“சிவன்–பார்வதி, ஆதாம்–ஏவாள்: கதைகள் ஏன் ஒரே ஓட்டத்தில் செல்கின்றன?”

 எனக்கு இந்த கேள்விகள் திடீரென்று தோன்றியவை அல்ல.

ஒரு நாள் உட்கார்ந்து “இதை இப்படித்தான் நினைக்க வேண்டும்” என்று தீர்மானித்து உருவாக்கிய எண்ணங்களும் அல்ல.

பல கதைகள், பல மதங்கள், பல மரபுகள்

இவற்றை கேட்கக் கேட்க, படிக்கப் படிக்க,

சில இடங்களில் ஒரே மாதிரியான வடிவங்கள் திரும்பத் திரும்ப தோன்றிய போதுதான்

இந்த கேள்விகள் என் மனதுக்குள் உருவானது.

ஆதாம் – ஏவாள்.

இஸ்லாம் சொல்கிறது,

இவர்கள் மனித குலத்தின் முதல் தந்தை–தாய் என்று.

அவர்கள் மனிதர்கள் என்றும் சொல்லப்படுகிறது.

அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகளிலிருந்தே மனித சமூகம் வளர்ந்தது.இப்போதும் இருக்கிறோம்.

ஆனால் இந்தக் உண்மை கதையை நான் நினைத்துக் கொண்டிருக்கும்போது,

என் மனம் அதை ஒரே இடத்தில் நிறுத்த மறுக்கிறது.

ஆதாம் ஏவாள் சிவன் பார்வதி குடும்பம்
ஆதாம் ஏவாள் சிவன் பார்வதி குடும்பம் ai 

அதே நேரத்தில்,

இந்துக்களின் கதைகளில் வரும்

சிவன் – பார்வதி

என்ற ஆதி சக்திகளின் உருவம் என் நினைவுக்குள் வந்து நிற்கிறது.

இங்கே நான் ஒரு விஷயத்தை தெளிவாகச் சொல்ல வேண்டும்.

“சிவன் = ஆதாம்”

“பார்வதி = ஏவாள்”

என்று முடிவு எடுப்பதே என் நோக்கம் இல்லை.

ஆனால் சில சம்பவங்களின் அமைப்பு,

சில கதைகளின் திருப்பங்கள்,

மிகவும் ஒத்திருக்கும் போது

அதை கவனிக்காமல் போகவும் முடியவில்லை.

ஆதாம் – ஏவாளுக்கு பிறந்த முதல் பிள்ளைகள்

காபில் – ஹாபில்.

ஒருவன் விவசாயம் செய்கிறான்.

மற்றொருவன் கால்நடை வளர்க்கிறான்.

இருவரும் தங்களுக்குப் பிடித்த முறையில்

இறைவனுக்குப் படையல் தருகிறார்கள்.

ஒருவரின் படையல் ஏற்கப்படுகிறது.

மற்றொருவருடையது ஏற்கப்படவில்லை.

அந்த மறுப்பிலிருந்து

ஒரு சிறிய விரக்தி.

அந்த விரக்தியிலிருந்து

பொறாமை.

அந்தப் பொறாமையில்

ஒரு பெண்ணை மனம் முடிக்க சுற்றிய எண்ணம்.

அந்த எண்ணத்தின் உச்சத்தில்

ஒரு கோபம்.

அந்த கோபத்தின் முடிவுதான்—

அண்ணன் கையில் தம்பி கொல்லப்படுவது.

இங்கே நான் மீண்டும் நிற்கிறேன்.

ஏனெனில் இதே மாதிரியான ஒரு உள் பதற்றம் ஆனது

சிவன் குடும்பக் கதைகளிலும் தெரிகிறது.

விநாயகர்.

முருகன்.

இங்கேயும் ஒரு கோபம்.

இங்கேயும் ஒரு வன்முறை.

விநாயகரின் தலை துண்டிக்கப்படுகிறது.

அந்த நிகழ்வுக்குப் பிறகு

முருகன் மனம் உடைந்து,

கோபத்துடன் வீட்டை விட்டு வெளியேறுகிறார்.

இரண்டு கதைகளிலும்

ஒரே விஷயம் திரும்பத் திரும்ப வருகிறது—

சகோதர உறவில் ஒரு முறிவு உண்டாகிறது.

காபில்,

“நாம் சகோதரனை கொன்றுவிட்டோமே”

என்ற குற்ற உணர்வோடு

தன் இடத்தை விட்டு வேறு இடத்திற்குச் செல்கிறான்.

முருகனும் அப்படித்தான்.

அவமானமும் கோபமும் சேர்ந்து

அவரை மலைகளுக்கும் காடுகளுக்கும் அழைத்துச் செல்கிறது.

ஆனால் இங்கே ஒரு முக்கியமான திருப்பம் இருக்கிறது.

காபில் சென்ற இடத்தில்

அவன் முழுமையாக கெட்ட மனிதனாக மாறவில்லை.

மாறாக,

அவன் வாழ்ந்த மக்களோடு இணைந்து,

பயிரிடுதல், தொழில், சமூக வாழ்வு

போன்ற விஷயங்களில்

அவர்களுக்கு வழிகாட்டியாக மாறுகிறான்

என்று பழைய கதைகள் சொல்கின்றன.

முருகனும் அதேபோல.

பழனி, திருச்செந்தூர், சுவாமிமலை—

இவை வெறும் வழிபாட்டு இடங்கள் மட்டும் அல்ல.

