செல்போன் டவர் அமைத்து மாதம் 40 ஆயிரம் ரூபாய் வருமானம் பெறுங்கள்

தலைப்பை பார்த்தவுடன் அனைவரும் ஆர்வமாக இருப்பீர்கள் ஆனால் அதில் உள்ள உண்மைகள் என்ன என்பதைத்தான் இந்த பதிவு சொல்கிறது.

மொபைல் டவர் மோசடி

தமிழ்நாட்டில் மொபைல் டவர் மோசடி – உண்மை சம்பவங்கள் பொதுமக்களை ஏமாற்றும் நவீன ஏமாற்று வேலைகாரர்கள்

நம்ம தமிழ்நாட்டில் கடந்த பத்து ஆண்டுகளாக மிகவும் விரைவாக வளர்ந்து வந்த ஒரு பெரிய மோசடி எனக் கூற வேண்டுமானால் அது “மொபைல் டவர் மோசடி” தான். “உங்கள் நிலத்தில் டவர் அமைக்கிறோம் மாதம் ₹45,000 ரூபாய் முதல் ₹1 லட்சம் ரூபாய் வரை வாடகை வருமானம் வரும்” என்ற இனிமையான பொய் வார்த்தைகளில் பல நூற்றுக்கணக்கான மக்கள் சிக்கித் தவித்துள்ளனர். முன்னாள் காலங்களில் மட்டும் அல்ல, இன்னும் 2024–2025 இல் கூட இந்த mobile tower scam மிக மோசமாகவே பரவி வருகிறது.

இந்த மோசடி எப்படித் தொடங்குகிறது?

எந்த விதத்தில் மக்கள் ஏமாறுகிறார்கள்?

உண்மையான சம்பவங்கள் என்ன நடந்தது?

இப்போது ONT Tower Scam என்று ஏன் புதிய வடிவத்தில் வந்திருக்கிறது?

இவையெல்லாவற்றையும் நிஜமான தரவுகளோடு இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.

டவர் நிறுவனம் போல நடிக்கும் கும்பல்களின் நவீன யுக்திகள்

டவர் மோசடியில் ஈடுபடும் கும்பல்கள் பொதுவாக Airtel, Jio, BSNL, Vodafone போன்ற நிறுவனங்களின் பெயரில் போலியான விளம்பரங்களை வெளியிடுகின்றனர். Google Ads, Facebook Ads, YouTube Ads மூலமாக “மாதம் 50,000 வருமானம்” என்று பலரையும் கவர்கிறார்கள். மக்கள் இவ்விளம்பரத்தை பார்த்துத்தான் அவர்களை தொடர்பு செய்கிறார்கள்.

அந்த கும்பலின் பேச்சு மிகவும் நம்ப வைக்கும் வகையில் இருக்கும்:

“சார், உங்கள் நிலம் surveying ல் qualified ஆகிவிட்டது.”

“டவர் அமைக்கும் போது அரசு அனுமதி அனைத்தும் நாங்களே செய்து தருகிறோம்.”

“முதல் processing fee அனுப்புங்கள். அதன்பிறகு site verification நடக்கும்.”

இதுவே மோசடியின் முதல் கட்டம்.

சென்னை மாநகரத்தில் 12 பேரை ஏமாற்றி ₹38 லட்சம் மோசடி

சமீபத்தில் பெரிதாக வெளிச்சத்துக்கு வந்த சம்பவம். சென்னை திருவொற்றியூர் பகுதியில் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது .

ஒரு கும்பல் மொத்தம் 12 பேரிடம் சேர்த்து ₹38 லட்சம் வரை பணம் பறித்தது.

அவர்கள்,

Survey fees

NOC fees

Environmental approval

Document registration

இப்படி பல பெயர்களில் கட்டணங்களை வாங்கிக் கொண்டு அவர்களை ஏமாற்றினார்கள்.

ஆவணங்களாக வழங்கப்பட்ட PDF–களும் Jio Tower Infrastructure என்ற போலியான லெட்டர் ஹெட் களுடன் வந்ததால் அனைவரும் நம்பினர். பணம் கிடைத்ததும் அனைத்து மொபைல் எண்களும் சுவிட்ச் ஆப் நிலைக்குச் சென்றது.

திருப்பூர் – விவசாயியை குறிவைத்து ₹6.5 லட்சம் மோசடி சம்பவம்

திருப்பூரில் ஒரு விவசாயியிடம் “உங்கள் 2 ஏக்கர் நிலம் டவர் அமைக்க perfect” என்று கூறி, 25 ஆண்டு ஒப்பந்தம் என சொல்லி பல கட்டணத் தொகையை பெற்றனர்.

அவர் நம்பியதற்குக் காரணம்:

WhatsApp ல் video call செய்து “Field Officer” போல நடந்து மற்றும் நடித்து காட்டியவர்

போலியான stamp papers,QR code கொண்ட fake approval letters, இனிப்பான பேச்சு,

இவை அனைத்தும் கொண்டு அவரிடம் நம்பகத்தன்மையை அதிகரிக்கச் செய்தனர். பணம் அனுப்பியதும் பெரும் நஷ்டம்.

