உடல் சுத்தம் பற்றிய தினசரி நலனுக்கான வழிமுறைகள்

நம் உடலை சுத்தமாக வைத்திருக்க சில முக்கியமன வழிமுறைகள் உள்ளன..




1.தினசரி குளியல் – தண்ணீர் மற்றும் சோப்பை பயன்படுத்தி தினமும் ஒரு முறை அல்லது இரண்டு முறை குளிப்பது நல்லது.


2.கையைக் கழுவுதல் – உணவுக்கு முன்பும் பின்பும், கழிப்பறைக்கு சென்று வந்த பிறகு கைகளை கால்களை சோப்பு கொண்டு நன்கு தேய்த்து கழுவ வேண்டும்.


3.நகம் வெட்டுதல் – வாரம் ஒரு முறை கை மற்றும் கால் நகங்களை வெட்டி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.தலை முடி மற்ற முடிகளையம் அவ்வப்போது வெட்டி கொள்ள வேண்டும்.


4.வெள்ளைப் பல் சுத்தம் – பல் சுத்தமாக இருக்கவும், நாளுக்கு இரண்டு முறை பல் தேய்த்தல் அவசியம். பல்லு போனால் சொல்லு போச்சு என்பது ஒரு பழமொழி.


5.துணி மாற்றுதல் – தினமும் சுத்தமான உடைகள் அணிவது.

கந்தையானாலும் கசக்கி கட்டு என்பது பழமொழி.


6.தோல் பராமரிப்பு – சுத்தமான முகம் மற்றும் தோலை பராமரிக்க மிருதுவான சோப்பு அல்லது முகம் கழுவும் பொருட்களை பயன்படுத்தவும்.


7.நீரால் முகம் கழுவுதல் – முகத்தை அடிக்கடி தண்ணீர் கொண்டு கழுவுவது முகப்பரு மற்றும் வெப்ப கொப்பலங்களை வராமல் தடுக்க உதவும்.


8.வாரத்திற்கு இரண்டு முறை தலைக்கு எண்ணெய் போட்டுக்கொள்வது – தலைமுடியை ஆரோக்கியமாகவும், பொடுகு இல்லாமல் வைத்துக்கொள்ள எண்ணெய் மசாஜ் செய்து உடலிலும் தலையிலும் நன்கு தேய்த்து ஊற வைத்து குளிக்க வேண்டும்.


9.குழந்தைகளுக்கு நேரம் தவறாமல் குளிக்கச் செய்வது– தங்கள் குழந்தைகளின் உடல் சுத்தம் மற்றும் ஆரோக்கியம் முக்கியம்.


10.காலணிகளை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல் – அடிக்கடி காலணிகளை சுத்தம் செய்ய வேண்டும், ஏனெனில் அவற்றில் தான் அதிக தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளது. துவைக்காமல் காலணி உரைகளை பயன்படுத்த கூடாது.


11.தோல் சுத்தம் செய்ய சிறந்த அழுக்குகளை நீக்கும் பொருட்கள்– பேபி வைப், டிஷ்யூ பேப்பர் போன்றவற்றை உடன் வைத்துக்கொண்டு தேவைப்படும் நேரத்தில் பயன்படுத்துங்கள்.


12. உடை மற்றும் படுக்கையறை துணிகள்– வாரத்திற்கு குறைந்தது ஒரு முறையாவதுபடுக்கையறை துணிகளை துவைத்து பயன்படுத்தவும்.


13.நிறைவான தூக்கம் – தூக்கமும் உடல் சுத்தத்துக்கும் உறுதியான தொடர்பு உண்டு. நல்ல தூக்கம் உடலை புத்துணர்ச்சி பெறச் செய்யும். ஒரு மனிதன் குறைந்தது 8 மணி நேரமாவது தூங்க வேண்டும்.


14.மோசமான உடைகள் – காலம் கடந்த, உடல் நலத்திற்கு பாதகமான பழைய துணிகளை  அணிதல் கூடாது.


15.நல்ல சத்தான உணவுகள் -

நல்ல சுத்தமான உணவு, காய்கறிகள் மற்றும் பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.


16.மனதிற்கு பிடித்த இசை காணொளி - உடலை ஆரோக்கிய முறையில் வைத்திருப்பதற்கு நாம் பிறர் இடத்தில் சந்தோசம் ஏற்படுத்தவும் சந்தோஷமான செயல்களை செய்யவும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். 

ஏனென்றால் கோபம் ஆனது உடலின் ஆரோக்கியத்தை கெடுக்கின்றது.


இந்த நடைமுறைகள் உங்கள் உடலை சுத்தமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க உதவும்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலக பிரபலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ இஸ்லாத்திற்கு மாறிவிட்டாரா?

யூசுப் நபியின் வரலாற்றை பற்றி ஒரு நெருக்கமான பார்வை

இஸ்லாமியர்கள் கூறக்கூடிய 25 நபிமார்களும் அவர்களைப் பற்றிய குறிப்புகளும்