சொந்த ஊர்ல நம்ம கூடவே இருந்த நண்பன் இறந்து போனால்?

 என்னோட நண்பன் சிவா அவன் ஓரு டிரைவர்.அவனுக்கு தெரிஞ்ச தொழிலும் டிரைவர் தான். ஆரம்பத்துல அவன் குருவா நினைக்கிற பாலகிருஷ்ணன் அண்ணன் கூட சேர்ந்து லாரிக்கு கிளீனர் அஹ் போனான். அவன டிரைவராக்கியதே அந்த பாலகிருஷ்ணன் தான். இந்தியா குள்ள எல்லா இடத்துக்கும் அவங்க போய்ட்டு வந்து இரக்காங்க. எட்டாவது வரைக்கும் படிச்சிருந்தாலும் சிவாவுக்கு அறிவு கொஞ்சம் நல்லாவே இருந்துச்சு.

 எந்தெந்த மாநிலத்துக்கு எந்தெந்த வழியில் போகணும் அப்படின்றது அவனுக்கு தெரிஞ்சது. அதுபோக ஒவ்வொரு மொழியையும் தெரிந்து வச்சு இருந்தான். அப்படி போய் பழகி கிட்ட வேலை தான் அந்த டிரைவர் வேலை. அதுதான் என் வாழ்க்கைக்கு சம்பளமா கிடைச்ச இரந்துச்சு. சிவாவோட அப்பா ஒரு ஆக்சிடென்ட் இலல இறந்து போயிட்டாரு. சிவாவுக்கு ஒரு தங்கச்சியும் ஒரு தம்பியும் இருந்தாங்க. அவங்க அப்பா இறந்து போனப்ப சிவாவோட அழுக இன்னும் என் கண்ணுலயே இருக்கு. அதுக்கப்புறம்  குடும்பத்தை அவன் தான் பாத்துகிட்டு வந்தான். சிவாவோட அம்மா அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறது இல்ல ரொம்ப முனைப்பா இருந்தாங்க. ஆனா லாரி டிரைவருக்கு எந்த பொண்ணையும் கட்டிக் கொடுக்க மாட்டாங்க அப்படின்னு சொல்லி எல்லாரும் சிவாவ நிராகரிச்சாங்க. அதனால டிரைவர் தொழில் எங்க போனாலும் டிரைவர் தொழில் தான் அப்படின்னு சொல்லி டிராவல்ஸ் பஸ்ல டிரைவரா போனா. மதுரையில் இருந்து பெங்களூர் தேனியில் இருந்து சென்னை இப்படி ஒவ்வொரு இடமா அவன் டிராவல்ஸ் பஸ்ல வேலை பார்த்துகிட்டு இருந்தா. அந்த சமயத்துல நான் சென்னையில வேலை பார்த்துகிட்டு இருந்தேன். அவனுக்கு எப்ப லீவு கிடைச்சாலும் சரி எனக்கு எப்ப லீவு கிடைச்சாலும் சரி நாங்க ரெண்டு பேரும் சந்திச்சிக்குவோம் அந்த சென்னைல. அப்படி அந்த சமயத்துல நாங்க சென்னையை நிறைய இடங்கள் சுத்தி பார்த்திருப்போம். படத்துக்கு போய் இருக்கோம். பெரிய பெரிய ஷாப்பிங் மால் எல்லாம் இறங்கி ஏறி இருக்ககொம். நான் சென்னையில பிக் பஜார் அப்படின்னு சொல்லக்கூடிய ஒரு ஷாப்பிங் மால் தான் வேலை பார்த்துகிட்டு இருந்தேன். என் நண்பன் சிவாவை அங்கயும் கூப்பிட்டுகிட்டு போயி சுத்தி இருக்கென். அதேபோல நான் ஊர்ல இருந்து எப்ப கிளம்புனாலும் என் நன்பன் சிவா பஸ்ல தான் ஊருக்கு போவேன். அப்படி பயணம் செய்யும்போது அவனுடைய அந்த டிரைவர் அவருடைய வேகம் எனக்கு ரொம்பவே பயமாயிருக்கும். ஏண்டா சிவா இப்படி ஓட்டுற அப்படின்னு அவன் கிட்ட கேட்பேன். சரியான நேரத்துக்கு போனாதான் அடுத்த தடவை இந்த கஸ்டமர் எல்லாம் நம்ம பஸ்ல ஏறுவாங்க. இல்லாட்டி நம்ம பஸ்ஸ பத்தி குறை சொல்லி ஆன்லைன்ல போட்டு விட்டுருவாங்க. அதனாலதாண்டா இந்த வேகம் நீ வேணா பின்னாடி போய் படுத்துக்கோ. ஆமாடா என்னால இந்த வேகத்துல முன்னாடி உட்கார்ந்து இருக்க முடியாது நான் பின்னாடியே போய் தூங்கிக்கிறேன் என்று சொல்லிவிட்டு பின்னாடி போய் விட்டேன். கண்மூடி எழுந்த போது என்னை ஊரிலே இறக்கி விட்டான் என் நண்பன்.

