இடுகைகள்

2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

திருத்தணியில் நடந்த சம்பவத்தைப் பற்றிய சாமானியனின் வேண்டுகோள்

படம்
தண்டனை அதிகரித்தால் தான் குற்றங்கள் குறையும் என்ற அடிப்படையிலே நான் உங்கள் இடத்திலே பேச வந்திருக்கிறேன். நேற்று திருத்தணியில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. நான்கு சிறார்கள் என்று சொல்லிக்கொள்ளப்படுகின்ற நான்கு பேர், வட மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இளைஞரை ரயிலிலிருந்து கீழே இறக்கி கொடூரமாக வெட்டி இருக்கிறார்கள். இது ஒரு வெட்டு, இரண்டு வெட்டு அல்ல. கிட்டத்தட்ட 50க்கும் அதிகமான வெட்டுகள். இன்று அந்த இளைஞர் மருத்துவமனையில் உயிருக்கும் சாவுக்கும் இடையில் தீவிர சிகிச்சையில் போராடிக்கொண்டிருக்கிறார். இப்போது நாம் கேட்க வேண்டிய முதல் கேள்வி இது: இது ஒரு சண்டையா? இல்லை ஒரு திட்டமிட்ட கொலை முயற்சியா? அவர்கள் சாதாரணமாக இருந்தவர்கள் அல்ல. கஞ்சா, மது போதையில், கையில் பட்டாக்கத்தியுடன், ரயிலில் நின்றுகொண்டு ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் போட்டு கொண்டிருந்தவர்கள். “இப்படி செய்யாதீர்கள்” என்று அந்த சுராஜ் என்ற இளைஞர் சொன்னதற்காக, “என்னை பார்த்து முறைக்கிறாயா? உன்னை நான் என்ன செய்கிறேன் என்று பார்” என்று மிரட்டி, அவனை வெட்டியதோடு மட்டுமல்ல, அந்த கொலை முயற்சியையே வீடியோ எடுத்து அப்லோடு செய்திருக்கிறார்கள். ...

“சிவன்–பார்வதி, ஆதாம்–ஏவாள்: கதைகள் ஏன் ஒரே ஓட்டத்தில் செல்கின்றன?”

படம்
 எனக்கு இந்த கேள்விகள் திடீரென்று தோன்றியவை அல்ல. ஒரு நாள் உட்கார்ந்து “இதை இப்படித்தான் நினைக்க வேண்டும்” என்று தீர்மானித்து உருவாக்கிய எண்ணங்களும் அல்ல. பல கதைகள், பல மதங்கள், பல மரபுகள் இவற்றை கேட்கக் கேட்க, படிக்கப் படிக்க, சில இடங்களில் ஒரே மாதிரியான வடிவங்கள் திரும்பத் திரும்ப தோன்றிய போதுதான் இந்த கேள்விகள் என் மனதுக்குள் உருவானது. ஆதாம் – ஏவாள். இஸ்லாம் சொல்கிறது, இவர்கள் மனித குலத்தின் முதல் தந்தை–தாய் என்று. அவர்கள் மனிதர்கள் என்றும் சொல்லப்படுகிறது. அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகளிலிருந்தே மனித சமூகம் வளர்ந்தது.இப்போதும் இருக்கிறோம். ஆனால் இந்தக் உண்மை கதையை நான் நினைத்துக் கொண்டிருக்கும்போது, என் மனம் அதை ஒரே இடத்தில் நிறுத்த மறுக்கிறது. ஆதாம் ஏவாள் சிவன் பார்வதி குடும்பம் ai  அதே நேரத்தில், இந்துக்களின் கதைகளில் வரும் சிவன் – பார்வதி என்ற ஆதி சக்திகளின் உருவம் என் நினைவுக்குள் வந்து நிற்கிறது. இங்கே நான் ஒரு விஷயத்தை தெளிவாகச் சொல்ல வேண்டும். “சிவன் = ஆதாம்” “பார்வதி = ஏவாள்” என்று முடிவு எடுப்பதே என் நோக்கம் இல்லை. ஆனால் சில சம்பவங்களின் அமைப்பு, சில கதைகளின் திருப...

