மகனை பலியிடத் துணிந்த இப்ராஹிம் நபியின் வரலாறு


இஸ்லாமின் மூன்று பெரிய தந்தைகளில் இப்ராஹிம் நபியும் ஒருவராக பார்க்கப்படுகிறார்.

இப்ராஹீம் (அலைஹி) நபி இஸ்லாம், கிறிஸ்தவம் மற்றும் யூத மதங்களில் மிக முக்கியமான நபியாக கருதப்படுகிறார்.

இப்ராஹீம் நபி (அலைஹி) தெற்கு மெசொப்பொத்தேமியாவில் பிறந்தார். இன்று அது ஈராக் நாட்டின் சுமேரிய நகரமாக கருதப்படுகிறது. இப்ராஹிம் நபி, குர்ஆன் மற்றும் பைபிள் போன்ற மத நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, இறைவனின் ஒரே சத்தியத்தை உணர்ந்து வழிபட்டார். அவரது காலத்திற்கு முன்னர் அவரது மக்கள் சிலை வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர். இவரது தந்தை ஆஸர் என்பவர் சிலைகளை வடிவமைத்தவராக இருந்தார். இப்ராஹீம் நபி சிறு வயதிலேயே இது போன்று சிலைகளைப் பார்த்து, மனிதர்கள் இதைப் போற்றுவதும் வணங்குவதும் தவறு என உணர்ந்தார். 


இப்ராஹீம் நபியின் அவதானம் அவரது சிந்தனையை மாற்றியது. அவர் விண்மீன்களையும், சந்திரனையும், சூரியனையும் கவனித்து அவற்றை இறைவனாக வணங்க நினைத்தார்.ஆனால் அவை மறைந்து போக கூடியவைகளாக இருந்தது.அவற்றின் எல்லைகள் இருக்கின்றன, இவை நமக்கு இறைவனாக இருக்க முடியாது என்று நினைத்தார். இறுதியில், அவர் இறைவனின் உண்மையை  உணர்ந்தார். ஒரே இறைவன்  வழியிலும் திடமாக நின்று, அவ்வழியில் பல போராட்டங்களை எதிர்கொண்டார்.அதில் இப்ராஹீம் (அலைஹி) நபியின் சிலைகளை உடைத்த கதை மிகப் பிரபலமானதும் மத நூல்களில் குறிப்பிடப்பட்டதுமாகும். இக்கதை அவரது இறை நம்பிக்கைக்கும், சிலை வழிபாட்டு நடைமுறைகளுக்கு எதிரான சபதத்தையும் உறுதிப்படுத்துகிறது.


இப்ராஹீம் நபியின் மக்கள், அவருடைய சொந்த குடும்பத்தையே சேர்ந்தவர்கள், பல்வேறு சிறிய பெரிய சிலைகளை வணங்கியவர்கள். இப்ராஹீம் நபி சிறுவயதிலிருந்தே இந்த சிலை வழிபாட்டில் எந்த ஒரு பயனும் இல்லை என்பதை உணர்ந்து வந்தார். அவர் இவ்வாறாக நினைத்தார்: "சிலைகளால் எதையும் செய்ய முடியாது, அவை நமக்கு கைகொடுக்கவோ, உதவி செய்யவும் இயலாது. உண்மையான இறைவன் ஓரே ஒன்றுதான், அது தான் உலகம் முழுவதையும், உலகத்தில் உள்ள மனிதர்களையும், ஜீவ ராசிகளையும் மற்றும் அண்ட சராசரங்களையும் படைத்த இறைவன் என்பதை ஆளாமக உணர்ந்து கொண்டார்.


ஒரு நாள், இப்ராஹிம் நபியின் மக்கள் திருவிழாவிற்காக நகரத்தை விட்டுச் சென்றபோது, இப்ராஹீம் நபி (அலைஹி) அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு அம்மக்கள் வழிபடும் ஆலயத்திற்கு சென்று, ஒரு பெரிய சிலையைத் தவிர, அனைத்து சிறிய சிலைகளையும் உடைத்தார். அதன்பின், பெரிய சிலையின் கழுத்தில் அவர் உடைப்பதற்கு பயன்படுத்திய சுத்தியலை மாட்டி விட்டார். அந்தப் பெரிய சிலை மற்ற சிறிய சிலைகளை உடைக்கும் படியான காட்சியை அந்த சுத்தியல் மூலம் அவர் உருவாக்கினார்.


மக்கள் திரும்பி வந்து, சிலைகள் உடைந்ததைப் பார்த்து அதிர்ச்சியில் மூழ்கினர். "இதை இவ்வாறு செய்தது யார்?" என்று அவர்கள் வினவியபோது, சிலர், "இது இப்ராஹிம் நபி செய்திருப்பார். ஏனெனில், அவர் சிலை வழிபாட்டிற்கு எதிராகப் பேசுவதைக் கேட்டிருக்கிறோம்" என கூறினார்கள்.


இப்ராஹீம் நபியை (அலைஹி) அழைத்து வந்து, அவரிடம் காரணம் கேட்டனர். அதற்கு அவர் எளிமையாக, "இந்தப் பெரிய சிலையைப் பாருங்கள். அதன் கையில் உள்ள சுத்தியலை பாருங்கள். மற்ற சிலைகள் எல்லாம் உடைக்கப்பட்டு இருக்கின்றன ஆனால் இந்த பெரிய சிலை மட்டும் உடையவில்லை ஏனென்றால் அவை தான் மற்ற சிலைகளை உடைத்திருக்க கூடும் என்று சொன்னார்.அதுதான் உங்கள் தேவன் அல்லவா? நீங்கள் கேட்டால், அந்த பெரிய சிலை உங்களுக்கு பதில் சொல்லக் கூடும்" என்று பதிலளித்தார். 