நானும் சிவாவும் சுத்தாத இடமில்லை போகாத இடம் இல்லை. செய்யாத சேட்டையும் இல்லை. அவன் எனக்கு பால்ய நண்பன்.

என்னோட அண்ணனும் சிவாவும் எனக்கு மேல பிரண்ட்ஸா இருப்பாங்க. என் கூட 30% பேசினா எங்க அண்ணன் கூட 70% பேசுவான். 

சின்ன வயசுல ஊர்ல இருக்கும்போது எங்க அப்பா கடை வச்சிருப்பாரு அந்த கடைய எங்க அண்ணன் தான் பாத்துகிட்டு இருப்பான் அந்த சமயத்துல அவங்க ரெண்டு பேரும் உட்கார்ந்து கிட்டு தான் 11 மணி வரைக்கும் பேசிகிட்டு இருப்பாங்க. வாழ்க்கையில முன்னுக்கு வருவதற்கு என்னென்ன தொழில் எல்லாம் செய்யலாம் எந்தெந்த தொழில் எல்லாம் செஞ்சா நம்ம வாழ்க்கைல முன்னுக்கு வர முடியும் அப்படின்றதெல்லாம் பேசிக்கிட்டு இருப்பாங்க.

அவன் லாரி டிரைவரா இருக்கும்போது என்ன நிறைய இடங்களுக்கு கூட்டட்டு போயிருக்கான். இந்தியாவுடைய மையப் பகுதியான நாக்பூர் வரைக்கும்  லாரில பயணம் செஞ்சிருக்கேன். அந்த சமயத்துல எங்க வாழ்க்கையில நடந்த அனுபவங்கள் யார்கிட்டயும் சொல்ல முடியாத ஒன்னு. 

அதுக்கு பின்னாடி தான் அவனோட கல்யாணத்துக்காக ஒரு டிராவல்ஸ் பஸ் டிரைவர் ஆகணும்னு நினைச்ஷான்.

அப்படியே டிரைவரும் ஆனா அவனுக்கு கல்யாணம நடந்துச்சு.

நம்ம கவிஞர் வைரமுத்து ஓட பக்கத்து ஊரான சக்கரபட்டியில தான் அவனுக்கு பொண்ணு கிடைச்சுச்சு.

அந்த பிள்ளையோட அவன் வாழ்க்கையை ஆரம்பித்தான். அவன் இருந்த வீட்டுக்கு பின்னாடி ஒரு சின்ன வீட்டை கட்டுனா அந்த வீட்ல அவன் குடும்பத்தை வச்சுக்கிட்டா. 

அதுக்கு பின்னாடி அவனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துச்சு. அந்தக் குழந்தை மேல இவ ரொம்ப பாசமா இருப்பான். ஊர்ல அவனுக்கு ஒரு பல்சர் பைக் ஒன்னு இருக்கு. அவனோட உயரத்துக்கு அந்த பைக் தான் அவனுக்கு செட் ஆகும். அந்த பைக்ல கொடைக்கானல் கும்பக்கரை சோத்துப்பாறை இப்படி நிறைய இடங்கள் சுத்தி பார்த்திருக்கொம்.

