அஸ்வத்தாமன் என்பவரும் அய்யூப் நபி என்பவரும் ஒருவர்தான்

 தமிழ் தேனிக்கு வரவேற்கிறோம்

மகாபாரதத்தில் வரக்கூடிய பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களின் போர்க் கலை குருவான துரோணாச்சாரியாரின் மகன் அஸ்வத்தாமன், இஸ்லாமியர்கள் என்ன கூடிய நபி அயூப் என்பதை உணர முடிகிறது. நம்முடைய பிளாக்கரில் இந்துக்களின் கடவுள்களை இஸ்லாமிய நபிமார்களோடு ஒப்பிட்டு பல பதிவுகள் போட்டுள்ளோம் அந்த வரிசையில் அஸ்வத்தாமன் என்று சொல்லக்கூடிய இன்றுவரை உயிருடன் இருக்கக்கூடியதாக சொல்லப்படும் அவர் இஸ்லாமியர்கள் கூறக்கூடிய அய்யூப் நபி என்று இந்த பதிவு இருக்கப் போகிறது.

அஸ்வத்தாமன் கிருஷ்ணாவின் சாபத்தினால் தோல் நோயால் பாதிக்கப்பட்டு சிரங்கு மற்றும் சீழ் வடியும் படி காலம் முடியும் வரை இருப்பார் என சொல்லப்படுகிறது. அவரின் நெற்றியில் ஒரு மணி இருப்பதாகவும் அந்த மணியை கிருஷ்ணர் எடுத்துவிட்டு அவருக்கு இந்த சாபத்தினை கொடுக்கிறார். இந்த அஸ்வத்தாமன் கதையைப் போலவே நபி அயூப் அவர்களின் வரலாற்றிலும் இதே போல் அய்யூப் நபிக்கு தொழு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவே தெரிகிறது. இறுதியில் அவரின் காலடி அடிக்கும் இடத்தில் உண்டாகும் நீரில் குளித்த பின்பு அவரின் பழைய தோற்றமானது அவருக்கு கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இதே போல் தான் சமீபத்தில் வந்த கல்கி என்ற ஒரு படத்தில் அஸ்வத்தாமன் வேடத்தில் அமிதாப்பச்சன் நடித்திருப்பார். அவரின் நெற்றியில் உள்ள அந்த மணி மீண்டும் அவருக்கு கிடைக்கும்போது புத்துணர்வு பெற்று புதிய உடலை பெறுகிறார். இந்த இருவர் நிகழ்வுகளிலும் ஒரே மாதிரியான அம்சத்தை காண முடிகிறது. மேலும் சைத்தான் என்பவன் அய்யூப் நபியின் ஏழு குழந்தைகளை கொன்று விடுவதாகவும் சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் அவர்கள் உரிமைகளும் உடைமைகளும் பறிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அஸ்வத்தாமன் வரலாற்றிலும் பாண்டவர்களின் புதல்வர்கள் ஆன உப பாண்டவர்களை கொன்று விடுவதாகவே வருகிறது. அஸ்வத்தாமன் குதிரை படைகள் யானைப்படைகள் அனைத்தையும் பாண்டவர்கள் மேல் உள்ள கோபத்தில் அளித்தான் என்று அஸ்வத்தாமன் பற்றிய கதைகள் கூறுகிறது. அதேபோல் இத்ரீஸ் நபி வரலாற்றிலும் அவருக்காக கொடுக்கப்பட்ட உடைமைகள் என்ற இடத்தில் அவரின் ஆட்டுக் கூட்டங்களும் ஒட்டகக் கூட்டங்களும் பறிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இரண்டு கதையும் ஒரே விஷயத்தை சொன்னால் அது ஒருவரையே குறிக்கிறது என சொல்லிவிட முடியும். அதே கதையை வைத்துக்கொண்டு அதில் சில மாற்றங்களை ஏற்படுத்திய ஒன்றுதான் அனைத்து நபிமார்களின் கதைகளிலும் இந்துக்களின் கடவுள்களின் கதைகளிலும் கூறப்பட்டிருக்கிறது.

தொழு நோய் வந்த காரணத்தினால் நபி அயூப் அவர்களை ஊரை விட்டு எப்படி விலக்கி வைத்திருந்தார்களோ, அதே போல் அஸ்வத்தாமனும் விலகி இருந்ததாகவே சொல்லப்படுகிறது. இன்னும் பல சான்றுகள் இவர்களுக்குள்ளே ஒத்துப் போகிறது. அதை வரும் பதிவுகளில் பார்க்கலாம் அதுவரை உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள் தமிழ் தேனி.

இந்து கடவுள்கள் பெயர்களும் இஸ்லாமிய நபிமார்களின் பெயர்களும்



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலக பிரபலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ இஸ்லாத்திற்கு மாறிவிட்டாரா?

யூசுப் நபியின் வரலாற்றை பற்றி ஒரு நெருக்கமான பார்வை

இஸ்லாமியர்கள் கூறக்கூடிய 25 நபிமார்களும் அவர்களைப் பற்றிய குறிப்புகளும்