தமிழ்நாட்டில் லாபகரமாக ஆட்டே போடும் வடக்கனிடமிருந்து வந்த போன் கால், நடந்தது என்ன?

ஒரு நாள் தொலைபேசி மூலம் எனக்கு ஒரு அழைப்பு வந்தது.

அந்த அழைப்பில் வட மாநிலத்தைச் சேர்ந்தவர் அரைகுறை தமிழில் என்னிடம் பேசினார். அவன் நான் வங்கியில் இருந்து பேசுகிறேன் என்று கூறினான். நானும் சொல்லுங்கள் என்று அவனிடத்தில் கேட்டேன். நீங்கள் ஏடிஎம் கார்டு மூலம் பணம் பெறும் வசதியை இழந்து விட்டீர்கள் உங்களுடைய ஏடிஎம் கார்டை புதுப்பிக்க வேண்டும் என்று என்னிடம் கூறினார். நான் அவன் அழைக்கும் சிறிது நேரத்திற்கு முன்புதான் ஏடிஎம்மில் பணம் எடுத்தேன். அவன் பேசுவதில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவன் மீண்டும் இப்போது நீங்கள் இந்த தவறை சரி செய்ய வில்லை என்றால் உங்களுடைய ஏடிஎம் கார்டு நிறுத்தி வைக்கப்படும் என்று என்னிடம் சில தகவல்களை கேட்டான். உங்கள் ஏடிஎம்மில் உள்ள 16 இலக்க எண்களை கூறவும். அதற்குப் பின்பு உங்களுடைய ஏடிஎம் கார்டில் தேதியை கூறுமாறு கேட்டான். இந்த தகவல்களை கூறாமல் அவனிடம் தொடர்ந்து உரையாடிக் கொண்டிருந்தேன். நீங்கள் எந்த வங்கியில் இருந்து அழைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு பிரபலமான ஒரு வங்கியை கூறிவிட்டான். அந்த வங்கியில் எனக்கு மட்டுமல்ல அனைவருக்கும் கணக்கு இருக்கும். அவன் பேசியதில் மேலும் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. இப்போது நான் சுதாரித்துக்கொண்டு 16 இலக்க எண்களை தவறான முறையில் அவனிடம் கூறினேன். பின்பு அதில் உள்ள தேதியையும் கூறினேன். அவன் இந்த தகவல்களை தனது கணினியில் ஏற்றுக் கொண்டான். இறுதியாக உங்கள் ஏடிஎம் கார்டில் பின்புறத்தில் மூன்று இலக்க எண்கள் இருக்கும் அதை கூறவும் என்றான். இதன் பிறகு உங்களுக்கு ஒரு செய்தி வரும் அந்த செய்தியில் உள்ள நான்கு இலக்க நண்பரை நீங்கள் கூறிவிட்டால் உங்களுடைய ஏடிஎம் கார்டு சரியாகிவிடும் என்று கூறினார். அப்போது தான் தவறான சார் நம்பரை அவனிடத்தில் கூறினேன். அவனால் அவன் எண்ணியது நிறைவேறவில்லை. மிகுந்த கோபமடைந்து என்னை ஆபாச வார்த்தைகளைக் கொண்டு திட்டினான். நானும் பதிலுக்கு அவனை கண்டபடி திட்டினேன். அவன் தன் அழைப்பை துண்டித்து விட்டு சென்று விட்டான்.

எனது நண்பர்களே இந்த நேரத்தில் நான் எனது ஏடிஎம் கார்டில் உள்ள தகவல்களை கூறி இருந்தேன் என்றால் அந்த காரில் உள்ள பணத்தை சுலபமாக அவனால் எடுத்துக்கொள்ள முடியும். அது தெரிந்தே நான் தவறான எண்களை அவனிடம் கூறினேன். உங்கள் வீட்டில் இருக்கும் வயதானவர்கள் படிக்காதவர்கள் வங்கியில் கணக்கு வைத்திருந்தால் இது போன்று அழைத்து சுலபமாக அவர்களை ஏமாற்றி பணத்தை எடுத்துவிட முடியும். எனவே அவர்களிடத்தில் இவனைப் போன்ற வடமாநில ஆசாமிகள் பற்றி சற்று எடுத்துக் கூறுங்கள். 

உங்களுடைய பணத்தை பாதுகாத்து கொள்ளுங்கள்.

மீண்டும் உங்களை அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலக பிரபலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ இஸ்லாத்திற்கு மாறிவிட்டாரா?

யூசுப் நபியின் வரலாற்றை பற்றி ஒரு நெருக்கமான பார்வை

இஸ்லாமியர்கள் கூறக்கூடிய 25 நபிமார்களும் அவர்களைப் பற்றிய குறிப்புகளும்