###தன் கண்முன்னே மகன் அழிவதை கண்ட நூஹ் நபி வரலாறு


மக்கள் உடனே சிலை எவ்வாறு பேசும் என்று யோசித்தபோது, அவர்கள் சிலைகளால் எதுவும் செய்ய இயலாது என்பதை உணர்ந்தார்கள். ஆனால், அவ்வளவு உணர்ந்தும் அவர்களில் பெரும்பாலானவர்கள் உண்மையான இறைவனை ஏற்கவில்லை. அதற்கு பதிலாக, இப்ராஹிம் நபியை தீயில் போட்டு எரிக்கத் தீர்மானித்தனர்.


இப்ராஹீம் நபியை எரிக்கும் விதமாக ஒரு பெரிய நெருப்பு ஜுவாலை அமைக்கப்பட்டது. அந்த நெருப்பு ஜுவாலையில் அவரை தூக்கிப் போட்டார்கள். இருந்தாலும் தன்னுடைய இறை நம்பிக்கையின் அருளால் சற்றும் தளராமல் சிரித்துக்கொண்டே இருந்தார். அல்லாஹ் தன்னுடைய அருளால் அவரைக் காத்தார்.தீ அவரை எரிக்கவில்லை. மாறாக அவருக்கு அந்த தீயானது குளிர்வை ஏற்படுத்தியது. இதன் மூலம், அவர் இறைவனின் திருப்பயனுடன் மீண்டு வந்தார்.


இந்த வரலாறு, இறைவனின் உண்மை நம்பிக்கையை நிலைநாட்டுவதற்கான இப்ராஹீம் நபியின் திடக்காத்திரத்தை எடுத்துக் காட்டும் மகத்தான நிகழ்வாகும்.


இப்ராஹீம் நபியின் மற்றொரு சிறந்த சோதனை குர்பானியாகக் கருதப்படும் அவருடைய மகன் இஸ்மாயில் (அலைஹி) யை அல்லாஹ்வின் கட்டளையின் படி பலியிட தயாராகிய தருணமாகும். அல்லாஹ் இப்ராஹீம் நபியிடம் (அலைஹிஸ்ஸலாம்) அவரது மகன் இஸ்மாயில் (அலைஹிஸ்ஸலாம்) நபியை பலியிடுமாறு ஒரு கனவில் கட்டளையிடுகிறார். தன் மகனாக இருந்தாலும் இறைவனின் கட்டளையை நிறைவேற்ற வேண்டி இப்ராஹீம் நபி தன் மகனின் இஸ்மாயிலின் சம்மதத்தோடு, அந்தக் கட்டளையை நிறைவேற்றுவதற்கு தயாராகிறார். இஸ்மாயில் நபி (அலைஹிஸ்ஸலாம்) அவர்களும் தன் தந்தையின் கட்டளைக்கும் இறைவன் கூறிய வார்த்தைகளுக்கும் உடன்படுகிறார். இவர்கள் செய்யப் போகும் தியாகத்தை கவனித்த அல்லாஹ் மன்னிப்பாக வானத்தில் இருந்து ஒரு ஆட்டுக்குட்டியை அனுப்பி, அதனை பலியாக்குமாறு கட்டளையிட்டார். இஸ்லாமியர்களிடையே குர்பானி கொடுக்கும் வழக்கம் இந்த நிகழ்வின் ஆரம்பத்திலிருந்து தான் வந்தது. இப்போது இது இஸ்லாமியர்கள் ஹஜ் பெருவிழாவின் போது ஒவ்வொரு ஆண்டும் நினைவு கூறும் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.


இப்ராஹீம் நபி மற்றும் மெக்கா இப்ராஹீம் நபி (அலைஹிஸ்ஸலாம்) மெக்காவில் உள்ள காபத்துல்லாவை கட்டிய முக்கிய நபராக அடையாளம் பெறுகிறார். அவர் மற்றும் அவரது மனைவி ஹஜரா (அலைஹிஸ்ஸலாம்) இஸ்மாயிலுடன் (அலைஹிஸ்ஸலாம்) சேர்ந்தபோது, அல்லாஹ்வின் கட்டளைப்படி மெக்கா பகுதியில் வந்து தஞ்சம் ஆகினர். இங்கு இருந்த போது, இப்ராஹீம் நபி காபா என்ற ஆலயத்தை கட்ட வேண்டும் என்ற கனவு பெற்றார். ஆரம்பத்தில் ஆதம் நபி மூலமாக உருவாக்கப்பட்ட இந்த இல்லமானது இப்ராஹிம் நபி அவர் மகன் இஸ்மாயிலுடன் இணைந்து மீண்டும் புனரமைக்கப்பட்டது. காபா அல்லாஹ்வின் வீடு எனப்படும், உலகின் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் மிகவும் முக்கியமான இடமாகும்.


இப்ராஹீம் நபி, தன்னுடைய வாழ்நாளில் சகல சோதனைகளையும் கடந்து ஒரே இறைவனின் சத்தியத்தை நிலைநாட்டியவர் ஆவார்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலக பிரபலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ இஸ்லாத்திற்கு மாறிவிட்டாரா?

யூசுப் நபியின் வரலாற்றை பற்றி ஒரு நெருக்கமான பார்வை

இஸ்லாமியர்கள் கூறக்கூடிய 25 நபிமார்களும் அவர்களைப் பற்றிய குறிப்புகளும்