மழைக்காலங்களில் நாம் கடைபிடிக்க வேண்டிய செயல்கள் என்ன
மழைக்காலங்களில் அனைவரும் பாதுகாப்பாக இருப்பது அவசியமாகும், ஏனெனில் மழையினால் ஏற்படக்கூடிய அனர்த்தங்கள், நோய்கள், மற்றும் வெள்ளம் போன்ற அவசரகால சூழ்நிலைகள் ஏற்படலாம். மழை நேரங்களில் நமது உடல் ஆரோக்கியம், வீட்டு பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றை பாதுகாப்பது அனைவரின் கடமை.
மழைக்கால சுகாதாரம்:
மழைக்காலத்தில் கொசுக்களால் பரவும் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் அதிகமாக ஏற்படுகின்றன. இதற்கு தீர்வாக வீட்டின் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருப்பது அவசியம். குறிப்பாக, நீர் தேங்கிய இடங்களில் தான் கொசுக்கள் அதிகமாக முட்டை இட்டு வளர்கிறது. இதனால் தொட்டிகள், செண்டெக்ஸ் , தண்ணீர் சேமிப்பு பாத்திரங்கள் மற்றும் குடங்கள் போன்றவற்றை மூடி வைத்தல் அவசியம். நாம் பருகக்கூடிய தண்ணீரை தண்ணீர் சுத்திகரிப்பு முறைகளைப் பின்பற்றியும் அல்லது நான்கு காய்ச்சியும் பருக வேண்டும். மழைநீர் வீடுகளில், குடியிருப்புகளில் புகாமல் இருக்க மற்றும் குழாய்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க பார்த்துக் கொள்ளவும். தண்ணீர் செல்லும் பாதையில் எங்கேனும் அடைப்புகள் ஏற்பட்டிருந்தால் அதை பொதுநலன் கருதி எடுத்து விட வேண்டும்.
மழைக்கால உணவு பழக்கம்:
மழைக்காலங்களில் உணவுப் பொருட்களை சரியான முறையில் எடுத்துக் கொள்ளுதல் அவசியமாகிறது. பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் அதிகளவில் வளரக்கூடிய சூழல் ஏற்படுவதால் மார்க்கெட்டில் இருந்து வாங்கி வரும் காய்கறிகளை நன்கு கழுவி சமைத்து உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். இது போன்ற நேரத்தில் சிற்றுண்டிகள், குளிர்பானங்கள், தெருவோர உணவகங்களை தவிர்ப்பது முற்றிலும் நல்லது. வெளியில் இருந்து வரும் உணவுப் பொருட்களைச் சாப்பிடாமல் வீட்டிலேயே சமைத்த உணவுகளை மட்டும் உபயோகிக்க வேண்டும்.
உடல்நலம் மற்றும் பாதுகாப்பு:
மழை காலங்களில் உடல்நலத்தை பராமரிப்பது மிகவும் முக்கியம். காலணிகளை கவனமாகத் தேர்வு செய்ய வேண்டும், குறிப்பாக தண்ணிர் புகாத காலணிகள் அணிவது பாதுகாப்பாக இருக்கும். ரெயின் கோட், மழைக் குடைகள் போன்றவை தேவைப்படும் போது பயன்படுத்த வேண்டும். மழைநீர் தேங்கி கிடக்கும் சாலையில் செல்லும்போது, மின் இணைப்புகள் மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் அருகே இருப்பதை கவனிக்க வேண்டும். அதைத் தொடவும் கூடாது. அதனால் மின் தாக்கம் ஏற்படாமல் பாதுகாப்பாக செல்வது முக்கியம்.
