இஸ்லாமியர்கள் பயன்படுத்தும் அரபு வார்த்தைக்கு தமிழ் அர்த்தம் என்ன
>>>மீடியா முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பது ஏன்?<<<<
அஸ்ஸலாமு அலைக்கும் -உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக..
இவை போன்று முஸ்லிம்கள் வழக்கமாக பேசக்கூடிய அரபு வார்த்தைகளுக்கு தமிழ் அர்த்தங்களை இங்கே தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
இன்ஷா அல்லா -
அல்லாஹ் நாடினால் தவிர..
அல்ஹம்துலில்லாஹ் -எல்லா புகழும் இறைவனுக்கே..
அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப் பெரியவன்..
நமாஸ் - தொழுகை..
மசூத் - பள்ளிவாசல்..
மௌத் - இறப்பு..
அஸ்தஃபிருல்லாஹ் - அல்லாஹ்விடம் மன்னிப்பு கோருதல்..
ஜாசக்கல்லாஹ் - அல்லாஹ் உங்களுக்கு நன்மை நாடட்டும்..
பாரகல்லாஹ் - அல்லாஹ் உங்களை ஆசீர்வதிக்க..
சுபஹானல்லாஹ் - அல்லாஹ் புனிதமானவன்..
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் - நாம் அல்லாஹ்வின் இடத்தில் இருந்து வருகிறோம் அவனிடமே திரும்புகிறோம்..
காஃபிர் - இறை மறுப்பாளர் நிராகரிப்பாளர்..
அல்லாஹ் - இறைவன்
சுக்ர் - நன்றி
சலாஹ் - பிரார்த்தனை
குரான் - இறைவேதம்
தக்வா - இறையச்சம்
ஜக்காத் - பணத்தில் சிறு பகுதி
மாஷா அல்லாஹ் - அல்லாஹ்வின் விருப்பம்
ஜிகாத் - அல்லாஹ்வின் வழியில் போராட்டம்
அதான் - தொழுகைக்கான அழைப்பு
ஹதீஸ் - சொல் அல்லது செய்தி
இவைகள் அனைத்தும் இஸ்லாமியர்கள் தங்கள் அன்றாட வாழ்வில் அதிகமாக பயன்படுத்தக்கூடிய அரபு வார்த்தைகளாக உள்ளது. அதை நீங்களும் தெரிந்து கொண்டீர்கள். இந்த பதிவை பிடித்திருந்தால் உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள் நன்றி.
.webp)
கருத்துகள்