வானில் இரண்டு நிலா தெரிவது உண்மையா அல்லது பொய்யா? தெரிந்து கொள்வோம்
இது தற்போது உலாவி வரும் ஒரு பொய்யான செய்தி ஆகும். வானில் இரண்டு நிலா தெரிவது என்பது இன்றைய உலகில் இணையதளம் வழியாக பரவக்கூடிய ஒரு போலியான செய்தியாகும்.
ஒருவேளை தெரிகிறது என்று சொன்னாலும் அதை நம் கண்களால் பார்க்க முடியாது. அதற்கென்று சிறந்த தொழில்நுட்பக் கருவிகள், தொலைநோக்கிகள் தேவைப்படுகிறது என்று சொல்லிவிடுவார்கள்.
ஏதேனும் ஒரு போலி செய்தியை உண்மைச் செய்தியாக நம்ப வைக்கக்கூடிய தந்திரம் தான் இது போன்ற செயல்கள்.
ஒரே சூரியன் ஒரே நிலா ஒரே பூமி இப்படி இருக்க இதில் மாற்றம் ஒன்றும் இருக்காது. ஒருவேளை அது இருந்தால் இரண்டு நிலா என்று சொல்ல முடியாத அளவிற்கு தான் இருக்கும். ஏனென்றால் அப்படி தெரியக்கூடிய ஒன்றை நிலாவாக பார்க்காமல் செவ்வாய் கிரகமாக பார்க்கலாம். இது ஒரு குறிப்பிட்ட சில நாட்கள் வானில் பிரகாசமாய் தெரியக்கூடிய காரணத்தினால் அதை நிலவென்று சொல்லி வானில் இரண்டு நிலாக்கள் தெரியும் பாருங்கள் என்று சொல்லிவிடுகிறார்கள்.
எந்த ஒரு செய்தியை சொன்னாலும் அதை நாம் அலசி ஆராய்ந்து பார்த்துவிட்டு அதன் உண்மை தன்மையை புரிந்து கொள்ள வேண்டும்.
இன்று யார் வேண்டுமானாலும் சோசியல் மீடியாக்களில் பதிவு போடலாம் என்று நோக்கில் அவர்கள் மனதில் இருக்கக்கூடிய செய்தியை பரப்பி விடுகின்றார்கள். அதைப்பற்றி ஆராய்ந்து பார்க்காமல் அவரின் கூற்றை மற்றவர்களும் பரப்பி விடுகின்றார்கள். இரண்டு நிலா தெரிவது போல போலியான படங்களை ஏ ஐ தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கிக் கொண்டு இதோ இரண்டு நிலவு தெரிகிறது பாருங்கள் என்று பல செய்திகள் வெளி வருகிறது. (மேலே உள்ள படத்தை நானும் ஏ ஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் தான் செய்திருக்கிறேன்).பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில் எது உண்மை செய்தி எது பொய்யான செய்தி என்று பார்க்காமல் எது இப்போது டிரெண்டி யாக உள்ளதோ அதைப் பற்றிய செய்திகளை பரப்புவது வழக்கமாகிவிட்டது. அதில் நானும் விதிவிலக்கு அல்ல. இந்த செய்தி வந்தவுடன் நானும் இரண்டு நிலா தெரியும் என்று வானை உற்று நோக்கி பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் எனக்கு அந்த ஒரு நிலாவும் தெரியவில்லை. ஏனென்றால் அது அமாவாசையாக இருந்தது.(ஒரு கமெடிக்காக) ஒரு நிலாவே தெரியாமல் இருக்கும்போது இரண்டு நிலா தெரிகின்றது என்று சொல்லக்கூடிய அந்த முட்டாள்களின் வார்த்தைகளை நாம் நம்மின் காதால் கேட்டிருக்கக் கூடாது. நமக்கு இருக்கக்கூடிய வேலை வெட்டியை பார்த்துக் கொண்டு போய் விட வேண்டும். இது போன்ற ஊதாரித்தனமான செய்தியை பரப்புவதற்கு என்று யூடியூப் சேனல்களில் பல பேர் இருக்கிறார்கள். குறிப்பாக மதன் கௌரி என்று சொல்லக்கூடியவர் இதுபோன்ற வேலையை பார்க்கக் கூடியவர் தான். அன்றாடம் வரக்கூடிய செய்திகளை மட்டும் வைத்துக்கொண்டு அதைப் பற்றி விக்கிபீடியா தரப்பு சொல்வதை வைத்தும் மனப்பாடம் செய்து கொண்டு காணொளி வெளியிடுகிறார். வெள்ளையாக இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் என்று சொல்லும்படி இவர் சொல்வதை அனைவரும் கேட்டுக்கொள்கிறார்கள். ஆனால் போலியாக உலாவி வரும் இந்த இரண்டு நிலா செய்தி முற்றிலும் போலியாகவே உள்ளது.
சூரிய குடும்பத்தை போல பல குடும்பங்கள் இந்த வானில் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். அதே ஆராய்ச்சியாளர்கள் பூமியில் இருந்து பார்ப்பவர்களுக்கு இரண்டு நிலா தெரியும் என்று சொல்லக்கூடிய செய்தி முற்றிலும் போலியான செய்தி என்று கூறுகிறார்கள். நாம் கண்களால் பார்க்கும் முறையில் எந்த ஒரு செய்தியையும் நம்பி விடக்கூடாது என்று நம்முடைய ப்ளாக் ஸ்பாட் வழியாக உங்களிடம் கேட்டுக் கொள்கிறோம்.
கருத்துகள்