அப்படி நண்பர்களோட பயணம் செஞ்ச இடம் தன் கொடைக்கானல். நாங்க ஒரு சம்பவம் நடந்துச்சு என்னோட பிரண்டு சூரிய பிரகாசுக்கு கொஞ்சம் மாறு கண்ணு. அப்படி பார்த்து நடந்து போகும்போது என்னை ஏன்டா முறைக்கிற அப்படின்னு சொல்லி அங்கே இருக்கிற ஊர்க்கார அவங்க அவன கேட்டாங்க. நான் எங்கடா உன்னை முறைக்கிறேன் என் கண்ணு அப்படித்தான்டா அப்படின்னு அவங்க கொடுத்த அதே மரியாதையை இவனும் கொடுத்தான். ஏன்டா எங்க ஊர்ல இருந்து எங்களவே அடிக்க வரியா அப்படின்னு அடிக்க வந்தாங்க. அவ அடிக்கிறதுக்கு முன்னாடி முதல் அடியா சிவாவோட அடியா தான் இருந்துச்சு. அந்த ஒரு அடியிலேயே அந்த ஊர்காரனோட மூஞ்சி கிழிஞ்சு. அப்புறம் அங்கே இருக்கிறவர்கள் எல்லாம் சேர்ந்து எங்க கூட சண்டைக்கு வந்துட்டாங்க. அப்புறம் கொஞ்சம் பேரு அங்கு இருக்கவங்க எங்க சண்டையை விலக்கிவிட்டு இந்த இடத்தை காலி பண்ணுங்கன்னு சொல்லிட்டாங்க. இப்படி நண்பர்களுக்காகவும் சரி ஊருக்காகவும் சரி கோபப்படுறதில்ல சிவா ரொம்ப பெரிய ஆளு. இப்படியே லைப் எங்களுக்குள்ள போய்கிட்டு இருந்துச்சு அதுக்கு பின்னாடி அவனுக்கு ஒரு ஆம்பள குழந்தையும் பிறந்துச்சு. 

அதே நேரத்துல டிராவல் பஸ்லயும் அவனுக்கு அதிக அனுபவங்கள் கிடைச்சுச்சு. காசு எப்படி சம்பாதிக்கணும்னு அவனுக்கு நல்லாவே தெரிஞ்ச இருந்துச்சு. 

எல்லா சீட்டும் புக் பண்ணதுக்கு பின்னாடி டிரைவர் சீட்டுக்கு பக்கத்துல இருக்க சீட்ல ஆளுகளை ஏத்திக்கிட்டு அவங்களோட டிக்கெட் பணத்தை இவவச்சுக்குவான்.

அப்படியே கொஞ்சம் கொஞ்சமா சம்பாதிச்சுகிட்டு இருந்த என் நண்பன் நகையும் பணமோ சேக்க ஆரம்பிச்சுட்டான். 

இப்படி லைப் நல்லா போயிட்டு இருக்குற ஒரு சமயத்துல ஒரு நாள் நைட் எனக்கு ஒரு கால் வந்துச்சு.

அது சிவாவோட குருவான பாலகிருஷ்ணன் அவர்கிட்ட இருந்து தான் வந்துச்சு. 

மாப்ள சிவா இறந்து போய்டான்பா.

அதைக் கேட்டதுமே என் மனது தூக்கி வாரி போட்டது. 

என்ன மாமா சொல்ற எப்படி நடந்துச்சு என்ன ஆச்சு 

ஆமாய்யா கள்ளக்குறிச்சி கிட்ட கம்பி ஏத்திட்டு போன லாரி மேல மோதிடானம்.

டிரைவர் ரெண்டு பேருமே ஸ்பாட்லயே அவுட். 

ஐயோ என்னண்ணே இப்படி ஆயிடுச்சு. 