நாம் அல்லாஹ்வுக்காக வாழ்கிறோமா? அல்லது அல்லாஹ்வின் பெயரைப் பயன்படுத்திக் கொண்டு வாழ்கிறோமா?

படம்
 பெயரளவிலான முஸ்லிமா? அல்லது உண்மையான முஸ்லிமா? இஸ்லாமியப் பெயர் மட்டும் இருந்தால் போதுமா? இல்லை. ஒரு உண்மை முஸ்லிம் என்பவர் அல்லாஹ்வை மட்டுமே நம்பி, அவனிடமே உதவி தேடி, அவன் காட்டிய வழியில் வாழ்க்கையை நடத்துபவர். ஆனால் பெயரளவிலான முஸ்லிம் என்பவன்... நாவால் "அல்லாஹ்" என்று சொல்வான், ஆனால் செயலில் அவனுக்கு முரணானவற்றைப் பிடித்துக் கொண்டிருப்பான். முஸ்லிம் நபரை காட்டும் ai padam 1. தர்கா வழிபாடுகள் "காரியம் கைகூட இங்கே போய் விளக்கு ஏற்ற வேண்டும்", "அந்தப் பெரியார் சொன்னால் காரியம் நடக்கும்" என்று நினைப்பதே ஒரு பெரிய ஈமானியச் சறுக்கல். உண்மை முஸ்லிம் அல்லாஹ்வைத் தவிர யாரிடமும் கையேந்த மாட்டான். கல்லறை, மனிதன், இறந்தவர் என எவராலும் எவருக்கும் நன்மையோ தீமையோ செய்ய முடியாது. அனைத்தும் அல்லாஹ்வின் கைகளிலேயே உள்ளன. ஆனால் பெயரளவிலான முஸ்லிமோ துஆவுக்குப் பதிலாக தர்காக்களையும், நம்பிக்கைக்குப் பதிலாகப் பழக்க வழக்கங்களையும் தேடி அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருப்பான். 2. மந்திரித்த கயிறு கட்டுதல் குழந்தைக்குக் திருஷ்டி, தொழிலில் தடை, வீட்டிற்குத் தோஷம் என்றால் உடனே கயிறு,...

அல்லாஹ் கோவில்ல போய் மந்திரிசுட்டு வாங்க குழந்தைக்கு சரி ஆய்டும்

படம்
 அன்பான சகோதரர்களே… இந்த பேச்சு மதத்தைப் பற்றி மட்டும் அல்ல. இந்த பேச்சு மனிதர்களைப் பற்றி. இந்த பேச்சு நம்ம ஊரைப் பற்றி. இந்த பேச்சு நம்ம வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றி. நாம் வாழுற இந்த மண்ணுல கோயிலும் இருக்கு,மசூதியும் இருக்கு,தேவாலயமும் இருக்கு. ஆனா இந்த மூன்றையும் தாண்டி ஒரு விஷயம் இருக்கு. அது என்ன தெரியுமா? ஒரு தாய் மனசு. ஒரு குழந்தைக்கு காய்ச்சல் வந்துருச்சுன்னா? அது இந்து குழந்தையா? முஸ்லிம் குழந்தையா? னு அந்த காய்ச்சல் கேக்குமா? அப்படி இல்ல. அழுகை ஒரே மாதிரி தான். வலியும் ஒரே மாதிரி தான். தாயின் பயமும் கூட ஒரே மாதிரி தான். அப்போ என்ன நடக்குது? நம்ம ஊர்ல ஒரு குழந்தை அடிக்கடி அழுதா, உடம்பு சரியில்லாம இருந்தா, தூங்காம திடுக்கிட்டு எழுந்தா… உடனே ஒரு குரல் வரும். யாரோ ஒரு இந்து அம்மா சொல்வாங்க: “அல்லாஹ் கோயிலுக்கு போய் பாருங்க, குழந்தைக்கு சரியாகிடும்.” குழந்தைக்கு மந்திரிக்கும் இஸ்லாமியர் ai image இப்போ இந்த வார்த்தையை நாம கவனிக்கணும். “அல்லாஹ் கோயில்” இது யாருடைய வார்த்தை? ஒரு இந்துவுடைய வார்த்தை. அவங்க ஏன் இப்படிச் சொல்றாங்க? மதத்தை கலக்கணும்னு இல்ல. மதம் மாற்றணும்னு இல்ல. வாதம்...

