ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் முறையில் எதை கவனிக்க வேண்டும்?

ஆன்லைன் மூலம் நடக்கும் கொள்ளைகள் பற்றி தெரியுமா?


பண்டமாற்று முறை என்ற ஒன்றை நாம் அறிந்திருப்போம். இன்று அதன் வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் ஆன்லைனில் வாங்க கூடிய நோக்கத்திற்கு அடிமையாகி விட்டோம். ஏதாவது ஒன்று வேண்டும் என்றால் ஆன்லைன் ஐ நோக்கி செல்வது வழக்கம் ஆகிவிட்டது.

இதை அடிப்படையாக வைத்து பல போலி நிறுவனங்கள் தங்கள் கைவரிசையை காட்ட தொடங்கிவிட்டனர்.

நாங்களும் பொருட்களை விற்பனை செய்கிறோம் என்ற பெயரில் ஒரு இணையதளத்தை தொடங்கி விட்டு அதில் வாடிக்கையாளருடைய பணத்தை சுருட்டி விடுகிறார்கள்.

வாடிக்கையாளர்களும் பொருட்கள் இப்போது வரும் அப்போது வரும் என்று எதிர்பார்த்து காத்த வண்ணம் ஏமாற்றத்தை அடைந்து விடுகிறார்கள்.

நாம் வாங்கக்கூடிய பொருட்களின் படங்களை பார்த்தால் தளத்தில் அது மெருகு ஊட்டப்பட்டு மிக அழகாக காண்பிக்கப்படுகிறது. ஆனால் அந்தப் பொருள் கைக்கு கிடைத்தவுடன் நாம் பார்த்தது போல இல்லாமல் போகிறது.

சிறிய பொருளை பெரியதாகவும் பெரிய பொருளை சிறியதாகவும் ஒருவிதப் படம் மோசடி கொண்டு நம்மை எளிதில் ஏமாற்றி விடுகிறார்கள்.

மேலும் பொருட்களை வாங்குவதற்காக நாம் செலுத்தப்படும் பணமானது அவர்கள் வங்கிக் கணக்கிற்கு எளிதாக சென்று விடுகிறது. ஆனால் நம் கைக்கு பொருட்கள் தான் வர மாட்டேங்குது.

பிறகு தள்ளுபடி தருகிறோம் என்ற பெயரில் பற்பல மோசடிகளை செய்து விடுகிறார்கள்.

உங்களுக்கு பரிசு விழுந்திருக்கிறது என்று கூறி நீங்கள் முன் பணமாக கட்டினால் உங்களுக்கு பல ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று கூறி உங்கள் பணத்தை சுருட்டி விடுகிறார்கள்.

படித்தவர்களே ஏமாறிக் கொண்டிருக்கும் இந்த நிலையில் படிக்காத பாமர மக்களின் நிலை என்னவென்று சற்று யோசித்துப் பாருங்கள். உங்கள் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது உங்களுடைய ஏடிஎம் கார்டில் உள்ள நம்பர்களை சொல்லுங்கள் உங்களின் ஏடிஎம் கார்டை மீண்டும் புதுப்பித்து தருகிறோம் என்று சொல்லி பாமர மக்களின் பணத்தினை ஆட்டை போட்டு விடுகிறார்கள். அதே நேரத்தில் நீங்கள் தரக்கூடிய சிறு குரு தகவல்களை வைத்தும் உங்கள் கணக்கில் இருக்கும் பணத்தை சுருட்டி விடுகின்றார்கள். இப்படியாக ஆன்லைன் வியாபாரம் என்றது மிகவும் மோசடித்தனம் பண்ணக்கூடிய ஒன்றாகவே அனைவராலும் பார்க்கப்படுகிறது.

செல்போன் ஆர்டர் செய்தால் செங்கல் வருகிறது.