எனக்கு முன்னாடியே எங்க அண்ணனுக்கு கால் போயிடுச்சு அவங்க உடனே ஊர்ல இருந்து கிளம்பி கள்ளக்குறிச்சிக்கு போனாங்க. 

அந்த இரவு முழுவதும் வேதனைகள் மனதை நிரப்ப ஆரம்பிச்சு.

ஊர்ல எல்லாம் ஒரே அழுகை சத்தம். 

ரெண்டு குழந்தைகளை விட்டுட்டு இப்படி அநியாயமா செத்து போயிட்டானே 

இவன் சின்ன பிள்ளையா இருக்கும்போது எப்படி அவங்க அப்பா விட்டுட்டு போனாரு அதே போல இவன் பிள்ளைகளை விட்டுட்டு போயிட்டானே

வெள்ளை சட்டை போட்டு போனியா வெள்ள பேண்ட் போட்டு போனீயா ஆனா இப்ப பூராவுமே ரத்தமா மாறி சிவப்பா போச்சு.

அவன் தலையெழுத்து அவ்வளவுதான். 

எப்பப்பா கொண்டு வருவாங்க 

இப்படி எல்லாம் ஊர் மக்கள் பேச ஆரம்பிச்சுட்டு இருந்தாங்க. 

அவை இறந்து போனது சனிக்கிழமை. 

மறுநாள் அவனுடைய உடல் கள்ளக்குறிச்சியில் இருக்கக்கூடிய கவர்மெண்ட் ஹாஸ்பிடலுக்கு கொண்டுவரப்பட்டுச்சு. எங்க ஊர்ல இருந்து போன எல்லாரும் அந்த கள்ளக்குறிச்சி ஹாஸ்பிடல்ல தான் இருந்தாங்க. 

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்று சொன்னதால போஸ்ட் மாடம் பண்ண முடியாது என்று சொல்லிவிட்டார்கள். 

இது ஊர் மக்களுக்கு இன்னும் வேதனையை கூட்டுச்சு.

அன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை பூரா மக்கள் அவன நினைச்சு அழுதுகிட்டே இருந்தாங்க. 

அங்க போன ஊர் மக்கள் எல்லாம் வேதனையோட உச்சத்துக்கே போயிட்டாங்க. 

ஏதாவது இன்ஃப்ளுயன்ஸ் பயன்படுத்தி பாடிய போஸ்ட்மார்ட்டம் பண்ண சொல்லலாம்னு எல்லாம் முடிவு எடுத்து பார்த்தாங்க. ஆனா அது எந்த பிரயோஜனமும் இல்லாம போச்சு. 

திரும்ப திங்கட்கிழமை அவனோட பாடிய போஸ்ட் மாடம் பண்றதுக்கு தயார்படுத்துனாங்க. 

போஸ்ட் மாடம் பண்ற ரூமுக்குள்ள ஊர் மக்கள் சிலர் போய் பார்த்தாங்க. 

7 அடி உயர இருக்கிற அவன கம்பி கால்ல குத்தி அந்த கால் ரெண்டும் இல்லாமலே போச்சு. 

வெள்ளை சட்ட வெள்ளை பேண்ட் என்று போட்டுக் கொண்டு போனவன் இன்னைக்கு அவ மேல வெள்ளை துணியை மட்டும் போட்டு சுத்தி வச்சிருந்தாங்க. 

பிறகு கள்ளக்குறிச்சியில் இருந்து பாடிய ஒரு ஆம்புலன்ஸ் உதவி மூலமா கொண்டு வந்தாங்க. 

ஊர் மக்கள் எல்லாம் எந்நேரம் வரும் எப்படி வரும்? என்ன பண்ணனும் அப்படின்றதெல்லாம் கேட்டுகிட்டு இருந்தாங்க. 

ஊர்ல இருக்க பாதி இளந்தாரி பயலுக வேதனையை மறக்க முடியாமல் தண்ணி அடிச்சு அவனுடைய வாழ்க்கை விஷயங்களை எல்லாம் பேசிக்கிட்டு இருந்தாங்க. 

