் உக்காந்து பின்னாடி ஆடுவியா?

யோ பிரெண்ட்ஸ் என்னத்தையா போட்டு ஆட்ட போறீங்க? உங்க பாட்டுக்கு எதையாவது ஆட்டிகிட்டு இருக்காதீங்க. 

யோவ் அய்யனார் நாங்க தூறிய தான் சொன்னோம்.

ஹா ஹாஹா 

அங்கவாரியா அந்த ஜோசு பயலே எப்படி சரிக்கிட்டு வாரான் பாரு.

யோவ் மாப்பிள்ளை அய்யனாரே நான் சரி கிட்டு வருவதை போட்டோ எடுயா என் லவ்வருக்கு அனுப்பனும். 

சரிதான் எடுத்துருவோம். 

இந்த போஸ் ஓகேவா? இப்ப பாரு இதுல ஒன்னு எடு. இந்த பூவ புடிச்சி கிறுக்க மாதிரி ஒன்னு எடு. 

ஏப்பா அய்யனார் எல்லாம் விளையாண்டுக்கு இருங்க நான் போய் ஒரு தம்மை போட்டு வாரேன். 

வேலு நானும் வரேன்.

சரி வா போவோம். உள்ள அடிக்கலாமா  வேற தெரியல.

அதெல்லாம் அடிக்கலாம் பா வா அந்த மரத்துக்கு பின்னாடி நின்னு அடிச்சிட்டு வருவோம்.

அப்புறம் உசிலம்பட்டியில் என்னைக்கு கோவில் திருவிழா. 

சித்திரை மாசம் தான் பா கண்டிப்பா வந்துருன்னு. 

ஏப்பா ஏ அய்யனாரு வேலு வாங்க பா

என்ன கூப்பிடுறாங்க அடுத்து எங்க போற முடிவு பண்ணி வச்சிருக்காங்க?

எப்பா டேமுக்கு பின்னாடி போய் குளிச்சிட்டு வருவோம் வாங்க. விளையாண்டதில் பூரா வேர்த்து விறுவிறுத்து போச்சு. 

அதுவும் சரிதான் வாங்க போவோம். 

எப்பா எல்லாத்துக்கும் நீச்சல் தெரியுமில்ல. இது சும்மா கொஞ்ச ஆழம் கிடையாது அஞ்சாவது மட்டம் ஆறு ஆளு மட்டும் இருக்கும்.

இந்தா இருக்காங்க இல்ல இந்த மூணு பேருக்கு மட்டும் தான் நீச்சல் தெரியாது.

 அப்ப அவங்க கரையிலே நின்று குளிக்கட்டும்.

யோவ் மச்சி குளிக்கணும்னு சொல்லி இருந்தா ஜட்டி போட்டுட்டு வந்து இருப்ப இல்ல. 

அட வெக்கங்கெட்டவனே. 

இந்தாடா துண்டு இத கட்டிக்கிட்டு குளி. 

ஒய் எங்க வந்து தாவ்வுற

பேக் நீச்சல் பாத்திருக்கியா? பாரு வானத்தை பார்த்துக்கிட்டே அடிச்சுட்டு போனும்.

சரி தண்ணிக்குள்ள முங்குற போட்டி வைப்போமா?

எப்பா கரையில் உட்கார்ந்து சுண்டல் திங்கிறவங்களா நாங்க தண்ணிக்குள்ள முங்குறோம் யாரும் அதிக நேரம் முங்கி இருக்கான்னு பாருங்க 

ஏய் ஏய் அய்யனார் தான்பா ஜெயிச்சிருக்காரு. 

சரி அடுத்து ஒரு போட்டி வைப்போமா? இக்கரையில் இருந்து அக்கரைக்கு போனும்.

யோவ் அது ஒன்றரை கிலோ மீட்டருக்கு மேல இருக்கியா? இதுல போய் நீச்சல் அடிச்சு கடக்கணும்ர அதெல்லாம் முடியாது. 

நீ என்னப்பா ஆம்பள இத போய் கடக்க முடியாதுன்னு சொல்லிட்டு இருக்க. 

சரி சரி நாங்க நாலு பேரும் போறோம். நீங்க ரெண்டு பேரும் இங்கே குளிங்க. 

ஜோசு நீயும் போக வேண்டியது தானே?

இல்லப்பா வேலு, நீ வந்தா நான் போறேன். 

அந்த நாலு பேரையும் பாரு அங்க போயிட்டாங்க கரைகே.

அப்புறம் என்னப்பா அவங்களே போயிட்டாங்க நம்ம போறதுக்கு என்ன? 

சரி வா போவோம்.

Josu முகத்தை உள்ள வச்சுக்கிட்டே நீச்சல் அடிக்காத. அப்புறம் மூச்சு வாங்க முடியாது. 