மக்கள் நடந்து சென்று,

விரதம் இருந்து,

அகந்தையை விட்டுவிட்டு,

“வாழ்க்கை எப்படி வாழ வேண்டும்?”

என்று கேட்கும் இடங்களாக மாறியிருக்கிறது.

இது வெறும் பக்தியா?

அல்லது

ஒரு காலத்தில் மனிதர்களோடு வாழ்ந்த ஒருவர்

மனித வாழ்க்கைக்கு சொல்லிச் சென்ற நெறிகளின் நினைவா?

இந்த இடத்தில்தான் என் மனம்

சேது (Seth) என்பவரிடம் செல்கிறது.

ஆதாம் – ஏவாளின் இறுதியாகப் பிறந்த பிள்ளை.

அமைதியானவர்.

கோபம் குறைந்தவர்.

தந்தையிடம் நீண்ட காலம் இருந்து கற்றவர்.

மனிதர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதை

மக்களுக்கு எடுத்துச் சொன்னவர்.

40 சுஹூஃபுகள் அவருக்கு 

சட்டங்களாக அல்ல,

வாழ்வியல் வழிகாட்டுதல்களாக தரப்பட்டது.

அதே இடத்தில்

என் நினைவில் வந்து நிற்பவர்

தர்மசாஸ்தா ஐயப்பன்.

மனிதனாக வாழ்ந்தவர்.

காட்டில் தவம் செய்தவர்.

ஒழுக்கம், சமத்துவம், கட்டுப்பாடு என

இவை எல்லாம் ஒரு நடைமுறை வாழ்க்கையாக மாற்றப்பட்டவர்.

அதனால்தான் இன்றும் மாலை போட்டு கொண்டு

மக்கள் வாகனத்தில் போய் நிற்காமல்,

நடந்து சென்றும்,

விரதம் இருந்தும்,

தன்னை மாற்றிக்கொண்டு

அவரை தரிசிக்கிறார்கள்.

ஏனெனில்

அவர் கடவுள் என்பதற்காக மட்டும் அல்ல.

மனித வாழ்க்கைக்கான ஒரு மாதிரி என்பதற்காக.

அப்படியென்றால்

சேது – ஐயப்பன்

இந்த இருவரும்

ஒரே வரிசையில் நிற்கிறார்களா?

என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

இங்கே இன்னொரு விஷயம் என்னை சிந்திக்க வைக்கிறது.

ஐயப்பன் விஷ்ணுவின்

மோகினி அவதாரத்தில் பிறந்தார்

என்று சொல்லப்படும் கதைகள்.

இந்தக் கதைகள்

எந்த காலத்தில் எழுதப்பட்டது?

எந்த நூலில் முதலில் வந்தது?

ஏன் சிவன் குடும்பக் கதைகளில்

விஷ்ணு தவிர்க்க முடியாதவராக

மாறிக்கொண்டே போகிறார்?

ஒரு காலத்தில்

கல்வி எல்லோருக்கும் இல்லை.

எழுதியவர்கள் சிலர்.

கேட்டவர்கள் பலர்.

அப்போது கலந்த கதைகள்,

காலப்போக்கில்

உண்மையாக மாறியிருக்க வாய்ப்பில்லையா?

இதற்கிடையில்

இன்னொரு ஒற்றுமையை நான் தவிர்க்க முடியவில்லை.

இத்ரீஸ் நபி.

எழுத்து கற்றவர்.

நூல்கள் எழுதியவர்.

வானியல், மருத்துவம், ஒழுக்கம்—

இவற்றை மனிதர்களுக்கு கற்றுக் கொடுத்தவர்.

இந்துக்களின் பார்வையில்

அகஸ்தியர்.

மலைகள்,

சித்த மருத்துவம்,

இலக்கணம்,

வாழ்வியல்.

இருவரும் கடவுள்கள் அல்ல.

இருவரும் மனிதர்கள்.

ஆனால் மனிதர்களுக்கு அறிவை கொண்டு வந்தவர்கள்.

இது சும்மா தற்செயலா?

அல்லது

ஒரே மனித வரலாறு

வேறு வேறு மொழிகளில்,

வேறு வேறு பெயர்களில்

சொல்லப்பட்டதா?

நான் முடிவு சொல்லவில்லை.

ஆனால் ஒன்று மட்டும் உறுதி.

கேள்வி கேட்பது பாவம் இல்லை.

ஒப்பிட்டு பார்ப்பது துரோகம் இல்லை.

உண்மை மறைக்கப்பட்ட இடத்தில்தான்

கதைகள் பெருகும்.

இந்த ஒற்றுமைகள்

நம்மை நம்ப வைக்க அல்ல,உங்களை

சிந்திக்க வைக்க வந்திருக்கலாம்.

நன்றி.உங்கள் கேள்விகள் வரவேற்கப்படுகிறது.

கொஞ்சம் இதையும் படிங்க திருப்பதியில் உள்ள கோவிலில் இருப்பது முருகன் சிலையா பெருமாள் சிலை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலக பிரபலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ இஸ்லாத்திற்கு மாறிவிட்டாரா?

யூசுப் நபியின் வரலாற்றை பற்றி ஒரு நெருக்கமான பார்வை

இஸ்லாமியர்கள் கூறக்கூடிய 25 நபிமார்களும் அவர்களைப் பற்றிய குறிப்புகளும்