சுடுகாட்டுல அவனை எரிக்கிறதுக்கு உண்டான அனைத்து வேலைப்பாடுகளும் நடந்துகிட்டு இருந்துச்சு.

சிவா எங்க ஊரை நெருங்குனதும் நாங்களும் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கிட்டு கொஞ்சம் முன்னாடியே போனோம் அவன ஊர்வலமா கொண்டு வர்றதுக்காக 

அவை உடல்ல இருக்கிற அந்த சின்ன ஆம்புலன்ஸ் எங்க பக்கத்துல வந்து நின்னுச்சு. 

அந்தக் கதவை ஓபன் பண்ணி விட்டாங்க. 

அவ மேல விழுந்து விழுந்து அழுகாத ஆட்களே இல்லை. 

அவ்வளவு உயரமாய் இருக்கிறவன் குட்டையானவனா இருந்தான். அவன் கூட இருந்த இன்னொரு டிரைவர் போடியைச் சேர்ந்தவர். அவருடைய உடலும் அவங்க வீட்டுக்கு கொண்டு போக பட்டுச்சு. 

பிறகு எங்கள் இரு சக்கர வாகனங்கள் அணிவகுக்க அவனுடைய உடல் மெதுவாக சுடுகாட்டை நோக்கி நகர்ந்தது. 

ஊர் பெண்களோ சிவாவோட அம்மாவும் தம்பியும் தங்கச்சியும் கதறி அழுவதை பார்த்தால் இன்னும் என் மனசு வலிச்சுக்கிட்டு தான் இருக்கு. 

அதே நேரத்துல ஒண்ணுமே தெரியாத அவை குழந்தைகளோட முகத்தை பார்க்கும்போது மனசே வெடிச்சு போச்சு.

அழுகை குரலும் ஓலமும் எங்க கிராமத்தைச் சுற்றி நிறைந்து இருந்துச்சு. 

ஊர்ல இருக்க எல்லாரும் வரிசையாக முகத்தை வந்து பார்த்துட்டு போனாங்க கட்டி பிடிச்சு கதறி அழுதாங்க. 

எல்லாம் முடிஞ்ச பிறகு அவனுடைய உடல் மயானத்தில் ஏற்றப்பட்டுச்சு. 

விரகுகள் அடுக்கப்பட்டு வைத்திருந்த ஏரி மேடையில அவன் உடலைக் கெடத்தனாக. 

எல்லாருடைய கண்களிலும் கண்ணீர் வராமல் இல்லை. 

அனைத்து வேலையும் முடிஞ்சு அவனோட பையன் அவனுக்கு கொல்லி வச்சான்.

நம்ம அப்பாவுக்கு தான் கொல்லி வைக்கிறோம் என்று கூட தெரியாத அந்த குழந்தை கொஞ்சம் புன் சிரிப்போடு இருந்துச்சு.

இறுதியா அவனோட உடல் நெருப்பு மூலமா எரிக்கப்பட்டு காற்றிலே கலந்து கொண்டு இருந்தான்.

ஊர் மக்கள் எல்லாரும் சோக முகத்தோட அங்கிருந்து வெளியேறினார்கள். 

ஆனா அவனோட நண்பர்களான நாங்க எல்லாரும் எரிகிறது வரைக்கும் அங்க தான் இருந்தோம். 

அன்னைக்கு இரவு அவனுக்கு புடிச்ச விஷயங்களை எல்லாம் அந்த இடத்துல கொண்டு போயி வச்சோம். 

என் நண்பனோட ஆத்மா சாந்தி அடையட்டும்.

என்னோட வாழ்க்கையில மறக்க முடியாத சம்பவத்துல இந்த நண்பனை இழந்த சம்பவமும் ஒன்னு.

சிவா miss you da...


    -nandri-


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இஸ்லாமியர்கள் கூறக்கூடிய 25 நபிமார்களும் அவர்களைப் பற்றிய குறிப்புகளும்

கனவு என்பது மனதின் பிரதிபலிப்பு / கனவு காண்போம்

யூசுப் நபியின் வரலாற்றை பற்றி ஒரு நெருக்கமான பார்வை