Josu எனக்கு ரொம்ப இளைக்குது. என்னால கடக்க முடியாதுப்பா நான் திரும்ப போறேன். 

டேய் வேலு ஜோசப் பாருடா அவன் தண்ணிக்குள்ள முங்கி கிட்டு இருக்கான்டா. 

நண்பர்கள் சேர்ந்து அறிவியல் குளிக்கிறார்கள்


சீக்கிரம் போடா 

டேய் என்னால நிச்சயமா முடியாது டா 

டேய் வெண்ண சீக்கிரம் போடா அவன் உள்ள முங்கி கிட்டு இருக்கான்டா. 

டேய் என்னடா பண்றீங்க அவன் எங்கடா அவன? 

டேய் ஃபேண்டை எல்லாம் கழட்டி கட்டுங்கடா அவன கயித்த போட்டு கூப்பிடுங்கடா. 

டேய் வேலு போடா சீக்கிரம் போடா உன்னால தாண்டா அவன காப்பாத்த முடியும். 

டேய் வாங்கடா நம்ம திரும்ப அந்த கரைக்கு போவோம் டா.

நீச்சல் அடிச்சுகட்டே கிட்டே போக முடியாது, வாங்க சுத்தி போவோம்.

ஐயையோ ஜோசே ஜோசே வாடா ஜோசு

போச்சுடா நம்ம பிரண்டை இழந்துட்டோம் டா. 

ஏப்பா வேலு, நீ போய் அவன காப்பாற்றி இருக்கலாம் இல்லப்பா. 

இந்தப் பதினாறு எனக்கே இளைக்குதுன்னு சொல்லி தான் திரும்பிட்டேன் என்னால திரும்ப போயிருக்கவே முடியாது அங்க.

போச்சுப்பா எல்லாம் போச்சு அவங்க அப்பா அம்மா கிட்ட நம்ம என்ன சொல்ல போறோம்னே தெரியல. 

எப்பா அங்க ஃபயர் சர்வீஸ் ஆபீஸ் இருக்கு அங்க போய் கூப்பிடுவாங்க போலீச. 

Josu எங்களை விட்டு போயிட்டியா டா 

யாரைக் கேட்டுடா இங்கே குளிச்சீங்க எங்க என்னடா விழுந்து கிடைக்கான்

ஏய் சொல்றா 

அந்த இடத்துல தானே. 

இங்க எத்தனை பேர் விழுந்து செத்துகிட்டு இருக்காங்க இங்க வந்து குளிச்சிட்டு இருக்கீங்களா டா? 

ஐயா பாடி மாட்டிக்கிச்சு ஜட்டியில் கொக்கி மாட்டி இருக்கியா. 

சரி மேல கொண்டு வாங்க. 

ஐயோ ஜோஸ் இப்படி ஆய் போச்சா டா. 

எங்களை விட்டு போயிட்டியா டா 

இதை எப்படிடா ஜீரணிக்க போறோம் 

எத்தனை பேர் டா குளிக்க வந்தீங்க நீங்களே எவ்வளவு தள்ளி கொன்னுவிட்டிர்களா 

ஒரே அழுகை சத்தம் 

வேலு நீ விலகிக்க அவங்க எல்லாரும் ஒரே டிபார்ட்மெண்ட் நீ இதுல உள்ள போக வேண்டாம்.

எல்லாரும் பேரை சொல்லுங்கடா மொத்தம் எத்தனை பேர் வந்தீங்க 

எட்டு பேர் வந்தோம் சார். 

சரி அவங்க அப்பா அம்மாக்கு எல்லாம் சொல்லிட்டீங்களா? 

எல்லாரும் பக்கத்துல வந்துட்டாங்க காலேஜ்ல இருந்து எல்லா பேரும் வராங்க சார். 

இதுக்கு மேல என்னால ஒன்னும் பேச முடியல அதுக்கப்புறம் என் நண்பன் இறந்து போயி பிணமா தான் வீட்டுக்கு போநான். மறுநாள் என்ன தவிர எல்லாத்தையும் பேப்பர்ல போட்டு இருந்தாங்க. ஜோஸ் கூட குளிக்க போனவங்க எல்லாத்தையும் சஸ்பெண்ட் பண்ணாங்க. என்னோட சீனியர்ஸ் என்ன காப்பாத்தி விட்டாங்க. இன்னும் அவனோட நினைவுகள் என்னோட மனசுல தான் இருக்கு.



























கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இஸ்லாமியர்கள் கூறக்கூடிய 25 நபிமார்களும் அவர்களைப் பற்றிய குறிப்புகளும்

கனவு என்பது மனதின் பிரதிபலிப்பு / கனவு காண்போம்

யூசுப் நபியின் வரலாற்றை பற்றி ஒரு நெருக்கமான பார்வை