சபரிமலை போவதற்கு முன்னாடி இதை கொஞ்சம் படிச்சிட்டு போங்க

படம்
பக்தர்களே… சபரிமலை போறீங்கன்னு சொன்னாலே ஒரு சந்தோஷம் தான். ஆனா அதே நேரத்துல கொஞ்சம் பொறுப்பு இருந்தா தான் அந்த பயணம் உண்மையிலேயே ஐயப்பனுக்கு பிடிச்ச பயணமா மாறும். “நாம போயிட்டு வந்தா போதும்”ன்னு நினைச்சிட்டு கிளம்புறது சபரிமலை பயணம் கிடையாது. இது சாதாரண டூர் இல்லை, இது ஒரு விரதம், ஒரு ஒழுக்கம், ஒரு மனநிலை. முதல்ல ஒன்று புரிஞ்சுக்கோங்க. சபரிமலைக்கு போறதுக்கு முன்னாடி மாலை போடுறோம். ஆனா மாலை போட்டுட்டு வாழ்க்கையை அப்படியே மாற்றாம இருக்குறது தான் இப்போ அதிகமா நடக்குது. பக்தர்களே, மாலை போட்ட நாளிலிருந்து சாமி இறங்குற வரைக்கும் நம்ம வாழ்க்கை கொஞ்சம் வேற மாதிரி இருக்கணும். வாயில என்ன பேசுறோம், மனசுல என்ன ஓடுது, உடம்பு என்ன பண்ணுது – எல்லாமே ஐயப்பனை நினைச்சு இருக்கணும். இப்போ பயணம் எங்கிருந்து ஆரம்பிக்குது? சபரிமலை பயணம் திடீர்னு மலையேறி போறது கிடையாது. முதல்ல பெரும்பாலான பக்தர்கள் எருமேலி போவாங்க. பக்தர்களே, எருமேலி சாதாரண ஊர் கிடையாது. அங்க தான் ஐயப்பனோட பயணம் உண்மையிலேயே ஆரம்பிக்குது. பேட்டை துள்ளல், கோஷம், ஆடல் பாடல் – இதெல்லாம் பார்ப்பதுக்காக மட்டும் இல்ல. மனசுல இருந்த அகம்...

நீங்கள் அடிக்கடி ஹோட்டலுக்கு சென்று சாப்பிடுவீர்களா?

படம்
 அனைத்து நண்பர்களின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக. இன்னைக்கு நான் ஹோட்டல் சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தை பேச போறேன். அதே நேரத்துல உணவு, அதில் இருக்கக்கூடிய சுத்தம் எல்லாத்தையுமே பேச போறேன். ஹோட்டல் உணவுகளைச் சொல்லும் ஏஐயால் உருவாக்கப்பட்ட படம் இன்னைக்கு வீட்ல சமைக்கலாட்டி நம்ம ஹோட்டல்ல போயி சாப்பிடுறோம். அப்படி ஹோட்டல்ல கிடைக்கக்கூடிய உணவுகள் எந்த அளவுக்கு நமக்கு தரமானது என்பதை நாம் நினைவு கூற வேண்டும். நம்ம ஒரு ஹோட்டலுக்கு போய் சாப்டோம்னா சில நேரங்களில் பழைய உணவுகளை நமக்கு புது உணவாக மாற்றி பரிமாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. குறிப்பாக அசைவ உணவு என்று சொன்னால், அந்த அசைவ உணவை  பார்த்தீர்கள் என்றால் நேற்று அல்லது அதற்கு முன்பு அந்தக் கடையில் விற்காத ஒரு மாமிசத்தை புதிதாக மீண்டும் உருவாக்கி நம்மிடம் தரக்கூடிய வாய்ப்புகள் அதிகம். இந்தச் சம்பவம் என் வாழ்க்கையிலே நடந்திருக்கிறது. நான் வேலை பார்த்த ஒரு த்ரீ ஸ்டார் ஹோட்டலில் ஒரு மாதமாக இறால் என்ற உணவை வைத்திருந்தார்கள். மேலும் சமைக்கப்பட்ட கறியை மீண்டும் பயன்படுத்தும் பழக்கத்தையும் வைத்திருந்தார்கள். எனவே நாம் ஹ...

