தாய்ப்பாலில் கலந்த நஞ்சு: 3 வயது குழந்தையின் பிஞ்சு உடலைத் தாக்கும் விவசாய இரசாயனங்கள்!

 🌿 விவசாய இரசாயனங்கள் – நிலத்தையும் மனித வாழ்வையும் அழிக்கும் அமைதியான விஷம்: ஒரு தலைமுறைக் கண்ணீர்!

பூச்சிக்கொல்லி களைக்கொல்லி ஏற்படும் பிரச்சனைகள்
தாய்ப்பால் விஷமாக்குவதை காட்டும் ஏ ஐ படம்

இன்றைக்கு நாம சாப்பிடுற உணவு உணவா இருக்கா?

இல்ல… நம்ம எல்லாரும் தினமும் சாப்பிடுறது மெதுவா கொல்லுற விஷம்.

“உற்பத்தி அதிகமாயிடுச்சு”, “நவீன விவசாயம்”ன்னு சொல்லி, களைக்கொல்லி, பூச்சிக்கொல்லி, ரசாயன உரம் எல்லாத்தையும் நிலத்துக்குள்ள ஊத்திட்டோம்.

ஆனா யாரும் கேக்கல —

இந்த நிலம் உயிரோட இருக்கா?

இந்த உணவு மனிதனை காப்பாத்துதா?

நாம நினைக்குற மாதிரி இது ஒரு நாள்ல பிரச்சனை வர்ற விஷயம் கிடையாது.

இது மெதுவா… மௌனமா… தலைமுறைகளை நோயாளிகளாக்குற விஷயம்.

களைக்கொல்லி…

இந்த ஒரு வார்த்தைக்குள்ள எவ்வளவு விஷம் இருக்குன்னு தெரியுமா?

களையை மட்டும் அழிக்குறதுன்னு சொல்லி ‘கிளைபோசெட்’ன்னு ஒரு விஷத்தை நிலத்துல தெளிக்கிறாங்க.

ஆனா அது களையை மட்டும் கொல்லல.

நிலத்துக்குள்ள இருக்குற நல்ல நுண்ணுயிரிகள் எல்லாத்தையும் ஒரே நேரத்துல சாகடிக்குது.

நிலம் உயிரோட இருக்கணும்னா, அதுக்குள்ள நுண்ணுயிரிகள் இருக்கணும்.

அவை இல்லனா நிலம் செத்து போன உடல் மாதிரி.

களைக்கொல்லி போட்ட நிலத்துல

மழை பெய்தா தண்ணி நிற்காது

வெயில் அடிச்சா மண் வெடிக்கும்

நிலத்தடி நீர் விஷமாவும்

அந்த விஷம் எங்க போகுது?

நம்ம குடிக்குற தண்ணீருக்குள்ள…

நம்ம சாப்பிடுற அரிசிக்குள்ள…

நம்ம பிள்ளைகள் சாப்பிடுற உணவுக்குள்ள…

இதுல இருக்குற சில ரசாயனங்கள் புற்றுநோய் வர காரணம்னு உலக சுகாதார நிறுவனம் சொன்னாலும், நாம இன்னும் “பரவாயில்ல”ன்னு சொல்லிட்டு இருக்கோம்.

பூச்சிக்கொல்லி விஷயமா?

அது இன்னும் மோசம்.

பூச்சியை கொல்ல தயாரிக்குற விஷம்

மனிதனை எப்படி காப்பாத்தும்?

அதை தெளிக்குற விவசாயி முதல்ல பாதிக்கப்படுறான்.

கண் எரிச்சல், தோல் எரிச்சல், மூச்சு அடைப்பு…

அப்புறம் மெதுவா கல்லீரல், நரம்பு, மூளை.

ஆனா உண்மையான பாதிப்பு யாருக்கு தெரியுமா?

பிஞ்சுக் குழந்தைகளுக்கு.

காய்கறி நல்லா கழுவினா போயிடும்னு சொல்றாங்க.

அது பொய்.

அந்த விஷம் காய்கறிக்குள்ளேயே போய் ஒட்டிக்கிடக்கும்.

