சித்திரகுப்தன் என்பவர் இஸ்லாமியர்கள் போற்றும் கிராமன் காத்திபன் என்பவர்களே!
மனிதர்களுடைய நன்மை தீமைகளை பதிவு செய்பவர்களாக இரு மதத்திலும் காணப்படும் சித்திரகுப்தன் மற்றும் கிராமன் காத்தீபன் என்பவர்கள் ஒரே ஒருத்தரைத்தான் குறிக்கின்றது. சித்திரகுப்தா மாதிரி படம் இதில் சில வேறுபாடுகள் உள்ளது. கிராமன் காத்தீபன் என்று இரண்டு வானவர்களை சொல்லும்போது இந்து மதத்தில் அவரை ஒரே வானவராக சித்திரகுப்தனாக எடுத்துக் கொண்டார்கள். ஆனால் பெயர் பொருத்தத்தை வைத்து பார்க்கும் போது இஸ்லாமிய மார்க்கத்தில் கூறுவது போல இந்து மதத்திலும் அவர்களின் பெயர் ஒற்றுமையாகவே காணப்படுகிறது கிராமன் என்பவர் சித்திரன் என்பவராகவும் காத்தீபன் என்பவர் குப்தன் என்பவராகவும் அறிய முடிகிறது. கீழே அவர்களைப் பற்றி இரண்டு மதங்களும் என்ன சொல்லி இருக்கிறது என்பதை தனித்தனியாக கூறியுள்ளேன். இறுதியில் ஒரே நபர்களை தான் இரண்டு மார்க்கங்களும் சொல்லி இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். இஸ்லாம் கூறுவதாக கிராமன் காத்தீபான் (Kiraman Katibin) என்பது மனிதனின் அனைத்து செயல்களையும் பதிவு செய்யும் இரண்டு பெருமை வாய்ந்த மலக்குகளை (தூதர்களை) குறிக்கும். இவர்கள் இஸ்லாமில் முக்கியமான தூதர்கள் என அற...