சைத்தானிடமிருந்து ஏன் மனிதனை இறைவன் ஏன் பாதுகாக்க நினைக்கின்றான்?

படம்
 எனது அன்பான வாசகர்களுக்கு இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக   அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். Image Credit: Created with Gemini AI இந்த ஒரு வார்த்தையை நாம தினமும் சொல்லுரோம். சிலர் தொழுகைக்கு முன் சொல்ராங்க, சிலர் குர்ஆன் ஓதும் நேரத்துல சொல்றாங்க, சிலர் வெறும் பழக்கத்திற்காக கூட சொல்கிறார்கள். ஆனால் இந்த வார்த்தையோட உண்மையான அர்த்தத்தையும், இதன் பின்னால் மறைந்திருக்கும் ஆபத்தையும், இதன் மூலம் நாம் யாரிடமிருந்து பாதுகாப்பு தேடுகிறோம் என்பதையும் உணர்ந்து சொல்றோமா என்ற கேள்வி மிக மிக முக்கியமானது. ஏனென்றால் அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்று சொல்லப்படுவது ஒரு சடங்கிற்காக கிடையாது. அது ஒரு நமக்கான எச்சரிக்கை. அது ஒரு போர் அறிவிப்பு. அது மனிதன் மற்றும் அவனுக்குப் அவன் கண்களுக்கு புலப்படாத ஒரு எதிரிக்கு இடையே நடக்கக்கூடிய நிரந்தர யுத்தத்தின் தொடக்க வாசகம் தான் அது. இந்த உலகத்தில மனிதனுக்கு மிகப்பெரிய எதிரி யார் அப்படின்னு கேட்டால், பெரும்பாலானோர் மனிதனையே சொல்வார்கள். சிலர் அரசியல், சிலர் சமூகம், சிலர் பொருளாதாரம் என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால் குர்ஆன் ந...

தாடி – இஸ்லாமியர்களுக்கான கட்டளையா? அல்லது அனைத்து ஆண்களுக்கும் இயற்கை அடையாளமா?

படம்
அன்பான வாசகர்கள் அனைவருக்கும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக இன்னைக்கு நம்ம எதை பத்த பார்க்க போறோம்னா  ஒரு மனிதனுக்கு தாடி மீசை எந்த அளவிற்கு முக்கியம் என்பதையும் அதை மதங்கள் அடிப்படையில் பார்க்க வேண்டும் என்பது பற்றியும் தான் இங்கே காணப் போகிறீர்கள். Image credit:gemini ai  நம் உடலில் இறைவனால் இயற்கையாக வழங்கப்பட்ட ஒவ்வொரு உறுப்பும் வெறும் அலங்காரத்திற்காக மட்டுமல்ல. அதற்கு பின்னால் பாதுகாப்பு, அடையாளம், உயிரியல் நோக்கம், உளவியல் தாக்கம் என பல பரிமாணங்கள் இருக்கின்றன. அதில் ஆண்களுக்கு மட்டும் முகத்தில் வளரும் தாடி மற்றும் மீசை என்பது மிகவும் தனித்துவமான ஒன்றாக காணப்படுகிறது. இது மனிதனை மற்ற உயிர்களிலிருந்து மட்டுமல்ல, மனிதர்களுக்குள்ளேயே ஆண்–பெண் என்ற வேறுபாட்டையும் தெளிவாக வெளிப்படுத்துகிறது. திருக்குர்ஆனில் நேரடியாக “தாடியை வளருங்கள்” என்று எந்த வசனம் இல்லை என்றாலும், நபி முகமது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூலம் தெளிவான கட்டளையாக ஹதீஸ்களில் நம்மால் காண முடிகிறது. அதே நேரத்தில், இன்று நவீன அறிவியல், உயிரியல், மருத்துவம் ஆகிய துறைகளும் இந்தக் கட்டளையின் ஞானத்தை...