கம்ப்யூட்டர் ஆர்டர் செய்தால் தகர டப்பா வருகிறது. இப்படி நேர்மையாக நடந்து கொள்வது போல் நடித்து மக்களின் பணத்தை சுருட்டி கொள்கின்றார்கள்.

எனவே எனது அன்பார்ந்த மக்களே நீங்கள் விழித்துக் கொள்ள வேண்டும் இதுபோல ஆன்லைன் விற்பனை என் மூலம் நடக்கக்கூடிய அநீதிகளை புரிந்து கொள்ள வேண்டும்.

ஏதேனும் பொருட்கள் வாங்க விரும்பினால் அருகில் உள்ள உங்கள் நண்பரின் கடைகளிலோ அல்லது ஊர்காரரின் கடைகளிலும் அல்லது உங்களுக்கு தெரிந்தவரின் கடைகளிலோ வாங்குங்கள்.

கண்ணால் ஒரு பொருளை பார்த்து வாங்குவதே சாலச் சிறந்தது. ஆன்லைன் மூலமாக அவர்கள் இட்டுக் கட்டிய படத்தை பார்த்து வாங்குவது மாபெரும் முட்டாள்தனம்.

எவனோ வெளிநாட்டுக்காரன் நம்மூரிலே வந்து நம் மக்களின் பணத்தை பறித்துக் கொண்டிருக்கிறான் என்று நினைத்துக் கொண்டு நம் ஊரிலே இருக்கும் சிறு குறு வியாபாரிகளின் விற்பனையை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அவர்களிடமே நாம் பொருட்களை வாங்கிக் கொள்ள வேண்டும். முடிந்தவரை சிஓடி என்று சொல்லக்கூடிய வீட்டில் வந்து பணம் கொடுத்துவிட்டு பொருளைப் பற்றிச் செல்லும் முறைகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் நாம் வாங்கக்கூடிய தரமானதா? அங்கீகாரம் பெற்றதா? என்று நன்கு அலசி ஆராய்ந்து கொள்ள வேண்டும். அதே நேரத்தில் நாம் வாங்கக்கூடிய அந்த வலைதளம் உண்மையான வலைதளமா? அந்த வலைதளத்தை பற்றி மக்கள் கூறிய கருத்துக்கள் என்ன என்று அலசி ஆராய்ந்து பார்த்து நாம் பொருட்களை வாங்க வேண்டும். மேலும் நாம் வாங்கக் கூடிய பொருட்களுக்கு வாரண்டி மற்றும் கேரன்டி தரக்கூடியவர்களாக இருக்கிறார்களா? என்றும் அறிந்து நாம் பொருட்களை வாங்க வேண்டும்.

இவைகளை எல்லாம் அறியாமல் நீங்கள் ஒரு பொருட்களை வாங்கினால் நிச்சயமாக ஏமாற்றப்படுவீர்கள்.

நம்ப முடியாத வலைதளத்தில் உங்களுடைய தகவல்களை அல்லது பாஸ்வேர்டுகளை செலுத்தினால் அதை வைத்து நீங்கள் பொருட்கள் வாங்காமலேயே உங்களின் பணத்தை சுருட்டி விடுவார்கள்.

எனவே எனது அன்பார்ந்த நண்பர்களே நீங்கள் ஆன்லைனில் பொருட்கள் வாங்குவது தவிர்த்து விட்டு கண்களில் பார்த்த பொருட்களை நம் சொந்தக்காரர்களிடத்தில் நம் ஊர் காரர் இடத்தில் வாங்கிக் கொள்ள வேண்டும் என தமிழ் தேனி சேனல் வாயிலாக கூறி கொள்கிறோம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலக பிரபலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ இஸ்லாத்திற்கு மாறிவிட்டாரா?

யூசுப் நபியின் வரலாற்றை பற்றி ஒரு நெருக்கமான பார்வை

இஸ்லாமியர்கள் கூறக்கூடிய 25 நபிமார்களும் அவர்களைப் பற்றிய குறிப்புகளும்