திருமணம் ஆனவர்கள் கடைபிடிக்க வேண்டிய செயல்கள்
திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்க படுகிறது என்று சொல்வார்கள். ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள அன்பு, புரிதல், மற்றும் பொறுப்பை ஒருங்கிணைக்கின்ற ஒரு அழகான வாழ்க்கை தருணம் திருமணம் ஆகும். புதியதாக திருமணம் ஆன தம்பதியர்கள் சிறப்பாக வாழ, நம் பாரம்பரியத்தில் மற்றும் கலாச்சாரத்தில் பல வழிகள், ஒழுங்குகள் சொல்லப்பட்டுள்ளன. இங்கு அவற்றில் சில முக்கியமான பரிந்துரைகளை பற்றி விவரமாக பார்க்கலாம்.
1.அன்பும் ஆதரவும்
உண்மையான அன்பும் பரஸ்பர ஆதரவும் திருமண வாழ்வில் முக்கியமான அம்சமாக உள்ளது. நீங்கள் ஒருவருக்கொருவர் தேவைகளைப் புரிந்து கொண்டு, அவர்களின் கனவுகள் மற்றும் எதிர்பார்ப்புகளை மதித்து வாழ வேண்டும். திருமணத்தின் முதல் சில ஆண்டுகளில், இது மிகவும் முக்கியம்.
2.தொலைநோக்கு
திருமணத்தில் முதலில் சின்ன சின்ன சிக்கல்கள் வரும். ஆனால் அவர் எனக்கு செட்டாக மாட்டார் அவன் எனக்கு செட்டாக மாட்டார் என்று சொல்லிவிடக்கூடாது. இது இயல்பானது. எதிலும் உடனடியாக சிக்கலில் சிக்காமல், தொலைநோக்குடன் இருவரும் திட்டமிட்டது போல உங்கள் வாழ்க்கையை அமைக்க வேண்டும்.
3.உண்மையான உறவுகள்
உங்களைப் பொறுத்தவரையில் பரஸ்பர விசுவாசம் முக்கியம். எதிலும் நேர்மையாக இருங்கள். உங்கள் கருத்துகள், கவலைகள், சந்தேகங்களை போன்றவற்றை புதைத்து வைக்காமல் விளக்கமாக பேசிக்கொள்வது முக்கியமானது.
4.பேச்சுக்களில் கவனமாக இருங்கள்:
நீங்கள் உங்கள் துணை இதுதான் பேசும்போது ஒரு புறம் பேசுவதை தவிர்த்து விட்டு இருவரும் சமமான அளவில் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு விஷயத்திலும் அவசரமாக தீர்வு காண முயல வேண்டாம்.
5.கொஞ்ச நேரம் தனியாகவும் செலவிடுங்கள்
திருமணத்திற்கு பிறகு, ஒருவருக்கொருவர் நேரம் கொடுப்பது மட்டுமல்லாமல், தனியாக உங்கள் சொந்த விருப்பங்கள்,அவர்களின் நண்பர்கள், மற்றும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஏனென்றால் அவர்களைப் பிரிந்து உங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
6.பொறுப்புகள் பகிர்வு
வாழ்க்கையில் நிம்மதியாக இருக்க, வீட்டுப் பொறுப்புகள், வேலைகள் மற்றும் பொருளாதார பொறுப்புகளை இருவரும் சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும்.
7.அறிவார்ந்த கலந்துரையாடல்கள்
உங்களில் ஒருவருக்கு பிடிக்காதது, அல்லது ஏதாவது கவலை ஏற்படுத்தும் விஷயங்களைப் பேசும்போது, அறிவார்ந்த பாணியில் பின்பற்றுங்கள். ஒருவரை குற்றம் சாட்டாமல் அல்லது குறை கூறாமல் உங்கள் உணர்வுகளை கூறி வெளிப்படுத்துங்கள்.
8.மன்னிப்பு
சின்ன சின்ன சண்டைகளில் கூட ஒருவருக்கொருவர் மன்னிப்பது முக்கியமானது. சண்டை போடுவது இயல்பானது, ஆனால் முடிவில் பரஸ்பர மன்னிப்பு கோருவது மற்றும் அதனை சமாளிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
9.மொபைல் தவிர்த்து விடுங்கள்
தற்போதைய வாழ்க்கையில் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் திருமண வாழ்க்கையில் பொது நேரங்களில், மொபைலில் மூழ்குவதை தவிர்க்க வேண்டும். நேரத்தை உங்கள் கணவன் உடனோ அல்லது மனைவியுடன் செலவிடுங்கள்.
10.சாதகமானதாக குடும்ப உறவுகள்
ஒருவரது குடும்பத்துடன் தொடர்பு நிலை நாட்டுவது முக்கியமானது. உங்கள் துணையின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் மதிப்பு கொடுப்பது உங்கள் உறவுகளை மேலும் நெருக்கமாக்கும்.
11.வெளிநடப்புகள் மற்றும் பயணங்கள்
அவ்வபோது புதிய இடங்களை பார்க்கவும், வெளி இடங்களுக்கும் சென்று தங்கள் வாழ்க்கையில் சிறு சிறு சந்தோஷங்களை அனுபவிப்பது மிக முக்கியமானது.
12.சிறு பிரச்சனைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்
சிறு பிரச்சினைகளை மிகைப்படுத்தி விவாதிக்க வேண்டாம். அவை வளர்ந்து பெரிய பிரச்சினையாக மாறக் கூடும். அதனால் இருவருமே விட்டுக் கொடுத்து வாழ வேண்டும்.
13.சமயத்தில் நேரம் செலவிடுங்கள்
உங்கள் மனைவியோ கணவனோ அவருடைய தனிப்பட்ட விருப்பங்களில் ஈடுபட உறுதுணையாக இருங்கள்.வேலை நேரம் தவிர மற்ற நேரங்களில் உங்கள் துணையுடன் சிரித்து பேசி மகிழுங்கள்.
15.சிறு விஷயங்களில் மகிழுங்கள்
வாழ்க்கையில் சின்ன சின்ன விஷயங்கள் கூட மகிழ்ச்சியைக் கொடுக்கும். ஒன்றாக சமைத்தல், படம் பார்ப்பது, அல்லது புத்தகம் படிப்பது போன்ற விஷயங்களைச் செய்வது உறவின் நிறைவை அதிகரிக்கும்.
16.கெட்ட பழக்கங்கள்
புகை பிடித்தல்,மது அருந்துதல், சூதாடுதல் போன்ற எந்த ஒரு தீய பழக்கத்தையும் திருமணத்திற்கு பிறகு விட்டு விட வேண்டும்.
17.அன்பை அதிகரிக்க
அவ்வபோது உங்கள் மனைவிக்கு பூக்கள்,அல்வா மற்றும் அவர்களுக்கு பிடித்ததை வாங்கி கொடுத்து அவர்களின் அன்பை பெற்று கொள்ள வேண்டும்.
இவ்வாறு வாழ்க்கையில் பொறுப்புகள் மற்றும் அன்பு கொண்ட வாழ்க்கை நடத்துவதற்கு இருவருக்கும் சமமான பங்குகள் உள்ளன.இதுவே திருமணமான புது தம்பதிகள் கடைபிடிக்க வேண்டிய செயல்முறைகள் ஆகும்.

கருத்துகள்