ஹிஜாப் மற்றும் முக்காடு: பெண்களின் மரியாதை, பாதுகாப்பு பற்றிய ஒரு நடைமுறை பார்வை

படம்
 இதை படிக்கப் போகும் எனது அன்பார்ந்த நண்பர்களுக்கு இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக இங்கே கீழே இருக்கும் ஒரு படத்தில் சிறுவர்கள் விரும்பி சாப்பிடும் லாலிபாப் உள்ளது அதை மேல் உள்ள காகிதத்தை எடுத்து விட்டால் ஈக்கள் மொய்பபது போல மொயத்துக் கொண்டிருப்பதை நாம் காணுகின்றோம் அதேபோல மற்றொரு படத்தில் அதை மூடி வைத்து இருக்கின்றோம் எனவே ஈக்களின் தொந்தரவு இல்லை. பெண்களுக்கும் இதே போன்றதொரு நிலையை உணர்த்தும் பதிவு தான் இந்த ஹிஜாபின் அவசியம் Image credit :gemini ai  ஹிஜாப் என்பது ஒரு உடலை மறைக்கும் துணி மட்டுமல்ல. அது ஒரு வாழ்வியல் கோட்பாடு, ஒரு அடையாளம், ஒரு பெண்ணின் உடல்–உளவியல் எல்லைகளை அவள் தானே நிர்ணயித்துக் கொள்வதற்கான உரிமை. உலகம் முழுவதும் பல கலாச்சாரங்களில் பெண்கள் தங்கள் தலையை மூடிக் கொள்வது வழக்கமாக இருந்துள்ளது. தமிழ்ச் சமூகத்தில் கூட பாட்டி தலைமுறை பெண்கள் முக்காடு, சேலைத் தலைப்பாகை, தலையாடை போன்றவற்றை இயல்பாக அணிந்திருந்ததை நாம் மறக்க முடியாது. அந்த வரலாற்றுப் பின்னணியில், இன்றைய சமூக சூழலில் ஹிஜாப் பெண்களுக்கு எந்த அளவு முக்கியம், அதைச் சுற்றியுள்ள விமர்சனங்கள், சுதந்த...

காலை நேரத்தில் கண்ட கனவு பலிக்குமா வாங்கல் உண்மையை பார்ப்போம்

படம்
 மனிதனுக்கு கனவு வருவது இயற்கையான விஷயம் ஆனால் அந்த கனவு எப்படி மனிதனுக்கு வருகிறது என்பதைத்தான் இங்கு நாம் அலசி ஆராயப் போகிறோம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக Image credit gemini ai  கனவு என்பது மனிதன் ஆழ்ந்த நித்திரைக்கு செல்லும் போது இயற்கையாக நிகழும் ஒரு மனநிலைக் சம்பவம் தான். மனிதன் இரவு நேரங்களில் தூங்கினாலும் சரி, பகல் நேரங்களில் தூங்கினாலும் சரி, கனவு வருவது இயல்பான ஒன்றாகவே உள்ளது. இது எந்த அதிசயமும் அல்ல, எந்த மர்ம சக்தியும் அல்ல. மனிதனின் மூளையில் நடைபெறும் ஒரு இயற்கை செயல்முறை மட்டுமே. நாம் விழித்திருக்கும் போது பார்த்தவை, கேட்டவை, சந்தித்த மனிதர்கள், அனுபவித்த சம்பவங்கள், நமக்குள் ஓடிய எண்ணங்கள், பயங்கள், ஆசைகள், சந்தோஷம், கோபம் என அனைத்தையும் நமது மூளை பதிவு செய்து வைத்துக் கொள்கிறது. நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் இல்லையா என்பதைக் கூட பொருட்படுத்தாமல், மூளை அதை சேமித்துக் கொண்டே இருக்கிறது. இந்த பதிவுகள் அனைத்தும் நாம் தூங்கும் நேரத்தில் ஒரு புதிய வடிவத்தில் வெளிப்படத் தொடங்குகின்றன. தூங்கும் போது நமது உடல் ஓய்வெடுக்கிறது, ஆனால் மூளை ...