சின்ன குழந்தைகள் சாப்பிடுற உணவுல இந்த பூச்சிக்கொல்லி போனதும்,

அவங்க மூளை வளர்ச்சி பாதிக்கப்படுது

கவனம் சிதறுது

நினைவாற்றல் குறையுது

ஒரு தாய் நல்ல உணவுன்னு நினைச்சு தன் பிள்ளைக்கு விஷம் கொடுக்குற நிலைக்கு நம்ம அமைப்பு வந்துடுச்சு.

ரசாயன உரம்…

இதுதான் விவசாயத்தை காப்பாத்துன மாதிரி ஒரு மாயை.

NPK போட்றா உடனே பயிர் வளருது.

ஆனா அது நிலத்தோட இயல்பான சக்தியை மெதுவா கொன்னுடுது.

மண்புழு குறையுது

நுண்ணுயிரிகள் செத்துப்போகுது

நிலம் சோர்ந்து போகுது

ஒரு கட்டத்துக்கு மேல அந்த நிலம் பயிர் தாங்க முடியாம

மலட்டு நிலம் ஆகிடுது.

அந்த நிலத்தை திரும்ப உயிரோட கொண்டு வர

10 வருடம்… 15 வருடம்…

அதுக்குள்ள விவசாயி கடன்ல மூழ்கி நொறுங்கிடுறான்.

இதெல்லாம் உணவுல போய் சேர்ந்தா நம்ம உடம்புக்குள்ள என்ன ஆகுது?

கல்லீரல் மெதுவா சேதம்

சிறுநீரகம் வேலை செய்யாம

நரம்பு மண்டலம் குழம்பி

ஹார்மோன் எல்லாம் தடுமாறி

இதனால தான் இதை “Silent Killer”ன்னு சொல்றாங்க.

சத்தம் இல்லாம கொல்லும்.

தாய்ப்பால் கூட இப்போ பாதுகாப்பா இல்லைன்னு சொன்னா கோபம் வரும்.

ஆனா உண்மை அதுதான்.

தாய் சாப்பிடுற உணவுல விஷம் இருந்தா

அது நேரா தாய்ப்பால்ல போயிடுது.

DDT, Endosulfan மாதிரி விஷங்கள்

தாய்ப்பால்ல கண்டுபிடிக்கப்பட்ட ஆய்வுகள் இருக்கு.

அந்த பிஞ்சுக் குழந்தை

பிறந்த நாள்ல இருந்தே விஷம் வாங்குற நிலை.

இதுக்கு மேல என்ன சொல்றது?

இப்போ தீர்வு என்ன?

அதிக லாபம், அதிக உற்பத்தி

இந்த இரண்டு வார்த்தைகளுக்காக

நாம் இயற்கையை நசுக்கியோம்.

இப்போ திரும்ப வேண்டிய நேரம் இது.

களை கையால அகற்றணும்

பூச்சிக்கொல்லிக்கு வேப்பெண்ணெய், மூலிகை

ரசாயன உரத்துக்கு மண்புழு உரம், ஜீவாமிர்தம்

இது புதுசு இல்ல.

இது நம்ம முன்னோர்கள் பின்பற்றின வழி.

முக்கியமா

நாம் வாங்குற உணவுல மாற்றம் வந்தால்தான்

விவசாயமும் மாறும்.

நாம் இயற்கையை காப்பாத்தினா

அது நம்மை காப்பாத்தும்.

இல்லனா

நிலம் மலடாகும்

மனிதன் நோயாளியாகும்

பிள்ளைகள் பிறந்த நாள்லேயே விஷம் வாங்குவாங்க

இந்த அமைதியான பேரழிவை

இப்போ இல்லனா

எப்போ தடுக்கப் போறோம்?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இஸ்லாமியர்கள் கூறக்கூடிய 25 நபிமார்களும் அவர்களைப் பற்றிய குறிப்புகளும்

உலக பிரபலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ இஸ்லாத்திற்கு மாறிவிட்டாரா?

யூசுப் நபியின் வரலாற்றை பற்றி ஒரு நெருக்கமான பார்வை