வீட்டு பாதுகாப்பு:
மழைக்காலங்களில் பெரும்பாலும் வீட்டில் இருந்து வெளியே செல்லாமல் இருப்பது சிறந்தது. அவசியமாக வெளியே செல்லும்போது, பாதுகாப்பான வழிகளை தேர்வு செய்ய வேண்டும். அதிக மழை காரணமாக சாலைகள் நீரால் மூழ்கி இருக்கக்கூடும், இந்த நிலையில் நீரின் ஆழத்தை மதிப்பீடு செய்யாமல் செல்லவேண்டாம். சாலையில் உள்ள ஏதேனும் ஒரு பள்ளத்தில் விழுந்து விடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. வெள்ளம் ஏற்படும் இடங்களில் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். மழைக்காலத்தில் மின் இணைப்புகளைத் தொடுவது ஆபத்தானது. அதனால், மின் இணைப்புகளைச் சரியாக பராமரித்தல் மற்றும் சேதமடைந்த பகுதிகளை சீர்செய்வது அவசியம். ஏதேனும் மின்சார கம்பி அறுபட்டு கிடப்பதை பார்த்தால் உடனே மின் அலுவலகத்திற்கு தகவல் சொல்ல வேண்டும். அந்த வழியாக யாரும் வராமல் பார்த்துக் கொள்வது மிக நல்லது.
போக்குவரத்து முன்னெச்சரிக்கை:
மழைநேரங்களில் சாலைகளில் பாதுகாப்பான பயணம் மிக முக்கியமானது. சிறிய நதிகள், குளங்கள் மற்றும் குறுக்கே சென்றுவிடும் வெள்ளநீரின் ஆழத்தை மதிப்பீடு செய்யாமல் சிக்கலான பகுதிகளில் வாகனம் ஓட்ட வேண்டாம். மோட்டார் வாகனங்களை வெள்ளப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் செலுத்த வேண்டாம், ஏனெனில் வாகனங்கள் தண்ணீரில் சிக்கிக் கொள்ளும் அபாயம் உள்ளது. வாகனங்களில் தேவையான அவசர உதவி பொருட்கள், ரெயின் கோட் மொபைலில் தண்ணிர் புகாமல் இருக்க பிளாஸ்டிக் கவர் போன்றவைகளை எடுத்து செல்வது அவசியம்.
ஆபத்து மேலாண்மை:
மழைக்காலத்தில், வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரழிவுகள் ஏற்படக்கூடும். இந்த சூழ்நிலையில், அரசு மற்றும் மீட்புப் பணிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவது அவசியம். மீட்புக் குழுவில் தொடர்பு உடம்பை தெரிந்து கொள்ள வேண்டும்.அவசர நிலை ஏற்படும்வரை தேவையான ஆவணங்கள், முக்கிய பொருட்கள் மற்றும் மருந்துகளைச் சுலபமாகக் கிடைக்கும் வகையில் வைத்துக் கொள்ள வேண்டும். முக்கிய ஆவணங்கள் சான்றிதழ்கள் போன்றவற்றை பாதுகாப்பாக தண்ணீர் புகாமல் வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கான திட்டங்கள், அரசு உதவிகளை தெரிந்து கொள்ள வேண்டும்.
பழங்காலத்தில் இருந்தே மழையை கொண்டாடுவதற்கான பல விளையாட்டு வழிகள் இருந்தாலும், மழையின்போது சுவாசக் கோளாறுகள், காய்ச்சல், நுரையீரல் நோய்கள் போன்றவை அதிகரிக்கக்கூடிய சூழல் உருவாகிறது. அதனால், குழந்தைகள் அல்லது வயதானவர்கள் மழைநீரில் நீண்ட நேரம் விளையாடுவதை தவிர்க்க வேண்டும்.
மழைக்கால பொது அறிவுரை:
மழை விவசாயிகளுக்கு தேவையான ஒன்றுதான்.
அதனால் மழையை வேண்டாம் என்று யாரும் சொல்லி விட முடியாது. ஆனால் அப்படி வரக்கூடிய மலையிலிருந்து நம்மையும் நம் உடமைகளையும் பாதுகாத்துக் கொள்வது மேற்கூறிய வழிமுறைகளை கடைபிடித்து செய்ய முடியும். எனவே எனது அன்பார்ந்த மக்களே மழைக்காலங்களில் பாதுகாப்பாக இருங்கள்.

கருத்துகள்