சேலம் – போலியான BSNL ஆவணம் அனுப்பி ஏமாற்றிய சம்பவம்

சேலத்தில் நடந்த ஒரு சம்பவத்தில், BSNL Southern Region Approval என்று போலியான PDF, signature, seal ஆகியவற்றை அனுப்பியுள்ளனர்.

அந்த நபர் இதில் உண்மை இருக்கிறது என நம்பி ₹1.75 லட்சம் அனுப்பியுள்ளார்.

இதில் முக்கியமானது, ஆவணம் மிகவும் perfect-ஆக தயாரிக்கப்பட்டிருந்தது. அவற்றை பார்ப்பதற்கு உண்மை போலவே இருந்தது.

இருந்தாலும் அவர் பணத்தை இழந்தது தான் மிச்சம். 

Tower scam


இப்போது ட்ரெண்டிங் – ONT Tower Scam (Mini Tower Fraud)

முன்பு பெரிய mobile tower என ஏமாற்றிய கும்பல்கள், இப்போது புதிய வடிவத்தில் ஒரு மோசடியை தொடங்கியுள்ளனர். அதுதான் ONT Tower Scam.

இதில் அவர்கள் கூறுவது:

“வீட்டின் மேல் small box unit வைக்க வேண்டும்.”

“மாதம் ₹8,000–₹12,000 rental income கிடைக்கும்.”

“இது Digital India Fiber Project.”

சிறிய box என்பதால் மக்கள் அதிகமாக நம்புகிறார்கள்.

ஆனால் இது முழுவதும் ஒரு புதிய மோசடி வடிவம்.

எப்படி அவர்கள் நம்மை நம்ப வைக்கிறார்கள்?

பெரிய வருமானம் – சும்மா எந்த வேலையும் இல்லாமல் மாதம் ₹50,000 வருமானம் என்று சொல்வது அனைவரையும் கவர்கிறது.

அரசு ஆவணங்கள் போல காகிதங்கள் – digital signature, QR code, hologram seal,

வேகமாக தீர்மானம் எடுக்க அழுத்தம் அதாவது “இன்று மாலைக்குள் fee கொடுக்கவில்லையென்றால் இது cancel ஆகும்.”

பல கேரக்டர்ஸ் கலந்து பேசுவது – ஒருவர் Officer, ஒருவர் Manager, ஒருவர் Legal Advisor என்று நடிப்பார்கள்.

இவை அனைத்தும் ஒரே மோசடி கும்பலின் செயல்தான்.


உண்மையில் ஒரு மொபைல் டவர் எப்படி அமைக்கப்படுகிறது?

அதுதான் மிக முக்கியமான பகுதி.

Airtel, Jio, BSNL நிறுவனங்கள் ஒருபோதும் WhatsApp, Facebook விளம்பரம் மூலம் மக்களை தொடர்பு கொள்ள மாட்டார்கள்.

அவர்கள் installation contract-ஐ பெரிய infrastructure நிறுவனங்களுக்கு கொடுப்பார்கள்.

எந்தவொரு நிறுவனமும் முன்பணம் (registration fee, NOC fee, processing fee) ஒருபோதும் கேட்காது.

அவர்களே உங்கள் நிலம் பொருத்தமானதா என்பதை 3–6 மாதங்கள் ஆய்வு செய்வார்கள்.

முன்பணம் கேட்டாலே அது 100% மோசடி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

டவர் மோசடியில் சிக்காமல் இருக்க வேண்டிய முக்கிய எச்சரிக்கைகள்

WhatsApp வழி வரும் tower install messages அனைத்தும் fake. இது போன்ற டவர் அமைக்க இடத்து காரரிடம் எந்த

பணமும் அனுப்ப வேண்டிய அவசியம் இல்லாத பணிகள் என்று அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

எப்போதும் அதிகாரப்பூர்வ customer care எண்ணை மட்டுமே அழைக்கவும்.

பெரிய தொகை அனுப்புவதற்கு முன்பாக cyber crime portal-ல் சரிபார்க்கவும்.

மிக அதிக வருமானத்தை கூறினால் அது நிச்சயமாக மோசடிதான்.


முடிவு – இது ஒரு அமைதியான கொள்ளை

டவர் மோசடி என்பது ஆயிரக்கணக்கான மக்களை பாதித்து வரும் ஒரு அமைதியான கொள்ளை.

ஒரு தவறான முடிவு ஒரு குடும்பத்தின் சேமிப்பை முழுவதும் அழித்துவிடக்கூடும்.

ஆகவே “டவர் அமைக்க பணம் அனுப்புங்கள்” என்ற சொல்லை கேட்டவுடன் அது 100% மோசடி என்பதை உங்கள் மனதில் குத்திக் கொள்ளவேண்டும்.


நமது விழிப்புணர்வே நமது பாதுகாப்பு.


நான் உங்கள் நலம்விரும்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலக பிரபலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ இஸ்லாத்திற்கு மாறிவிட்டாரா?

யூசுப் நபியின் வரலாற்றை பற்றி ஒரு நெருக்கமான பார்வை

இஸ்லாமியர்கள் கூறக்கூடிய 25 நபிமார்களும் அவர்களைப் பற்றிய குறிப்புகளும்