இம்மை மறுமையை மனிதனின் தோல் மூலம் விளக்கும் இறைவன்

படம்
 மனித வாழ்க்கை என்பது வெறும் பிறப்பு, வளர்ச்சி, மரணம் என்ற ஒரு குறுகிய வட்டமாக மட்டுமே இருந்தால், இந்த உலகத்தில் நடைபெறும் பல அநீதிகளுக்கும், சமநிலையற்ற தீர்ப்புகளுக்கும் எந்த அர்த்தமும் இருக்காது. ஒருவர் ஒரு சிறிய தவறு செய்தாலும் உடனடியாக தண்டனை பெறுகிறார். ஆனால் மற்றொருவர் ஆயுள் முழுவதும் பெரும் அநீதிகளைச் செய்தும் எந்த தண்டனையும் இல்லாமல் வாழ்ந்து இறந்து விடுகிறார். இதை மனித மனம் எளிதில் ஏற்றுக்கொள்ள முடியாது. இங்குதான் “இம்மை” மற்றும் “மறுமை” என்ற கருத்து அவசியமாகிறது. Image credit gemini ai  இம்மை என்பது சோதனைக்கான இடம். மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் உடனடி தீர்ப்பு கிடைக்கும் இடமல்ல. நீதிமன்றங்கள் உள்ளன, சட்டங்கள் உள்ளன. ஆனால் அவை எல்லாம் மனிதன் உருவாக்கிய வரம்புகளுக்குள் இயங்கும் அமைப்புகள். ஒரு மனிதன் ஒருவரை கொலை செய்தால், அவனுக்கு தூக்கு தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கப்படுகிறது. ஆனால் அதே மனிதன் பத்து, இருபது, நூறு பேரை கொலை செய்திருந்தாலும், சட்டத்தின் அளவுகோல் அதிகமாக மாறுவதில்லை. காரணம், மனித சட்டத்திற்கு எல்லைகள் உண்டு. ஒரே உடலுக்கு ஒரு மரண தண்டனைதான். ஒரே ...

திருப்பதி ஏழுமலையில் அமைந்துள்ள மூலவர் சிலையானது முருகனா? வெங்கடாஜலபதியா?

படம்
 திருப்பதி ஏழுமலை வெங்கடாஜலபதி கோவில் இந்தியாவின் மிகப் பெரிய யாத்திரைத் தலங்களில் ஒன்றாக இன்று விளங்குகிறது. ஆனால் இந்த கோவிலைச் சுற்றி பல நூற்றாண்டுகளாக ஒரு ஆழமான, சிக்கலான, விவாதப் பரப்பு நிலவி வருகிறது. அந்த விவாதத்தின் மையக் கேள்வி ஒன்றே: திருப்பதி ஏழுமலையில் அமர்ந்திருப்பவர் உண்மையில் வைணவ கடவுளான விஷ்ணுவின் அவதாரமான வெங்கடாஜலபதியா? அல்லது அதற்கு முன்னர் அங்கே வணங்கப்பட்ட தமிழ் கடவுளான முருகன் (குமரன், சுப்பிரமணியன்) தானா? இந்தக் கேள்வி சாதாரண நம்பிக்கைச் சண்டை அல்ல. இது ஆகம மரபுகள், கல்வெட்டுச் சான்றுகள், இலக்கிய ஆதாரங்கள், கோவில் கட்டிடக்கலை, வழிபாட்டு மரபுகள், அரசியல் அதிகார மாற்றங்கள், பண்பாட்டு மேலாதிக்கம், மொழி அடையாளம் என பல அடுக்குகளில் விரிந்து நிற்கும் ஒரு வரலாற்று விசாரணை. Image credit gemini ai  முதலில் நாம் சிலையின் உடல் அமைப்பில் இருந்து தொடங்க வேண்டும். திருப்பதி மூலவர் சிலை இடுப்பில் கை வைத்த (கடிஹஸ்த) நிலையில் நிற்கிறது. இந்த கடிஹஸ்த நிலை தென்னிந்திய சைவ – குறிப்பாக முருக வழிபாட்டில் மிக முக்கியமான அடையாளம். பழனி தண்டாயுதபாணி முதல் சுதந்திரமாக நிற்கும் ப...

அம்பேத்கரின் சட்டம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமே பயன்படுகிறதா?

படம்
 டாக்டர் அம்பேத்கர் உருவாக்கிய சட்டம், அதனின் உள்ள தமிழ்நாட்டில் செயல்பாடு, அதன் நன்மை–தீமை, மேலும் இன்றைய “கீழ்–மேல் சமுதாய மாற்றம்” பற்றிய உண்மையை ஆழமாக விளக்கும் விரிவான கட்டுரை சட்ட மேதை அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சட்டத்தை தொகுத்தல் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரை நாம சாதாரண ஒரு அரசியல்வாதியா பார்க்க முடியாது. அவர் ஒரு சட்ட மேதை. ஒரு சமூக சிந்தனையாளர். மனித உரிமைன்னு சொல்லும்போது இந்தியாவில முதல்ல நினைவுக்கு வர வேண்டிய பெயர். அவர் எழுதி வைத்த இந்திய அரசியலமைப்பே அவரோட வாழ்க்கை. சாதி, மதம், மொழி, வர்க்கம்—எல்லாத்தாலயும் சிதறி கிடந்த ஒரு நாட்டை “ஒற்றுமை, சமத்துவம், சுதந்திரம்”ன்னு மூன்று வார்த்தையில சட்டமா கட்டி வச்சவர். அந்த அரசியலமைப்புக்குள்ள முக்கியமா இருந்தது என்னன்னா, பல நூறு வருஷமா ஒடுக்கப்பட்டு, கல்வி இல்லாம, வாய்ப்பே இல்லாம இருந்த மக்களை சம நிலைக்கு கொண்டு வரணும்னு ஒரு நேர்மையான எண்ணம். அதுக்காக கல்வி வாய்ப்பு, வேலைவாய்ப்பு ஒதுக்கீடு, பாதுகாப்பு சட்டங்கள்—இவையெல்லாம் கொண்டு வந்தார். மக்கள் அதையெல்லாம் “அம்பேத்கர் சட்டம்”ன்னே சொல்ல ஆரம்பிச்சாங்க. தமிழ்நாடு அந்த சிந்தன...

“உலகின் மிக வியப்பூட்டும் மீன்! சால்மன் மீனின் கதைகள் உண்மையா? அற்புதமா?”

படம்
  🐟 சால்மன் மீன் – இயற்கையின் அதிசயம், ஆரோக்கியத்தின் பொக்கிஷம் அதைப் பற்றி தெரிந்து கொள்வோம் நண்பர்களே. அதற்கு முன்பு நம்முடைய பிளாக் ரோடு இணைந்து இருங்கள் 🐟 சால்மன் மீன் – இயற்கை உருவாக்கிய அதிசயம், ஆரோக்கியத்துக்கு ஒரு பொக்கிஷம் நண்பர்களே, நம்ம எல்லாருக்கும் மீன் சாப்பிட பிடிக்கும். ஆனா எல்லா மீனும் ஒரே மாதிரி கிடையாது. சில மீன்கள் சாப்பாடு மட்டும் இல்லை… அது ஒரு கதையா இருக்கும், ஒரு பயணமா இருக்கும். அப்படி ஒரு மீன் தான் இந்த சால்மன். உலகம் முழுக்க இந்த மீனுக்கு ஒரு மரியாதை இருக்கு. மேற்கு நாடுகளில் இதை “Super Food”ன்னு சொல்றாங்க. ஏன் தெரியுமா? உடலுக்கு தரும் நன்மை, வாழ்க்கை பயணம், இயற்கையோட இணைப்பு—எல்லாமே சாதாரணம் இல்லை. இப்போ நான் தெரிஞ்ச அளவுக்கு, எளிமையா சால்மன் மீன் பற்றி சொல்றேன். 🌊 சால்மன் என்றால் என்ன? சால்மன் என்பது Salmonidae குடும்பத்தை சேர்ந்த ஒரு தனித்துவமான மீன். இதே குடும்பத்துல ட்ரவுட், சார்ஸ் மாதிரி நன்னீர் மீன்களும் இருக்குது. சால்மன்லயே சில முக்கியமான வகைகள் இருக்குது: அட்லாண்டிக் சால்மன் சினூக் (King Salmon) சாக்கை (Red Salmon) பிங்க் சால...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இஸ்லாமியர்கள் கூறக்கூடிய 25 நபிமார்களும் அவர்களைப் பற்றிய குறிப்புகளும்

உலக பிரபலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ இஸ்லாத்திற்கு மாறிவிட்டாரா?

யூசுப் நபியின் வரலாற்றை பற்றி ஒரு நெருக்கமான பார்வை